Advertisement

மயிலிறகு – 20

 

கோழி கூவிய பிறகும் கூட, மேக  பஞ்சணையில் இருந்து எழுந்துக்கொள்ளலாமா, வேண்டாமா… என்ற சிந்தனையோடு தயங்கி தயங்கி தனது கதிர்களை பரப்ப தொடங்கி இருந்தான், காலை கதிரவன்.  

கதிரவன் வெளிவராது இருக்கவே, மேக கூட்டங்கள் மட்டும், தங்களது விருப்பத்துக்கு, அங்கும் இங்கும் சூழ்ந்துக்கொண்டு, அந்த காலை வேலையை மந்தமாக அடித்துக் கொண்டு இருந்தது….

 

சில்லென்று வீசும் தென்றல்
சிங்கார நடையிடும்
சிறு பெட்டையின் குஞ்சுகள்
காதோரோம் ரீங்காரமிடும் பொன்வண்டு
பூத்து குலுங்கும் புன்னை மரம்
தென்னகீற்றுகள் சலசலக்கும்
தென்னை மரம்
பாதை எங்கும் படர்ந்திருக்கும்
கொண்டை மலர்
மனதை அள்ளி செல்லும்
மஞ்சள் சாமந்தி
இந்த பூலோக சொர்க்கத்தை
காண வந்தனவோ
மந்தாரமாய் மிதக்கும் மேக மூட்டைகள்


                                                                                                — ராசி 

 

கூடவே சில்லென்ற காற்றும் வர, நேரம் ஏற ஏற, மழை காற்று வீச தொடங்கியது….. அந்த காலை பொழுது மந்தமாக இருந்த போதிலும், அந்த சூழல் மனதிற்கு இதம் தரும் சூழலாகவே இருந்தது…. முக்கியமாக இருவருக்கு… ஆதவனுக்கும், அவனின் காதல் மனைவிக்கும்….

 

கடந்த இரண்டு நாட்களாக இருந்த கவலைகளை ஒதிக்கி தள்ளும் நேரம் வந்ததாய், அவர்கள் கருத, அந்த எண்ணம் அவர்கள் இருவரது மனதிலும் ஒரு இதத்தை பரவ செய்தது…. ஆரியனின் தந்தை வந்ததும், ஆரியன் சென்றுவிடுவான் என்று ஆதவனும், அவனிக்கா வும் சென்று விடுவாள் என்று இழையினியும், வெகு ஆர்வமாக ஆதவனின் சிரியதந்தை வரவை எதிர்ப்பார்த்தனர்…..

 

பொழுது புலர்ந்து சில மணிநேரங்களில் சரெட்டென்று ஒரு வண்டி வந்து அத்தியூர் அரண்மனையில் வாயிலில் நிற்க, மாறன் வேகமாக வந்து கதவை திறக்க, வண்டி மிதமான வேகத்தோடு உள்ளே வந்தது…

 

வருகின்றது தனது தம்பியே என்று அறிந்துக் கொண்ட ருத்ரன் அவரையும், அவரது மனைவியையும் வரவேற்க, வேதா அம்மாள், ஆதவனின் பாட்டி, தத்தா என அனைவரும் வந்தவர்களை உபசரிக்க, ஆரியனின் தாயின் விழிகள் மட்டும், மகனையும் மருமகளையும் தேடி அலைந்தது…

 

ஆரியனின் தந்தை கூட, தனது கவுரவத்தை விட்டுக்கொடுக்காமல் கோபாமாக பேசுவது போல, “ஏன் துறை வரமாடாரோ… எங்க அண்ணே அந்த பையன்…” என்று துண்டை தோளில் போட்ட படி கேட்டாலும், அவருக்குமே மகனை பார்க்கும் ஆவல் உள்ளூர இருக்க தான் செய்தது…

 

அவர்களை வெகு நேரம் காட்க வைக்காமல் , ஆரியன் அவனிக்கா அங்கு வருகை தர, சினிமா நடிகை போல மிளிர்ந்த அவனிக்காவை பார்த்து, ஆரியனின் தாய், சந்தோசத்தில் மகனிடம் மெச்சுதலாய் ஒரு பார்வை பார்க்க, ஆரியனின் தந்தை மட்டும், “என்ன இது, இந்த புள்ள சேல கீல கட்டாமல், ஏதோ சட்டையும், பாவாடையும் போட்டு வந்திருக்கு… இதே, நான் பார்த்தா பொண்ணு-னா இப்படி வந்து மாமானார் முன்னாடி மருவாத தெரியாமா நிக்குமா… ” என்று எண்ணமிட்டார்…

