Advertisement

ஏதோ ஒரு பெரிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது போல, அனைவரும் உணர.. மெதுவாக ஒரு இனம் புரியா நிம்மதி உருவாக ஆரம்பித்தது. ஆனால் ருத்ரனுக்கு மட்டும் சக்தியுடன் வாழ்ந்த அந்த ஓராண்டு என்றும் மறக்க முடியாத பொக்கிஷமாக மாறி போக, மீண்டும் அந்த நினைவுகளை புரட்ட தொடங்கினர் கண்களில் வலியுடன்.

 

அதே வீட்டில் நினைவு பெட்டங்கங்களை திறக்க தொடங்கியது ருத்ரன் மட்டும் அல்ல. இதழாவும் தான்….

 

இதாழவின் மனதில் காட்சிகள் விரிய ஆரம்பித்தன.

 

‘முதன் முதலில் இழையினியின் திருமணத்தில், மகிழனை வெளிர் மஞ்சள் நிற சட்டையில் பார்த்தது, வேண்டுமென்றே அவள் மகிழனை அழைத்து பக்கத்திலிருக்கும் அண்ணனை அழைக்க சொன்னது… மாந்தோப்பில் தொலைபேசியின் மறுமுனையில் யாருமே இல்லாமல் யாருடனோ பேசுவது போல பாவலா காட்டி, மகிழன் தன்னை பார்க்கிறானா என்று நோட்டம் விட்டது….

 

பிறகு அவன் சிலம்பு என்று கூறியது, காற்சிலம்பு என்று தெரிந்தும் கூட, அவன் மீது மதிப்பு குறையாமல், முதலில் கோபம் வந்தாலும், பிறகு அந்த மரத்தை மகிழன் சுற்றி சுற்றி ஓடியதை நினைத்து, ரசித்து சிரித்தது.

 

மறுவீட்டிற்கு, மகிழன் வருவான என்று எதிர்ப்பார்த்து தனக்குளையே கொட்டு வைத்துக் கொண்டது….

 

தீபாவை, மகிழன் அழ வைத்தது…..

 

மீண்டும் அக்காவை காணும் சாக்கில் வந்து, மகிழன் முன்பு நிவனிடம் பேசி, மகிழனை வெறுப்பேற்றியது, பிறகு கும்பகோணம் சிலம்பாட்ட சாலைக்கு தற்செயலாய் தன் குருனாதருடன் சென்ற போது அங்கே ஆர்வத்துடன் சிலம்பு கத்துக்கொண்டிருந்த மகிழனை பார்த்தது…

 

அடுத்த சந்திப்பிற்காக ஏங்கியது…. ‘ என்று ஒவ்வென்றாக வலம் வர, இன்று மகிழனின் பாராமுகம் அவளை சிந்திக்க வைத்தது.

 

வீட்டின் முன்கட்டின் கொட்டாரத்தில் அமர்ந்து மகிழன், இதழாவை பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்க, பின் கட்டில், வாழை கூட்டங்களின் அருகே இருந்த மணல் திட்டின் மீது இதழா அமர்ந்து, மகிழனை பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தாள்….

 

“இன்னைக்கு நம்ம மயிலு நம்மள பார்த்தது போல இருந்ததே.. அதுக்காக தான நம்ம கோபமா இருக்குறது போல சீன் போட்டோம்… சரியா ரீச் ஆகிருக்குமா நம்ம மயிலுக்கு….?” – மகிழன் மனதில் கேள்வி எழ,

 

“ஏன் பார்க்கல, ஒரு வேலை சீன் போற்றுப்பானோ…?” – இதழா சரியாக மனதில் பிடித்துவிட,

 

“இல்ல நம்ம ஆக்ட்ட தான் கொடுத்தோம்னு மயிலு கண்டுபிடிச்சுருச்சா… ஆனா அது மண்டையில அவ்ளோ மசாலா இல்லையே….” – தனக்குள் மகிழன் புலம்பியப்படி கூற,

 

“நிச்சயம் அந்த பிராட், சீன் தான் போட்டிருக்கும்…” – முடிவாக இதழா மனதில் எண்ண,

 

“இவளுக்கு இதுலயும் புரிய வைக்க முடியாட்டி, எப்படி தான் மயிலுக்கிட்ட லவ்வ சொல்றது…?” தீவிரமாக மகிழன் யோசிக்க,

 

“இப்படியே விட்டா, இவன் கடைசி வர லவ்வ சொல்லமாட்டான்… எப்ப பாரு முட்ட கண்ண வச்சு முழுச்சு முழுச்சு பாக்குறது… ஒரு வேலை மைண்ட் வாஸ்ல பேசிட்டு இருந்திருப்பானோ…? இருக்கும் இருக்கும் ” – இதழா

 

“லவ்வ பேசாம நம்மளே தையிரியமா சொல்லிடலாமா..? ” – மகிழன் சந்திக்க,

 

“இவன் சரிப்பட மாட்டான்… மவனே இரு உன்ன வச்சுகிறேன்….” என்று  ஒரு முடிவுக்கு வந்தவளாக இதழா வீட்டிற்குள் நுழைந்தாள்…

 

“ஒகே பேசாம லவ்வ சொல்லிடுவோம்…. ” என்று ராகவனின் மீசை மீதிருந்த அச்சத்தால், பயந்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் மகிழன்.

