மழைவர பூமி மறுத்திடுமா?
அப்படி ஒருவழியாக பெரும் போராட்டத்திற்குப் பிறகு வெளியில் வந்தததற்கு, இன்று ஒரே நாளில் நிறைய பேச்சுக்களை போதும் போதும் என்றளவில் கேட்க நேர்ந்தாயிற்று! ஒரே ஒருவனின் நம்பிக்கையான வார்த்தைகள் மட்டும் அந்த காயங்களுக்கு மயிலிறகில் மருந்திடுவது போல இருப்பது கடவுள் அவள்மீது காட்டிய கருணையாக இருக்கக்கூடும்.
இந்த உலகத்தில் எல்லா தவறுகளையும் பெண் மீது மட்டுமே சுமத்தாத...
மழைவர பூமி மறுத்திடுமா? – 3
தீபாலியைப் பரிவுடன் நோக்கி, “குழந்தையை யாரு பார்த்துக்கிறாங்கப்பா?” என்று கேட்டார் அசோகன்.
அருள்மித்ரனிடம் சன்னமான பெருமூச்சொன்று வெளிப்பட்டது. “வீட்டுல அம்மாவும், தங்கச்சியும் இருக்காங்க சார்” என்றான். பார்வை என்னவோ அவர்களை எதிர்கொள்ளவே தயங்கியது. கணவனும் மனைவியும் தன்மீதும், தன் மகள் மீதும் அனுதாபப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவனால் உணர முடிந்தது. என்னவோ அதை எதிர்கொள்ளவே முடியவில்லை.
“கேட்கவே வருத்தமா...
வீட்டில் தனக்கு ஒருத்திக்கு மட்டும் சமைக்க வேண்டும்; எங்கும் போக வேண்டுமென்றாலும் தனியாகவே போய் வர வேண்டும். மூச்சு முட்டும் தனிமை... கல்யாணிக்கு பெரும் கொடுமையாகத் தோன்றியது. தன்னை ஒரு அநாதையைப் போல உணர்ந்தார்.
மகள் மாலதியோ... தன் தாய் தனக்கு ஏதோ ஒரு மாபெரும் கொடுமை செய்துவிட்டது போல அவரை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டாள்;...
கந்தசாமியின் அக்கா சந்திராவும், தங்கை புவனாவும் தான் வேதிகாவோடு இருந்தார்கள். அவர்கள் கல்யாணிக்குத் துளியும் சலித்தவர்கள் இல்லை.
“நீ கூடத்தான் எங்க அண்ணனை முழுசா முழுங்கிட்டு பட்டும் பவுனுமா சுத்தற. எங்க அண்ணனை உறிஞ்சு குடிச்சது பத்தாம என் மருமகன் இரத்தத்தையும் உறிஞ்சு குடிச்சிட்டு இருக்க, நாங்க அதுக்கெல்லாம் எதுவும் கேட்கிறோமா என்ன?” என்று இங்கிதம் பாராமல் புவனா பேச,
வேதிகாவிற்கு...
பெரியம்மாக்கள் வருகிறார்கள் என்றதிலேயே இங்குப் பிரச்சனை ஏதோ பெரிதாக வெடித்திருக்கிறது என்பது வேதிகாவிற்குப் புரிந்துவிட்டது. “குழந்தைங்க நல்லா இருக்காங்கண்ணா. அம்மாகிட்ட விட்டுட்டு வந்திருக்கேன்” என்றாள் என்னவாக இருக்கும் என்ற யோசனையோடே! கவினுக்கு இந்த வீடு சொந்தமாகி விடுமோ என்ற வன்மத்தில், தன் சொந்த மகனையே வீட்டை விட்டு அனுப்புமளவிற்கு அவளது மாமியார் கல்யாணி துணிந்துவிட்டதால்......