 

அதே நேரம் சரியாக, தழைய தழைய புடவை உடுத்தி, வகுட்டில் குங்குமிட்டு, வந்தவர்களுக்கு மணக்கும் கும்பகோண காபியுடன் வந்த இழையினியை பார்த்தவர், “இந்த புள்ளைய கட்டிக்க, ஆரியனுக்கு கொடுத்து வைக்கலியே… ” என்று எண்ணினார்…

 

அவர்கள் இருவரும் வந்த பிறகும் கூட, ஆரியனின் தந்தை மௌனமாய் இருக்கவே, ருத்ரனும் வேதாவும், அவர்களுக்காக பரிந்து பேச, இப்பொழுதோ, ஆரியனின் தந்தை வெளிப்படையாகவே இழையினியோடு, அவனிக்காவை ஒப்பிட்டு பேச, இழையினி தர்மசங்கடமாய் உணர்ந்தாள்….

 

போதாதற்கு, ஆரியன் வேறு, தந்தையை சமாதானம் செய்ய வேண்டி, ஏது ஏதோ பேச, இப்போது ஆரியனின் தந்தை நேரடியாகவே அவனிடம், எல்லோர் முன்னிலையிலும், “இப்ப சொல்லு டா.. இந்த புள்ளைக்கு என்னடா குறைச்சல்… இந்த புள்ளைய வேணாம்னு எப்படி டா நீ ஓடலாம்…” என்று கேட்க, ஆரியனோ அவரை சமாதானம் செய்வது ஒன்றே குறிகோளாய் கருதி, “அப்பா… நீங்க சொல்றது எல்லாமே சரி தான்.. இழையினி நல்ல அழகு, அறிவு… எனக்கும் அது தெரியாமா இல்லை… அவுங்க குணம் எல்லாம் தெரிஞ்சா, நிச்சயம் அவுங்கள ஒரு பையன் வேணாம்னு சொல்லவே மாட்டான்… இழையினி போல ஒரு பொண்ணு மனைவியா வரது பாக்கியம் தான்…. ஆனா நான் இழையினிய பார்க்குறதுக்கு முன்னாடி, அவனிக்காவை பார்த்துட்டேனே பா… அவள நேசிக்க ஆரம்பிச்சிட்டேன்… ஒரு வேளை, அவனிக்காவை காதலிக்காம இருந்திருந்தால், நிச்சயம் நான் இழையினிய தான் மேரேஜ் பண்ணி இருப்பேன்….” என்று முடிக்க, அவன் பேசும் போதே படிகளில் இறங்க தொடங்கி இருந்த ஆதவன், அவன் பேசுவதை கேட்டுக்கொண்டே வர, இறுதியாக ஆரியன் சொன்ன வார்த்தைகள் மட்டும் தெள்ள தெளிவாக ஆதவன் செவிகளில் விழுந்தது….

 

அவனது இறுதி வாக்கியத்தை கேட்கவும், ஆதவனுக்கு உள்ளம் எரிமலையாய் தகிக்க, ஆரியனை பார்வையாலே எரிக்க தொடங்கினான்…அதற்கு காரணம், அண்ணனை மணந்து அவனுக்கு அண்ணி ஸ்தானத்தில் இருப்பவளை, மணந்திருப்பேன் என்று அவன் கூறியது எந்த கோணத்திலும் சரி இல்லை என்று கருதிய ஆதவன், அந்த ஆதவனுக்கு நிகரான உஷ்ணத்துடன் இருந்தான்.

அங்கு இருப்பவர் எவரும், அவன் பேச்சை தடுக்காமால் அமைதியாக இருக்க, அனைவர் மீதும் கோவம் துளிர்த்தாலும், இழையினியும், ஆரியனின் பேச்சு இப்போது இப்படி பேசுவது முறை இல்லை என்று கண்டிக்கவில்லை.. ஏன் மறுப்பு கூட சொல்லவில்லை…என்று அவன் மனம் மொத்த கோவத்தையும் அவன் மனைவியின் மீது திருப்பியது…

 

இழையினி முகத்தை பார்க்க சாதாரணமாகவும், அதே நேரம் மனதளவில் ஆரியன் மற்று அவனுடைய தந்தையின் பேச்சின் சாரத்தை விரும்பாதவளுமாக நின்றிருந்தாள், அவள் உள்ளே ஆரியனின் பேச்சை வெறுத்தாலும், புதிதாக திருமணம் முடிந்து வந்த ஒரே வாரத்தில், அதுவும் இந்த வீட்டின் பெரியவர்கள் அனைவரும் அமைதி மேற்கொள்ளும் போது, அப்படி தான் இடையிட்டு அவனது பேச்சை துண்டிப்பது சரியாகுமா என்ற சிந்தனையில் அமைதிகாட்க, அவளுடைய அமைதியே, அவளுடைய நாயகன் நெஞ்சில் இவள் மீது கோவம் படர காரணமாக இருந்தது….