 

அவன் பயந்துக்கொண்டே வீட்டிற்குள் வர, சில அடிகளுக்கு மேல் மகிழனது கால்கள் பிண்ணி கொண்டன போல ஒரு பிரமை ஏற்படுத்தியது. காரணம் அவன் கண்ட காட்சி. இதழா, ஏதோ ராகவனிடம் சொல்லி கொண்டிருப்பதை பார்த்த மகிழன் அதற்கு மேல் நகராது அங்கேயே தங்கிவிட, இதுவரை முற்றத்தில் ராகவன் இதழா மட்டுமே இருக்க, இப்போது அனைவரும் முற்றத்திற்கு கூடிவிட்டனர்.

 

மகிழனோ மனதினில், “அப்படி இவ்வ என்னத்த சொல்லிட்டு இருக்குறா… எனக்கு ஒன்னும் புரியல. நம்மள பத்தியோ….ஆனா இவ கம்ப்ளைன்ட் பண்ற அளவுக்கு நான் ஒன்னுமே பண்ணினது இல்லையே… லவ்வே இன்னைக்கு தான் சொல்லலாம்னு நினச்சேன்…நினச்சதுக்கே இம்ம்புட்டு அக்கப்போரா… ” என்று புலம்பிக்கொண்டிருந்தான்….

 

அவன் புலம்பலை கலைக்கும் விதமாய், ஆதவன் மகிழனை உரக்க அழைக்க, மகிழனோ மனதினுள், “ஏன் டா.. ஏ இப்படி கத்துற.. நானே அவரு மீசைய பார்த்து உறைஞ்சு போய் நிக்குறே இதுல இவன் வேற.. நண்பனா நீயெல்லாம்…  ” என்று எண்ணியப்படியே, “எண்ண நன்..பா.. கூப்பிட்டியா…” என்று ஒருவாறாக கேட்டு முடிக்க, பதில் ராகவனிடம் இருந்து வந்தது.

 

“மகிழன் தம்பி, நான் தான் உங்கள வர சொன்னேன்…” என்று ராகவன் கம்பீரமாக கூற,

 

“அடி பாவி… மயிலு மயிலுன்னு எத்தன நாலு உன்ன மனசுல கொஞ்சிருப்பே… இப்படி மீசகிட்ட மாட்டிவீட்டுடியே… ” என்று புலம்பியவாறு, அவரே சொல்லட்டும் என்று காத்திருக்க,

 

“மகிழன் தம்பி..எம்மவ சொல்றா.. நீங்க அவள விரும்புறீங்கன்னு… நிசம்தானா… கல்யாணம் பண்ணிக்க கேட்டீங்களாம்?” என்று அவரது பெரிய மீசையை தடவிக்கொண்டே கேட்க,

 

மகிழனோ மனதில், “அய்யோ இது எப்ப நடந்துச்சு….? நான் கேட்கவே இல்லையே… அடிப்பாவி…. ” என்று இதழாவை மனதினுள் கறுவிக் கொண்டவன், பதில் பேசாது அமைதியாக இருக்க,

 

“அட என்ன அமைதியா இருந்தா… அர்த்தமென்ன? ஒண்ணு ஆமாம் இல்லைனு ஏதாவது சொல்லனும்ல ” என்று உரக்க ராகவன் குரல் கொடுக்க, பயத்தில் இருந்த மகிழனோ என்ன சொல்கிறோம் என்றே தெரியாமல், “ஆமாம், ஆமாம் அங்கிள்” என்று கூறிவிட்டு, மனதினுள், “ஐயோ இப்ப நான் என்ன சொன்னேன்.. என்ன படபடப்பாக்கி, கேள்வி கேட்டு, என் வாயில இருந்து வார்த்தை வாங்கி, என்னையே அடிக்க போறாங்க… ” என்று மீண்டும் புலம்பலை தொடர, ராகவன் எழுந்து மகிழனின் கையை குலுக்கி ”வாழ்த்துக்கள் சின்ன மாப்பிள்ளை….”  என்று கூற, இதழா.. யாரும் பார்க்காத வண்ணம் மகிழனை பார்த்து கண்ணடித்தாள்….

