Friday, July 17, 2026

    Kaathlaenum Theevinilae Kaal Pathitha Mayiliragae

      மயிலிறகு - 10   மெல்லிய நூலாக மஞ்சள் நாண் இழையினியின் மார்போடு தவழ, அதோடு பின்னியப்படி பொன் கோர்க்கப்பட்ட மஞ்சள் தாலிக்கொடி படர்ந்து கிடந்தது.....குனிந்த தலையை நிமிர்த்தி, ஆதவனை விழிகளால் தேடியவள், அவனை காணாது சோர்ந்த விழிகளுடன் தந்தையை பார்க்க, அவர் நெஞ்சம் ஆனந்தத்தில் விம்மிக்கொண்டு இருந்தது.....அவர் கண்கள் சந்தோசத்தில் மின்ன, இழையினியை பார்த்த ராகவனது...
    மயிலிறகு – 17   "அம்மா...என்னமா இது, கல்யாணத்துல நிம்மதி இல்லாம இருக்க, கலாட்டா செஞ்சேன்.... அதோட அந்த முதல் மாப்பிள்ளை ஓடிட்டான்.. இரெண்டாவதா வந்தவன் எப்படின்னு தெரியல, கடைசி நேர மாற்றத்துனால, நிச்சயம் அந்த இழையினி சந்தோசம் இல்லாம குழப்பத்துல இருப்பா.... நிச்சயம் அப்படியே அவ வாழ்க்கைய கெடுக்கலாம் னு சொல்லி ஆசை காமிச்சு கூப்பிட்டு...
    மயிலிறகு – 6   சங்கலியை அணிவித்தவன், சங்கலியை எடுத்து கையில் பிடித்தபடி, "இங்க பாருங்க... இது வெறும் செயின் மட்டும் தான்..." என்று குரலை தனித்து, இழையினிக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தான்.....   அவர்களை விட்டு, சற்று பின்னால் சென்று இருந்த பார்த்த சாரதிக்கு, ஆதவன், இழையினிடம் பேசியது கேட்காமல், அவரிடம் ஆதவன் கூறியது மட்டுமே கேட்டிருந்தபடியால்,...
    மயிலிறகு– 3   ஆதவனின் நடை, தடை படக்காரணமான குரல், ஆதவனது தம்பி இளனின் குரல்...   இளநிவன் - ஆதவனின் தம்பி, சாதாரணமாக  விவசாயம், குடும்ப தொழில்    ஆகியவற்றில் ஆர்வம் இல்லாமல் இருப்பவன், முதன் முதலாகா தானும் இது போல ஆய்வுக்கு வருவதாகா தொற்றிக் கொண்டான். வேதா அம்மாவின் அன்பு கட்டளையின் பெயரில்....   இளநிவனை பொருத்தவரை வாழ்க்கை என்பது  வேடிக்கையும்,...
    மயிலிறகு – 16   சில வருடங்களுக்கு முன்புவரை அரிசியை புடைக்க உதவும், மூங்கில் பட்டைகொண்டு முடையப்பட்ட சொலவு (முறம்) போல, அடிப்பகுதியில் அகண்டும் நுனிப்பகுதியில் குறுகியும் ஒரு முக்கோண வடிவில் அதனுடைய பெரிய தலையை தூக்கிய வண்ணம், படையும் அஞ்சும் படி, தனது நீண்ட நெளிந்த உடலை சுருட்டிக்கொண்டு பசுமாட்டிற்கு வெகு அருகில் படமெடுத்து நின்றுக்கொண்டு...
    மயிலிறகு – 4   நிமிர்ந்து பார்க்க, அங்கு நின்றவனோ, நேற்று அந்த பெண்கள் கூட்டத்தோடு வந்த சுடலை என்ற வழிக்காட்டி என்று அறிந்துக்கொண்டு ஸ்நேகமாக புன்னகைத்தாள்.   "மேடம், இங்க என்ன பார்த்திட்டு இருக்கீங்க ...." என்று கேட்க இழையினியோ எழுந்து , "இல்ல அண்ணா... இவுங்க எப்படி மால் கட்டுறாங்கனு பார்த்திட்டு இருந்தேன்..." என்று கூறினாள்.   "மாலா  அப்படினா...
    மயிலிறகு – 22   எத்தனை குழப்பங்கள், வேதனைகள், சோதனைகள், எதிர்காலம் பற்றிய பயம் என்று அனைத்தும் வந்தாலும்.... அந்த குழப்ப நேரங்களில், நாம் உயிராய் நினைப்பவர்கள் அல்லது நம்மை உயிராய் நினைப்பவர்கள் லேசாக ஓரிரு வார்த்தைகள் ஆறுதலாக சொன்னால் கூட அது நமக்கு யானை பலத்தை தருமாம்....அந்த பலம் தான் இப்போது இழையினியின் நெஞ்சம் பெற்றுள்ளது....   இழையினி...