 

அவள் மீது கோவம் வந்தாலும், அதை வெளியே காட்டாத ஆதவன், “என்ன ஆரியன் பேசிக்கிட்டு இருக்க? நடந்து முடிந்த விஷயங்களை பற்றி மறுப்படியும் எதற்கு பட்டி மன்றம்… வாங்க சித்தப்பா… பேசினிங்களா ஆரியனோட, என்ன முடிவு பண்ணி இருக்கீங்க.. ” என்று ஆதவன், அவர் வந்த வேலையில் கண்ணாக அதை பற்றி கேட்க, அவரோ ஒன்று பேசாமால் மௌனமாய் இருந்தார்….

 

“இதோ பாருங்க சித்தப்பா… ஆரியன் அவன் மனசுக்கு பிடிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான்… உங்ககிட்ட சொல்லாம செஞ்சது தவறு தான்…. அதுக்காக, அவன் உங்க மகன் இல்லன்னு ஆகிடுமா ? பழையதையே பேசிக்கிட்டு இருந்தால், நடந்தது மாறவா போகுது..அப்படி மாறிடும்னா சொல்லுங்க நானும் பழசயே பேசுறேன்… மனசுக்கு பிடிச்சவங்க, அவுங்க காதலிச்சவங்களே வாழ்க்கை துணையா வருவது எல்லாருக்கும் நடக்குறது இல்ல…. உங்க மகனுக்கு அந்த சந்தோசம் கிடைச்சிருக்கு… அதுக்கு நீங்க ஆசிர்வாதம் பண்ணுங்க… மறுப்படியும் பழச பேசவேண்டாம்….” என்று எந்த தயக்குமும் இன்றி ஆதவன் பேசிய தோரணையே, அவன் பேசுவது தான் சரி, அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று அனைவரும் எண்ணும் அளவு இருந்தது….

 

ஆனால் அவனது பேச்சு இழையினிக்கு மனதில் ரணத்தை தந்தது… அவள் மனமோ, “அப்போ பழையது வரலன்னு இவர் மனசு துடிக்கிதா.. ? எதுவும் இனி மாறாதுன்னு ஆதங்கத்துல அவர் இப்படி பேசுராரோ..காதலிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணிகிறது வரம்னா, அப்படி பண்ணிக்கமுடியாமல் போவது சாபமா? அவர் என்ன அப்படி தான் நினைக்கிறாரோ….” என்று எண்ணம்மிட்டது….

 

அவளது எண்ணங்களை தடை பண்ணும் விதமாய், அவளது கணவனின் குரல் தொடர்ந்து ஒலித்தது….

 

“என்ன சித்தப்பா..அமைதியா இருக்கீங்க… ” – ஆதவன்

“இல்லபா.. இனிமேல் என்ன யோசிக்க, எதையும் மாத்தமுடியாதப்ப…அதோட உன் வார்த்தை எதுவும் மறுக்கும் படியா இல்லப்பா… அவுங்க ரெண்டு பேரையும் வர சொல்லு… என்கூட கூட்டிப்போறேன்…” – ஆரியனின் தந்தை

“அண்ணா ரொம்ப தேங்க்ஸ்….. நீங்க பேசாம, அப்பா ஒத்துகிட்டு இருக்கமாட்டாரு…. இப்ப நீங்க வரதுக்கு முன்னாடி கூட இழையினிய கம்பார் பண்ணி பேசினாரு” – ஆரியன்

“இழையினி உனக்கு யாரு ஆரியன் ? தங்கச்சியா? ” – ஆதவன்

“என்ன அண்ணா சொல்றீங்க…” – திகைப்பு நிறைந்து ஒலித்தது ஆரியனின் குரல்.

