மௌனத்தின் கீர்த்தனங்கள்
26
முதலில் வான்மதியிடம் பேச ஆரம்பித்தாள் தென்றல்.. வான்மதி இப்பொழுது கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றி வருகிறாள்..
மாதவியின் கடும் முயற்சியால் அக்கா தங்கை இருவரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். தென்றலின் வாழ்வில் நடந்த சோகங்கள் அனைத்தையும் கேட்ட வான்மதிக்கு சசி மீது கடும் கோபம் எழுந்தது..
தென்றல் சசியோடு சென்ற பிறகு அவர்கள் குடும்பம் அனுபவித்த அவமானங்களும்...
25
இடையில் தேவா தர்ஷினியை திருமணம் செய்து கொண்டான் காதலித்து.. தர்ஷினியின் குடும்பம் பெரிய கோடீஸ்வர இடம்.. சோமசுந்தரம் விசாலாட்சிக்கு தங்கள் தகுதிக்கு ஏற்றார் போல இளைய மகன் வரன் தேடியது பெரும் நிம்மதியை கொடுத்தது.
தேவா திருமணத்தின் போது தென்றல் அனுபவித்த அவமானங்கள் கொஞ்ச நஞ்சமில்லை.. வீடு முழுவதும் உறவினர்கள் நிறைந்திருக்க அத்தனை பேர் முன்னிலையில்...
24
தன்னைப் பற்றிய சிந்தனைகளில் மூழ்கிய சசி வீழ்ந்ததிலிருந்து எழுந்து வராமல் போதையெனும் தீய பழக்கத்திற்கு அடிமையாகி அவனையே அதில் முழுதாக இழந்தான்.. அவனோடு அவனின் மனைவி இரு மகள்களும் சந்தோஷத்தை இழந்தார்கள்.
ஆரம்ப காலகட்டத்தில் அவன் வாழ்க்கை எப்படி இருந்ததோ மீண்டும் அதே நிலைக்கு தள்ளப்பட்டான். ஸ்கிரிப்ட் ரைட்டிங், கதை சொல்வது, ஸ்கிரிப்ட் பவுண்டிங் என...
இருந்தாலும் கணவனின் வெற்றியை பக்கத்தில் இருந்து பார்க்கும்போது மனதிற்கு இதமாக இருந்தது.. பட பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நாளிதழ்களிலும் சோசியல் மீடியாக்களிலும் வெளியாகின.. வளர்ந்து வரும் முன்னணி நடிகரை வைத்து படம் இயக்கப்படுவதாக இருந்தது.
சசி தன்னுடைய கனவை எட்டிப் பிடிக்கும் வெறியோடு இந்த படத்தில் உழைத்தான். நேரம் காலம் மறந்தான். குடும்பத்தையும் மறந்து போனான்....
23
சோமசுந்தரம் சென்ற கார் விபத்துக்குள்ளாகி விட்டது. நல்ல வேளையாக இடது கால் எலும்பு முறிவோடு அவர் உயிர் பிழைத்து விட்டார்.. ஒட்டு
மொத்த பழியும் பிறந்த பச்சிளம் குழந்தை மேல் விழுந்தது. விசாலாட்சி ஆடி தீர்த்து விட்டார்..
சசி வீட்டில் இருந்த நேரமெல்லாம் ஓரளவிற்கு நாவை கட்டுப்படுத்தி வைத்திருந்தவர் அவன் தலை மறைந்ததும் தென்றலை வார்த்தைகளால் கொத்தி...
22
தென்றலின் குடும்பத்தை சந்தித்து வந்த விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் சசி மித்ரன்.. அங்கு நடந்த விஷயத்தை ரத்தின சுருக்கமாக சொல்லி முடித்தவன் அவள் மனம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் மற்றதை மறைத்து விட்டான்.. தென்றலுக்கு தெரியாதா அவள் பெற்றோரை பற்றி? கசந்த முறுவல் ஒன்று அவள் இதழ்களில் தோன்றியது.
" என்கிட்ட மறைக்கிறீங்க. என்னோட அப்பா...
21
தென்றலின் கர்ப்பத்தில் இருந்த குழந்தையும் வளர்ந்தது. சசியின் வேலையும் கூடியது. தன் குடும்பத்தினர் யாரிடமும் பேச முடியாத வேதனையில் மனரீதியாக பெரிதளவு பாதிக்கப்பட்டிருந்தாள் தென்றல்.. அவளை மாதாந்திர பரிசோதனைக்கு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல கூட சசியால் வர முடியாது..
