“இதே தான் வேணுமா? இதை விட வேற நல்ல டிசைன்ல வாங்கித் தரேன்டி” என்றான்.
“எனக்கு இது தான் வேணும்” என்றவளின் கரத்தில் இருந்த செயினை வாங்கி அவள் கழுத்தில் அணிவித்தான். ரிங்கையும் போட்டு விட்டான்.
“ஆமா, அன்னைக்கு அவ்வளவு வீம்பா என்னை உங்க விரல்ல ரிங் போட வச்சிங்களே அது எங்க?” என்றாள்.
“தொலைச்சிருப்பேன்னு நினைக்கிறியா?” என்றான்.
“தொலைச்சிருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன்” என்றவளை இமைக்காமல் பார்த்தவன், அவன் கழுத்தில் அணிந்திருந்த செயினைக் காட்டினான். அந்த ரிங் டாலராக மாறி அவன் கழுத்தோடு இருந்தது.
“எப்படி இப்படி கஸ்ட்டமைஸ் பண்ணிங்க. ரொம்ப அழகா இருக்கு” என்றாள்.
“உன் சம்பந்தப்பட்ட எல்லாமே என்கிட்ட அப்படியே தான்டி இருக்கு” என்றான்.
“அது அப்படியே தான் இருக்கும்னு எனக்கும் தெரியும் ஜெய்” என்றவள்,
கீழே சென்று சாருவையும் யாதவையும் பார்க்கவே அவளுக்கு பிடிக்கவில்லை. வேறு வழியின்றி சென்றாள்.
அவள் கீழே சென்ற நேரம் சரியாக உள்ளே வந்தாள் மித்ரா.
“ஹேய் மித்ரா? என்ன திடீர்ன்னு? வரேன்னு சொல்லவே இல்ல” என்றாள் ஆரா.
“உன்னை பார்க்க, சொல்லிட்டு தான் வரணுமா ஆரா?” என்றாள் மித்ரா வேண்டுமென்றே.
“நான் எப்போ அப்படி சொன்னேன். நீ எப்பவும் கால் பண்ணிட்டு தான வருவ. அதான் கேட்டேன்” என்றாள்.
“ஸ்டாப்ஸ்க்கு எல்லாம் இந்த மந்த் சேலரி போடணும் ஆரா”
“எப்பவும் போடுறது தானே?” என்றாள்.
“நீ இன்னும் அமௌன்ட் டிரான்ஸ்பர் பண்ணவே இல்லையே? உனக்குத்தான் அதைவிட முக்கியமான வேலையெல்லாம் நிறைய இருக்கே” என்றாள்.
“எல்லா வேலையுமே முக்கியம் தான். நானே போட்டுக்கிறேன் மித்ரா” என்றாள்.
“ஏன் எப்பவும் நான் தானே அதெல்லாம் பார்ப்பேன்” என்றாள் விடாமல்.
“இனி நானே பார்த்துக்கிறேன். நீயும் எவ்வளவு வேலை தான் பார்ப்ப மித்ரா?”
“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை ஆரா” என்றாள் மித்ரா.
“இருக்கட்டும் மித்ரா. உன்னோட சேலரியும் கூட கிரிடிட் ஆகிடும்” என்றாள்.
“எனக்கென்ன புதுசா சேலரி எல்லாம்?” என்றாள் புரியாமல். தேவ் எதுவும் சொல்லி விட்டானோ என்ற படபடப்பு அவளுக்கு.
“இப்படி இருக்குறது தான் சரியா வரும்னு தோணுது மித்ரா.எத்தனை நாளைக்கு உன்னைக் கஷ்ட்டப்படுத்த முடியும். நீயும் இன்னும் எத்தனை நாளைக்கு எனக்கு சப்போர்ட்டாவே இருக்க முடியும். உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு மித்ரா. அது என்னால கெடுதோன்னு எனக்கு கில்ட்டி பீல் வருது” என்றாள்.
“நான் அப்படி எல்லாம் நினைக்கலை. எனக்கு உன்னைத்தான்டி எதுவும் பெரிசில்லை ஆரா” என்றாள் மித்ரா.
“ஆனா, எனக்கு உன்னைத் தான்டி இப்போ ஒரு வாழ்க்கை இருக்கு மித்ரா. எனக்கு சத்யா இருக்கார். உனக்கும் யாராவது ஒருத்தர் வேணும். நான் வேணும்னா நல்ல பையனா பார்க்க சொல்லவா?” என்றாள்.
“ஒரு மண்ணும் தேவையில்லை. நான் கேட்டேனா உன்கிட்ட எனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி” என்று வெகுண்டவள்,
“ஏன் உன் புருஷன் வந்து எல்லாத்தையும் ஒப்பிச்சுட்டாரா?” என்றாள் கோபத்துடன்.
ஆரா புரியாமல் முழிக்க,
“என்ன சொல்ற மித்ரா? எனக்கு புரியலை. அவர் எதுவும் என்கிட்ட சொல்லலை.” என்றாள்.
“நல்லா நடிக்கிற ஆரா” என்றாள் மித்ரா.
அவளை யோசனையுடன் பார்த்தவளுக்கு எதுவோ இடித்தது.
“பார்ட்டியில ஜூஸ்ல என்ன கலந்த மித்ரா?” என்றாள் அவளையே பார்த்தபடி.
“ஆரா..அது.. நான்” என்று அவள் திணற,
“கலக்கலைன்னு பொய் மட்டும் சொல்லிடாத” என்றாள்.