“பின்ன வார்த்தைக்கு வார்த்தை இழையினியினு கூப்பிடற.. ? உன் அண்ணன் மனைவி… முன்ன எப்படியோ… இப்ப உனக்கு அண்ணி… அது அடுத்தமுறை அவளை அழைக்கும் போது நினைவு இருக்கட்டும்….” என்று  சிறு கண்டனம் தொனிக்க ஒலித்தது ஆதவனது குரல்…

“ச.. சா சாரி அண்ணா.. இனி அண்ணி அப்படினே கூப்பிடுறேன்… ” – ஆரியன்

“சித்தப்பா, நீங்க ஒன்னு தப்பா எடுகம்மாட்டீங்கனு நம்புறேன்…” – ஆதவன்

“இல்ல ஆதவா, அந்த பயலுக்கு தான் தெரிஞ்சு இருக்கணும்… அந்த புள்ளைய அண்ணினு கூப்பிடணும்னு… நான் கூட இழையினி தான் மருமவனு நினச்சுட்டேன்….” – ஆரியனின் தந்தை குரல் ஆற்றாமையில் ஒலித்தது.

“சித்தப்பா.. நான் ஒன்னு சொன்னா கேட்பீங்களா.. ? உங்க மகன கல்யாணம் பண்ணி வந்த பொண்ணு முன்னாடி இன்னமும் வேற ஒரு பொண்ணோட பெருமைய பேசி, மருமகள்னு வார்த்தைக்கு வார்த்தை பேசுறது சரி இல்லை… முதல்ல யாரையும் யார்கூடயும் ஒப்பிடாதீங்க.. இழையினி இப்பவும் உங்கள் மருமக தான்… என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டதுனால… இனிமேல் நீங்க பேசவேண்டியதோ, யோசிக்க வேண்டியதோ, பாராட்டவேண்டியதோ அவனிக்காவை தான்… வீட்டுக்கு வந்த பொண்ணு வருத்தப் படுறது போல நம்ம குடும்பத்துல யாரும் நடந்துக்க மாட்டாங்க…. இது நான் சொல்லி உங்களுக்கு தெரியணும்னு இல்லை… ” என்று ஆதவன் கூற, ஆரியனின் தந்தைக்கு தான் செய்த தவறு புரிந்தது….

 

இவ்வாறு ஆதவன் பேச, அவன் பேசியதன் பொருளை தவறாக புரிந்துக்கொண்டாள் இழையா. ஆதவனது பேச்சில் இருந்து, அவனிக்காவை மதிக்க சொல்கிறான், அவளை மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள சொல்கிறான் என்று மட்டுமே இழையா புரிந்துக் கொண்டாள்…அது அவளுக்கு சொல்ல முடியாத வேதனையை தந்தது… தனது முன்னால் காதலியின் சுகத்தை இப்பொழுதும் ஆதவன் பேணுகிறான் என்றும், அவளை இழந்துவிட்டத்தை  நினைத்து வாடுகிறான் என்றும் அவள் முடிவுக்கு வந்தாள்….

 

அதன் பின் இழையினி, ஆதவனை தவிர, அனைவர்க்கும் அனைத்தும் சுமூகமாக செல்ல, அன்று மாலை ஆரியன் குடும்பம் கிளம்புவதாக இருந்தது…

அன்று முழுவதும், கதிரவன் வெளியே தலை நீட்டாமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்க, கருமேகங்கள் சூழ்ந்து மப்பும் மந்தாரமுமாய் காட்சி தந்தது…  

 

இன்று தென்னந் தோப்பில் காய் இறக்க ஆட்கள் வந்திருக்க, வீட்டில் நிகழ்ந்த விஷயங்களால் காலையில் இருந்து மேற்பார்வைக்கு ஆதவனால் செல்ல இயலவில்லை… ஆதலால், ஆதவன் தென்னந் தோப்பிற்கு புறப்பட, மகிழனுக்கு அழைத்து பார்த்தால், மகிழனுக்கு இணைப்பு கிடைக்காமலே போக, அவனுக்கு அழைப்பத்தை நிறுத்திவிட்டு, அவன் மட்டும் தோப்பிற்கு செல்ல புறப்பட்டான்…

 

சரியாக அவன் புறப்படும் சமயம், நிவன், “அண்ணி… இழையினி அண்ணி… ” என்று அழைக்க, உள்ளிருந்து வெளியே வந்த இழையினி கண்களில் ஒரு வெறுமை படர்ந்திருந்தது… ஆதவனுக்கு அவள் விழியில் தெரிந்த வெறுமையை உணர்ந்தாலும் எதுவும் பேசாமல், கிளம்புகின்றவனை போல பாசாங்கு செய்து, அவள் வாய் மொழி கேட்க காத்திருக்க தொடகினான்… அவன் கிளம்பு முன், அவள் குரலையாவது கேட்கலாமே… கடந்த இரண்டு நாட்களாய், ஏது ஏதோ மன வருத்தம்… அதில் அவள் குரலை கூட அவனால் கேட்க முடியாமல் போய் இருந்தது.

