Advertisement

மயிலிறகு– 3

 

ஆதவனின் நடை, தடை படக்காரணமான குரல், ஆதவனது தம்பி இளனின் குரல்…

 

இளநிவன் – ஆதவனின் தம்பி, சாதாரணமாக  விவசாயம், குடும்ப தொழில்    ஆகியவற்றில் ஆர்வம் இல்லாமல் இருப்பவன், முதன் முதலாகா தானும் இது போல ஆய்வுக்கு வருவதாகா தொற்றிக் கொண்டான். வேதா அம்மாவின் அன்பு கட்டளையின் பெயரில்….

 

இளநிவனை பொருத்தவரை வாழ்க்கை என்பது  வேடிக்கையும், விளையாட்டும் , முழுக்க  முழுக்க  சந்தோசமும்  நிறைந்த  ஒன்று….

 

அவன் இப்படி தொழில் தொடர்பாக வருவது ஒரு அதிசயம் என்றால், அவன் அதிகாலையில் எழுந்தது மற்றொரு அதிசயம்….

 

கோயம்பத்தூரில் ஒரு பிரபலாமான கல்லூரியில் படிப்பை முடித்தவன், கடந்த இரண்டு வருடமாக தனியாக, ஒரு கம்பெனி தொடங்க பார்த்துக்கொண்டு இருந்தான்….

 

அதோடு வருகின்ற வாரத்தில், அவன் நண்பர்களோடு சுற்றுலா செல்லவும் இளன் தயாராக இருந்தான்…. காரணம் சுற்றுல்லா செல்லவிருக்கும் இடம் சிங்கப்பூர்…. இரண்டு மாதங்கள் அங்கே அவனும், அவனின் நண்பர்கள் பட்டாளமும்….

 

ஆதவன் அப்பெண்ணை பார்க்க முனைந்த நேரம், “அண்ணா… வேதாமா உன்கிட்ட இப்பொழுதே பேசணுமாம்… உன்னோட நம்பர்-க்கு ட்ரை பண்ணினாங்களாம், ஆனா கிடைக்கலையாம்… என்ன வேற தூக்கத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டாங்க… ப்ளீஸ் பேசிட்டு எங்க வேணும்னாலும் போங்க… ” என்று  சலித்துக்  கொண்டே  கூற  தொடங்கியவன், ஆதவன் பார்த்த பார்வையில்  கண்களை கசக்கிவிட்டு, “சாரி அண்ணா… எதோ  தூக்கத்துல உளறிட்டேன்… ” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டான்.

 

“சரி கொடு” என்று கைபேசியை இளனிடம் இருந்து வாங்கி, ஆதவன் மறுமுனையில் வேதா அம்மாவிடம் ஏதோ பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

 

இதற்குள் அப்பெண் சென்று இருப்பாளோ, என்ற ஐயம் ஆதவன் மனதில் தோன்ற, மகிழனிடம் கண்ஜாடை காட்ட, மகிழனும் நண்பனுக்கு ஏதாக பேச ஆரம்பித்தான்…

 

” இப்ப நீ இங்க எதவும் பெண்னை பார்த்தியா..? ” என்று மகிழன் மொட்டையாக கேட்க, இளனோ, “மகிழ் அண்ணா… சூப்பர்.. பக்கத்துல ஒரு எரிமலையை வச்சுக்கிட்டே எண்டர்டைன்மெண்டா… கலக்குங்க…” என்று மகிழன் காதோரம் கிசுகிசுத்தான் ஓரக்கண்ணால் ஆதவனை ஜாடைக்காட்டி.

 

மகிழனோ மனதினுள், “ஆமாம் டா… டே உங்க உத்தமபுத்திர அண்ணன் தான்,  இங்க யாரவது இருந்தாங்களானு கேட்டான்… உங்க அண்ணன வச்சிட்டு நான் ஒரு பொண்ண கரெக்ட் பண்ணிட்டாலும்… உலகம் தலைகீழா சுத்திறாது…” என்று எண்ணிவிட்டு இளனிடம், “இளா, இப்ப அது முக்கியம் இல்ல.. இப்ப இங்க ஒரு பொண்ணு இருந்ததுன்னு சொன்னியே… நீ பார்த்தியா ?” என்று கேட்க, இளனின் பதிலுக்காகா மகிழன் மட்டும் அல்லாது ஆதவனும் காத்திருந்தான், ஆனால் அதை வெளிக்காட்டாது.

