Wednesday, November 11, 2026

    மழைவர பூமி மறுத்திடுமா?

    “நான் ஏதோ விபரீதம் தெரியாம... பின்விளைவுகளைப் பத்தி யோசிக்காம செஞ்சிட்டேன் வேதிகா... ப்ளீஸ்... என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லு! என்னாலதானே நீ ஒரு சாதாரண மெக்கானிக் வேலை செய்யறவனைத் கல்யாணம் பண்ணி கஷ்டப்படுற! நம்ம குழந்தைக்கு நல்ல எதிர்காலம் இல்லாம பண்ணிட்டேனே... இதை எப்படிச் சரி பண்றதுன்னே எனக்குத் தெரியவில்லை. தயவுசெஞ்சு...
    ஆனாலும்... அவனது உடம்பு தேறியதே தவிர, அவனால் தான் செய்த தவறின் பாதிப்பிலிருந்து தன் மனதை மீட்கவே முடியவில்லை. ‘வேதிகாவைப் பார்க்க வேண்டும்... தன் மகனை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும்...’ என்றெல்லாம் குற்றவுணர்ச்சியில் ஓயாமல் அரற்றிக்கொண்டே இருந்த மனதோடுதான் அவன் ஒவ்வொரு நாளையும் நரகமாகக் கடத்தினான். அவனது பெற்றோர்களோ... மரணத்தின் விளிம்பு வரை...
    மகள் வாழ்க்கை என்னாகுமோ என்ற அச்சத்தில், “சம்பந்தி... ஏதோ கெட்ட நேரம், இப்படி ஆயிடுச்சு...” என்று செல்வி மிகவும் தயங்கியபடி, கெஞ்சும் குரலில் பேச்சைத் தொடங்க... “ஆமாம்! ரொம்ப ரொம்பக் கெட்ட நேரம்தான்! எங்க குடும்பத்துக்கே... அதுதான் இப்படி ஒரு சனிய...” என்று அதற்கு மேல் ராகவனின் தந்தையால் வார்த்தைகளை முடிக்க முடியவில்லை; கோபத்தில் ஆத்திரத்தோடு...
    மழைவர பூமி மறுத்திடுமா? – 24 சாமியண்ணன், செல்வி தம்பதியினர் அப்படியே இடிந்து போயிருந்தனர். படிப்பு, அழகு, புத்திசாதுரியம் என அனைத்தும் நிறைவாகப் பெற்ற தங்களின் இளைய மகள் காவ்யா மீது அவர்களுக்கு எப்போதுமே ஏகப் பெருமை உண்டு. அவளைப் பெற்றெடுத்ததிலேயே இப்பிறவியின் பயனை அடைந்துவிட்டதாக நினைப்பவர்கள். ஆனால், இன்று அவர்களையே ஒட்டுமொத்தமாக நிலைகுலைய வைத்த பெருமை......
    இப்போது அருளின் கோபம் கட்டுக்கடங்காமல் சென்றது. “விதி மேல பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்காதே வேதிம்மா… உனக்கு இன்னைக்கு ஒரு நாள் மட்டும்தான் டைம். நாளைக்கு காலையில ஒரு நல்ல முடிவா யோசிச்சுச் சொல்லு. நீ காலேஜ் போய்ப் படிக்கிற நேரத்துல, அத்தை குழந்தைகளைப் பார்த்துக்கிறதா சொல்லிட்டாங்க! அதனால, நாளைக்கே நாம காலேஜுக்குப் போறோம், அவ்ளோதான்!” என்றான் இறுதித் தீர்ப்பாக, கோபமாய்! அவர்களுக்கான முதல் சண்டை இது! எப்போதும் அன்பும் அனுசரணையுமாகவே...
    மழைவர பூமி மறுத்திடுமா? – 23 தன்னம்பிக்கையும் நிமிர்வும் நாம் எந்த இடத்தில், எப்படி இருக்கிறோம் என்பதைப் பொறுத்துத் தானாகவே மாறிவிடும். நாம் ஒரு நல்ல நிலையில் இருக்கும்போது, வீண் அச்சங்களோ அல்லது மற்றவர்களுக்கு அடங்கிப் போகும் நிலையோ இருக்காது; நம் நிலை உயரும்போது, அதற்குரிய தைரியமும் கம்பீரமும் தானாகவே வந்துவிடுகிறது. கவிதாவின் அத்தகைய முன்னேற்றத்தைக் கண்கூடாகப் பார்த்த அருள்மித்ரனின் மனம் பெருமிதத்தால் நிறைந்து போனது. அவனுக்குத் தங்கை கவிதா அரசுத் தேர்வில் நல்ல...
