என் வாசல் வருவாயா
வாசல் 5:
அடுத்த ஒரு வாரமும் குமரன் ஊன் உறக்கமின்றி வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அடிதடி, ஆக்சிடென்ட்,கொலை, தற்கொலை என்று தினமும் எப்.ஐ.ஆர் விழுந்து கொண்டே இருக்க, வீட்டிற்கு கூட சரியாக செல்ல முடியாத நிலை அவனுக்கு.
நதியிடம் பேசியும் ஒரு வாரம் ஆகியிருந்தது. அவளும் அவனை தொந்தரவு செய்யவில்லை. அவளும் ஆபீஸ், ஆபீஸ் விட்டு வந்தால்...
காபியுடன் சேர்த்து டின்னரையும் முடித்துவிட்டே அவளை வீட்டிற்கு கொண்டு சேர்த்திருந்தான் குமரன்.
“உள்ள வாங்க தம்பி” என்று வரதன் அழைக்க,
“டைம் ஆச்சு மாமா, இன்னொரு நாள் வரேன்” என்றவன்,
“இது மகதி,நரேன்க்கு” என்று நதியிடம் ஒரு பார்சலை நீட்ட,
“இதை எப்போ வாங்கினார்?’ என்று நினைத்தவள், அதையே முகத்தில் காட்ட,
“கிடைச்ச கேப்ல தான்” என்று கண்ணை சிமிட்டியவன்,
“வீட்டுக்கு போயிட்டு...
ஹெல்மெட்டை கழற்றியவன், தன் சிகையை கோதி சரி செய்து கொண்டு, அவளைப் பார்த்தவன்,
“வந்து வண்டியில ஏறுங்க தீராநதி உதயகுமரன்” என்றான் குறுஞ்சிரிப்புடன்.
தன் பெயருக்கு பின்னால் அவனின் பெயரை சேர்த்து சொன்னதே அவளுக்கு அவ்வளவு இனித்தது.
“நல்லா இருக்குங்க” என்றாள் சிரிப்புடன்.
“எது நானா?” என்றான்.
“நீங்களும், தீராநதி உதயகுமரனும்” என்றவள் அவன் பின்னால் அமர்ந்து கொள்ள, அவள் வார்த்தைகளில்...
வாசல் 4:
நடந்த விஷயங்களை நதி சொல்லிக் கொண்டிருக்க பிரியாவோ கதை கேட்பதை போல் கேட்டுக் கொண்டு வந்தாள்.
“அவ்வளவு தான்டி, பூ வச்சு கன்பார்ம் பண்ணிட்டு போய்ட்டாங்க” என்று முடித்திருந்தாள் தீராநதி.
“அடிப்பாவி” என்று வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தாள் பிரியா.
“இப்போ எதுக்கு இப்படி ஷாக் ஆகுற?” என்றாள் நதி.
“பின்ன என்னடி? போட்டோவை பார்க்கவே மாட்டேன்னு பிடிவாதம்...
இரண்டு நாட்களாக அதை கையில் எடுப்பதும், பின் வேண்டாம் என்று பார்க்காமல் வைப்பதுமாய் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள். இன்றும் கையில் எடுத்தவளுக்கு, மனம் படபடவென்று அடித்துக் கொள்ள, டக்கென்று வைத்துவிட்டாள்.
“நேர்லயே பார்த்துப்போம்” என்று நினைத்தவளுக்கு அப்படியேவும் இருக்க முடியவில்லை.
“என்னக்கா? ஓவர் எக்சைட்மென்டா?” என்று கிண்டல் பண்ணியபடி வந்தாள் மகதி.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை” என்றவள் புடவையை சரி...
“உதய்” என்று புகைப்படத்தில் இருந்தவனின் முகத்தை வருடியவளுக்கு, நினைவு அவனை முதன் முதலில் பார்த்த தினத்திற்கு சென்றது.
மூன்று வருடங்களுக்கு முன்பு,
கோயம்புத்தூரில் ஒரு ப்ரைவேட் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் தீராநதி.
அன்று எப்போதும் போல் வேலையில் இருந்தவளை அழைத்தார் சாரதா.