 

“என்னடா நடக்குது இங்க” என்று மகிழன் ஒன்றும் புரியாமல் பார்க்க, ஆதவனோ, ” டே மகிழ்..என்கிட்ட கூட சொல்லவே இல்ல… கல்யாணம் வரைக்கும் பேசி இருக்க… இதழ் வந்து நேரா அப்பாக்கிட்ட நீ கல்யாணம் பண்ணிக்க கேட்டத சொல்லிடுச்சு… அப்பா இதழோட விருப்பத்தைக் கேட்டாரு… இதழ் அமைதியா இருக்கவும், அவரே புருஞ்சிக்கிட்டாறு… அதான் உன்ன கூப்பிட்டு உடனே மாப்பிளைன்னு சொல்லிட்டாரு… ” என்று ஆதவன் சுருக்கமாக கூற, மகிழனோ மனதினுள், “அடிபாவி… என்ன எல்லாம் பண்ணி வச்சுருக்கா.. மகிழ் உன் மயிலுகிட்ட ரொம்ப உஷாரா இருடா…” என்று கூற, அவன் காதல் மனமோ, “எவ்ளோ சேபா காய் நகர்த்தி நான் லவ்வ சொல்லாமலே என்னோட லவ்வ சக்சஸ் ஆக்கி இருக்கா… அவள போய்…போ…” என்று மறுமனம் அதட்ட, சந்தோசத்தில் மகிழன் திக்கு முக்காடி போனான். தனது மயிலை நோக்கியும் ஒரு வசீகர சிரிப்பை உதிரவிட்டான்….

 

“அப்பா.. இதழ் அமைதியா இருந்தத வச்சே..எப்படி ஒரு வார்த்தை கூட கேட்காம, கல்யாணம் வர முடிவு செய்தீங்க….” என்று கல்யாண பரபரப்பில் வேலை செய்த்துக்கொண்டே ராகவனிடம், ஆதவன் தனது கேள்வியை கேட்க, மணவறையில் அமர்ந்திருந்த மகிழன் இதழாவை ஒருமுறை பார்வையால் வருடிய ராகவன், “சின்ன மாப்பிளை காதலிக்கிறது தெரிஞ்சும் எம்மவ அமைதியா இருந்து என்கிட்டையே வந்து சொல்றானா, அவளுக்கு பிடித்திருக்குனு தான் அர்த்தம். ஏன்னா அவளுக்கு பிடிக்கலனா, இந்நேரம் கையில கம்ப  எடுத்துருப்பா…. அதோட, சின்ன மாப்பிள்ளை என் பொண்ணுக்கிட்ட காதல சொல்லிருப்பாரா? இல்ல என் பொண்ணே அப்படி என்கிட்ட சொல்லுச்சோ… ஏன்னா… மாப்பிள்ளைய பார்த்த சாதுவா இருக்காரு…. எது எப்படியோ எம் மவளுக்கு பிடிச்சிருக்கு, மாப்பிளைக்கும் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சதும் சம்மதம் சொல்லிப்புட்டேன்…. ” என்று கூறி சிரிக்க, ஆதவனுக்கோ, தானும் தனது மகளை இத்தனை புரிந்து நடக்க வேண்டும் என்று எண்ணம் தோன்ற  6 மாத கர்பிணியான இழையினியின் மேடிட்ட வயிரை ஆதவனின் கண்கள் படிந்து மீண்டது. ஏனோ ஆதவனுக்கு, பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துவந்தது.

 

சந்தோசத்திற்கு குறை இல்லாமல், வாழ்கை சக்கரம் உருள, தலை பிரசவத்திற்கு கூட, இழையினியை அனுப்ப மறுத்து ஆதவன் அடம்பிடிக்க, அவனின் ஏக்கம் புரிந்ததால் இழையினியும் கணவனுக்கு சாதகமாக பேச, ராகவனும் மருமகனுக்கே தனது வாக்கை அளிக்க, மரகதம் மட்டுமே லேசாக வருத்தம் கொண்டார்…

 

ஒரு அழகிய திங்களில், சிறு வெண்முத்து போல ஒரு பெண் குழந்தையை இழையினி பெற்றெடுக்க, அனைவர்க்கும் அன்று திருவிழா போல இருந்தது… மருத்துவமனையில் யார் கைகளிலும் இதுவரை கொடுக்காமல், செவிலியர் பெண் குழந்தைய குளிக்க எடுத்து போய் இருக்க, குழந்தையோ வரும்போதே அழுதுக்கொண்டே வந்தது…

 

சமாதானம் படுத்த தாயிடம் கொடுக்க, அப்போதும் அழுகையை நிறுத்தாத அக்குழந்தை, இப்போது ஆதவன் கைக்கு மாற, முதன் முதலாக தன்னுடைய ரத்தத்தை, தன் மகளை ஆதவன் கைகளில் ஏந்தினான்….

 

இதுவரை அவன் அனுபவித்திடாத கொள்ளை இன்பம், அவன் கைகளில் குழந்தையின் சாயலில் இருந்தது. என்ன நினைத்தோ குழந்தை, இதுவரை இருந்த அழுகையை நிறுத்தி, தந்தை கைக்கு மாறியதும் தனது பொக்கை வாயை திறந்து சிரிக்க, ஆதவன் அந்த உலகத்தையே வென்ற உணர்வை பெற்றான்….

