Advertisement

 

மயிலிறகு – 14

 

இழையினி, ஆதவன் திகைத்த விழிகளுக்கு காரணம்…. அந்த பெரிய அகற்று விரிந்து படர்ந்திருந்த மாமரத்திற்கு கீழே மகிழன் மரத்தை சுற்றி சுற்றி  ஓட, இதழா கையில் ஒரு மரக்கிளையை ஒடித்துக்கொண்டு மகிழனை அடிக்க துரத்திக்கொண்டு இருந்தாள்….

 

அதை பார்த்து திகைத்த இழையினியும், ஆதவனும் அவ்விருவரும் இருந்த இடத்திற்கு ஓட்டமும் நடையுமாக சென்று அடைய, இழையினி, இதழாவின் கையை பற்றி நிறுத்த, மகிழனோ ஆதவன் பின்னால் வந்து நின்றுக்கொண்டான்….

 

இருவரும் மூச்சு வாங்க, ஒருவரை ஒருவர் முறைத்தபடி நிற்க… ஆதவனும், இழையினியும் அவர்களிடம் என்னவென்று கேட்க, இழையினி, இதாழாவின் மீது ஒரு கண்டன பார்வையை செலுத்தினாள்…

 

“இதழ்..என்ன இது?….ஏன் இப்படி?… அவரு அப்படி என்ன செய்தாரு…?” -இழையினி

“அக்கா… உனக்கு தெரியாது… அவரு என்ன பண்ணலன்னு கேளு….” – இதழா

இதை கேட்டதும் ஆதவன் இழையினி இருவரும் ஒருசேர மகிழனை பார்க்க, மகிழனோ, “அடப்பாவிங்களா… ஏதோ நான் அந்த புள்ளைய ரேப் பண்ணிட்டது போல ல லுக்குவிடுறாங்க… புருஷனும் பொண்டாட்டியும்” என்று மனதினுள் நினைத்தவன் வெளியே….”நண்பா…சிஸ்டர் முதல்ல நடந்தது என்ன னு கேட்டுட்டு அப்புறம் இந்த லுக் விடுங்க….” என்று கூறி முகத்தை பாவமாக வைத்துக்கொண்டான்.

 

“இதழ் என்ன ஆச்சு டி… ” – இழையினி

“மகிழ், சொல்லு… அப்படி என்ன தான் நடந்தது….” – ஆதவன்

 

இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய இதழா மற்றும் மகிழன் இருவரும் சற்று முன் நிகழ்ந்த உரையாடலை சொல்லவும், அவ்வபொழுது அவர்கள் மனதினுள் நினைத்தவைகளை மீண்டும் ஒருமுறை ஓட்டி பார்க்கவும் தொடங்கினர்….

 

ஆதவன், இழையினி இருவரும் தென்னந்தோப்பில் பிரவேசித்த அதே நேரம், இவர்கள் இருவரும் மாந்தோப்பில் நுழைந்தனர்.

 

சில நிமிடங்கள் இதழா, மாந்தோப்பை சுற்றி பார்த்தபடி நடக்க, மாவிலையின் மனம் அவள் நாசியை வருட, கண்களை சுழலவிட்டப்படி நடக்க, பிறகு சிறுது நேரம் அவள் கைபேசியில் தனது தோழிகளுடன் பேசிக்கொண்டு வர, மகிழனின் திட்டம் தவிடு போடி ஆனது….

 

“என்னடா இவ.. கடந்த அரை மணி நேரமா போன் பேசுறா… இவளுக்கு போன் பில்லு கட்டியே வாழ்க்கை போய்டும் போலயே…” என்று மனதில் புலம்பியவனாக, அவள் பின்னோடு வர, மாந்தோப்பு முடிவிற்கு வந்து, மகிழன் முன்பு சொன்ன இடத்தில் ஆதவன் வருகைக்காக காத்திருக்க தொடங்கினான்.

 

அங்கே வந்த சிலநொடிகளில், கைபேசி அழைப்பை துண்டித்த இதழா, மகிழன் பக்கத்தில் நிற்க, மகிழனோ உற்சாகமாக இப்பொழுது பேச தொடங்கினான்….