    எப்போது யார் என்ன பேசினாலும் அரண்டு மிரண்டு போய் நடுங்கி நிற்பவள், ஓரமாகப் போய் விம்மி விம்மி அழுபவள்... இன்று தங்களை நேருக்கு நேர் எதிர்த்துப் பேசுகிறாளே என்று கல்யாணி அம்மாவுக்குக் கோபம் தலைக்கேறியது. “நாங்க பெரியவங்க பேசும்போது நடுவுல உனக்கு என்னடி பேச்சு? ஒழுங்கா ஓரமாப் போடி! அரசாங்க வேலைக்கு போறேன்னு உனக்கு ரொம்பத்தான் ஆட்டம் கூடிப்போச்சு!” என்று கத்தினார். “அதெப்படிம்மா நான் ஓரமா போக முடியும்? இங்கே பேச்சே......
    வேதிகா தன் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “ஆமா... எல்லாம் என்னால தான்! சொல்லுங்க, எனக்கு என்ன வாங்கித் தரப் போறீங்க? கவி பாஸ் பண்ணியிருக்கா, அவளுக்கு என்ன வாங்கித் தரப் போறீங்க?” என்றாள் ஆனந்தப் பரபரப்போடு. தன் மனைவி முதல்முறையாகத் தன்னிடம் ‘எனக்கு என்ன வாங்கித் தரப் போகிறீர்கள்?’ எனச் சட்டமாக, உரிமையோடு கேட்கிறாள். அதைக் கேட்டதும் அவன் முகத்தில் ஒரு கள்ளப் புன்னகை விரிந்தது. அவனது காந்தக்...
    மழைவர பூமி மறுத்திடுமா? – 21 அன்று அதிகாலையிலேயே நெஞ்சு நிறைந்த பதற்றத்தோடு அண்ணன் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள் கவிதா. தன் அண்ணி வேதிகாவின் வழிகாட்டுதலின் பேரில், கடந்த சில மாதங்களாகவே அவள் பல்வேறு அரசுப் பொதுத் தேர்வுகளை எழுதி வருகிறாள். இதுவரை சில தோல்விகளைச் சந்தித்த போதிலும், வேதிகா அவளுக்குத் தொடர்ந்து ஊக்கம் தந்து, மென்மேலும் படிக்க வைத்து, அடுத்தடுத்த தேர்வுகளுக்கு அவளைத் தயார் செய்து வந்தாள். இன்று அவள் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எழுதியதற்கான...
    கிளினிக் வந்து சேர்ந்ததும், சின்னவளின் காயத்தை விளக்கின் ஒளியில் தெளிவாகப் பார்த்த பக்கத்து வீட்டு உமா அக்காவிற்கு, வேதிகாவை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ‘வாயைக் கழுவிவிட்டு, கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொடுத்தாலே போதும், வாயிலிருந்து வரும் ரத்தம் கொஞ்ச நேரத்தில் தானாக நின்றிருக்கப் போகிறது. காலிலும் லேசாத் தேங்காய் எண்ணெய் பூசியிருந்தாலே போதும் தான். இதற்கு போய் இவள் இப்படிப் பயந்து நடுங்குகிறாளே!’ என அவருக்குள் அவளின் முதிர்ச்சியற்ற செய்கையை நினைத்து...
    மழைவர பூமி மறுத்திடுமா? – 20 வெண்ணிலவின் பேரொளி பூமியைப் பேரானந்தமாய் தழுவிக்கொண்டிருந்த, ஒரு ரம்மியமான இருள் கவிழ்ந்த நேரம் அது! தன் மணாளனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தபடியே, தீபாலியையும் கவினையும் முன் வாசலில் விளையாட விட்டு உணவூட்டிக் கொண்டிருந்தாள் வேதிகா. பிள்ளைகள் இருவரும் அன்னையின் பாசக் கவனிப்பில் புதுப் பொலிவுடன் மிளிர்ந்தார்கள் என்றால், அன்னையவளோ அவளது கணவனின் ஆழமான நேசத்தில் பூத்துக் குலுங்கும் நந்தவனமாய், அத்தனை பூரிப்போடும் அழகோடும் காட்சியளித்தாள். கடந்த மூன்று...