 

“சொல்லுங்க தம்பி… ” – இழையினி குரல் சன்னமாக ஒலித்தது ஸ்ருதி இல்லாத இசை போல…

“அண்ணி… ஆதவன் அண்ணா கிளம்புறாங்க… தோப்புக்கு தான்.. கிளைமேட் நல்ல இருக்கு… நீங்களும் ஒரு வாக் போயிட்டு வாங்க… ” என்று நிவன் ஆதவனை பார்த்துக் கொண்டே கூற, ஆதவனோ மனதினுள் நிவனுக்கு நன்றி சொல்லி விட்டு, வெளியே எதுவும் காட்டிக் கொள்ளாமல், அவள் வருவாளா என்ற எதிர்ப்பார்போடு, எதையோ தேடுவது போல பாசாங்கு செய்ய, இழையினி மறுப்பாக… “இல்ல நிவன் வேலை இருக்கு.. நான் போகவில்லை… ” என்று விட்டு அடுக்களை நோக்கி செல்ல, மீண்டும் ஆதவனுக்கு அவள் மீது கோவம் துளிர்த்தது….

 

இழையினிக்கும் ஆதவன் உடன் செல்ல ஆசையே.. ஆனால், நிவனுக்கு பிடிக்குமென்று அவளது அத்தையான வேதா அம்மாள் பால் பணியாரம் செய்ய, அதற்கு இழையினியயும் உதவி புரியுமாறு, இப்பொழுதுதான் வேண்டுகோள் விடுத்திருந்தார்…

 

மாமியார் ஆகினும், கட்டளையாக சொல்லாது, பரிவுடன் ஒரு உதவியாக அவளிடம் கேட்கும் பொழுது, அவரிடம் உதவி செய்கிறேன் என்று கூறிவிட்டு, இப்பொழுது கணவனுடன் ஜோடி போட்டு கிளம்ப இழையினிக்கு மனம் இல்லை. அதனால் தான் தட்டி கழித்தாள்…

 

இழையினி வரவில்லை என்று வருத்தம் ஆதவன் மனதிலும், கணவனுடன் செல்ல முடியவில்லை என்ற வருத்தம் இழையினி மனதிலும் இருந்தாலும், இருவருமே, அந்த வருத்தத்தை மறந்து, ஒருவர் மீது மற்றொருவர் கோபம் கொள்ள தொடங்கினர்.

 

அதாவது, நிவன் கூறியும், தன்னுடன் வரமறுத்ததால் மனைவி மீது கோவம் ஆதவனுக்கு. நிவன் தானே அழைத்தான்.. இவரும் அங்கே தானே நிற்கிறார்.. வா என்று என்னை அழைக்க கூடாதா என்று இழையாவும் கணவன் மீது கோவம் கொண்டாள்…

 

ஆதவன் சென்ற சில நிமிடங்களில், அவனிக்கா அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டு இருக்க, அவளது செய்கைகளை பார்த்த இளநிவன், “என்ன அவனி அண்ணி… அங்குட்டும் இங்குட்டும் சுத்திக்கிட்டு இருக்கீங்க… ” என்று கேட்க, அவளோ, “நத்திங் இளா… ஐ அம் லுகிங் பார் ஆதவன்…” என்று கூறியப்படி, மீண்டும் தேட தொடங்கினாள்…

 

“அண்ணி… இங்க வாங்க, நான் சொல்றத கேளுங்க… அண்ணா இப்ப தான் தோப்புக்கு போனாங்க… ” – இளநிவன்