 

“என்ன இதழா… உங்களுக்கு நிறைய பிரண்ட்ஸ் இருப்பாங்க போல?” – மகிழன்

“ஹ்ம்ம் ஆமாம்…ஆனா  எனக்கு காலேஜ் பிரண்ட்ஸ் விட , சிலம்பு டீம் பிரண்ட்ஸ் தான் அதிகம்…. ”  -இதழா

‘அட, சிலம்பு போடுற பொண்ணுங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து கூத்தடிக்கும் போல… யாருக்கண்டா… செஞ்சாலும் செயும்ங்க ‘ – மகிழன் மனதில்

“ஒ.. இதுக்கெல்லாம் கேங் பார்ம் பண்ணுவீங்களா?” – மகிழன்

“இதுக்கு பார்ம் பண்ணாம ? வேற எதுக்கு … சரி உங்க கிட்ட கேட்கணும்னு நினைத்தே… நேற்று ஏதோ சிலம்ப, ‘கிர்ல்ஸ் திங் னு’ சொன்னீங்களே?… எனக்கு புரியல.. நீங்க அப்போ என்ன சொல்ல வந்தீங்க… ? ” – இதழா

 

“என்ன உங்களுக்கு புரியலையா… சும்மா சொல்லாதீங்க… உங்களுக்கு தெரியாம இருக்குமா… இது கர்ல்ஸ் -க்கு எவ்ளோ முக்கியம்… அப்கோர்ஸ்.. பசங்களும் யூஸ் பண்ணலாம்… பட் இது ஒவ்வொரு பொண்ணுக்கு ரொம்ப தேவை ” – என்று மகிழன், அக்காலத்தில் ஆண்களும் சிலர் தண்டை அணிந்திருந்ததை நினைவில் கொண்டு கூறினான்.

 

‘ச்ச இவரு.. பெண்களுக்கு தற்காப்பு கலை முக்கியம்னு எப்படி நினைக்கிறாரு.. ஹி இஸ் எ ஜெம்… ‘ – இதழா மனதில்

 

“உங்கள போல எல்லா ஆண்களும் நினைத்தா.. எவ்ளோ நல்ல இருக்கும்… யு ஆர் சிம்ப்லி சூபெர்ப்…” – இதழா….

 

‘இவ என்ன சொல்றா? மத்த பசங்கலாம் ஏதோ பொண்ணுங்ககிட்ட இருந்து சிலம்ப ஆட்டையப்போட்டு அவுங்க கால் ல போட்டுகிறது போல ல பேசுறா… சரியான லூசு… ‘ – மகிழன் மனதில்.

“இது ஒரு சாதாரண விஷயங்க இதழா… இதுக்கு போய்…” – மகிழன்

 

“இல்லங்க.. இது சாதாரண விஷயம் இல்ல.. நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயத்துலயும் ஆழ்ந்த கருத்து இருக்கு…” – இதழா

 

‘இவ சரியான மக்கு பிகுர்  போல… ஹி ஹி நான் என்ன சொல்லிட்டேன்னு இப்ப இப்படி புகழுது… ‘ – மகிழன் மனதில்.

 

“நீங்க எனக்காக ஒருமுறை சுத்தி காட்டுறீங்களா இப்போ ?… ப்ளீஸ் ” என்று கூறிய இதழா, பக்கத்தில் இருந்த ஒரு நீளமான மர கிளையை எடுத்து மகிழனிடம் கொடுத்து சிலம்பாட்டம் செய்யுமாறு கொடுக்க, மகிழனோ அவள் சொல்வது புரியாமல் விழித்தான்….

 

‘என்னத்த சுத்தி காட்ட சொல்றா..? இவ்ளோ நேரம் தோப்பு தொறவு எல்லாம் சுத்தி தான் காண்பித்தேனே…’ – மகிழன் மனதில்

 

“என்ன அப்படியே நிற்குறீங்க,… சுத்துங்க சார்…” – இதழா…

 

‘அய்யோ.. பக்கி, கம்ப கொடுத்துட்டு சுத்தி காட்டு சுத்தி காட்டுனா நான் என்னத்த செய்ய…’ – மகிழன் மனதில்

 

அவள் நீட்டிக்கொண்டு இருந்த, கம்பை கையில் வாங்கியவன் ஒருமுறை பார்வையை சுழலவிட்டப்படி… “கிழக்கு ல இருந்து தான் நம்ம வந்தோம் இதழா.. அங்கிட்டு மாந்தோப்பு… மேற்க்குல வாழைத்தோட்டமும், வடக்குல தென்னந்தோப்பும் இருக்குது… தெற்குல உன் மாமாவோட காலன் பாக்டரி… மத்த இடம் எல்லாம் நம்ம பார்த்துட்டோம்… தென்னந்தோப்பும் காலன் பாக்டரியும் மட்டும் அப்புறம் சுத்தி காட்டுறேன்…” என்று கூறியபடி அவள் கொடுத்த கம்பை ஒவ்வொரு திசைக்கும் காட்டி காட்டி கூறி முடிக்க, அவனை விசித்திரமாக இதழா பார்த்தாள்.