      மயிலிறகு – 7   நீண்ட குச்சியில் சுருட்டப்பட்டிருக்கும் சிறு இளஞ்சிவப்பு மேகம் போல் இருக்கும் அந்த காட்டு  மரத்தில் மலர்ந்த மஞ்சள் பூ, பார்ப்பதற்கு, நெருங்க காற்று போகும் வழி கூட இல்லாது பூத்திருந்தது.....அந்த மஞ்சள் நிற பூக்களின் கூட்டத்தை பார்க்கும் போது அடர்மஞ்சளிலும் பஞ்சுமிட்டாய் இருக்கிறதோ என்ற பிரம்மை ஏற்படும் பார்ப்பவர்களுக்கு... அத்தகைய மலர், அதன்...
      மயிலிறகு - 11   "இல்ல அப்பா.... நாங்க இங்க தங்க முடியாது.... நான் எந்த வொர்க்கும் பிளான் பண்ணாம வந்தேன்... காளான் பாக்டரில வேலை இருக்கு.. இன்னைக்கு கிளம்பலனா, நிறைய லாஸ் ஆகிடும்.... " என்று மணமகனான ஆதவன் கூற, இத்தனை நேரம் ஏதேதோ கலக்கத்தில் இருந்த இழையினி இப்போது தந்தையை விட்டு பிரியவேண்டும் என்ற...
      கருவறைக் குரல்   "பாண்டிய தளபதி வானவன் வாழ்க வாழ்க" என்ற கோஷங்கள் எட்டுத்திக்கும் எதிரொலிக்க, கம்பீரமாய்த் தனது புரவியில் மதுரைமாநகர் கோட்டை நோக்கி வந்துக்கொண்டிருந்தான் பாண்டியதேசத்து சேணாசமுத்திரத்தின் தளபதி வானவன்.   வானவன் வருவதற்கு முன்னே அவனின் புகழ் பாடும் கோஷங்கள் மதுரைமாநகர் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கின. அதிமுக்கிய காட்சிகள் அரங்கேறும் நாளாக அந்நாள் மாறக்கூடுமென்று யூகித்த...
      மயிலிறகு – 13 கருமை சூழ்திருந்த அழகிய இரவு திடீர் என்று பகலைப்போல அடித்துக்கொண்டிருந்தது ஆதவனது அறை ஜன்னல் வழி.... திடீர் என்று ஏற்பட்ட வெளிச்சத்திற்கும், கூச்சலுக்கும் காரணம் தெரியாமல், வேகமாக அறையை விட்டு வெளியேறிய ஆதவனும், அவன் பின்னோடு சேர்ந்து அவசரமாக நடைப்போட்ட இழையினியும் பார்த்தது, ஒரு வைக்கோற்போர் தீ ஜுவாலைகளுடன் கொழுந்து விட்டு...
    மயிலிறகு– 8 கொழுந்து வெற்றில்லை, கருசிவப்பு நிறத்தை தோற்கடிக்கும் கொட்டை பாக்கும், ஒரு ரூபாய் அளவு பொன் காசுகள் வைத்த தாம்பூலம், இழையினியின் கண்முன்னே நிச்சய தாம்பூலமாக மாற்றப்பட, உறைந்த உறைபனியாய்  அமர்ந்திருந்தாள் அந்த பனிமலர்.   சிறு சிறு இதயங்களாக பச்சை நிறத்தை கொண்டிருந்த இலைகள்,   அடுக்கப்பட்டது தாம்பூலத்தில், வெற்றிலை என்னும் பெயரில்....     அச்சிறு சிறு இதயங்கள் இரு தாம்பூலத்தில் மாற்றப்பட அத்திருமணத்தை...
    மயிலிறகு– 2   இதழாவின் கூச்சல் கேட்டு , "இதழா... என்னாச்சு...." என்று இழையினி அவள் அருகில் வர, மரகதமும் பதட்டத்துடன் கேட்க, ராகவன் சிரிப்புடன் இதழாவை அழைத்து, "வாழ்த்துக்கள் குட்டிமா..." என்று கூற, இழையினி அவரை புரியாமல் பார்க்க, ராகவனோ, "இன்னும் புரியலையா... இதழா சத்தம் போட்டது சந்தோசத்துல, நம்ம சின்னக் குட்டி, மாநில அளவுல...