 

காரணம், ஆதவன் கண்டிப்பு மிக்கவன், தம்பிக்கு உதாரணமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.  தன்னை விட ஐந்து வருடம் இளையவன் என்ற காரணமே ஆதவனின் ஒதுக்கத்திற்கு காரணம்.

 

“ஆமாம் அண்ணா… போனது ஒரு பெண் தான்… இப்ப ஒரு 10 நிமிஷம் முன்னாடிதான் போனாங்க….” என்று கூறினான் இளன்.

 

ஆதவன் முகத்தில் ஆர்வத்தை காட்டிக்கொள்ளாமல், கையிலிருக்கும் காமெராவை பார்த்துவிட்டு அங்கிருந்த கால்தடத்தை பார்க்க…. கால்தடத்தை விட்டு சென்ற பெண்ணின் பின் குதிங்கால் தடம் அவனுக்கு மயிலிறகை நினைவு படுத்தியது.

 

மயிலிறகாய் பின் குதிங்கால் அகலமாக இருக்க, அந்த கால்தடத்தில் ஏதோ ஒன்று ஆதவனின் மனதின் ஆர்வத்தை தூண்டியது… ஏனோ அவளை காண வேண்டுமென்று அவன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் கூற இத்தனை நிமிடங்கள் இளாவுடனும், மகிழனுடவும் பேசி காலம் தாழ்த்தியதை எண்ணி அடுத்து வேகமாக அவளை பின்தொடர முடிவெடுத்து பொதுவாக கூற தொடங்கினான்……

 

“மகிழ், நெக்ஸ்ட் என்னோட.. பிளான்… ஒரு சில்வர் ஜ்வெல் ஷாப் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கே… இப்ப போன பெண்ணை மாடெல்லா கேட்கலாம்னு…. யோசிக்கிறேன்… நான் அந்த பொண்ணு போன பாதையில போய் பார்க்கிறேன்… நீங்க ரூம் க்கு போறதா இருந்தா போங்க…” என்று கூறிவிட்டு நடந்தான் ஆதவன்

 

அவன் அறைக்கு அவர்களை போக சொன்னாலும், போகமனமில்லாது அவன் நடப்பதை பார்த்து, அவன் பின்னே மகிழனும், எதுவும் புரியாவிட்டாலும் இளனும் கூட சேர்ந்தே நடக்க ஒரு இடத்தில் அந்த கால்தடம் மறைந்திருந்தது. அங்கிருந்து அந்த பிரிவில் மூன்று கிளை பாதைகள் இருக்க, ஆதவன் மகிழனை பார்க்க, மகிழ் அர்த்தம் உணர்ந்துக் கொண்டவனாக இளனிடம் திரும்பி, “இளா, நம்ம மூணு பேரும் ஆளுக்கு ஒரு வழில போவோம்.. கண்டிப்பா அந்த பொண்ணு ரொம்ப தூரம் போயிருக்க முடியாது… கண்டிப்பா யாருன்னு பார்த்திடலாம். நீ பார்த்ததும் எங்களுக்கு தகவல் கொடு சீக்கிரம் போ” என்று கூற இளனும் ஆதவனின் முகத்தை பார்த்துக்கொண்டே ஒரு வழியில் விரைந்து சென்றான்.

 

மகிழன் ஒரு பாதையிலும், ஆதவன் மற்றொரு பாதையிலும் செல்ல, ஆதவன் மனதில், “என் மனசு நிச்சயம் அவளை பார்க்கனும்னு சொல்லுது… அவ யாரு… அவளோட கால்தடத்த வச்சு நான் ஏன் அவள பார்க்கனும்னு நினைக்கிறேன்… ஒரு பாதம் என்ன இந்தளவு டிஸ்டர்ப் பண்ண முடியுமா…?” என்று சிந்தனையோடே சென்றான் ஆதவன்.

 

பிறகு மற்ற சிந்தனைகளை ஒதிக்கிவிட்டு, இவளை பார்க்க முடியுமா ? என்ற கேள்வியை மட்டும் முன்னிறுத்தி தேடலை தொடர்ந்தான் ஆதவன்….

