“ஆரா..!” என்று மட்டும் அனுப்பியிருந்தான்.

“சொல்லுங்க”

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?எனக்கு இப்பவே உன்னை என்கூட கூட்டிட்டு வரணும் போல இருக்கு” என்று அவன் அனுப்பியிருக்க, அதைப் படித்தவளுக்கு கால்கள் தரையில் இல்லை. ஏதோ சில்லென்ற உணர்வு அவளைத் தாக்க, சந்தோஷத்தில் கண்கள் கலங்கியது.

“என்ன பதிலைக் காணோம். உங்க அப்பா அம்மாகிட்ட வந்து பேசட்டுமா?”

“இல்ல, நான் அப்பாகிட்ட பர்ஸ்ட் பேசுறேன்” என்று மட்டும் அனுப்பினாள்.

“எனக்கு இப்படி நீ பயந்து பயந்து என்கூட பேசுறது சுத்தமா பிடிக்கலை ஆரா. அதுக்கு ஒரே வழி நீ சீக்கிரம் என்கிட்டே வர்றது தான்.” என்று அனுப்பியிருந்தான்.

ஏனோ அவனுடைய வரிகள் அவளுக்கு இதமாய் இருந்தது.

“சீக்கிரம்னா?” என்று அனுப்பினாள்.

“சீக்கிரம்னு தான் அர்த்தம். இப்பவேன்னா கூட ஓகே தான். நீ இப்போ சொல்லு நான் உடனே வர்றேன்” என்று அவன் அனுப்பியிருக்க,

அவள் பதில் அனுப்பாமல் அவன் அனுப்பிய செய்தியையே பார்த்துக் கொண்டிருக்க,

“ஆரா, உன் குரலை கேட்கணும் போல இருக்கு. கால் பண்ணவா?” என்று மீண்டும் அனுபியிருந்தான்.

“இல்ல இல்ல. இப்ப வேண்டாம்.” என்று அவள் வேகமாய் பதில் அனுப்ப, அவன் எந்த பதிலும் அனுப்பவில்லை.

“இருக்கிங்களா?” என்று இவள் அனுப்பிய செய்திக்கும் பதில் இல்லை.

“ஜெய்” என்று இவள் தவிப்புடன் அனுப்ப,

“ஐ லவ் யு ஆரா” என்று அவன் அனுப்பியிருந்த செய்தியில் அழுதே விட்டாள்.

“என்னோட வாழ்க்கை முழுமைக்கும் என் கூட வர இஷ்ட்டமா?” என்று அனுப்பியிருந்தான்.

“எஸ்” என்று மட்டுமே அனுப்பினாள். அவளால் அவ்வளவு எளிதாக அவளின் உணர்வுகளுக்கு வார்த்தைகளால் வடிவங்கள் கொடுக்க முடியவில்லை.

“எந்த சூழ்நிலையிலையும் மனசு மாற மாட்டியே? நான் எப்படி இருந்தாலும் உனக்கு பிடிக்கும் தான?” என்று அவன் அனுப்ப,

“உங்களை உங்களுக்காகத் தான் பிடிச்சது ஜெய்” என்ற அவளின் வார்த்தைகளில் எதிரில் இருந்தவன் சிறகில்லாமல் பறந்து கொண்டிருந்தான்.

காயத்ரியின்  குரலில்,

“அம்மா கூப்பிடுறாங்க. நான் அப்பறம் மெசேஜ் பண்றேன்” என்று அனுப்பினாள்.

“ஹேய் கால் பண்ணு ஆரா” என்று அவன் அனுப்பியிருக்க,

“மாட்டேன். பாட்டி என் கூடத் தான் தூங்குவாங்க. வாய்ப்பே இல்லை” என்று அனுப்பியவளை நினைத்து சிரித்துக் கொண்டான் ஜெய்.

உணர்வு

“அப்போ நாங்க கிளம்புறோம் ஆரா..!” என்று கிளம்பி நின்ற தன் குடும்பத்தைப் பார்த்தவளுக்கு எந்த உணர்வும் தோன்றவில்லை. மாறாக மனதில் வெறுமை மட்டுமே. தனக்கு பிடிக்காத ஒரு திருமணத்தை நடத்தி வைத்த குற்ற உணர்வே இல்லாமல் அவர்கள் இருப்பதாக நினைத்தவளுக்கு, அவர்கள் மீது கோபம் கோபமாக வந்தது.

“நானும் வர்றேன்னு சொன்னனேம்மா. ஷாப்ப ஒப்பன் பண்ணனும்” என்றாள்.

“அங்க ஆள் போட்டு பார்த்துக்கலாம் ஆரண்யா. வேணும்னா இங்க சென்னையில பிரான்ச் ஒப்பன் பண்ணிக்கலாம்.” என்றான் சத்ய தேவ் அவளை அணைத்தார் போல் நின்று.