“ஒ ஐ மிஸ்ட் இட்… நான் அவருக்கு தாங்க பண்ணணும்னு வந்தேன்…” – அவனிக்கா

“எதுக்கு அண்ணி….” – இளநிவன்

“என்ன இப்படி கேட்குற, பிகாஸ் அப் ஹிம் ஒன்லி, ஐ காட் மை இன்லாஸ்” – அவனிக்கா

“ஒ அதை சொல்லுறீங்களா… ஒகே அப்போ ஒன்னு பண்ணுங்க… இப்படியே வீட்டுக்கு பின்னாடி போய்ட்டு லெப்ட் எடுங்க… யு கேன் சி லோட் ஆப் கோக்கனட் ட்ரீஸ்… அதுக்குள்ள போங்க… போயிட்டு அண்ணன் பேறு சொல்லி கேளுங்க… அங்க இருக்கவங்க வில் ஹெல்ப் யூ…” – இளநிவன்

“ஒ .. ஒகே … நான் போறேன்.. நீ ஆரியன் வந்தா ஜஸ்ட் இன்போர்ம் ஹிம்..” – அவனிக்கா

இவ்வாறு இவர்கள் சம்பாசனை முடிய, அவனிக்கா ஆதவனை தேடி செல்ல, லேசாக தூறல் போடா தொடங்கி இருந்தது… அப்போது நிவன் அடுக்களைக்குள் சென்று, “அம்மா.. பால் பணியாரம் ரெடியா ? ” என்று வினவ, அவனின் தாயோ, “இதோ எம் மருமவ பண்றா டா..செத்த பொறு..” என்று கூற, நிவனோ, “ஐயோ அண்ணி..எனக்கு பால் பணியாரம் செய்யவா அண்ணாகூட போகாம இருந்தீங்க.. ஏன் அண்ணி இப்படி பண்றீங்க…” என்று கூற, வேதா அம்மாள் விவரம் கேட்க, நிவன் நிகழ்ந்ததை கூற, வேதா அம்மாளோ, இழையினியின் வேலையை செவ்வந்தியை செய்ய சொல்லிவிட்டு, தோப்பிற்கு போகுமாறு கூறினார்…

 

இழையினி ஆதவன் மீது உள்ள கோவத்தால் மறுக்க, வேதா அம்மாளோ ஒரு குடைய குடுத்து, அவளை வற்புறுத்தி, கையோடு ஆதவனையும் அழைத்துவருமாறும் கூறினார்…

 

அவளும் மழை தூறல் தொடங்கியதால், அவன் மீது கோவம், வருத்தம், மனத்தாங்கல் இப்படி அனைத்தும் இருந்த போதிலும், அவனுக்காக குடைய எடுத்துக்கொண்டு வரப்பில் நடக்க தொடங்கினாள்…

 

அவள் சென்ற சில நிமிடங்களில், அவனிக்காவை தேடி வந்த ஆரியன், அவளை பற்றி நிவனிடம் கேட்க, நிவனோ, அவனிக்கா தோப்பிற்கு ஆதவனிடம் நன்றி சொல்ல சென்று இருப்பதாக கூற, ஆரியனோ பதரிவிட்டான்…

 

“ஐயோ நிவன்… அவளை ஏன் போகவிட்ட….அவளுக்கு மிசோபோனியா… ” – பதட்டமாக ஒலித்தது ஆரியன் குரல்

“மிசோபோனியா? அப்படினா என்ன அண்ணா..” – நிவன்

“அவளுக்கு குறிப்பிட்ட சத்தம் கேட்டா, அவ பயந்திடுவா… உடம்பு எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடும்… மயக்கமே கூட சில நேரத்துல வந்திடும்… அதான் அவள தேடி வந்தேன்.. அவளுக்கு இடி சத்தம் கேட்க கூடாது.. இப்ப மழை வேற ஆரம்பிச்சிடுச்சு… எந்த தோப்பு…” பதட்டத்துடனும், பரபரப்புடனும் ஒலித்தது ஆரியனது குரல்…

 

வேகமாக ஒரு குடைய வாங்கிக்கொண்டு ஆரியனும் தோப்பை நோக்கி ஓடினான்…

 

மறுபுறமோ, ஆதவன் மனம் சரி இல்லாததால், அவன் வழக்கமாக வரும் குடிசைக்கு வர, அங்கும் இழையினியின் நினைவே துரத்தி வந்தது… அந்த ஆற்றை பார்க்கும் பொழுது, இழையினியோடு இணைந்து நீரில் நின்றது நினைவு வர, அந்த ஆற்றோரமாய் அமர்ந்து ஓடுகின்ற தண்ணீரை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தான்… அப்போது தான், அவன் இருக்கும் பகுதியில் லேசாக தூறல் போட தொடங்கி இருந்தது…

 