 

அவன் ஒரு இலக்கில் வந்து சேர, அவன் கண்கள் ஒரு குறிப்பிட பகுதியை ஆழ்ந்து நோக்கி, குழப்பத்தை பிரதிபலித்தன…..

 

புகைப்படத்தில் ஓர்

ஓவியம் கண்டேன்

முதன் முதலில்…

மீண்டும் பார்க்க ஆவல் வந்தது….

 

வெள்ளி மணிகள் படர

சதுபுநிலத்தில் உன் பாதம் பதிய

சேற்றில் மலர்ந்த கமலம் தான்

நின்றன் பாதமோ

 

அழகிற்கு அழகு சேர்க்கவோ

அல்லது மாற்றார்கண் படாமல் இருக்கவோ

ஆண்டவனே இட்ட சிறு சின்ன புள்ளியோ

உன் காணுங்கால் மச்சம்

 

                                                             — ராசி

மூவரும் சென்ற பாதை ஒரே இலக்கை சென்றடைய, முதலில் மற்ற இருவரையும் பார்த்தது ஆதவனே ஆவான். ஆனால் அவர்களின் அருகில் உடனே செல்ல முடியாதபடி அங்கே ஜன நெரிசல் அதிகமாக காணப்பட்டது. 

அவன் கண்கள் குழப்பத்தை பிரதிபலிக்க காரணம், அத்தனை ஜன நெரிசலில் அந்த பெண்ணை எப்படி கண்டு கொள்வது என்றே…

 

அங்கே கூட்டம் குழுமி இருக்க காரணம், எல்லை சாமி கோவிலில் பூஜை நடந்துக்கொண்டு இருந்தது. மற்ற சமயமாக இருந்திருந்தால், அங்கே இத்தனை ஜன நெருசல் வந்திருக்காது… கோத்தர்கள் மட்டுமே வழிபடுவர். ஆனால் இது திருவிழா காலம் என்பதால், அங்கே ஒரு சில வரலாறு ஆய்வாளர்களும், ஒரு சில பத்திரிகை காரர்களும் கூட செய்தி சேகரிக்க நின்று இருந்தனர். கோத்தர் இனத்தை சேர்ந்த பெண்களும், ஆண்களும் வெள்ளை ஆடை உடுத்தி அவர்களின் பாரம்பரிய முறையில் பூஜை செய்தனர். பூஜை செய்யும் முதிய தம்பதியனர் அருகினிலே இழையினி ஆர்வத்துடன் அங்கு நடக்கும் சடங்குகளை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
 

ஆதவனது கூர் கண்கள், சுற்றி இருந்த அனைவரையும் அளவெடுக்க, இதில் அந்த காலுக்கு சொந்தமானவள் யார் என்று அறிய முடியாமல் தடுமாறினான். கூட்டம் அதிகமாக இருந்ததனால் கால்களையும் அவனால் பார்க்க இயலவில்லை. காலணி இல்லாத கால் எது என்று தேட முற்பட, அப்போது தான் கவனித்தான், அது கோவில் எல்லை என்பதனால் யாரும் காலணி அணியவில்லை என்று கண்டுக்கொண்டு, யாருடைய பாதம் என்பதை அவனால் சரியாக கணிக்க முடியவில்லை.

 

பூஜை முடியும் தருணத்தில் இழையினி அவளது இமைகளை தாழ்த்தி தனது தந்தைக்காக ஆண்டவனிடம் மனமுருகி வேண்டிக்கொண்டாள். அவள் நினைவு தெரிந்தநாள் முதல் இன்று வரை அவளது ஒரே வேண்டுதல் இது மட்டுமே.

“என்னோட அப்பா தான் எனக்கு உயிர்…. என் அப்பா எப்பவும் சந்தோசமா இருக்கணும்… அவரு சந்தோசமா இருந்தா, நிச்சயம் நாங்க மூணு பேரும் நிம்மதியா இருப்போம்” என்று ஆழ்மனதில் இருந்து வேண்டிக்கொண்டாள் இழையினி. 

அதேநேரம், ஆதவனை அவனது தம்பி இளன் பார்த்துவிட, ஆதவனுக்கு அழைப்பேசியில் அழைத்தான். “அண்ணா, நீங்க மாடலா  செலக்ட் செய்யணும்னு நினைச்சு பொண்ணு இவுங்க தான்” என்று இளன் கை காட்டிய திசையில் ஆதவனின் விழி பயணித்தது. 