    மயிலிறகு – 21   "ஆரி டியர் .. எனக்கு என்ன இப்ப... நான் ஆதவன் சார் கிட்ட.. இல்ல இல்ல.. இனி சார் இல்ல... ஆதவன் மாமா கிட்ட, ஸ்விமிங் கத்துக்க தானே போனேன்... அதுல என்ன ஆகபோகுது.. ஓவரா சீன் கிரியேட் பண்ணாத மேன்... " என்று அவளுடைய கொஞ்சும் குரலில் கூற, ஆரியனுக்கு,...
      மயிலிறகு– 9   ஆகாய நீலவண்ண சட்டையும், கருப்பு கால்சட்டையும் அணிந்து மிடுக்காக நின்றபடி, கையில் ஒரு காமெராவை வைத்து சரிப்பார்த்துக்கொண்டு இருந்தது, இழையினியின் குழம்பிய மனநிலைக்கு காரணமானவனே.... அவன் எதிரில் நின்ற மணப்பெண்னை பார்க்கவில்லை. ஆனால் இழையினி அவனை கண்டுக்கொண்டாள்....   ஆரியனுக்கும், இழையினிக்கும் நடுவில் நின்ற ஆதவன், சரியாக மணமகன் நின்ற திசையில் நிற்க, இழையினி ஆதவனை...
    மயிலிறகு - 20   கோழி கூவிய பிறகும் கூட, மேக  பஞ்சணையில் இருந்து எழுந்துக்கொள்ளலாமா, வேண்டாமா... என்ற சிந்தனையோடு தயங்கி தயங்கி தனது கதிர்களை பரப்ப தொடங்கி இருந்தான், காலை கதிரவன்.   கதிரவன் வெளிவராது இருக்கவே, மேக கூட்டங்கள் மட்டும், தங்களது விருப்பத்துக்கு, அங்கும் இங்கும் சூழ்ந்துக்கொண்டு, அந்த காலை வேலையை மந்தமாக அடித்துக் கொண்டு...
    மயிலிறகு – 23   ஆயிரம் ஆண்டுகள் நிறைந்தும், அகிலமே விந்தை கொள்ளும் அளவு, தனக்குள் அசாத்தியங்களையும், அழகிய சிற்பங்களையும், தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பின்பங்களையும், பிரமிக்கவைக்கும் வகையில் ஒரு ராஜ தோரணையுடன் இன்றும் எழுந்து நின்ற அந்த ராஜ கோபுரத்தை கொண்ட தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில், தஞ்சைக்கு ஒரு வைர கீரிடம் போல காட்சி அளிக்க,...
    காதலெனுந் தீவினிலே  கால்பதித்த மயிலிறகே !!!   மயிலிறகு– 1   'ஜெயம்’ என்ற வார்த்தையை   பார்த்துக்கொண்டே   மனதில்   இனம் புரியா சந்தோசம் குமிழியிட அன்றைய நாள் காட்டியை கிழித்தாள் இழையினி.   அவளது ராசிக்கு இன்றைய தினம் ஜெயமாம்... என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தோடு, பொழுது விடிந்ததும் பார்த்த முதல் வார்த்தையே மங்களமாக இருக்க மகிழ்ச்சியுடன் முருகன் கோவிலிற்கு புறப்பட்டாள் இழையினி...
      மயிலிறகு – 5   முள்ளம்பன்றிகள், தனது முட்களை ஈட்டி போல் எரிந்து தாக்கும் சக்தி உடையது என்று பரவலாக பேசப்பட்டாலும், அது உண்மை கிடையாது.... அது எதிரிகளை நெருங்கி, தாக்கி, அப்போது எதிரிகள் மீது சிக்குண்ட முட்கள் மட்டுமே எதிரின் உடலில் அமிழ்ந்து விடும்.. அப்படி நடந்தால் நிச்சயம் காயப்பட்டவர்கள் உயிரோடு இருக்க இயலாது.....     இப்போது ஆதவன்...
      மயிலிறகு – 26   புயலில் சிக்கி தவித்தவன் போல  களைத்துப்போய், தனக்கே உரிய கம்பீரத்தை இழந்து கையாலாகாத்தனத்துடன் ஆதவன் அமர்ந்திருப்பதாக வேதாவும், நிவனும் எக்காளமிட, இப்பொழுது காலை நேரத்து ஆதவனுக்கு இணையாய் சிவந்திருந்த ஆதவனது முகம் எதை உணர்த்தியதோ, ஆனால் அவனது உதட்டில் உறைந்த வெற்றி புன்னகையும், கண்களில் தெரிந்த கோப தீ ஜுவாலையும், இத்தனை நேரம்...
    error: Content is protected !!