கடந்து செல் காதலுடன்!
கடந்து செல் காதலுடன்! 19
அன்றைய காலை பயிற்சி நேரத்தில் சம்யுக்தா அடிக்கடி சர்வாச்சார்யாவை பார்த்திருந்தாள்.
"ஹேய் என்ன?" என்று அவன் சத்தமாக அதட்டி கேட்க, சம்யுக்தா பக்கென அதிர்ந்து போனாள்.
"என்னாச்சு?" என்று மணி இருவருக்கும் இடையில் வர,
"இல். இல்லை. தப்பா பண்ணிட்டு இருந்தார் அங்கிள். அதான்" என்று சம்யுக்தா தடுமாறி சமாளித்தாள்.
"அப்படியா? எங்க மறுபடியும் பண்ணுங்க"...
சம்யுக்தாவின் பிறந்த நாள் அடுத்த வாரம்!
குருமூர்த்தி இந்த வார விடுமுறையில் மகளுக்கு உடை எடுத்துவிடலாம் என்று திட்டம் போட்டார்.
அதையே அன்று இரவு உணவின் போது, "உன் பிறந்த நாளுக்கு ட்ரெஸ் எடுக்க கோயம்பத்தூர் போலாம்" என்று மகளிடம் சொன்னார்.
கோயம்பத்தூர் என்றதும் சம்யுக்தாவிற்குள் சர்வாச்சார்யா ஓட ஆரம்பித்தான்.
'ஏன் இப்படி? நோ சம்யு' தன் அதிரும் இதயத்தை...
கடந்து செல் காதலுடன்! 18
"எப்படி இருக்கார்?" என்று சிவப்பிரகாசம் கேட்க,
"இப்போதைக்கு நல்லா இருக்கார்" என்றார் மருத்துவர்.
"ஏன் அவர் சாப்பிட மாட்டேங்கிறார்?" என்று மருத்துவர் கேட்க,
"நான் அப்பாகிட்ட பேசுறேன்" என்றார் சிவபிராகசம்.
"சாப்பிடலைன்னா கஷ்டம். பார்த்துக்கோங்க" என்று மருத்துவர் விடைபெற்று கொள்ள, வீட்டினர் ஒவ்வொருவராக சென்று பெரியவரை பார்த்து வந்தனர்.
மாளிகையிலே அவருக்கான வைத்தியம் நடைபெற, வசுந்தரா விரைவாக...
சம்யுக்தா தெளிந்த முகத்துடன் பயிற்சிக்கு வர, நம் நாயகனை மட்டும் காணவில்லை.
"கூட்டிட்டு வரட்டாண்ணா" என்று மணி கேட்க,
"டாக்டரை வர சொல்லியிருந்தேன். வந்துட்டாரா பாரு" என்றார் குருமூர்த்தி.
மருத்துவர் வந்துவிட்டார் என்று தகவல் வர, மணி அவருடன் சென்று சர்வாச்சார்யாவை பரிசோதித்து அவன் கைக்கட்டை பிரித்தனர்.
"இவ்வளவு காலையில தான் இதையெல்லாம் செய்வீங்களா?" என்று தூக்கம் கெட்ட கடுப்பில்...
கடந்து செல் காதலுடன்! 17
அன்று குருமூர்த்தி மன அமைதியுடன் படுக்கைக்கு வந்தார். நீண்ட நாட்கள் சென்று இப்படியான ஒரு அமைதி அவருக்கு கிட்டியது.
இத்தனைக்கும் அன்றைய நாள் முழுதும் கடினமாகவே இருந்தது. சண்முகம் மகனுக்காக காலையிலே ஊட்டி வந்திறங்கிவிட்டார்.
ரோஹன் இல்லையென்றதும் அவர் குருமூர்த்தியை சந்திக்க நேரம் கேட்டார். மாசிலாமணி, "அண்ணாகிட்ட கேட்டுட்டு சொல்றேன்" என்றார்.
குருமூர்த்தி இரவு...
கடுப்பாக போன் எடுத்து வீட்டு எண்ணுக்கு அழைத்தார். சம்யுக்தா தான் எடுக்க, "சாருக்கு பிரியாணி தான் வேணுமாம்" என்றார் குருமூர்த்தி.
ஆரம்பிச்சுட்டான்! சம்யுக்தா நெற்றியை நீவிவிட்டு கொண்டவள், "பாட்டி இப்போதான் தூங்க போனாங்கப்பா. வெளியே இருந்து வாங்கி கொடுக்கலாமா?" என்று கேட்டாள்.
"இல்லைமா. பாதுகாப்பு இல்லை" என்று வைத்தவர்,
"கடைசியா கேட்கிறேன். இதை சாப்பிடுவியா மாட்டியா?" என்று கேட்டார்.
முடியாது...
கடந்து செல் காதலுடன்! 16
சம்யுக்தா சொல்லிய, "நாம நல்லது செய்யலைப்பா. இது உண்மை" என்பதில் குருமூர்த்தி நிமிடம் அப்படியே நின்றார்.