 

பிறகு ஏதோ புரிந்தவளாக, இதழா வாய் விட்டு சிரிக்க.. மகிழனோ மனதினுள், “நல்லாதான இருந்தா… திடிர்னு சிரிக்கிறா… அப்படி ஒன்னும் நம்ம காமெடி பண்ணலியே…” என்று அவனது மைண்ட் வாய்சில் பேசிக்கொண்டு இருக்க இதழா பேச தொடங்கினாள்.

 

“குட் ஜோக் சார் ” – இதழா

“நம்ம எப்ப ஜோக் சொன்னோம் ” – மகிழன் மனதில்

“நீங்க நல்லா பேசுறீங்க…அப்படின்னு மட்டும் நினைத்தா, கல கலப்பான ஆளா இருக்கீங்களே….” – இதழா

“அட….. மயிலு மாமன் கிட்ட மயங்கிடுச்சு…” – மகிழன் மனதில்

“சார் நோ மோர் ஜோக்ஸ்… இப்ப ஒரு முறை ஒரே முறை, சிலம்பாட்டம் எனக்காக…. ” – இதழா…

“சிலம்பாட்டமா? அது படத்தோட பெயர் ஆச்சே… இவ ஒரு வேளை சிம்பு ரசிகையா இருப்பாளோ..?” – மகிழன் மனதில்.

“ஒருமுறை சுருள் கத்தி முறையில சுழட்டுங்க சார்….” – இதழா…

 

“இவ என்ன சொல்றா…. ? ஒரு வேளை கத்திய சுத்தி காட்ட சொல்றாளோ ” – மகிழன் மனதில்

 

“அய்யோ இதழா.. நான் கத்தி லாம் கொண்டு வரல.. வீட்டுக்கு போனதும் கிட்சன் ல இருக்கும், எடுத்து சுத்திக்காட்டுறேன்” – மகிழன்

 

“சார் போது விளையாடாதீங்க.. சிலம்பு விளையாட்ட, அதாவது உங்க கையில இருக்குற கம்ப, சிலம்பமா நினச்சு சுத்தி காட்டுங்க….” என்று கூறிய இதழா, அவன் கையிலிருக்கும் அந்த கிளையை வாங்கி அதில் சிலம்பாட்டம் முறையில் குரு வணக்கம் வைக்க… இதை பார்த்து வாய் பிழந்த மகிழன், “அப்போ நீங்க சிலம்பாட்டம் னு சொன்னது சிம்பு படத்த இல்லையா…?” என்று மலங்க மலங்க விழித்துக்கொண்டு கேட்டான்.

 

“என்னது சிம்பு படமா…? நீங்க இவ்ளோ நேரம் சிலம்பு னா உயிரு, பிடிக்கும்  அப்படின்னு சொன்னது லாம்…? ” – இதழா

 

“அட ஆமாம்ங்க, இப்பவும் தான் சொல்றேன்… சிலம்பு னா ரொம்ப பிடிக்கும்… பூம்புகார் படத்துல, கண்ணகி சிலம்போடு கண்ணீர் சிந்தி வருவாங்களே… வாய்ப்பே இல்லங்க.. அருமையா இருக்கும்… ” – மகிழன்.

 

அவன் கூறியதை கேட்டு. கடுப்பின் உச்சத்திற்கு சென்ற இதழா, “டே…….” என்று கத்திக்கொண்டே, கையிலிருக்கும் மரக்கிளையை கொண்டு மகிழனை அடிக்க துரத்த, மகிழனோ மரத்தை சுற்றி சுற்றி ஓடிக்கொண்டு இருந்தான்.

 

இதைக்கேட்டு ஆதவன் இழையினி இருவரும் சிரிக்க, மகிழனோ “நண்பா… இந்த பொண்ணு செம்ம டெர்ரர் டா… பேசிட்டு இருக்கும் பொழுதே வன்முறைய கையாளுது….” என்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய, இழையினி அதுக்கும் சிரித்து வைத்தாள்… இதழாவோ, அவனை எரித்து விடும் பார்வை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

 

“இதழ், இதுக்காகவா… நீ இப்ப அவர அடிக்க துரத்துற, அவரு உன் மாமா பிரன்ட் டா.. நீ புரியிறது போல சொல்லி இருக்க மாட்ட….அவருக்கிட்ட சாரி  கேளு என்ன இருந்தாலும் அவர நீ இப்படி அடிக்க ஓடிருக்க கூடாது… ” – இழையினி

 

‘சிஸ்டர்.. சாரிலாம் வேணாம்… ‘லவ் யூ’ னு மட்டும் சொல்ல சொல்லுங்க.. அது போதும்’ – மகிழன் மனதில்.