 

பிறந்த சில நிமிடங்களில் இப்போது தான் முதல் முதலாக குழந்தை சிரிக்க, அதை பார்த்த செவிலியர் பெண் ஆச்சர்யப்பட்டு போனார்.

 

“அட உங்க பொண்ணு தான் அம்மா கைக்கு போய் கூட அழுகைய நிறுத்தாம, அப்பா கைக்கு வந்ததும் அதுவும் முதல்ல உங்கள பார்த்து சிரிக்கிது….” என்று ஆச்சர்யப்பட்டுவிட்டு நகல, இதழாவோ, “இதுல எந்த ஆச்சர்யமும் இல்லை… நம்ம வீட்டுக்கு இன்னும் ஒரு இழையினி வந்துட்டா… என்ன புரியலையா… இன்னும் ஒரு அப்பா பைத்தியம்…” என்று கூறி கலகலவென சிரிக்க, அனைவரும் அவளது சிரிப்பில் கலந்துக்கொண்டனர்.

 

இப்போது பார்வதி பாட்டி, யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து போக, அதை பார்த்த ராகவனும் பின்னோடு போக, பாட்டி குனிந்து மண்ணை அள்ளிக் கொண்டு இருந்தார்….

 

காரணம் கேட்ட ராகவனிடம், “அந்த நர்சம்மா…கண்ணு பற்றுச்சுள்ள, பேத்திக்கும் கொள்ளு பேத்திக்கும் சுத்தி போடத்தே, அவ காலடி மண்ணை எடுத்தே….” என்று கூற ராகவனோ சிரித்துவிட்டு, “அப்ப இன்னும் கொஞ்சம் மன்ன எடுத்துக்கோங்க….” என்று பார்வதி பாட்டியின் பக்கம் சாயிந்தார் ராகவன். அவரின் செல்ல மகளுக்கு கண்படாமல் இருக்க….

 

ஓடிற்று இன்றோடு நித்திலா பிறந்து, இரண்டரை வருடங்கள் ஓடிற்று…… ஆமாம் ஆதவனின் மகளுக்கு ஆதவன் பார்த்து பார்த்து நித்திலா என்று பெயர் சூட்டி இருந்தான்… பிறந்தவுடன் சிறு வெண்முத்து போல இருந்த அவனின் செல்ல மகளுக்கு, முத்தை குறிக்கும் நித்திலா என்ற பெயரையே தேர்வு செய்திருந்தான்….

 

“அக்கா…. என்ன பண்ற ?” என்று கேட்டப்படியே இதழா, ஆதவன் வீட்டிற்குள் நுழைய, பின்னோடு மகிழனும், இரண்டு வயதை நெருங்கிக்கொண்டிருந்த தன் மகனை கையில் ஏன்தியப்படி வந்தான்…

 

ஆம், அக்கா தங்கை ஒரே ஊரில் இருப்பதால், அடிக்கடி இதழா அக்காவை பார்க்க வந்துவிடுவாள். ஆனால் இன்று வந்திருப்பது எப்போதும் போல் பார்ப்பதற்கு அல்ல.

 

“என்ன டி… காலங்காத்தால … மகிழ் அண்ணனையும், அப்புறம் இந்த சின்ன கண்ணனையும் கூட்டிட்டு வந்திருக்க…?” என்று இழையினி கேட்க,

 

மகிழனோ மனதினுள், “கூட்டிட்டு வரல மா, இழுத்துட்டு வந்துருக்கா… மனுஷன தூங்க கூட விடாம…” என்ற புலம்பலுடன், வெளியே அமைதியாக இருந்தான்.

 

“அக்கா… அப்பா பார்த்து ஒரு மாசம் ஆச்சு… அதுதான் இரண்டுநாள் போய் தங்கிட்டு வரப்போறேன்… நீயும் கூட வரியா? நீ தங்கமாட்ட, மறுவீட்ல தங்கினது, அதுக்கு அப்புறம் நம்ம வீட்ல தங்குறதே இல்லை… போனவுடனே கால்ல சுடு தண்ணி கொட்டினது போல ஓடி வந்திடுறது.

 

இன்னைக்கு தான் மாமா வெளி ஊருக்கு போய் இருக்காங்க தானே, நீ வந்துட்டு, இவருக்கூடவே வந்திடுக்கா… என்னையும் குட்டியும் விட்டுட்டு இவரு சாயுங்காலம் கிளம்பிடுவாரு… ” என்று கூற,

 

இழையினிக்கு தன் தந்தையை பார்க்கும் ஆவல் இருந்த போதிலும், இன்று மதியம் ஆதவன் ஊரிலிருந்து வந்திடுவான் என்ற காரணத்தால், சற்று தயங்கி, பிறகு அவரிடம் கூறிவிட்டு நாளை கூட சென்று பார்த்துவிட்டு வந்துவிடலாம், ஏனெனில் ஆதவன் வந்ததும், அவனுக்கு அவனின் செல்ல மகள் நித்திலாவை காண வேண்டும், அதோடு அவன் கண்கள் தேடுவது இழையினியை தான்.