அந்த கால்தடத்தின் நாயகி யார் என்று அறிய அலைமோதிக் கொண்டு இருந்த ஆதவனின் விழி, இளன் காட்டிய திசையில் நிலைத்து நின்றது. அவளை ஒருமுறை ஊடுருவி ஆதவனின் கண்கள் பார்த்தன. அந்த கூட்டத்தில் சற்று தனித்து, அவள் இமை தாழ்த்தி இறைவனை வணங்கிய விதம் அவளை தனித்துக் காட்டியது. ஆதவன் பார்த்துவிட்டான்….

இவை அனைத்தையும் மகிழனும் பார்த்துவிட்டான்…..

“அண்ணா சென்று இப்போது பேசுவாரா… ?” – இளன் 

“பயபுள்ள பார்த்த பிறகும் சும்மா நிற்கிறானே… இவன் முகத்தை பார்த்தா ஒன்னும் புரியலையே..” – மகிழன் மனதினுள் எண்ணினான். 

மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு அவ்விடம் விட்டு ஆதவன் நகர, பக்கவாட்டு ஒத்தையடி பாதை மூலம், இளனும் மகிழனும் அவனிடம் விரைந்தனர். 

“அண்ணா… ஜ்வல் ஷாப்-க்கு அவுங்ககிட்ட பேசவில்லையா…. ” – இளன் 

“அப்படி ஒன்னு இருந்தாதானடா பேசுவான்.. உங்கிட்ட ஒரு கதைய விட்டோம், அதே போய் அங்கயும் சொல்ல முடியுமா… ?” – மகிழனது மனதில் 

“நான் வேணும்னா… போய் பேசட்டுமா அண்ணா… ” -இளன் 

“அட, அண்ணன் பார்க்கிற பொண்னை தம்பி கரக்ட் பண்ணிடுவான் போல இருக்கு…” – மகிழனது மனதில்.

இளன் மட்டுமே பேச, மகிழன் அமைதியாக இருக்கவும், ஆதவன் அவனது கூர் விழிக் கொண்டு மகிழனை பார்த்து சிறிது குறும்பு மின்ன, “என்ன மைண்ட் வாய்ஸா…?” என்று கேட்க, ஆதவனிடம் மாட்டிக்கொண்டதை நினைத்து மகிழன் திரு திருவென முழித்து வைத்தான். 

மகிழனிடம் பேசிவிட்டு, இளனிடம், “இல்ல வேண்டாம் இளா… நம்ம போய் பேசுறதுக்கு முன்னாடி அவுங்க யாருன்னு தெரிந்து பேச ஆரம்பிக்கணும்…… இதுல விருப்பம் இல்லாத பெண்ணா இருக்கலாம்… இல்ல பெரிய பணக்காரா வீட்டு பெண்ணா இருக்கலாம்… அவுங்க கூட யாரவது வந்து இருக்கலாம்… உடனடியா, ஒரு பெண் முன்னாடி நின்று இப்படி பேசுறது அவ்வளவு முறைக் கிடையாது… அவுங்கள பத்தி கொஞ்சம் தெருஞ்சிக்குவோம்… அதுக்கு அப்புறம் பேசலாம்…” என்று கூற மகிழனும் இளனும் “இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா… ?” என்று ஒரு சேர கேட்டனர்.

 

ஆதவன், அவர்களிடம் கூறியதை அவர்கள் நம்பி இருக்கலாம்… ஆனால் அவனது மனமே இவை யாவும் ஏற்கவில்லை. ஆதவன் இப்படி தயங்கி ஒரு செயலில் இறங்குபவன் இல்லை. கொஞ்சம் முன்கோபம்… ஆனால் நினைத்ததை பட்டென்று முடிப்பவன். எந்த பெண்ணை  காண காற்றை விட வேகமாய் செயல் பட்டானோ, அப்பெண்னை கண்ட பிறகு ஏனோ உடனே சென்று பேச தோன்றவில்லை. 

ஒருவேளை அழகு இல்லையோ…. இல்லை அப்படியும் இல்லை… அவள் நல்ல அழகு… நிச்சயம் அவள் பின்னால் ஒரு ஆண்கள் கூட்டமே அவளின் கடைக் கண் பார்வைக்காக ஏங்கிக் கொண்டு இருக்கும். அத்தனை அழகு…. ஆயினும் ஏதோ ஒன்று ஆதவனின் ஆர்வத்தை தூண்டவில்லை. 