அவனை தேடி வந்த அவனிக்காவோ, ஆதவனிடம் முன்னேறி கொண்டு இருந்தாள்… அவனை அவள் நெருங்கவும், தூறல் தொடங்கவும் சரியாக இருந்தது… அந்த ரம்யமான சூழலை பார்த்த அவனிக்கா, அவளுக்கு இருக்கும் பிரச்னையை கூட மறந்து, ஆதவனிடம் பேச தொடங்கினாள்… அவனிடம் நன்றி கூறியவள், அவளது நல்ல நண்பனாக, ஆதவன் இருக்க வேண்டும் என்று மனமார கேட்டுக்கொண்டாள்… அவளது வருகையை ஆதவன் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவள் பேசியவிதம் ஆதவனுக்கு பிடித்து போகவே, ஆதவனும் அவளுடன் சகஜமாக உரையாட தொடங்கினான்…

 

இப்புறம் இழையினி வர, அவள் பின்னோடு ஆரியன் வந்துக்கொண்டு இருந்தான்… முன்னால் இழையினி செல்வது ஆரியனுக்கு தெரிந்தாலும், இழையினிக்கு அவன் பின்னால் வருவது தெரியவில்லை… ஆரியனுக்கும் அவளை அழைக்க வேண்டும் என்று தோன்ற வில்லை.. இடி இடிப்பதுக்கு முன்னால், அவனிக்காவை அவனின் கை வளைவில் வைத்துக்கொள்ள துடித்தப்படி, வேகமாக நடைப்போட்டான்.. சுற்றும் முற்றும் கண்களால் துலாவியப்படி…

 

மறுப்புறம், அவனிக்கா, அந்த சாயிந்து வளர்ந்திருந்த தென்னை மரத்தை கண்டு ஆர்ப்பரித்தவள், அதன் மீது நடக்க ஆசைக்கொள்ள, அவள் அதில் நடக்க முயன்றபோது, போர் முரசு போல, ஒரு பெரிய கட்டிடம் இடிவது போல, சிறு குன்றுகள் ஒன்றோடு ஒன்று உரசவது போல, பேரிரைச்சலோடு ஒலித்தது அந்த இடியின் சப்த்தம்… அந்த சப்த்தம் தென்னை மரங்களின் மீது பட்டு தெறித்து, எதிரொலிகளை கிளப்ப, இடியோடு சேர்ந்து மின்னலும் பளிச் பளிச் என்று வெட்ட தொடங்கியது…

 

அந்த பேரிடியில், நிலை குலைந்து போனால் அவனிக்கா… சாயிந்த தென்னை மரத்தின் மீது நடக்க முயன்றவள், பயத்தில் மயங்கி, ஓடும் நீருக்குள் விழ, ஆதவனோ ஒரு நொடியும் தாமதிக்காமல் நீரில் இறங்கினான்… நீரில் விழுந்ததினால், மயக்கம் தெளிந்தாலும், அவள் உடல் மட்டும் நடுக்கத்தை நிறுத்தவில்லை… ஆதவன் அவளை கைகளில் ஏந்தியப்படி கரையை ஏற, அங்கே சற்று தொலைவில் இழையினியும், ஆரியனும் அந்த காட்சியை பார்க்க நேர்ந்தது….

 

தனது கணவனின் கைகளில் ஒரு பெண்..அதுவும் அவனின் முன்னால் காதலி… குழம்பி இருந்த அவளது மனதில், இப்பொழுது யாரோ தணலை அள்ளி தெளித்தது போல துடி துடித்துப் போனாள்… அவள் கால்கள் அதே இடத்தில் வேரூன்றிவிட்டன….

 

ஆனால் ஆரியனுக்கு புரிந்துவிட்டது, சில நிமிடங்களுக்கு முன் கேட்ட இடி சப்தத்தில், அவனிக்காவிற்கு மயக்கம் வந்திருக்க வேண்டும், நீரில் எதிர்பாரா விதமாக விழுந்திருக்க வேண்டும், தனது அண்ணன் தான் அவளை காப்பாற்றி இருக்க வேண்டும்…என்று யாரும் எந்த விளக்கமும் சொல்லாமல், அவனுக்கு புரிந்துவிடவே, மின்னல் வேகத்தில் அவனிக்காவை நெருங்கினான்…

 