 

இந்த காரணங்கள் எல்லாம், அவளது மனதில் வலம் வர, பதிலுக்காக காத்திருக்கும், தனது தங்கையிடம் மறுப்பாக சொல்லிவிட, இதழாவும் இது வழமை தான் என்பது போல, இலகுவாக எடுத்துக் கொண்டு, மகிழனுடன் புறப்பட்டாள் விராலி மலைக்கு.

 

“நித்தி குட்டி…. நித்தி மா…எங்க டா இருகீங்க…” என்று குரல் கொடுத்தபடியே ஆதவன் வீட்டிற்குள் வர, முற்றத்தில் அமர்ந்து பூக்கட்டிக் கொண்டு இருந்த இழையினிக்கு, ஆதவன் இப்படி தான் செய்வான் என்று சரியாக அவனை புரிந்துக் கொண்டிருப்பதில் பெருமை உண்டானது. ஆனால் ஆதவனின் செல்ல மகளோ, எங்கும் காணாததால், “இழையா… என்ன நீ பாட்டுக்க பூ கட்டிட்டு உக்காந்து இருக்க..?” என்று அவளை சீண்டும் நோக்கத்துடன் காண, இழையினியோ, “நீங்க வந்ததும் உங்க பொண்ணு பேர தான சொன்னீங்க.. என்ன கூப்பிட்டது போல எனக்கு எதுவும் தோணலியே…” என்று ஆதவனை சீண்டும் நோக்கில் கூறினாலும், அவளுக்கு உள்ளூர பெருமிதமே. பொய் கோபம் காட்டி, இழையா முகத்தை திருப்ப, அதை ஆதவன் கண்டுக்கொண்டு, கண்களாலே அவளுக்கு ‘கோச்சுக்காத, நான் பாப்பா பார்த்துட்டு உன்கிட்ட வரேன்…’ என்று பொருள் படுமாறு சமிக்கை செய்தான்….

 

‘பாப்பா.. நித்திமா எங்கடா இருக்கீங்க…?” என்று ஆதவன் குரல் கொடுத்துக்கொண்டே, இழையினியிடம் சமிங்கையில் நித்தி இருக்கும் இடத்தை கேட்க, இழையோவோ சமிக்கை மூலமே ஒரு தூணை காட்டினாள்….

 

ஆதவன் பதுங்கி பதுங்கி அத்தூனின் அருகே வர, தந்தைக்கு ஒழிந்து ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த நித்தி, நன்றாக தூணோடு தூணாக ஒட்டி நின்றுக்கொண்டாள்…

 

அவளது உயரத்துக்கு மண்டியிட்டு, மகளை கண்டுப்பிடிக்க, கண்டுபிடித்தவுடன் நித்தி ஆராவரம் செய்தாள் சந்தோசத்தால். பிறகு உடனே முகம் திருப்பிக் கொண்டு, இழையினியிடம் செல்ல, பின்னோடு ஆதவனும் வந்து நித்திலாவை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தான்….

 

“அப்ப..பா.. ஏ பா டாட்டா போன, பாப்ப்பா உன்ன தேடிச்சு…” என்று மழலை மொழி மாறாமல் நித்திலா கேட்க, ஆதவன் அப்படியே உருகி போனான். ஏனென்றால், இது தான் முதல் முறை இரண்டு நாட்கள் அவன் நித்திலாவை விட்டு வெளியூர் சென்றது.

 

மகள் தன்னை தேடுகிறாள் என்ற எண்ணம் ஆதவன் நெஞ்சில் எழ, சந்தோசத்தின் அறிகுறியாய் அவன் கண்களில் ஒரு துளி நீர் துளிர்த்தது.

 

அதன் பின், ஆதவனுக்கு உணவு பரிமாற, இழையினி அடுக்களைக்குள் நுழைய, ஆதவன் நித்திலாவிடம், “தம்பி கூட நீங்க விளையாடலையா..?” என்று கேட்க, குட்டி நித்திலாவோ, “தம்பி..டாடா போய்ட்டான்… தாத்தா..” என்று மழலை மொழியில் கூற, ஆதவனுக்கு புரிந்துவிட்டது விராலி மலைக்கு என்று.

 

ஏதோ வளவளத்துக்கொண்டே இருந்த மகள், இழையினி வந்ததும், என்ன நினைத்தாலோ, திடுமென குழந்தை ஆதவனிடம், “அப்..பா அம்மா ஏ தாத்தா பாக்க போல..” என்று அரைகுறையாக கேட்க, ஆதவனுக்கோ சுள்ளென்று ஒரு வலி பிறந்தது மனதில்.