அவரின் பார்வை மகளையே பார்த்திருந்ததில், "ப்பா" என்றாள் மகள்.
"நான் நல்லது செய்யலை. எனக்கு தெரியும்! அதுக்கான தண்டனையும் நான் அனுபவிச்சுட்டேன். ஆனா நீ? நீ என்னமா கெட்டது பண்ணிட்ட?" என்று அவரின் தீரா ஆதங்கத்தை...
அடுத்த நாள் சூரிய உதயம் பல திருப்பங்களுடன் தான் உதித்தது!
சர்வாச்சார்யா காலை ஐந்து மணிக்கே பயிற்சிக்கு அழைக்கப்பட்டான்.
முன்பெல்லாம் ஐந்து மணிக்கு வர வேண்டும் என்றால், தலைவர் ஆறு, ஏழு மணிக்கு தான் வருவார்.
குருமூர்த்தியும் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்.
ஆனால் இன்று மாசிலாமணி, விடாப்பிடியாக அவனை பயிற்சிக்கு அழைத்து வந்தார்.
சர்வாச்சார்யா, "நேத்து ஒன்னும் பிரச்சனை இல்லையே?"...
கடந்து செல் காதலுடன்! 15
இரவு உணவிற்காக காத்திருந்த சர்வாச்சார்யா நீண்ட நேரம் ஆகிவிட்டதால் குருமூர்த்தியை அழைத்தான்.
இவன் அழைப்பை அவர் எடுக்காமல் போக, சர்வாச்சார்யா பொறுமையாக காத்திருந்தான்.
தெரிந்தே குருமூர்த்தி அவன் அழைப்பை நிராகரிப்பார் என்று சர்வாச்சார்யா யோசித்திருக்கவில்லை.
இதுவரை குருமூர்த்தி அப்படி நடந்து கொண்டதும் இல்லை. என்ன கலவரமாக இருந்தாலும் அவனுக்கான உணவு சரியாக வந்துவிடும்.
அப்படியே அவர்...
கடந்து செல் காதலுடன்! 14
"என் ப்ரெண்ட் கோகுல்க்கு சொந்த ஊர் கோயம்பத்தூர் தான். அவன் வீட்டுக்கு நான் போகணும்" என்று கேட்டிருந்தான் சர்வாச்சார்யா.
சம்யுக்தா யோசிக்கவே இல்லை. பாய்ந்து அவனை கட்டிப்பிடித்து விட்டாள்.
உயிர் முக்கியம் அமைச்சரே!
நல்லவனை சுரங்க அறைக்குள் அடைத்து வைக்கும் போதே, அவ்வளவு பெரிய கலவரம் நடக்கிறது. இதில் இவன் ஊர் சுற்ற கேட்கிறான்!
சம்யுக்தா...
குருமூர்த்திக்கு சொல்லவும் வேண்டுமா? தன் காதில் கேட்டதை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தார்.
"நீ சொன்ன எல்லாம் உண்மையா?" மணி நடுக்கம் கண்ட குரலுடன் கேட்டார்.
நாங்க கஷ்டப்பட்டா கூட பரவாயில்லை, சம்யுக்தா நல்லா இருக்கணும் என்று அவ்வளவு பணத்தை அந்த ஹோமுக்கு கொட்டி கொடுத்திருந்தார்கள்.
ரத்தம் சொந்தம் இல்லாதவர்களிடம் சம்யுக்தாவை ஒப்படைக்க முடியாது என்று வசுந்தரா சொல்லிவிட்டார்.
சுபத்ராவின் அம்மா...
கடந்து செல் காதலுடன்! 13
குருமூர்த்தி மிகவும் கோவமாக தேடி சென்ற ஆள் அங்கில்லை.
"எங்கடா அவன்?" என்று மாசிலாமணியிடம் கேட்க,
"தெரியலைண்ணா. அவன் இந்த வீட்ல தான் தங்கியிருக்கான், இதோ பார்க்கிறேன்" என்று மணி வேகமாக ரோஹன் எங்கு இருக்கிறான் என்று விசாரிக்க, ரோஹன் தானே அங்கு வந்து சேர்ந்தான்.
காருக்குள் இருக்கும் போதே குருமூர்த்தியை பார்த்து திகைத்தவன்,...
"இங்க என்ன பதிலுக்கு பதில் போட்டியா நடக்குது? இப்படி பாய்ஞ்சுட்டு வரீங்க? எப்படியும் என்னை விட பெரியவங்களா தான் இருப்பீங்க. கொஞ்சம் மெச்சூர்டா நடந்துக்கோங்க சார்" என்று சம்யுக்தா நல்ல பிள்ளையாக இவனுக்கு கிளாஸ் எடுத்தவள் சுட ஓடிவிட்டாள்.
குருமூர்த்தி முதல் முறையாக மகளை இப்படி பார்த்ததில், முகம் முழுக்க புன்னகையுடன் நின்றிருக்க, மற்றவனோ அவளை...
கடந்து செல் காதலுடன்! 12
குருமூர்த்தி கல்லூரி சென்று வரும் மகளுக்காக காத்திருந்தார்.