கரைய அடைந்ததும், மெல்ல சுதாரித்து கீழே இறங்கிய அவனிக்கா, ஆரியனை பார்த்ததும் தவறு செய்துவிட்ட குழந்தையாக முகத்தை வைத்துக் கொண்டாள்… “ஏன் அவனி இப்படி செஞ்ச.. உனக்கு தான் இடி சத்தம்னா பயம்ல.. டாக்டர் உன்ன கேர் புல்லா இருக்க சொல்லி இருந்தும், மழை நேரத்துல ஏன் வந்த… ” என்று கடிந்துக்கொண்டவன், அண்ணனுக்கும் அவனது நன்றியை சொல்லவும் மறக்கவில்லை…

 

இவை அனைத்தையும் சற்று தொலைவில் இருந்து பார்த்த இழையினிக்கு  எதுவும் காதில் விழவில்லை… விழுந்திருந்தாலும் பயனில்லை… காரணம், அவள் கண்கள், அவளுடைய கணவனை வெறித்துப்பார்க்க, அவளது சிந்தனையில் கடைசியாக அவள் பார்த்த காட்சி மட்டுமே பதிந்திருந்தது… அவள் அங்கேயே நின்றுவிட, அவனிக்காவின் சுகத்தை அறிந்துவிட்டு, அவன் கொண்டு வந்திருந்த குடைக்குள் அவளை அணைவாக பிடித்துக்கொண்டவன், அப்போது தான் நினைவுவந்தவனாக, “அண்ணி.. ஏன் அங்கயே நிக்கிறீங்க… ” என்று ஆரியன் இழையினியை பார்த்து குரல் குடுக்க, இழையினி வந்திருப்பதை ஆதவன் அப்போது தான் கவனித்தான்…

 

“இழையா.. எப்படி இங்க ? ” – ஆதவன்

“அண்ணி நானும் சேர்ந்து தான் வந்தோம்…” என்று ஆரியன் கூறிவிட்டு, “வாங்க அண்ணா போகலாம்…” என்று கூறி முன்னே செல்ல, ஆதவனின் நெஞ்சம் அந்த மழை தூறலிலும் எரிமலையாக கொதித்துக்கொண்டு இருந்தது…

ஆதவனது மனமோ, “என்கூட வரதுக்கு, அவளுக்கு வேலை இருந்தது.. இப்போ எப்படி இவன் கூட மட்டும் வர முடிந்தது… ” என்று எண்ண, அவனுக்குள் வேதனையும், கோவமும் ஒரு சேர துளிர்த்தது மனைவி மீது…

 

அவர்கள் மூவரும், இழையினியின் அருகில் வரும்வரை கூட, அவள் பார்வை கணவனின் மீதிருந்து மீளவில்லை… அருகினில் வந்து அவனிக்கா, இழையினியை தொட்டு அழைத்த பின்னே, இழையினி சுற்றம் உணர்ந்தாள்…

சுற்றம் உணர்ந்த இழையினி, கணவனையும் அவனிக்காவையும் மாறி மாறி பார்க்க, அவள் மான் விழியில் அன்று ஆதவன் பார்த்த அதே கலக்கம் இன்றும் குடிக்கொண்டு இருந்தது… ஆனால் ஆதவனுக்கு அவள் மீது இருந்த கோவத்தால், அவன் முன்னே அவளை தாண்டி நடக்க, இழையினி மனதில் மின்னலென வலி பரவ தொடங்கியது.

 

இதற்கு இடையில், மழை இப்போது பெரிய பெரிய தூறலாக போட, அவனிக்காவை, ஆரியன் துரித்தப்படுத்த, அவனிக்காவோ, இழையினியையும் அழைத்தாள்…

 

அவர்களுடன் வேண்டா வெறுப்பாக நடக்க, ஆரியனோ, “அவனி டியர்.. பாஸ்ட்.. அப்புறம் மறுப்படியும் இப்போ ஆனது போல ஆகிடும்.. பாஸ்டா நட” என்று கூற, அவனை சீண்டும் நோக்கத்தோடோ, அல்லது ஆரியனது மனநிலையை இலகுவாக்கும் பொருட்டோ, அவனிக்கா அந்த வார்த்தைகளை கூறினாள்…

 

அந்த வார்த்தையை கேட்ட நொடி, இழையினி அவளது கையில் இத்தனை நேரம் பிடித்திருந்த குடைய கூட நழுவ விட்டிருந்தாள்… அவனிக்கா சொன்ன வார்த்தையே, அவளது காதில் ரீங்காரமிட, அசையாத கற்சிலையாய் மாறியிருந்தாள் இழையா…..

Advertisement