“சொல்லு இதழ்” – இழையினி

“இழையா.. அவளும் சின்ன பொண்ணு தான… விடு, மகிழ் அதெல்லாம் தவறா எடுக்கமாட்டான்…. இல்லையா மகிழ் ?” – ஆதவன்

“ஆமாம் ஆமாம் நண்பா… ” என்று சிரித்த முகத்தோடு மகிழன் கூறினான்.

“இருடா உன்ன அப்புறம் வச்சுகிறேன்” – இதழா மனதில்

“அதுக்கு தான மயிலு காத்திருக்கேன்… வச்சுக்க வச்சுக்க உன் மனசுல என்ன நிரந்தரமா வச்சுக்க” – அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாக மகிழன் மனதில்.

 

ஒருவாறு இருவரும் முறைத்துக்கொண்டு ஆதவன், இழையினியுடன் இணைந்து நடக்க, நால்வரும் மதிய வேலைய தாண்டி வீட்டை அடைந்தனர். உணவு உட்க்கொண்டு விட்டு, ஆதவன், இழையினியுடன் நேரம் செலவிட முனைய, அவனுக்கு காளான் பேக்டரியிலிருந்து ஏதோ அழைப்பு வர, மனைவியை ஏக்கமாக ஒரு பார்வை பார்த்தபடி அங்கி இருந்து நகன்றான்.

 

அவன் பார்வையில், இழையினியின் கன்னம் சிவக்க தலை தாழ்த்திக்கொண்டாள்….. மறுபுறம் இதழாவோ கோவம் நிறைந்த பார்வையை மகிழன் மீது செலுத்த, மகிழனோ வேகமாக ஆதவன் பின்னோடு நடக்க எத்தனித்து, யாரும் பார்க்காத நேரம் அவன் பாண்ட் பக்கெட்டில் இருந்த சிலம்பை எடுத்து, இதழாவிற்கு மட்டும் தெரியும் படி காண்பித்து, பழுப்பு காட்டி செல்ல, இதழாவோ அவளது காலை ஓங்கி தரையில் உதைந்தாள்….

 

கீச் கீச் என்ற சப்த்தங்களுடனும், படபடக்க சிறகுகளை அடித்து பறந்தபடியும், காலை உணவு தேடி தத்தம் கூட்டை விட்டு சென்ற பறவைகள் யாவும் தனது கூட்டுக்கு திரும்ப, ஒரு சில பெட்டைகளும் கூட சிறிய அளவு மரத்தில் ஏறி உய்யாரமாக அமர்ந்து அந்த சிறு முட்டை கண்களை மூடி மூடி திறந்து தனது தூக்கத்தை தொடர ஆரம்பித்திருந்தது…. கோழிக்குஞ்சுகளும் கூடைகளில் அடைக்கப்பட, மாலை மலர்ந்துவிட்டத்தை இந்த நிகழ்வுகள் யாவும் அழகாக விளக்கி சொல்லியது…..

 

ஆதவன் சென்ற பிறகு, தனது தந்தையுடனும், அம்மாவிடமும் கைபேசியிலும், பேசிய இழையினி, மாலை ஆனதும் முகம் கழுவி, லேசாக கூந்தலை திருத்தி, ஒப்பனைட்டபடி வெளிவர, மேல் தளத்திற்கே வேதா அம்மாள் அவளை தேடி வந்துவிட்டார்….