 

அவன் ஒன்றும் இழையினியை விராலிமலைக்கு அனுப்பாமலே இல்லை. அனுப்பினாலும் ஒரு மூன்று மணிநேரம் அவளுடன் அங்கே இருந்து, பிறகு கையுடன் அழைத்து வந்துவிடான்…அவனுக்கு ஒரு பொழுது கூட இழையினி இல்லாமல் நகராது. இத்தனை நாட்களாய், அவன் அன்பை மட்டுமே பெரிதாக நினைத்திருந்தவன், இன்று மகள் கேட்ட கேள்வியில் உடைந்து தான் போனான்.

 

காரணம், தன் மகள் தன்னை ரெண்டு நாட்களுக்கே தேடுகிறாளே… ரெண்டு வருடமாக, இழையா அவ்வ போது பார்த்தாலும், அங்கே ஒரு நாள் கூட செலவிடவில்லையே, அதற்கு தான் தான் காரணமோ என்று தோன்ற ஆரம்பித்தது.

 

அதனால் அடுத்து யோசிக்காமல், அடுத்த அரமணி நேரத்தில் இழையினியை அழைத்துக்கொண்டு ஆதவன் விராலிமலைக்கு சென்றான்…

 

இங்கு விராலிமலையிலோ, கண்ணன் தனது தாத்தாவோடு விளையாடிக்கொண்டிருக்க, இன்னமும் ராகவன் மீசை மீதிருந்த பயம் மகிழனுக்கு போகாததால், சற்று எட்ட அமர்ந்தே பார்த்துக்கொண்டு இருந்தான்…

 

ராகவன், தனது பேரனை அள்ளி கொஞ்ச, அவர் மீசை குத்தியதால், அவரிடமிருந்து விலகிய கண்ணன், அப்போது தான் ஒரு சில வார்த்தைகள் பேச தொடங்கி இருந்தவன், “மீச்ச…” என்று மட்டும் கூறிவிட்டு, கன்னத்தை தேய்க்க, மரகதமோ இதழாவை பார்த்து, “அடி பாவி, இது உன் வேலை தானா? நீ தான் அப்பாவ அப்படி கூப்பிடுறனா, உன் புள்ளையும் இப்பவே அவர இப்படி சொல்ல கத்துக்கொடுத்தியா…” என்று கடிந்துக்கொள்ள, ராகவன் அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

 

பேரன் தனது மீசையை சொல்லி தன்னை அழைத்ததில், அவர் உல்லாசமாக சிரித்து, பேரனை தூக்கி சுற்றினார்.

 

இதை பார்த்துக் கொண்டிருந்த மகிழனோ, “அட எம் புள்ள தைரியசாலி, எந்த மீசைய பார்த்து நான் இன்னும் அவருக்கிட்ட போக கூட யோசிக்கிறேனோ, அதே மீசைய, சொல்லிய எம் மவன் கூப்பிடுறானே.. வாவ்… ” என்று வழக்கம் போல மனதில் மட்டும் நினைத்துக்கொண்டான்.

 

ஆனால் அடுத்த நொடியே அவனது மனம், “ஆத்தாடி… அப்ப எம் புள்ள, அப்படியே இதழா போல வந்திடுமா… அவள போல இவனும் சிலம்பு கத்துக்க போய்ட்டா, அவ்ளோதான்… அம்மாவும் மகனும் சேர்ந்து என்ன என்ன பண்ணுவாங்களோ… நம்ம கத்துகிறோம் தான் இந்த இரண்டு வருசாம ஆனா இன்னும் இதழ் அளவுக்கு வரலியே….” என்று புலம்பியது.

 

அந்த நேரம் சரியாக, ராகவனை சந்திக்க, சிலர் வந்திருக்க, அவர் வெளியே செல்ல, மரகதமும் இதழாவும் கை வேலையாய் உள்ளே செல்ல, மகன் விளையாடுவதை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த மகிழன் மனதில் திகில் படர்ந்தது.

 

அதற்கு காரணமும் இருக்க தான் செய்தது.

 

ஏனென்றால், கண்ணன் பரப்பிக்கிடந்த விளையாட்டு பொம்மைகளை மதிக்காமல், சற்று எட்ட இருந்த ராகவனின் கை குச்சியை, எடுத்து அதை அப்புறமும் இப்புறமும் ஆட்டி ஆட்டி விளையாட, மகிழன் மனமோ, “அம்மாடியோ… கன்பார்மா இவனும் அவன் அம்மா போலதான்….” என்று எண்ணமிட்டப்படி, மகனிடம் சென்றான்.

 

“கண்ணா… நீங்க குட் பாய்-ல… குச்சிலாம் வேணாம் டா… கண்ணு குத்திடு” என்று மகனுக்கு புரியும் வகையில் மகிழன் கூற, அவனோ அதை தருவாதாக இல்லை.