ஒருவேளை அப்படி இருந்திருந்தால் நிச்சயம் அவன் அந்த நொடியே சென்று அவளிடம் பேசி இருப்பான்….

ஆனால் அவள் கால் பதிந்த புகைப்படத்தை அடிக்கடி பார்ப்பதையும் அவன் நிறுத்தவில்லை… திடுமென ஏதோ தோன்ற, இளனிடம் , “இளா… அந்த மஞ்சள் ட்ரெஸ் போட்டு இருந்த பொண்ணு தானே…” என்று வினவ…

“ஆமாம் அண்ணா….அவுங்க தான்… எனக்கு நல்லா தெரியும்… நான் அவுங்க போகும் போதே பார்த்திட்டேன்…. ” என்று கூற ஆதவன் ஒன்றும் சொல்லவில்லை. 

கோவில் பூஜை முடிந்து, இழையினி கண்களை விரிக்க… அந்த மூதாட்டியோ, அவளிடம் வந்து ஒரு சாமந்தி பூவை கொடுக்க, அவளின் மஞ்சள் உடைக்கு தோதாக அந்த மஞ்சள் மலரை சூட்டிக்கொண்டாள் இழையினி……

முன் இரவு அந்த கோத்தர் இன மக்கள்கள், சேல மரத்தை வழிப்பட்டுக்கொண்டு இருந்தனர்….

சேல மரம் – நீலகிரி மாவட்டத்தில் செட்டில்மென்ட்டுகள் என்னும் பகுதியில் குந்தா கோத்தகிரி கோவில் உள்ளது. குந்தா கோத்தகிரி கோவிலின் நுழைவுப் பகுதியில் சேல மரம் என அழைக்கப்படும் மரம் உள்ளது. இம்மரத்தைத் தான் கோத்தர்கள் தங்களது குல தெய்வமாக வழிபடுகின்றனர்.

மரம் இருக்கும் தூரத்திலிருந்து சற்று முன்வரை மட்டுமே  பெண்களுக்கு அனுமதி உண்டு… எந்த கோவில் வளாகத்திலும் பெண்களுக்கு அனுமதி இல்லை. அது ஆடி பெருக்கு காலம் ஆதலால், அங்கே சுற்றுலா பயணிகளும் குழுமி இருக்க, ஆதவன் மகிழன் இளன் மூவரும் அவ்விடம் வந்தனர்…

 

இழையினி அங்கிருந்து அனைத்தையும் ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருக்க, அந்த மக்களோடும் இழையினி சகஜமாய் பேசுவதை பார்த்த ஒரு சில சுற்றுலா நபர்கள் அவளிடம் ஒரு சில விவரங்களை கேட்க, இழையினி அதற்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டு இருந்தாள். காரணம் அவளிடம் கேட்ட அனைவர்களும் பெண்களே… அதுவே அவள் சரளமாக உரையாட காரணம். அந்த பெண்களுடன் ஒரு வழிகாட்டியும் இருக்கவே, அவனும் இழையினி சொல்வதை கேட்டுக் கொண்டான்…..

இழையினி ஆண்களுடன் பேசாதவள் அல்ல. வகுப்பு தோழர்கள், உறவினர்கள் என பேசுபவள் தான்… ஆனால் தெரியாத இடத்தில் தெரியாத ஆடவர் பழக்கம் தேவை இல்லை என்பதே அதற்கு காரணம்….

 

அப்போது அங்கே வந்த ஆதவன்,மகிழன், இளன் ஆகியோரும் அங்கே நடக்கும் சடங்குகளை பார்த்துக் கொண்டு இருந்தனர்…. 

கேமரா வழி, படம் எடுத்துக்கொடிருந்தவனின் கண்களில்…. அவள் பின்பம் விழுந்தது…. மீண்டும் அவளை இன்றே பார்க்க நேர்ந்தது…. அவள் முன்னுச்சியில் சரிந்த ஓரிரு முடிகளும்… உதட்டை குவித்து பேசும் அழகும் பார்ப்பவர் அனைவரையும் நிச்சயம் இழுத்துவிடும்… ஆனால் ஆதவனுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை. 