 

“வாங்க அத்தை… நான் கீழ வர தான் ரெடி ஆகி வந்தேன்…” – இழையினி புன்னைகையுடன்

“அட பரவா இல்ல கண்ணு… இந்த புது சீலைய உடுத்திக்கமா… இதை கொடுக்க தான் வந்தேன்… இங்க நாலு ஜனங்க வருவாங்க… புது பொண்ணுல்ல…எப்படியும் இன்னும் ஒரு வாரத்துக்கு ஆளுங்க வர போகத்தான் இருப்பாங்க…. அதான், இதை உடுத்திக்க கண்ணு….” – வேதா அம்மாள்

“சரிங்க அத்தை… நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்திடுறேன்…” – இழையினி

 

அவள் கூறியது போலவே அடுத்து ஐந்து நிமிடங்களில் கீழிறங்கி, இழையினி, வேதா அம்மாள் கொடுத்த புடவையை உடுத்தி கொண்டு போக, இதை எல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த இதழ், தன் தமைக்கையை கேலி செய்ய தொடங்கினாள்…

 

“அக்கா…. உன்ன மாமா லவ் பன்றாரோ இல்லையோ? உன் மாமியார் உன்ன லவ் பண்றாங்க… என்ஜாய் பண்ணு…. மாமா க்கு ஒரு தம்பி உண்டுல… பேசாம நான்

அவன கரெக்ட் பண்ணி இந்த வீட்லயே செட்டில் ஆகிடலாம்னு பார்க்குறேன்…. உன் மாமியார் பாசத்துகாகவே” – இதழா

“அடிப்பாவி.. உனக்கு வாய் ஜாஸ்தி ஆகிடுச்சு இதழ்… பேச்ச கம்மி பண்ணு… யாரு காதுலயாவது விழுந்திட போகுது…” – இழையினி

 

இவர்கள் பேச்சின் ஊடே, பார்வதி பாட்டி வர, அவர்களை பார்த்து  “என்ன பொண்ணுங்களா… இங்க என்ன வாயடிகிறீங்க… வாசல்ல, பெரிய கோலம் போடுறாங்க… போய் பார்க்கிறதா இருந்தா பாருங்க ஆத்தா… ஆதவன் வர வரைக்கும் உனக்கும் பொழுது போகும்ல… கோலம் போட்டு முடிந்ததும், பூஜை செய்யணும்… ” என்று கூறினார்.

 

“பாட்டி, காலையிலயே இது எல்லாம் பண்ணிட்டாங்க தானே.. ? மறுப்படியும் செய்வீங்களா?” – இழையினி

 

“ஆமாம் ஆத்தா.. நம்ம குடும்ப வழக்கப்படி ரெண்டு வேலை பூஜை… கோலம், வேலை பார்க்கிறவங்க யாரேனு போட்டுடுவாக… பூசை மட்டும் நான், சக்தி, பொறவு வேதா..இப்படி பண்ணினோம்… இனிமேல் நீ தான் பண்ணனும் ஆத்தா… ” என்று இழையினியின் முகவாயை பிடித்து செல்லம் கொஞ்சி சொல்ல, இதழா, இழையினி இருவருக்கும் “யார் அந்த சக்தி… அப்படி யாரும் இந்த வீட்ல இல்லையே… ” என்ற கேள்வி மனதில் தொக்கி நின்றது.

 

“யாரு பாட்டி சக்தி….” – இழையினி

“அது.. அது வந்து… ” – என்று பார்வதி பாட்டி தடுமாறிக் கொண்டு இருக்கும் பொழுதே, “அத்தை… உங்கள எங்க எல்லாம் தேடுறது… மாமா உங்கள கொள்ள நேரமா தேடுறாக…” என்று கூறியப்படி வேதா அம்மாள் அங்கு வர, அத்தோடு அப்பேச்சு நிறைவுப்பெற்றது…. பார்வதி, தன் பதியை தேடி செல்ல, வேதா அம்மாளோ, இதழா, இழையினியை அழைத்துக்கொண்டு, வேதா முன் வாசலுக்கு விரைந்தார்….

 

அங்கே பெரிய அளவு வண்ணக்கோலம், பன்ணை வேலை செய்யும் பெண்கள் போட்டு கொண்டு இருக்க, வேதா அவர்களை பார்த்து வேலையை துரிதபடுத்தினார்…. இழையினிடம் திரும்பி, “கண்ணு, மருமக பொண்ணு முதல் நாளு மட்டும் கோலம் போட்டு பூசை பண்ணனும்டா… நீ அதெல்லாம் பண்ண வேண்டாம்.. பூசை மட்டும் இனி நீ செய்தா போதும்.. நீ தான் இந்த வீட்டு மூத்த மருமக… கோலம் இவுங்க பார்த்துப்பாங்க… நீ சம்ப்ரதாயத்துக்கு கொஞ்சம் கலர் பொடி மட்டும் கொடு கண்ணு….” என்று வேதா அம்மா, இழையினின் கன்னம் வழித்து கூற, புன்னகையுடன் இழையினியும் “சரிங்க அத்தை….” என்று கூறியப்படி ஒரு வண்ணப்பொடியை கையில் எடுத்தாள்….