    அந்தப் பயங்கரமான பரபரப்பான சூழலில், இரண்டாம் தளத்தில் மாட்டிக்கொண்ட வேதிகா தப்பிப்பதற்கு வழி தெரியாமல் திகைத்தாள். நச்சுப் புகை அவளது சுவாசக் குழாயை அடைக்க, காற்றுக்காகப் போராடியவள் ஒரு கட்டத்தில் கூட்டத்தில் அலைமோத முடியாமல் மூச்சுத்திணறி, சுயநினைவை இழந்து தரையில் சரிந்தாள். அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிக்கொண்டிருந்த அந்த பரபரப்பானச் சூழலில், அவளைக் கவனிப்பார் யாருமில்லை. தறிகெட்டு ஓடிய கூட்டத்தில் பலர் அவள் மீது ஏறி மிதித்து...
    மழைவர பூமி மறுத்திடுமா? – 18 இனிய சொப்பனம் ஒன்றில் தன்னை மறந்து திளைத்திருந்த வேதிகாவின் மூடிய இமைகளை, ஜன்னல் திரை வழியே கசிந்த இளம் சூரியனின் கிரணங்கள் மெல்லத் தட்டி எழுப்பின. சோம்பல் இன்னும் தீரவில்லை; உடல் அலுப்பாக இருந்தது. உடலெங்கும் ஒரு மெல்லிய வலி பரவியிருக்க, அந்த வலி கூட அருளின் மனையாளுக்கு ஒருவிதச் சுகத்தையே தந்தது. ‘வேடிக்கைதான், வலியில் கூட இனிமையா?’ தன் நிலையை எண்ணி கன்னங்கள் சிவக்க, கீழ்...
    “என்னாச்சு? ஏன் இன்னும் அங்கேயே நிக்கிற?” என்றவனுக்கு, அறையில் விடிவிளக்கின் தயவால் கசிந்து கொண்டிருந்த மெல்லிய வெளிச்சத்தில் அவள் புடவை உடுத்தி நின்றிருப்பது வரிவடிவமாகத் தெரிந்திருக்க வேண்டும். அதனால், “குழந்தைங்க தூங்க லேட் பண்ணிட்டாங்களா என்ன? இன்னும் சேலையைக் கூட மாத்தாம இருக்கியே?” என்று நிலைமை புரியாமல் அவன் எதார்த்தமாக கேட்டு வைக்க, வேதிகாவின் மனதிற்குள் கோபம் பேரலையாய் பொங்கியது. ‘நான் இத்தனை மெனக்கெட்டு அலங்கரித்து நின்றிருப்பது அவனுக்குக் குழந்தை தூங்காததால் ஏற்பட்ட தாமதமாகத் தெரிகிறதா?’ எங்கே அங்கேயே...
    அவளோ, அவர்கள் சொன்ன கசப்பான விஷயங்களை எண்ணித் தன் நிலையை நினைத்துக் கவலைப்படாமல், கண்களால் அவனை ஆற்றுப்படுத்த முயற்சி செய்தாள். அந்தப் பார்வையில் இருந்த நம்பிக்கையும் நேசமும் அவனை இன்னும் குன்றச் செய்தது. அத்தனை நேரமும் இந்தப் பேச்சுவார்த்தையில் நாம் எப்படித் தலையிடுவது என்று மௌனமாக இருந்த அசோகன், யமுனா தம்பதியினரைச் சுட்டிக்காட்டிய புவனா, “உன்னை நம்பித்தானே இந்த மனுஷன் அவங்க ஜாதி, ஜனத்தை எல்லாம் பகைச்சுட்டு அவர் மகளை...