 

அவனுக்கு விளையாட்டு காட்டி, “அது வேணாம் கண்ணா, அப்பா சாக்கி தரேன்…” என்று கூறி, மகனிடம் பையில் இருந்த மிட்டாயை தர, அந்த மிட்டாயை வாங்குவதற்காக, கண்ணன் கம்பை மகிழனிடம் கொடுத்தான்.

 

மிட்டாயை வாங்கி கையில் வைத்துக்கொண்டு, மீண்டும் மகிழனிடம் அந்த குச்சியை காட்டி செய்கை செய்ய, மகிழன் தராததால், வீல் என்று தனது அழுகையை தொடர்ந்தான் கண்ணன்.

 

அவன் அழுதவுடன் கலவரமான, மகிழன், வேகமாக அடுப்படியை பார்க்க, அங்கே அவன் எதிர்ப்பார்த்தபடியே இதழா வந்துக்கொண்டிருந்தாள்….

 

“என்ன அங்க சத்தம் ? ” என்று பொய் கோபம் காட்ட, பிள்ளையோ, “அம்மா…அப்பா அட்சி…” என்று தனது கன்னத்தை காட்டி பொய் உரைக்க, கண்ணன் எப்பொழுதுமே இப்படி விளையாட்டாக செய்வான் என்பதால், இதழாவிற்கு அது தெரிந்தும் மகிழனை சீண்டும் நோக்கோடு அவனை முறைக்க, மகிழன் மனதில், “பயபுள்ள போட்டு விட்டான்…நான் எப்படா உன்ன அடிச்சேன்… ” என்று மனதில் புலம்பிவிட்டு, வெளியே “சும்மா கண்ணன் கூட பேசிட்டு இருந்தேன் இதழ்…. ” என்று கூற, இதழாவிற்கு கணவனின் செய்கையில், அவனது திருட்டு முழியில், ஒருநிமிடம் அவன் தாமதித்து பதில் தந்ததால் நிச்சயம் அவன் மைண்ட் வாய்சில் பேசி இருப்பான் என்று அறிந்தததால் அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.

 

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே, ராகவன் உள்ளே வந்துவிட, தாத்தாவை பார்த்த கண்ணன் செல்லம் கொஞ்சும் சாக்கில், மீண்டும் அவன் வீல் என்று கத்தி, தாத்தாவை தூக்குமாறு கைகளை விரித்து அழ, அதை பார்த்த ராகவனோ, “என்ன அங்க சத்தம்…?” என்று அவரது கரகரப்பான குரலில் கேட்க, இப்போது இதழும், மகிழனும் ஒரு சேர, “ஒன்னும் இல்லை சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் அப்பா…” என்று கூறி ஒருவரை ஒருவர் பார்த்து முழித்துக்கொண்டனர்.

 

காரணம் பேரனை அடித்தால், அவ்வளவுதான் ராகவன் இதழை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்… அதனால் தான் கண்ணனுக்கும் அவனது மீசை தாத்தாவை பார்த்தால் அத்தனை சந்தோசம். தாத்தாவிடம் தாவிய கண்ணன், மகிழனை பார்த்து தலை சாய்த்து சிரிக்க, தனது மகனின் குறும்பு தனத்தில் மகிழன் தொலைந்து தான் போனான்.

 

இவை நடந்துக்கொண்டிருந்த போது, சரியாக இழையினி “அப்பா…” என்று குரல் கொடுத்தபடியே உள்ளே நுழைந்தாள்…

 

அவர்கள் அங்கு சேரும்போது மாலை 5-யை தொட்டிருக்க, ராகவன் தனது ரெண்டு மகள்களும் வந்திருக்க, எல்லை இல்லா மகிழ்ச்சியுடன் பேரன் பேத்தியுடன் விளையாடிக் கொண்டு இருந்தார்.

 

அப்போது சரியாக, விராலி மலை கோவில் மணி ஓசை கேட்க, இழையினிக்கு முருகனை தரிசிக்க மனம் விழைந்தது. ஆதவனிடம் சொல்லிக்கொண்டு, கோவிலிக்கு சென்று வந்தவள், கைகளில் பிரசாதம் இருந்தது.

 

சிரித்த முகமாய், இழையினி வர, ராகவனுக்கும் மரகததிற்கும் மனம் நிறைந்திருந்தது. வந்தவள் எப்போதும் போல, முதல் பிரசாதத்தை ஆதவனிடம் கொடுக்க, ஆதவனோ அவள் கைகளை பிடித்து, அந்த பிரசாதத்தை அருகில் இருந்த ராகவனிடம் நீட்ட, இழையினியும் ராகவனும் ஒரு ஆச்சர்ய பார்வைய பார்த்தனர் ஆதவனை.