 

“செவ்வந்தி.. இங்குட்டு வாப்புள்ள… எம் மருமக வண்ணம் பூச போறா…” என்று வேதா அம்மாள், கோலம் போட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்ணை எழுப்ப, அவ்விடத்தில் சென்று இழையினி வண்ணம் கொடுக்க தொடங்கினாள்…. அந்த நேரம் சரியாகா ஆதவனும், மகிழனும் மேற்பார்வை முடிந்து வர, மகிழனை பார்த்த இதழாவோ முகத்தை திருப்பிக்கொண்டு உள்ளே செல்ல, மகிழன் முகம் ஒரு நொடி சுனங்கித்தான் போனது….

 

கோலத்தில் கவனமாக இழையினி இருக்க, கணவன் வந்ததை கவனிக்க தவற, ஆதவன் கண்களால் அவளை பருகியப்படி உள்ளே சென்றான்…

 

“போது கண்ணு… ஆதவன் வந்துட்டான்… பூசைய தொடங்கலாம்… முதல் நாள் நீ பண்ற மாலை பூசனு, அவனையும் வெரசா வர சொல்லிருந்தேன்…. வா மா…” என்று வேதா அம்மாள் கூற, அங்கிருந்து அவசரமாக இழையினி எழுந்து அவளது முந்தானையை கையில் பிடிக்கும் போதே உணர்ந்தாள்… அவள் முந்தானையின் அடிப்பகுதி ஈரமாக இருப்பதை….

 

வேகமாக தரை பகுதியில் கண்களை ஓடவிட்டவள், அவள் அமர்ந்திருந்த பகுதி-யில் வாசலில் தெளிர்த்த நீர் போல வட்டமாக சிறுது தேங்கி இருக்க, சரியாக கவனிக்காமல் அங்கே உட்க்கார்ந்த தன் முட்டாள் தனத்தை எண்ணி தானே நொந்துக்கொண்டவளாக, விளக்கு ஏற்றி முடித்ததும் புடவையை மாற்ற வேண்டும்… என்று குறித்துக்கொண்டு வேகநடையுடன் பூஜை அறையை அடைந்தாள்.

 

ஆனால் அவளே அறியாதது, அவள் முந்தானையின் தளவிலிருந்து ஏதோ ஒரு திரவியம் சொட்டு சொட்டாக வடிந்துக்கொண்டு இருந்ததை…..

 

இழையினி முதல் முதலில் பூஜை செய்வதால், பூஜை அறை முழுக்கு கார்த்திகை போல தீபங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தன…. அத்தீபங்களுக்கு நடுவினிலே நிற்கும் ஜோதியாய், இழையினியோ பஞ்ச முக குற்றுவிளக்கை ஏற்றி பூஜையை தொடங்கினாள்…

 

அனைவரும் இமை தாழ்த்தி இறைவனை வணங்க…. அனைவரது கவனமும் பூஜையில் இருக்க, இழையினியின் முந்தானையில் இருந்து சொட்டு சொட்டகா வடிந்துக்கொண்டு இருந்த நீர் சரி நேராக எரிகின்ற அகல் தீபத்தில் விழ, அடுத்த நொடி… தீ இழையினியின் சேலையில் பற்ற தொடங்கி இருந்தது….

 

அனைவரும் இமை தாழ்த்தி இருந்த போதும், ஆதவன் மட்டும் மனைவியை பார்த்துக்கொண்டு இருக்க, அவள் சேலை தளவில் பற்ற தொடங்கிய ஓரிரு வினாடிகளில் ஆதவன் “இழையா…..” என்ற குரலுடன் அவளை நெருங்கி, வேகமாக அவனது இரு கரம் கொண்டு லேசாக பற்ற தொடங்கி இருந்த தீயை அணைத்திருந்தான்…..

 

இவை யாவும் நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நிகழ்ந்து முடிந்திருந்தது…. அவனது கையில் தீ காயம் பட்டிருக்க, அவன் உள்ளங்கையில் லேசாக தீ காயத்தால் சிறு கொப்பளங்கள் தோன்றின… ஆனால் ஆதவன் அதை எதையும் பொருட்ப்படுதியதாக தெரியவில்லை… அவன் கண்கள் இழையினியிடம் லயித்திருக்க, இழையினியின் பார்வை அதிர்ச்சியில் இருந்து வெளி வரவில்லை… அவள் நிகழ்ந்த விபத்தை உணர்ந்துக்கொள்ளவே சில நிமிடங்கள் தேவைப்பட்டதாய் இருந்தது அவளுக்கு….