அவன் வேண்டுமென்றே செய்யவில்லை. அவனின் வேலையப்படி. முதலில் எல்லாம் தென்றலுக்கு இதனை நினைத்து எரிச்சலாக இருந்தது....
20
மேற்கொண்டு மனைவியை படிக்க வைப்பதாக கூறிய சசி மித்ரனை கையில் பிடிக்க முடியாத அளவிற்கு வேலைகள் அழுத்தி பிடித்தன. அவனை நேரில் பார்க்கும் தருணங்கள் அவனிடம் எதுவும் கேட்க தென்றலுக்கு மனம் வராது. சோர்ந்த முகத்தோடு சில சமயம் குளிக்காமல் கூட உறங்கி விடுவான்.
மெல்ல மெல்லமாக அவன் வீட்டில் இருக்கும் நேரங்கள் அரிதாகியது.. இரண்டு...
19
இரண்டு நாட்களுக்கு மேலாகி விட்டது. முதல் ஊடல் இருவருக்குமே மன சஞ்சலத்தை அளவுக்கு அதிகமாக கொடுத்தது. இதனிடையே சசி துணை இயக்குனராக பணிபுரியும் படத்திற்கு பூஜை போட்டு அனைத்து ஊடகங்களிலும் செய்தி தீயாய் பரவியது..
சசி மித்ரன் பேசாதது ஒரு வகையில் மன அழுத்தத்தை கொடுத்தது என்றால், அப்பா அம்மா வயதுக்கு வந்த தங்கை இவர்களெல்லாம்...
18
முதலில் சசி தன்னை ஆக்கிரமித்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தாள் தென்றல்.. அதற்கான வயதோ பக்குவமோ அவளுக்கு சுத்தமாக கிடையாது.. அனைத்தையும் விட மனநிலை? அவள் என்ன மாதிரி உணர்ந்து கொண்டிருக்கிறாள் என்று அவளுக்கே புரியாத போது இந்த நிகழ்வு அவளுக்கு பெரிய வேதனையை கொடுத்தது.
ஆனால் சசியைப் பொறுத்தவரை அவன் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டான்.....
17
அன்றிலிருந்து சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்கிற பாடல் மட்டுமே தென்றல் மனதில் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.. முதலில் தென்றலின் படிப்பு தடைப்பட்டது. பணம் இருந்தால் தானே செமஸ்டருக்கு செலுத்த முடியும்..
விசாலாட்சி சோமசுந்தரத்தின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு தென்றலை வீட்டுக்குள் அனுமதித்தாரே தவிர அவருக்கு தென்றலை சுத்தமாக பிடிக்கவில்லை. கோவிலில் தனக்கு உதவிய பெண்...
16
என்னதான் சசி மித்ரன் நெஞ்சை நிமிர்த்து கொண்டு பேசினாலும், இளந்தென்றல் கண்ணீர் மல்க வாசலில் நின்று தன் பெற்றவர்களை பார்த்தாலும், அவர்கள் இருவரையும் ஏற்கும் மனநிலையில் பரசுராம் வாசுகி இருவருமே இல்லை.
மாதவி ஒரு பக்கம் கேட்டின் பக்கவாட்டில் இருந்த மண்ணை அள்ளிக் கொண்டு வந்து சசி தென்றல் இருவரின் மீதும் வீசி சாபம் கொடுத்தார்.....
15
எப்படி எதனால் ஏன் இப்படி எந்த கேள்வி கேட்டாலும் பிடித்து வைத்த பிள்ளையார் போல் பெற்றவர்கள் முன்பு நின்று கொண்டிருந்தாள் தென்றல் மாலையும் கழுத்துமாக. அவளின் பக்கத்தில் சசிமித்ரன் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான்..
பரசுராம் பார்த்து வைத்திருந்த நவீனை வேண்டாம் என்று விட்டு மாதவியின் மகன் அகிலனோடு தென்றலின் திருமணத்தை...
14
தென்றலின் கைப்பேசி விடாமல் அடித்துக் கொண்டே இருந்தது. வாசுகி இதோடு பத்தாவது தடவை மகளுக்கு அழைக்கிறார். ஒவ்வொரு முறையும் அழைப்பு வரும்போது கைபேசியை வெறித்து பார்த்தாலே தவிர அதனை ஏற்கவில்லை.