மழைவர பூமி மறுத்திடுமா? – 2
எப்பொழுதும் வீட்டில் அருள்மித்ரனின் சத்தம் ஓங்கி இருக்காது. ஆனால், அன்று பேசினான். “அம்மா... என் மக என் கூட இருக்கட்டும், பார்க்க விருப்பம் இல்லைன்னு சொல்லறவங்க கிட்ட ஏன் இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கீங்க” என்றான் நிதானமான குரலிலேயே! ஆனால், அவன் பேச்சில் இருந்த அழுத்தம், புறக்கணிப்பு அனைவருக்கும் புதிது!
அம்மாவின் மீதும் அவனுக்கு மனத்தாங்கல் இருக்கிறது தான்! அதைவிடவும் பிரீத்தியின்...
உங்கள் மகளும் கணவனும் மட்டும் தான் அழுவார்களா என மகனுக்கும் தோன்றி விட்டதோ என்னவோ சற்று நேரத்தில் பசிக்காக கவினும் சிணுங்கத் தொடங்கி விட்டான். வேதாவுக்கு தன்னுடைய நிலையை நினைத்துச் சிரிப்பு தான் வந்தது.
ஏதோ நினைப்பில் அழுகை தீர்ந்த பிறகும் மனைவியின் கையை சிறை செய்து வைத்திருந்த அருள், மகனின் அழுகையில் அதிர்ந்து போய் வேகமாக...
மழைவர பூமி மறுத்திடுமா? – 6
திருமண வேலைகளில் நிறைய அலைச்சல் என்பதால், படுத்தவுடனேயே அருள்மித்ரன் உறங்கியிருந்தான்.
நள்ளிரவுக்கு மேலே மகள் தீபாலி சிணுங்கவும் உறக்கம் கலைந்தவன், புட்டி பாலுக்காகக் கையை துழாவ அதற்குள் சின்னவளின் சிணுங்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து திடீரென்று சுத்தமாக நின்றிருந்தது. கூடவே என்னவோ உச்சுக்கொட்டும் சத்தமும். ஒன்றும் புரியவில்லை அவனுக்கு.
மகளைக் கவனிக்க வேண்டுமே என்று அடித்து...
அவர் என்னதான் சண்டையிட்டாலும், பழைய உணவுகளை அவளால் உண்ண முடியாது. குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாத எதையும் ஒரு தாயாக அவளால் நிச்சயம் செய்ய முடியாது.
நீண்டதொரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, “நீங்க சொல்ற மாதிரியே நான் உங்க மகனை என் கைக்குள்ள வச்சிருக்கிறதாவே இருக்கட்டும். அதுக்காக நான் பழைய சாப்பாட்டைச் சாப்பிட்டா, உங்க மகன் என் கையை விட்டு...
யாரையும் அவளால் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. எப்பொழுதும் இடம், பொருள் அறிந்து தான் கணவர் கண்டிப்பார். இப்பொழுது பிறந்த வீட்டில் வைத்து, அதுவும் தான் துச்சமாக நினைக்கும் வேதிகா முன்னிலையில் இப்படி திட்டியதில் மிகுந்த அவமானமாக உணர்ந்தாள்.
கல்யாணியால் பேசவே முடியவில்லை. எப்பொழுதும் மகள் இங்கே வந்தால், ஒன்றும் பேசாத மருமகன், இன்று அவள் வந்த கையோடு அழைத்துப் போக வந்திருப்பது ஏன்...
மழைவர பூமி மறுத்திடுமா? – 5
செஞ்சேரிமலையில் வீற்றிருக்கும் அருள்மிகு மந்திரகிரி வேலாயுத சுவாமி சன்னிதானத்தில் மிகவும் நெருங்கிய சொந்தங்களின் முன்னிலையில் அருள்மித்ரன், வேதிகாவின் திருமணம் நல்லபடியாக நடைபெற்றது.
அசோகன், யமுனா இருவருக்கும் மகளை மணக்கோலத்தில் பார்த்ததும் கண்கள் தழும்பி, மனம் நிறைந்து போனது. இப்படியொரு பாக்கியம் தங்களுக்குக் கிடைக்கவே கிட்டாது என்று எண்ணியிருந்தவர்களின் கவலையை அவர்கள் வணங்கும் வேலாயுத சுவாமி போக்கியிருந்தார். தங்கள்...