"டீ எடுத்துட்டு வரவாப்பா?" என்று கற்பகம் பாட்டி கேட்க,
"என் பொண்ணு வந்ததுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்" என்றார் குருமூர்த்தி.
மாசிலாமணி தான் சம்யுக்தாவை கல்லூரியில் இருந்து அழைத்து வர சென்றிருந்தார். "என்கிட்ட எதாவது சொல்லணுமா பாப்பா?" என்று மணி கேட்க,
"ஆஹ். இல்லை. இல்லை அங்கிள்" என்ற...
"ஏய் சுபா? என்ன இது? ரிலாக்ஸ்" என்று அவரின் தோழிகள் சொல்ல,
"என்னம்மா இது? ஓவரா ரியாக்ட் பண்றீங்க? அவன் தானே மாப்பிள்ளை" என்றனர் மணமகன் நண்பர்கள்.
நண்பனின் ஆதங்கம் தெரிந்திருந்தவர்கள் ஆதரவிற்கு வர, "ஏதோ அப்செட்ல சுபா ரியாக்ட் பண்ணியிருப்பா. விடுங்க" என்றார்கள் சுபத்ராவின் தோழிகள்.
"அப்செட்ன்னா எப்படி வேணா நடந்துக்கலாமா?"
"நடந்துப்பேன்? உனக்கென்ன பிரச்சனை? உன் வேலையை...
கடந்து செல் காதலுடன்! 11
"இன்னும் கிளம்பலையா நீ?" என்று அந்த வீட்டின் தலைவர் கோதண்டம் சத்தம் போட,
"கிளம்பிட்டேன்ப்பா" என்ற சுபத்ரா சுருங்கிய முகத்துடனே கிளம்பினார்.
"அவளுக்கு விருப்பம் இல்லைன்னா விட்டுடலாமே?" என்று கோதண்டத்தின் மனைவி கேட்க,
"என்ன விருப்பம் இல்லை? அவ வயசுக்கு எல்லாம் உனக்கு இரண்டு பிள்ளைங்க பொறந்தாச்சு" என்று கோதண்டத்தின் அம்மா பாய்ந்து கொண்டு...
வசுந்தரா கண்கள் இப்போது குருமூர்த்தியை தான் சுட்டது.
"அதான் அவரே சொல்லிட்டார் இல்லை. நான் கிளம்பவா மேடம்" என்று கேட்டார் குருமூர்த்தி.
"போய் தொலை" என்று அந்த வழக்கை முடித்துவைத்தார் வசுந்தரா.
பணத்திற்காக அடிதடி செய்கிறார் என்று உறுதியாக தெரிந்தும் தண்டனை கொடுக்க முடியா கடுப்பு வசுந்தராவிடம் தென்பட்டது.
"சார். கையெழுத்து போடணும்" என்று சுபத்ரா ஓடிவர,
"கத்திரிக்கா குதிச்சு வர...
கடந்து செல் காதலுடன்! 10
சம்யுக்தாவிற்கு மனதில் எதோ உறுத்தல். இரவு தூங்க என்று அறைக்கு வந்துவிட்டாள். ஆனாலும் தூங்கத்தான் முடியவில்லை.
"கொஞ்ச நேரம் ஹால்ல இருக்கேன் பாட்டி" என்று பெண் கற்பகத்திடம் கேட்டிருக்க,
"இல்லை கண்ணு. வீட்ல நடமாட்டமே இருக்க கூடாதுன்னு அப்பா கண்டிஷனா சொல்லிட்டார். ரூம்லையும் நடமாடிட்டு இருக்காத. படுத்துக்க கண்ணு" என்றிருந்தார் கற்பகம்.
சம்யுக்தா படுத்திருக்க...
"நீங்க சொல்லலை. லிங்கம் அய்யா சொன்னார்" குருமூர்த்தி சொல்ல,
"அப்போ நீங்க அவர்கிட்ட தான் கேட்கணும்" என்றான் இவன்.
"நீங்க என்கிட்ட பேச வந்தப்போ நான் உங்ககிட்ட பேசலை. எனக்கு வேற டென்சன். இப்போ நாம பேசலாமா?" என்று குருமூர்த்தி பொறுமையுடன் கேட்டார்.
"எனக்கு இப்போ பேச மூட் இல்லையே"
"என்கிட்ட சொல்ல வேண்டாம். உங்க அம்மா, அப்பாகிட்ட பேசுறீங்களா?"...
கடந்து செல் காதலுடன்! 9
குருமூர்த்தி இன்னமும் அறைக்கு வெளியே தான் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்ட சம்யுக்தா, "பேசாத" என்று வாய் மேல் விரல் வைத்து காட்டினாள்.
"ஏன்?" என்று அவன் கேட்க,
"அப்பா" என்று வாயசைத்து, அறைக்கு வெளியே விரல் நீட்டினாள் பெண்.
"இந்த நேரத்துக்கா?" அவனுக்கு நம்பிக்கையில்லை போல.
"என்ன? ஏதும் பிளான் போடுறியா? மாட்டினா நீயும்...