“என்னமா? இந்த டைம்ல கால் பண்ணயிருக்கிங்க? எதுவும் ப்ராப்ளம் இல்லையே?” என்றாள் பதட்டத்துடன். எப்போதும் அந்த...
வாசல் 3:
இரண்டரை வருடங்களுக்குப் பிறகான நதியின் அருகாமையில் அவன் தான் வெந்து தணிந்து கொண்டிருந்தான். அவள் அவனிடமிருந்து விலகி அமர்ந்திருக்க, சற்று பின்னால் தள்ளி அமர்ந்தான் குமரன். அவன் நகர்ந்து கொண்டே நெருங்கி அமர்வது நதிக்கும் தெரிந்து தான் இருந்தது.
“இப்ப எதுக்காக என்மேல சாஞ்சுட்டே வர்றீங்க?” என்றாள் கோபமாக.
“நீ சாய மாட்டேங்குற. அதான் நானே...
“என்ன மிஸ்டர் குமரன்? நான் அவ்வளவு சொல்லியும் நீங்க கேட்கலைன்னா நான் என்ன தான் பண்றது?” என்ற மருத்துவரின் குரல் வெளியே கேட்க,
“எனக்கு ஸ்லீப்பிங் பில்ஸ் போட்டாத்தான் தூக்கமே வருது டாக்டர். இந்த ஒரு தடவை ரெபர் பண்ணுங்க. நான் எவ்வளவு ட்ரை பண்ணாலும், தூக்கம் வர மாட்டேங்குது டாக்டர். தூக்கம் வர்ற மாதிரி...
குமரன் வீட்டிற்குள் நுழையும் போதே, ஆரம்பித்து விட்டார் கோதாவரி.
“என்ன நினைச்சுட்டு இருக்க குமரா? வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் ஆகுது. ஒரு போன் பண்ணி தகவல் சொல்றதும் இல்லை. நாங்களா போன் பண்ணினா, சரியா பேசுறதும் இல்லை. வர வர உன் போக்கு சரியில்லை..” என்று எப்போதும் போல் ஆரம்பித்தார்.
‘இருக்கிற பிரச்சனையில் இவங்க வேற?’...
வாசல் : 2
இரண்டு மணி நேரமாக நடந்த பேச்சு வார்த்தையில், எந்த முடிவும் எட்டப்படவில்லை. தீராநதிக்கு தீராத தலைவலி வந்தது தான் மிச்சம் என்றானது. இப்படித்தான் நடக்கும் என்று தெரிந்ததாலோ என்னவோ குமரனிடம் பெரிதாக மாற்றம் ஒன்றும் தென்படவில்லை. அவளுக்கு அருகில் அமர்ந்திருந்தவனுக்கு அவள் உடல் சூட்டின் உஷ்ணம் தெரியவர, அவளை யோசனையுடன் பார்த்தான்.
அருகில்...
“இப்ப என்ன பண்றது ஏட்டையா..?” என்றான் அந்த காவலரைப் பார்த்து.
“சார் என்கிட்டே கேட்குறிங்க..? நாம என்ன சொன்னாலும் அவனுகளுக்கு புரியாது சார்..” என்றார்.
“அப்படியா சொல்றிங்க..?” என்று பேச்சை நிறுத்தியவன்,
“அப்போ புரியாத பிறவிகளுக்கு புரிய வைக்கணும்ன்னு சொல்றிங்க..?” என்றான்.
“சார் வெளிய நிக்கிறது பொது ஜனம். நாம எதை செய்றதா இருந்தாலும் நிதானமா தான் செய்யணும்...” என்றார்...
வாசல் 1:
என்றும் இல்லாத திருநாளாய் அன்று விரைவாகவே விழிப்பு வந்திருந்தது மகதிக்கு. கொட்டாவியுடன் சோம்பல் முறித்தவள் அருகில் இருந்தவளை திரும்பிப் பார்த்தாள். எப்பொழுதும் அவளுக்கு முன்பாகவே எழுந்து விடுபவள் இன்று ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் இப்படி தூங்கி பல நாட்கள் ஆகிறது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் மகதி. தூங்கிக் கொண்டிருப்பவளின் செல்லத் தங்கை...