மழைவர பூமி மறுத்திடுமா? – 4
காவ்யாவின் திருமணத்திற்குச் சென்று வந்ததிலிருந்து, கல்யாணி முன்பைவிட அதிகமாகப் பேயாட்டம் ஆடத் தொடங்கிவிட்டார்.
எந்த நிலையிலும் தன்னை எதிர்த்துப் பேசாத மகன், ஏதோ ஒரு பெண்ணிற்காக எதிர்த்துப் பேசினால் அவரின் தன்னகங்காரம் சும்மா இருக்குமா? அதோடு அவர் அத்தனை மறுத்தும் பிரீத்தியின் நகைகள் மொத்தத்தையும் கல்யாணத்திற்கு சீராக செய்துவிட்டானே என்ற கோபம் அவரின் ஆத்திரத்தை பலமடங்காக்கி இருந்தது.
அவர் பேசிய...
“அண்ணி அப்ப கிச்சன்ல இருந்தாங்க அண்ணா... அநேகமா அக்கா பேசினதெல்லாம் கேட்டிருக்காதுன்னு நினைக்கிறேன். ஆனா, அக்கா அண்ணிக்கு கேட்குமேன்னு சங்கடப்படற ஆள் மாதிரி எல்லாம் தெரியலைண்ணா. அவ பேசினதையெல்லாம் கேட்ட எனக்கே தாங்கிக்க முடியலை. அண்ணி முன்னாடி இந்த மாதிரியெல்லாம் பேசினா ரொம்ப உடைஞ்சி போயிடுவாங்கண்ணா” என்றாள் தேம்பலுடன்.
“ம்ப்ச்...” என்று வேதனையுடன் நெற்றியை தேய்த்துக் கொண்டான்....
அதற்கு மேல் மறுக்க முடியாமல் அவன் அவளோடு உள்ளே வர, வேதிகா அவனுக்குக் குளிர்ந்த எலுமிச்சைச் சாறு கொண்டு வந்து கொடுத்தாள். அந்த ஜில்லென்ற பானகம் அவனது வயிற்றோடு சேர்த்து, கொதித்துக் கொண்டிருந்த மனதையும் சற்றே குளிர்வித்தது.
‘உனக்கு ஏன்டி இவ்வளவு பெரிய கொடுமை நடந்தது?’ அவன் அடிமனம் ஓயாமல் அடித்துக் கொள்ள, அவளையே தன் பார்வையால் பின்தொடர்ந்து கொண்டிருந்தான். அவனது விழிகளில் கசிந்த அந்தப் பாரத்தை அவளால் புரிந்துகொள்ள...
ஆனால், பிள்ளைகளின் சேட்டைகள் கூடக்கூட, வேதிகாவின் வாய்ப்பூட்டு மெல்ல மெல்ல உடையத் தொடங்கியது. அவன் வீட்டிலிருக்கும் நேரத்திலும் சின்னவர்கள் எதையாவது செய்து வைக்க, அதில் ஈர்க்கப்பட்டு அருள்மித்ரன் குழந்தைகளை அள்ளி அணைத்து கொஞ்சினால், அதை ரசித்துப் பார்ப்பவள், , “தெரியுமா? இன்னைக்கு மதியம் கூட இப்படித்தான்...” எனத் தொடங்கி, அன்று அவர்கள் செய்த குறும்புத்தனங்களை ஒரு கதையாகவே விவரிப்பாள்.
அருள்மித்ரனின் மனம் அவள் சொல்லும் கதைகளை லயித்ததை விட, அதைச் சொல்லும்போது மாறும் அவளது முகபாவனைகளிலும் அழகிலும்தான் மயங்கி நிற்கும். அவனது...