அதற்குள் இளன் யாரையோ ஒருவனை அழைத்துவந்தான்…. ஆதவனிடம், “அண்ணா… இவன் சுடலை… நீங்க சொன்ன பொண்ணு, அந்த கூட்டத்துல பேசிட்டு இருக்காங்க அண்ணா… இந்த சுடலையும் இவ்ளோ நேரம் அங்கதான் இருந்தான்… நம்ம விளம்பர மாடெல்க்கு அவுங்கள பற்றி தெரிந்துக் கொள்ள உதவுவான்… அதை யோசிச்சு கூப்பிட்டு வந்தேன்…” என்று கூற மகிழன், “பயபுள்ள..இன்னுமா நம்புது….” என்று மனதினுள் நினைத்தான்…..

“அந்த பொண்ணு யாரு,  அவுங்க அங்க என்ன பேசிட்டு இருந்தாங்க……” என்று இளன் கேட்க, அந்த சுடலையோ, “அந்த பொண்ணு பெரிய இடத்து பொண்ணு… இந்த ஊர் பார்க்க வந்திருக்கு போல….அதுக்கு தெருஞ்ச விஷயத்த சுத்தி பார்க்க வந்தவங்ககிட்ட சொல்லிகிட்டு  இருக்கு…” என்று கூறினான்.

 

“அப்படி என்ன சொல்லுது…” என்று மகிழன் கேட்க, சுடலையோ, “இங்க ஏழு பிரிவு பழங்குடியினர் இருக்காங்க….அதுல ஒரு சாரார் மீன் பிடி தொழிலும், தேன் எடுக்குறதும் செய்றாங்க… அத பத்தி பெருமையா சொன்னாங்க… நான் இந்த பகுதியில கய்டா வந்தது இப்பத்தான்… அதான் அந்த பொண்ணுகிட்ட இருந்து நான் கூட கத்துக்கிட்டேன்…..” என்று கூற, “இதுல பெருமையா சொல்ல என்ன இருக்கு…” என்று ஆதவன் முதன் முதலாக கேட்க, மகிழனோ மனதினில் “அட இவன் ஆர்வம் ஆகிட்டானா… எந்த பொண்ண பத்தியும் கேட்காதவன் ஏன் இத பத்தி.. சரி பார்ப்போம்” என்று எண்ணினான்.

“சார்.. அது இந்த பக்கம் கொஞ்ச பேரு மீன் பிடிக்க வெடி மருந்து பயன்படுத்துவாங்க… ஆனா இந்த பழங்குடியினர் மட்டும், இப்ப வர அது போல ஒருபோதும் பண்ணினது இல்லையாம்… சொக்கு பட்ட னு ஒரு மரத்தோட பட்டைய குளத்துல போட்டா, கொஞ்சம் நேரத்துக்கு மட்டும் மீன்கள் மயக்கமாகி மிதக்குமாம்… அப்ப மீன் பிடிப்பாங்க… பிறகு மற்ற மீன்களுக்கு மயக்கம் தெளுஞ்சிடுமாம்…. இவுங்க இயற்கைய  மாசுப்படுத்தாம இருக்கிற விதத்ததான் பெருமையா சொன்னாங்க…

படிச்சு நல்ல டிரஸ் பண்ணிட்டு இருக்கிற ஆளுங்க கூட பணதேவைக்காக குளத்துல வெடி வச்சு மீன் பிடிக்கும் போது… இவுங்க இது போல பண்றது, அந்த மக்களோட நல்ல உள்ளத்த பிரதிபலிக்கிறதா சொன்னாங்க….

இவுங்க இன்னமும் விவசாயம் பண்ணி அவுங்க வாழ்க்கைய வாழறாங்க… அவுங்களோட தேவை முழுக்க, வாழ்க்கைய வாழதேவையான விஷயத்தை மட்டுமே செய்றாங்க… அளவுக்கு மிஞ்சினா அமிர்த்தமும் நஞ்சு தான் அப்படிங்கிறத சரியா புருஞ்சு இயற்கையோடு ஒன்றி வாழ்ற இவுங்ககிட்ட இருந்து இன்னும் கத்துக்கணும்…..