 

உணர்வு பெற்றத்தும், அவள் கண்களில் பட்டத்து ஆதவனது தீ காயம் உள்ள உள்ளங்கையே… அனைவரும் அவளுக்காக பதற, இதழா கண்களில் நீருடன்… “அக்கா … பார்த்து செய்யமாட்டியா? உனக்கு ஒன்னுனா நம்ம அப்பா தாங்குவாரா…” என்று கண்களில் நீர் கோர்க்க கேட்க, பெரியவர்கள் மறுப்படியும் நடந்த அசம்பாவிதத்தை நினைத்து கலங்குவதா, அல்லது இழையினியை அக்னி தீண்டும் முன் ஆதவன் அவளை காப்பாற்றியதை நினைத்து மகிழ்வதா என்று தெரியாமல் அதிர்ச்சியில் நிற்க, இழையினி வேகமாக அடுக்களை நோக்கி விரைந்தாள். அவள் போவதை பார்த்து பூஜை அறையில் இருந்து அனைவரும் வெளிவர, அவர்கள் முற்றத்திற்கு வருவதற்குள், இழையினி குளிர்சாதன பெட்டியில் இருந்த குளிர் நீரையும் கையோடு பஜ்ஜி செவதற்காக, மேடை மீதி தற்செய்யலாய் அறிந்து வைக்கப்படிருந்த ஓர் உருளை கிழங்கு சீவலையும் எடுத்து வந்து, யார் இருகிறார்கள், யார் இல்லை என்று எல்லாம் கவனிக்காது, ஆதவன் கையை பிடித்து, குளிர்ந்த நீரை அவன் கைகளில் ஊற்றியப்படி… “இதழ்… தோட்டத்துல… கத்தாழை பார்த்தே… அதை வேகமா கொண்டு வரியா டா… ப்ளீஸ்… ” என்று அவசரமாக கூறியவள், தாமதிக்காது குளிர் நீர் ஊற்றி முடித்ததும், கையில் வைத்திருந்த உருளை சீவலை அவள் சக்தி கொண்ட மட்டும் கசக்கி அந்த சாரை தீ காயத்தில் பிழிய முயன்றாள்….

 

கத்தாழை பறிக்க விரைந்த இதழோ அது இருக்கும் இடம் தெரியாது ஒரு நிமிடம் தயங்க, இதழை தடுத்த மகிழன், வேகமாக அவன் சென்று எடுத்துவந்து தர, இதழ், அதை இழையினியிடம் கொடுக்க, கத்தாழை கீற்றை வேக வேகமாக உடைத்தவள், அதனுடைய சாரை நன்கு தீ காயத்தில் படும்படி தடுவினாள்…

 

இவை மூன்றையும் செய்த பிறகே இழையினிக்கு சுற்றம் நினைவு வந்தது…  

 

அதன் பின்னே அவசரமாக அவள் மான் விழியை அவள் அனைவரை நோக்கியும் ஒருமுறை சுழலவிட, அனைவரும் அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தனர்…. ஆதவனோ உதட்டில் மறையாத சிரிப்புடன் தன் மனையாளை பார்த்திருக்க, பாட்டி மட்டும் அவளது அருகில் வந்து, “என்னடா… இப்படி தடங்களா காட்டுடுதேனு வெசனப்பட்டேன் ஆத்தா… ஆனா எம் பேரன் மேல உனக்கு இருக்க அக்கறைய காட்ட தான் இது நடந்திருக்குமோனு இப்ப நினைக்க தோணுது ஆத்தா… ” என்று கூற, அனைவரும் இழையினி மருந்திட்ட புத்திசாலிதனத்தை மனதிற்குள் மெச்சிக்கொண்டு கலைந்தனர்.

 

வேதா அம்மாள் மட்டும், இழையினி அருகில் வந்து அவளது உச்சிமுகர்ந்து, “என் பையன என்னைவிட நீ நல்லா பார்த்துப்பனு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு கண்ணு…” என்று கூறிவிட்டு நகன்றார்.