“ஏன் அதை சொன்ன உன் புருஷன் மத்ததை எல்லாம் சொல்லலையா? அவனை நம்பாத ஆரா. அவன் சரியில்லை. உன்னை ஏமாத்த பார்க்குறான். வெளிய விசாரிச்சு பார்த்ததுல அவனுக்கு நிறைய நடிகைங்களோட தொடர்பு இருக்கு. உன்னை அவன்கிட்ட இருந்து காப்பத்தனும் முதல்ல ” என்றாள் மித்ரா மெதுவான குரலில்.
“மரியாதை ரொம்ப முக்கியம் மித்ரா. இந்த அவன் இவன்னு சொல்ற வேலையெல்லாம் வேண்டாம்” என்றவள்,
“அதுக்கும் நீ ஜூஸ்ல டேப்லட் கலந்ததுக்கும் என்ன சம்பந்தம்?” என்றாள்.
“ஆமாடி நான் தான் கலந்தேன். போதையில ஆட்டம் போடுவ. அவன் மானம் போகும். உன்மேல கோபம் வரும். அதனால ரெண்டு பேருக்கும் சண்டை வரும். ஏற்கனவே உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணவன் தானே. கோபத்துல நீயே அவனை வேண்டாம்னு சொல்லணும் தான் அப்படி பண்ணேன். இப்ப என்ன ஆரா பிரச்சனை உனக்கு. உன்னோட நல்லதுக்காகத் தான் பண்ணேன்” என்றாள் மித்ரா.
“என்னோட நல்லதுக்காக பண்ணேன்னு சொல்ற? அவரோட சேர்ந்து வாழ்றது தான எனக்கு நல்லதா இருக்க முடியும்” என்றாள் ஆரா.
“லூசா ஆரா நீ. நான் தான் சொன்றேனே அவன் சரியில்லை. அவன் கேரக்டர் சரியில்லைன்னு. என் பேச்சில் நம்பிக்கை இல்லையா உனக்கு? இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா நான் தான் ஜெய்ன்னு சொல்லி கூட உன்னை ஏமாத்துவான்” என்றாள் மித்ரா ஆத்திரத்தில்.
“வாவ்..! சூப்பர் ஸ்க்ரீன் ப்ளே மித்ரா. வேற லெவல்” என்றபடி வந்த தேவ்வைக் கண்டவுடன் உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
“நான் உண்மையைத் தான் சொன்னேன். நீங்க தான் ஜெய்னு சொல்ல மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்?” என்றாள்.
“சொன்னாலும் சொல்லாட்டியும் நான் தான் ஜெய்” என்றான் கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி.
“கண்டிப்பா நம்புறேன் மித்ரா” என்றவள், இரு உனக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன் என்றபடி எழுந்து சென்றாள்.
“வர்றே வா! நான் என்ன சொல்லிட்டு வந்தேன். நீ இங்க வந்து என்ன பண்ணிட்டு இருக்க மித்ரா. நான் உனக்கு கடைசி வார்னிங் குடுத்தேன். அதாவது திருந்துறதுக்கு ஒரு வாய்ப்பு. இப்போ அதுவும் முடிஞ்சு போய்ச்சு இல்லையா?” என்றான் தேவ்.
“நீங்க என்ன சொன்னாலும், ஆரா என் பேச்சை மட்டும் தான் கேட்பா. பார்ப்போமா?” என்றாள் சவாலாய்.
“ரியல்லி..!! அவதான் இன்னோசன்ட். ஆனா நான் இல்லை” என்றவன்,
“உளறல் தான். என்ன கொஞ்சம் வித்யாசமா உன்னோட உளறல். இத்தனை நாள் இருந்த மாதிரியே இன்னும் முட்டாளா இருப்பேன்னு நினைச்ச பார்த்தியா அங்க தப்பு பண்ணிட்ட. நான் நடிகன் மட்டுமில்லை. ஒரு டேரக்டர்னு உனக்குத் தான் தெரிஞ்சிருக்குமே?” என்றான்.
“அதுக்கென்ன இப்போ?”
“கேமராவை எந்த ஆங்கிள்ல வைக்கணும்? எப்படி படம் பிடிக்கணும்? என்ன க்வாலிட்டில எடுக்கனும்னு எல்லாமே தெரியும். நீ வேணும்னா பார்க்குறியா?” என்றவன், அவளின் வீடியோவை அவளிடமே காட்டினான்.
“ஒப்புதல் வாக்குமூலம்” என்றவன் நக்கல் சிரிப்பு சிரிக்க, அவள் பேசிய அனைத்தும், கூடவே பார்ட்டி புட்டேஜும் சேர்ந்து இருக்க, சட்டென்று எழுந்து விட்டாள்.
“என்னாச்சு மேடம்? ஏன் எழுந்துட்டிங்க? ஆரா சீக்கிரம் வாம்மா. உன் பிரண்ட் எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுவாங்க” என்று குரல் கொடுக்க,வெற்றுப் பார்வையுடன் வந்தாள் ஆரா.
எப்படி நீ கேள்வி கேட்காமையே மாமா புரிய வச்சேனா? இதுக்கு நீ என்னை ஸ்பெஷலா கவனிக்கணும்” என்றவன் அவளைப் பார்த்து கண் அடிக்க, அவளோ மித்ராவைத் தான் உணர்வுகளற்ற பார்வையுடம் நோக்கியிருந்தாள்