    மழைவர பூமி மறுத்திடுமா? – 16 வேதிகாவின் பெற்றோர் மற்றும் அருள்மித்ரனின் தங்கை கவிதா என அனைவரும் வந்திருக்க, கவினின் பிறந்தநாள் கொண்டாட்டம் இனிதே தொடங்கியது. தம்பதியினர் அக்கம் பக்கத்தினர் சிலரையும் அழைத்திருந்தார்கள். அருளின் அத்தைமார்கள் புவனாவும், சந்திராவும் வருகை தந்திருந்தார்கள். அருளின் அன்னை கல்யாணியையும் அழைத்திருந்தனர். அவரோ இந்தப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. வராததற்கு ‘உடம்பு சரியில்லை’ என்கிற நொண்டிச் சாக்கு கூட வந்து சேராத அழகிலேயே, தங்களை அவர்...
    அதற்கு மேல் மறுக்க முடியாமல் அவன் அவளோடு உள்ளே வர, வேதிகா அவனுக்குக் குளிர்ந்த எலுமிச்சைச் சாறு கொண்டு வந்து கொடுத்தாள். அந்த ஜில்லென்ற பானகம் அவனது வயிற்றோடு சேர்த்து, கொதித்துக் கொண்டிருந்த மனதையும் சற்றே குளிர்வித்தது. ‘உனக்கு ஏன்டி இவ்வளவு பெரிய கொடுமை நடந்தது?’ அவன் அடிமனம் ஓயாமல் அடித்துக் கொள்ள, அவளையே தன் பார்வையால் பின்தொடர்ந்து கொண்டிருந்தான். அவனது விழிகளில் கசிந்த அந்தப் பாரத்தை அவளால் புரிந்துகொள்ள...
    மழைவர பூமி மறுத்திடுமா? – 15 கோயிலுக்கு வரும்போது இருந்த அந்தப் பரவசமான மனநிலை, திரும்பும்போது இல்லையே என்று வேதிகாவிற்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. நடக்கும்போது அடிக்கடித் திரும்பித் தன் கணவனின் முகத்தைப் பார்த்தாள்; ஆனால், அவனது கவனம் சுத்தமாக அவளிடம் இல்லை. அவனின் புறக்கணிப்பு அவளது உள்ளத்தை வெகுவாக வாட்டியது. சிறிது நேரத்திற்கு முன்புவரை எல்லாம் நன்றாகத்தானே இருந்தது? குழந்தைகளைத் தங்கள் பெயரில் தத்தெடுக்கும் படிவங்களை அவன் தந்தபோது இருந்த அந்த நெகிழ்ச்சி இப்போது...
    “மாமியார் வீட்டுக்கு இன்னொரு நாள் போய்க்கலாம் வேதிம்மா. இப்போ வீட்டுக்குப் போலாமா? அங்கே கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு...” என்று அருள் சன்னமானக் குரலில் ஆசையாகக் கேட்க, “திடீர்னு என்ன வேலை?” என்று அவனை குழப்பத்துடன் ஏறிட்டுப் பார்த்தவள், அவனது பார்வையின் அர்த்தம் புரிந்து குங்குமமாய் சிவந்து போனாள். அவர்களின் அன்னியோன்யத்தை அளவிட்டபடியே, “வேதிகா...” என்றொரு குரல் கேட்டது. கணவனின் அருகாமையில் திளைத்திருந்தவள், பதற்றத்தில் சட்டென்று சற்று...
    மழைவர பூமி மறுத்திடுமா? – 14 மகன் கவினின் இரண்டாவது பிறந்தநாளுக்காக, அருள்மித்ரன் தன் மனைவி மற்றும் பிள்ளைகளோடு செஞ்சேரிமலை வேலாயுதசுவாமி கோயிலுக்கு வந்து மனதார வழிபட்டான். நீண்ட நாட்களுக்குப் பிறகு வேதிகாவின் மனது ஓர் இனிய அமைதியில் திளைத்திருந்தது. அவர்களது வாழ்வின் சவால்கள் எல்லாம் தீர்ந்துவிட்டனவா என்றால் இன்னும் இல்லைதான்; ஆனாலும், எத்தகையப் பேரலையையும் எதிர்கொள்ளும் துணிவை அவனது நேசம் அவளுக்கு அள்ளித் தந்திருந்தது. திருமணத்தையே பெற்றோரின் விருப்பத்திற்காக செய்து கொண்டவளின் மனது...
    error: Content is protected !!