“எனக்கு சென்னையில ஆல்ரெடி ஆபீஸ் இருக்கு. யாரும் எனக்கு புதுசா வச்சுத் தரனும்ன்ற அவசியம் இல்லை” என்றாள் பட்டென்று.

“ஆமா பெரிய ஆபீஸ்..! இவ உங்க ஸ்டேட்டஸ் தெரியாம பேசிட்டு இருக்கா தேவ்” என்று ஆதிரா முகத்தை சுழிக்க,

“என்ன ஆதிரா? அக்கா ஹஸ்பண்டை பேர் சொல்லி கூப்பிடுற? மாமான்னு சொல்லு” என்றாள் சாரு நிவேதா உள்ளர்த்தத்துடன்.

“ஆமாம்ல..! நான் மறந்துட்டேன் சாருக்கா. இனி மாமான்னே கூப்பிடுறேன்” என்று ஆதிரா சிரிக்க,

“இதெல்லாம் என்னை ஒன்னும் செய்யாது” என்பதைப் போல் இருந்தாள் ஆரண்யா.

“ஒரு ஒன் வீக் ஆகட்டும் ஆரா. அப்பறம் என்ன பண்றதுன்னு பேசி முடிவெடுக்கலாம்.” என்று ரவிக்குமார் சொல்ல,  ஆரா அவரை மறுத்துப் பேச போன நிமிடம், அவள் கையை இறுகப் பற்றிய தேவ்,

“நான் பார்த்துக்கிறேன் அங்கிள். நீங்க அங்க போய் ரீச் ஆகிட்டு கால் பண்ணுங்க” என்றான். அவன் கையைப் பிடித்ததில் அவளுக்கு ஆத்திரம் எழ,

“கையை விடப் போறிங்களா இல்லையா?” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.

“விட முடியாது. என்ன பண்ணுவ?” என்றான் அவனும் திமிரான குரலில். அனைவரையும் வைத்துக் கொண்டு அவளால் எதுவும் பேசவும் முடியவில்லை.

“ஆதிரா எங்க தங்கியிருக்கா காயத்ரி” என்று சிவகாமி கேட்க,

“இங்க நம்ம வீடு ஒன்னு இருக்கு அண்ணி. அங்க இருந்து தான் ஆபீஸ் போயிட்டு வர்றா. தெரிஞ்ச அம்மா ஒருத்தவங்க சமையலுக்கும், துணைக்கும் இருக்காங்க” என்றார் காயத்ரி.

“அதான் நம்ம வீடு இருக்கே. ஏன் தனியா இருக்கணும். இங்க இருந்தே போகலாமே” என்று சிவகாமி சொல்ல,

“இல்லண்ணி அது சரியா வராது. அவ அங்கயே இருக்கட்டும். தப்பா எடுத்துக்காதிங்க” என்றார் காயத்ரி. ஆதிரா காயத்ரியை முறைத்தாள். காயத்ரி அவளை கண்டனப் பார்வை பார்க்க, பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியானாள் ஆதிரா.

‘நல்ல சான்ஸ்..! மிஸ் ஆகிடுச்சே. இந்த ஆதிரா இங்க இருந்தா நல்லா இருந்திருக்குமே’ என்று சாரு மனதிற்குள் நினைக்க, காயத்ரி அதற்கு இடமே கொடுக்கவில்லை.

“நம்ம வீட்டுக்கு எப்ப வரீங்க மாப்பிள்ளை” என்று ரவி கேட்க,

“என்னோட பிரண்ட்ஸ் சர்க்கிள் அன்ட் மீடியா பீப்பிள்ஸ்க்கு ஒரு சின்ன பார்ட்டி அரேஞ்ச் பண்ணியிருக்கு அங்கிள். அது முடிச்ச உடனே கண்டிப்பா வரோம். ஆனா, என்னோட பிரைவேசி டிஸ்டர்ப்  ஆகாம பார்த்துக்கங்க” என்றான்.

“கண்டிப்பா மாப்பிள்ளை.ஆனா, ரொம்ப நெருங்கின சொந்தங்களை அவாய்ட் பண்ண முடியாது.” என்றார் ரவிக் குமார்.

“ஓகே அங்கிள்” என்பதோடு அவன் முடித்துக் கொள்ள, நடக்கும் பேச்சிற்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என்பதைப் போல் இருந்தது ஆராவின் அமைதி.

“நாங்க கிளம்புறோம் ஆரா.” என்ற பாட்டியின் குரலில் இருந்த பரிவில் மனம் இளகினாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை அவள்.

“ம்ம்” என்பதோடு முடித்துக் கொண்டாள்.