 

அதன் பிறகு, தக்க சமயத்தில் உதவி செய்த மகிழனிடம் இதழா, ஒரு சிறு சிரிப்புடன் நன்றி கூட கூறிவிட்டு தனது அக்கா மாமாவிற்கு தனிமை கொடுத்து விலக, ஆதவன் இமை விலக்காமல் இழையினியை பார்த்துக்கொண்டு இருக்க, இழையினி தான் பார்வையை விளக்கி, அவ்விடம் விட்டு நகரவேண்டி இருந்தது….

 

அனைவரும் களைந்து சென்றுவிட, போகின்ற தன் மனையாளை பார்வையால் சிறு சிரிப்புடன் ஆதவன் கண்கள் தொடர, அவன் கால்களும் அவளை நோக்கி முன்னேற, அதை தடுத்தான் மகிழன்.

 

“எனக்கு இப்ப ஒரு உண்மை தெரிந்தாகனும்…” – மகிழன்

“என்னடா… முதல் மரியாதை படம் போல கேட்குற…” – ஆதவன்

“பின்ன, அப்படி என்ன பேச வைக்குறீங்கடா… இப்ப நீ சிஸ்டர காப்பற்றினியா? அல்லது தங்கச்சி உன்ன காப்பாத்துச்சா… ? ” – மகிழன்

“ஹ ஹ…” என்று வாய்விட்டு சிரித்தவன் மகிழனிடம், ” இங்க யாரும் யாரையும் காப்பாற்றல, லவ் ப்ரொபோஸ் பண்ணிக்கிட்டோம்… அவ்வளவுதான் ” என்று கூற மகிழனோ மைண்ட் வாய்சில், ” தீ பிடிச்சா.. கிறுக்கும் சேர்ந்து பிடிச்சிடுமோ… என்ன உளறுறான்…. சரி இது போல நடந்தால், நம்ம மயிலு நம்மள காப்பாற்றுமா ? இல்ல சரியா சுடலன்னு, கொள்ளிக்கட்டைய கொண்டு வந்து சொருகிடுவாளா? ” என்று எண்ணமிட்டப்படியே, அவனது மயிலை தேடி அவன் போக, ஆதவன் இழையினியை நோக்கி சென்றான்.

 

ஆதவன் அவர்களது அறைக்கு வருவதற்குள், அப்புடைவையை இழையினி மாற்றி இருக்க, அவள் உடுத்தி இருந்த புடவை தரையில் போட்டப்படி இருக்க, வேதா அம்மாள், அவளுக்கு திருஷ்டி கழிக்க கீழ் இருந்தே குரல் கொடுக்க, அப்புடைவையை அப்படியே விட்டுவிட்டு, ஆதவனிடம் ஒரு பார்வை பரிமாற்றத்தோடு ஓடி சென்றாள்….

 

அந்த ஒற்றை பார்வையில் அத்தனை தவிப்பு… அவளது ஒரு நொடி பார்வை, அவன் முகத்தையும், அவன் தீ காயத்தையும் தீண்டி ஒரு வலியுடன் படிந்தது அவன் மீது…

 

“என்னால் தானே கணவா ! இக்காயம் உனக்கு” என்று அவள் மனம் எண்ண, அவளின் வலி நிறைந்த பார்வையை புரிந்துக்கொண்டவன், “என் மீது ஏனடி பெண்ணே இத்தனை நேசம் ? ” என்று அவன் மனம் இப்போது சந்தோசத்தில் கேள்விக்கேட்டது.

 

அந்த பார்வை பரிமாற்றத்தில், அவர்கள் பேசவில்லை… அவர்களது நெஞ்சம் பேசியது…. யாருக்கும் கேட்காத மொழியில்…..

 

அவள் அப்படியே விட்டு சென்று இருந்த புடவையை, கையில் எடுத்து ஓரமாக வைக்க போன ஆதவன் அவன் விரல்களில் ஈரம் தட்டுப்பட, அதை பெரிது படுத்தாமல் சலவை கூடையில் போட்டான்…. கையில் பட்ட காயம் எரிச்சலை தர, தனது கையை முகத்திற்கு அருகே கொண்டு வந்து காயம் பட்ட இடத்தில் ஊதிவிட, அப்பொழுது அவனது கையில் மண்ணெண்ணெய் நெடி வெகுவாக வர, வேகமாக யோசித்தவன், விரைந்து சென்று சலவை கூடையிலிருந்த சேலையின் தளவை பார்க்க, எறிந்த பாகத்துக்கு மேல் ஈரமாக இருந்த பகுதியில் மண்ணெண்ணெய் இருந்ததை அறிந்து.. பிருவங்கள் முடிச்சிட சிந்தனை வயப்பட்டான்…..

 

Advertisement