அப்புறம் விவசாயம் பத்தி அந்த பொண்ணு நிறைய சொல்லுச்சு… எனக்கு தான் நினைவுல நிக்கல.. அந்த பொண்ணு தனியா தான் வந்திருக்கு போல… ரொம்ப பெரிய இடத்து பொண்ணு….” என்று கூறினான். இதை கேட்டு கொண்டு இருந்த இளன் பெரிதாக கவனம் காட்டவில்லை. ஆனால் மகிழனோ, “ஆத்தாடி… இவ இன்னொரு ஆதவா போல… ” என்று எண்ணினான்….

அவள் அழகை பார்த்து மயங்காத ஆதவனோ, அவளின் கருத்துகளை கேட்ட பின்பு, அவனது மனமோ ஆற்றோடு ஆடும் பரிசலாய் ஆடியது….

அவன் பார்த்த பெண்கள் யாவும், இந்த தொழில் செய்யவேண்டும், இந்த நாட்டிற்கு செல்ல வேண்டும், வெளிநாட்டு வாழ் இந்தியராய் மாறவேண்டும், மென்பொருள் நிறுவனத்தில் வாழவேண்டும் என்று பேசும் பொழுது, ஒரு இளம் பெண், விவசாயத்தில் ஆர்வம் வைத்து பேசுவதை கேட்ட அவனுக்குள் மெலிதாக ஒரு சாரல்.

 

ஆதவனின் எண்ணம், ஆணோ பெண்ணோ நிச்சயம் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன்…. அது நம் நாட்டையும் விவசாயத்தையும் மேன் படுத்தும் விஷயமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவன்.

 

நாட்டின் முதுகெலும்பு விவசாயி என்பதை வார்த்தையாகவோ, வாக்கியமாகவோ பார்க்காமல் வாழ்க்கையாகவே பார்க்க தொடங்கியவன் அவன் சிறு வயதிலிருந்தே…..

 

இந்தகாலகட்டத்தில் பெண்கள் பல துறையில் காலடி வைக்க, அதை பார்த்து பெருமை கொண்டாலும்… மென்பொருள் அளவு விவசாயம் படிக்க யாரும் ஆர்வம் காட்டாதது அவனிற்கு வருத்தமே…. ஆதலால் தான் அப்பெண்ணை பற்றி சுடலை கூறியது ஆதவனின் மனதில் இதமான தென்றலாக உருவாகா காரணமாய் இருந்தது….

 

” சரி அந்த பொண்ணு பெயர் என்ன? ” என்று மகிழன் கேட்க, அந்த சுடலையோ “அய சார்..அத மறந்துட்டேன் பார்த்தீங்களா… ? நான் தெரிந்த பிறவு சொல்றேன்….” என்று கூற சுடலையின் கையில் இளன் ஒரு நூறு ரூபாய் தாளை திணித்தான்.

 

மறுநாள் காலை ரம்யமாக விடிந்தது….இருள் இன்னமும் லேசாக கவ்விக்கொண்டு இருக்க, ஆதவனோ அவனது கதிர்களை வெகு சிரமப்பட்டு அந்த மலைகாலிருட்டில் அவனது ஆங்கார ஒளியை பரவ செய்துக்கொண்டு இருந்தான்.

 

உடம்பை ஊடுருவும் குளிரையும் பொருட்படுத்தாது, ஆதவன் காலை ஓட்டத்தை மேற்கொள்ள, இழையினியோ காலை 6 மணிக்கே விழிப்பு தட்டிவிட அவளும் அந்த குடிலை விட்டு வெளியில் வந்து காலாற நடக்க ஆரம்பித்தாள்….

 

சிறுது  தூரத்தில் ஒரு பெரிய மர உச்சியில்  தேனிக்கள் கூடுக் கட்டி இருக்க, அதற்கு கீழ் ஒரு சிலர் நின்று பெரிய பெரிய வழுவான கொடிகளை சேகரித்துக் கொண்டு இருந்தனர்….

 

அதை பார்த்து, அவ்விடத்திலே இழையினி தோதாக அமர்ந்துக் கொண்டு வேடிக்கை பார்க்க தொடங்கினாள்….

 

இப்படியே சில நேரங்கள் கடந்து இருக்க, அவள் அருகில் ஆள் வரும் அரவம் கண்டு விழிவிரித்தாள்.

 

நிமிர்ந்து அவள் பார்க்க, அவள் முன் நின்று இருந்தவனோ அவளை நோக்கி சிரிப்பை உதிரவிட்டான்….

 

Advertisement