 

“இழையா.. இனிமேல் என் பொண்ணு எனக்கு பிரசாதம் கொடுப்பா.. நீ உங்க அப்பாக்கு கொடு…” என்று கூறிவிட்டு மகளிடம் விளையாடிக் கொண்டு இருக்க, இழையினி கொடுத்த சக்கரை பொங்கலை உண்டது ராகவன் என்றாலும், அந்த இனிப்பின் சுவை ராகவன், மரகதம், இழையினி என்று அனைவரது மனதிலும் நிறைந்தது.

 

அதன் பின் ஆதவன் கிளம்ப எத்தனிக்க, இழையினியும் உடன் புறப்பட்டாள். புறப்பட்டவளை தடுத்த ஆதவன், “எங்க இழையா வர? இன்னும் இரண்டு நாள் அப்பாக் கூட இருந்திட்டு வா… ” என்று சிரிப்பு மாறாமல் கூற, இழையினிக்கு சந்தோசம் பிடிப்படவில்லை. அப்பொழுதே தனது கணவனின் நெஞ்சில் சாயிந்து ‘தேங்க்ஸ் ங்க…’ என்று கூறவேண்டும் போல இருந்தது. ஆனால் சுற்றம் உணர்ந்து தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, “இல்லங்க நீங்க எப்படி தனியா…? நானும் வரேன்..” என்று கூற, மறுப்புறம் ஒரு டெட்டி பேக்கை மாட்டிக்கொண்டு, “அம்மா, பாப்பா அப்பாவ பாத்துக்கும்…நாங்க டாட்டா போறோம்…” என்று ஆதவன் கைகளை பிடித்துக்கொண்டு, நிமிர்ந்து தன் தாயை பார்க்க, இழையினி ஆதவனை நோக்கி, “எல்லாம் உங்க வேலை தானா…? ” என்று கேட்டாள்.

 

ஆதவனோ பதில் பேசாமல் கண்ணடிக்க…. இழையாவோ, “நித்தி குட்டி உன்ன யாரு டா பார்த்துப்பா.. ?” என்று மண்டியிட்டு கேட்க, “அப்பா…” என்று அழுத்தமாக உச்சரித்தாள் மகள்.

 

அப்போ, “அப்பாவை யாரு பார்த்துப்பா…? ” என்று இழையினி கேட்க, இப்போதும் குழந்தை தயங்காமல், “பாப்பா…” என்று அழுத்தமாக உச்சரித்து தன்னை தானே சொல்லிக்கொள்ள, கூடி இருந்த ராகவன், மரகதம், மகிழன், இதழா என்று அனைவரும் சிரிக்க, ஆதவன், அவனின் மனைவியிடம், “நீ அப்பா கூட இரண்டு நாள் இருந்திட்டு வா டா… நான் பாப்பாவ நல்ல பார்த்துகிறேன்… வரேன் பா…” என்று அனைவரிடம் கூறி விடை பெற, நித்திலா ஆதவனின் கழுத்தை கட்டிக்கொண்டு சந்தோசமாக விடைபெற, இழையினி ராகவனின் கைகளை பிடித்துக்கொண்டு கண்ணீர் வழிய சிரித்தாள்….

 

இங்கு நிகழ்ந்ததை பார்த்த மகிழன், தன்னுடன் தன் மகன் வருவானா என்று பார்க்க, அவனோ இதழாவின் பின்னால் ஒளிந்துக்கொண்டு ‘டாட்டா பா…” என்று அவனை வழியனுப்ப, மகிழனோ அவனது மைண்ட் வாயிசில், “என்ன டா.. இது ? தாத்தா கூடவும், அம்மா கூடவும் இருக்குறதுனா எனக்கு கூட டாட்டா சொல்லிடுறான்… இவனோட அம்மா சும்மாவே அடி வெளுக்குறா… இவனும் அம்மா புள்ளையா வளந்துட்டான், அவ்வளவுதான் மகிழ் உன் நிலைமை. இதுல இருந்து தப்பிக்க, எனக்கும் ஒரு பெண் குழந்தை வேணும்… அப்போ தான் என் மகளும், நானா உயிரா இருப்பா… முதல்ல இதழா கைல காலுல விழுந்தாவது ஒரு பெண் குழந்தைய பெத்துக்கணும்” என்ற முடிவோடு, ஆதவனுடன் இனைந்துக்கொண்டான்.

 

ராகவன் அடுத்த இரண்டு நாட்கள், அவரது பாப்பாவான இழையினி இந்த வீட்டில் இருக்க போகிறாள் என்ற எண்ணமே அவருக்கு 10 வயது குறைந்தது போல எண்ணம் தர, துள்ளி குத்தித்து மகளுக்கு வேண்டியதை வாங்க கடை வீதிக்கு சென்றார்…..

 

மயிலிறகு வசந்தத்தை வாரி வழங்கியது

அவர்களின் வாழ்க்கையிலும்.

 

Advertisement