மழைவர பூமி மறுத்திடுமா? – 15
கோயிலுக்கு வரும்போது இருந்த அந்தப் பரவசமான மனநிலை, திரும்பும்போது இல்லையே என்று வேதிகாவிற்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. நடக்கும்போது அடிக்கடித் திரும்பித் தன் கணவனின் முகத்தைப் பார்த்தாள்; ஆனால், அவனது கவனம் சுத்தமாக அவளிடம் இல்லை. அவனின் புறக்கணிப்பு அவளது உள்ளத்தை வெகுவாக வாட்டியது.
சிறிது நேரத்திற்கு முன்புவரை எல்லாம் நன்றாகத்தானே இருந்தது? குழந்தைகளைத் தங்கள் பெயரில் தத்தெடுக்கும் படிவங்களை அவன் தந்தபோது இருந்த அந்த நெகிழ்ச்சி இப்போது...
மழைவர பூமி மறுத்திடுமா? – 8
கவிதா இலகுவானதை புரிந்து கொண்டு, “சரி கவி... இப்ப சொல்லு. வேலைக்கு போகலையான்னு கேட்டா ஷாக்காயிட்டியே? ஏன் அது சம்பந்தமா நீ எதுவுமே யோசிக்கலையா?” என்று தான் பேச விரும்பிய விஷயத்திற்கு வேதிகா வந்தாள்.
உண்மையில் கவிதாவிற்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. அவள் வேலையைப் பற்றியோ, மேற்படிப்பை பற்றியோ யோசித்திருந்தால் தானே சொல்வதற்கு!
“அண்ணி...
“உருப்படியா ஒரு வேலையைச் செய்யத் தெரியாது... இருக்கிற பாத்திரத்தை எல்லாம் உடைச்சுத் தள்ளுறயா? இப்ப பாலுக்கு யாரு உங்க அப்பனா காசு தருவான்? ஏற்கனவே இருக்கிற லட்சணத்துக்கு, நீ இப்படி உருப்படியில்லாம இருந்தா உன்னை எவன் வந்து கட்டிக்குவான்? பெத்த கடனுக்கு உன்னை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் நான் சோறு போட்டு வீட்டுல தண்டமா வைப்பனோ தெரியலையே!” என்று விஷத்தைக் கக்கினார் கல்யாணி.
அன்னையின்...
“என்னாச்சு? ஏன் இன்னும் அங்கேயே நிக்கிற?” என்றவனுக்கு, அறையில் விடிவிளக்கின் தயவால் கசிந்து கொண்டிருந்த மெல்லிய வெளிச்சத்தில் அவள் புடவை உடுத்தி நின்றிருப்பது வரிவடிவமாகத் தெரிந்திருக்க வேண்டும்.
அதனால், “குழந்தைங்க தூங்க லேட் பண்ணிட்டாங்களா என்ன? இன்னும் சேலையைக் கூட மாத்தாம இருக்கியே?” என்று நிலைமை புரியாமல் அவன் எதார்த்தமாக கேட்டு வைக்க, வேதிகாவின் மனதிற்குள் கோபம் பேரலையாய் பொங்கியது.
‘நான் இத்தனை மெனக்கெட்டு அலங்கரித்து நின்றிருப்பது அவனுக்குக் குழந்தை தூங்காததால் ஏற்பட்ட தாமதமாகத் தெரிகிறதா?’ எங்கே அங்கேயே...
மகள் வாழ்க்கை என்னாகுமோ என்ற அச்சத்தில், “சம்பந்தி... ஏதோ கெட்ட நேரம், இப்படி ஆயிடுச்சு...” என்று செல்வி மிகவும் தயங்கியபடி, கெஞ்சும் குரலில் பேச்சைத் தொடங்க...
“ஆமாம்! ரொம்ப ரொம்பக் கெட்ட நேரம்தான்! எங்க குடும்பத்துக்கே... அதுதான் இப்படி ஒரு சனிய...” என்று அதற்கு மேல் ராகவனின் தந்தையால் வார்த்தைகளை முடிக்க முடியவில்லை; கோபத்தில் ஆத்திரத்தோடு...