கல்லூரிக்கும் செல்ல விருப்பமில்லாமல் அறையிலேயே முடங்கி கிடந்தாள் தென்றல்.. அவளின் அறை தோழி கேட்டதற்கு வயிற்று வலி என்று பொய் சொன்னாள்..
மீண்டும் அவளது கைபேசி...
13
தென்றலின் முக சோர்வு சசியை பார்த்ததும் மறைந்தது.. அவளுக்கு நேராக நடந்து வந்து கொண்டிருந்தான் சசி..
"ஹாய்".. என்றான் அவள் புன்னகைத்தாள்.
" கோவிலுக்கு வந்தீங்களா.."
"ம்ம்ம்"
"அப்புறம்"
" அப்புறம் ஹாஸ்டல் போயிட்டு இருக்கேன்..".. தென்றலை கண்டதும் இவ்வளவு நேரம் அவன் மனதை சுழன்று அடித்துக் கொண்டிருந்த சூறாவளி சட்டென்று அமைதி அடைவதை உணர்ந்து சசி அவளோடு இன்னும் சற்று...
12
தன்னுடைய பெற்றோரின் மீது கடும் கோபத்தில் இருந்தான் சசி மித்ரன்.. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற கொள்கையோடு ஓடிக் கொண்டிருப்பவனுக்கு கால் கட்டு போட நினைத்தால் கோபம் வராதா என்ன?
அன்று கோயம்புத்தூருக்கு தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க தான் சென்றிருந்தான். எதிர்பாராத விதமாக தென்றலோடு ஒரு சந்திப்பு அமைந்து அவளோடு பயணம் செய்யுமாறு விதி அவனுக்கு...
11
வீட்டில் யாரிடமும் பேச பிடிக்காமல் தன்னுடைய அறையில் முடங்கி கிடந்தாள் தென்றல்..
" அம்மாவை விடு.. இந்த அப்பாவுக்கு எங்க போச்சு அறிவு.. " நினைக்க நினைக்க அவளால் கோபம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.. அவளுடைய இயல்பை மீறி நடந்து கொண்டிருந்தாள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர் வந்து சேர்ந்தவள், பெற்றோர் சொன்ன செய்தியை கேட்டதும் நிலை...
10
துர்க்கை அம்மனின் கோவிலில் ராகு காலத்தில் விளக்கு போட்ட தென்றல் ஒரு ஓரத்தில் அமர்ந்தாள்.. அப்பொழுது அவள் பக்கத்தில் ஒரு நடுத்தர வயது பெண்மணி வந்து அமர்ந்து கையோடு அவர் கொண்டு வந்திருந்த ஒரு மூட்டை எலுமிச்சை பழத்தை அதற்கான ஊசியில் நூல் கோர்த்து கோர்க்க ஆரம்பித்தார்..
விரதத்தில் இருந்திருப்பார் போல அவர் முகம் மிகவும்...
9
அடிக்கும் காற்றில் குடை கையில் இருந்து பறந்து விடுமோ என்கிற பயத்தில் இறுக்கமாக குடையை பிடித்தபடி நடந்து கொண்டிருந்தாள் தென்றல். காற்றின் தயவால் குடை பிடித்திருந்தாலும் சாரல் அவளை முழுவதுமாய் நனைத்து விட்டிருந்தது.. ஆங்காங்கே சாலைகள் வெடித்து பள்ளமும் மேடாய் வேறு காட்சியளிக்க பள்ளத்தில் கால் வைக்கிறாளா அல்லது மேட்டில் கால் வைக்கிறாளா என்பது...
8
சிவப்பு திரவம் உள்ளே இறங்க தன் மனதிலிருக்கும் வேதனையை நண்பர்களிடம் கொட்டிக் கொண்டிருந்தான் சசி மித்ரன்.
" என்ன பண்றதுன்னு தெரியல மச்சான்.. சினிமாக்குள்ள வர வரைக்கும் என்னடா சினிமா பெரிய பொல்லாத சினிமா.. நம்ம கிட்ட தான் கதை இருக்கே. ஒரு புரொடியூசர் புடிச்சா நாளைக்கே டைரக்டர். இத்தனைக்கும் ரெண்டு ஷார்ட் பிலிம் பண்ணியாச்சு....