நிலவும் நுரையும்
காலை இவள் வைத்திருந்த அலாரம் அடிக்கும் முன்னமே சமையலறையில் கச்சேரி சத்தம் கேட்க விழிப்பு வந்துவிட்டது சமுத்திராவுக்கு. சோம்பலுடன் புரண்டுப் படுத்தவள் மகளை நெருங்கி அணைத்துக்கொள்ளப் பார்க்க, தன் மீது பாரத்தை உணர்ந்தாள். விழிகள் பட்டென்று திறந்துகொண்டது. பாரமென உணர்ந்தது தன் கணவனின் கை என்றதும் நிமிர்ந்து பார்த்தாள் சமுத்திரா.
நிர்மலமான உறக்கத்துடன் நடுவில் இருந்த...
“வேதா பங்ஷனுக்கு டேட் பிக்ஸ் பண்ணிட்டாங்க சமு. எப்போ வந்து உன்னை கூட்டிக்க?”
அவன் கேள்வியில் அவள் முறைக்க,
“நாமதான முன்ன நின்னு செய்யணும்.” குரல் இறங்கியது.
சென்றாக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தே இருந்தாள் சமுத்திரா. பிறந்த வீட்டிற்கு வந்தும் நாட்கள் ஓடியிருக்க, இப்போது புகுந்தகம் சென்றே ஆகவேண்டும். விசேஷத்தில் முன்னே நிற்கவில்லை என்றால் தேவையின்றிய பேச்சுக்கள் வரும்....
*18*
“எங்க கிளம்பிட்ட?” காலையே வெளியே செல்வது போல் தயாராகி நின்ற பத்மாவை பார்த்துக் கேட்டார் கந்தவேல்.
“என்ன கேள்வி இது? நம்ம பேத்தி பெரியவளாகிட்டா போய் பாக்க வேணாமா. செழியனும் மகிழும் ஒன்னும் சொல்லல அதுக்காக மூணாவது மனுஷங்க மாதிரி அவங்க விஷேஷம் வைக்குற அன்னைக்கு போய் நிக்க முடியுமா?” அங்கலாய்ப்பாக அவர் கேட்க, கந்தவேலின்...
*17*
மனைவி மகளுடன் நேரம் செலவழித்துவிட்டு வீடு வந்தவனை வரவேற்பாக பார்த்தனர் நன்மதி வீட்டினர். அவர்கள் அருகில் இருந்த பைகளே தீபாவளிச் சீர் செய்ய வந்திருக்கின்றனர் என்று காட்டிக்கொடுத்தது. அறிமுகப் புன்னகை சிந்தி வரவேற்றவனிடம்,
“சமுத்திராவும் உமையாளும் ஊருக்கு போயிருக்காங்கனு அண்ணி சொன்னாங்க. எப்படி இருக்காங்க தம்பி?” என்று விசாரிக்க, ஒருநொடி தயக்கம் வந்துபோனது மகிழ்நனுக்கு. இங்கு...
“உன்னை தேடி உடனே வராம இருந்ததுகூட உன்னை மேல மேல நோகடிக்க வேண்டாம்ங்குறது ஒரு காரணம். இன்னொன்னு நீ சொன்னதெல்லாம் எனக்கு புரிஞ்சுக்கவே நேரம் தேவைப்பட்டுச்சு.” என்று அவன் பேச, அவள் வேறு பேசினாள்.
“வீட்ல இருக்குறவங்களை விட்டுட்டு எனக்கு மட்டும் தனியா செய்யுணும்னு இல்லை. பொதுவா ரெண்டு முறை எல்லாரோடையும் போறோமா ஒரே ஒரு...
*16*
மகிழ்நன் புரியாமல் விழிக்க, கலைவாணி பழத்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார். மனைவியை குழப்பமாய் பார்த்து அவளிடம் என்னவோ கேட்கப்போனவனை மகள் இடையிட்டு தடுத்தாள். அவன் முகத்தினில் தட்டி அவன் கன்னங்களை தன் பிஞ்சு விரல்களால் ஏந்திக்கொண்டு அப்பா அப்பா என்று அரற்ற, பெற்றவனுக்கு சகலமும் மகள் ஆனாள். வெளியே கை காட்டி அவள் என்னவோ...
பிடித்த உணவுகள் வழமையில் இடம்பெறுவது எதர்ச்சையாக வந்ததில்லை, கவனம் எடுத்து தனக்காக மனைவி செய்திருக்கிறாள். அதுவும் பத்மாவின் உணவு கோரிக்கைளை கருத்தில் கொண்டு மற்றவர்களின் பிடித்ததையும் கணக்கில் எடுத்து அவர்கள் விடுபடாமல் இருப்பது போல் சமாளித்து வந்திருக்கிறாள். தலை சுற்றியது. உலுக்கிக்கொண்டான். சண்டை முடிவது போல் தெரியவில்லை, குரல் உயர்த்திவிட்டான்.
“எனக்கு புடிச்சதை சாப்புடுற நிலைமைலயா...
*15*
நன்மதி வந்து பேசிவிட்டு சென்ற இரவு மகிழ்நன் மனைவியை அலைபேசியில் அழைத்தான். முன்பு போலவே அழைப்புகளில் இவன் பேச்சுக்கள் அதிகமிருந்தாலும் பதில்கள் என்று வரும்போது ஒருவித குழைவோடு வரும் சமுத்திராவின் குரல், அதில் பெரிய மாற்றத்தை கண்டான் மகிழ்நன். எப்பொழுதும் மனைவியின் குரலில் இருக்கும் இணக்கம் இப்போதில்லை, கேட்டால் கேட்டதற்கு பதில் என விலக்கி...
யோசனையுடன் வரவேற்ற கலைவாணி மகளை கூப்பிட, என்னவோ என்று வந்த சமுத்திராவும் அங்கு நன்மதியை சுத்தமாய் எதிர்பார்க்கவிலை. அவளைத் தொடர்ந்து ஓடி வந்த உமையாள் நன்மதியை பார்த்து அறிமுகச் சிரிப்பு சிரித்தாள்.
“சும்மா உன்னை பாத்துட்டு போலாம்னு வந்தேன் சமு.” சங்கடமாய் நன்மதி சொல்ல, புரியாமல் நின்றாள் சமுத்திரா.
கலைவாணி மரியாதைக்கு காபி போட்டு கொடுக்க, “உன்கிட்ட...
*14*
திடுமென தனித்து வந்து நிற்கும் மகளைப் பார்த்து அதிர்ந்துவிட்டார் கலைவாணி.
“என்னடி ஆச்சு? தனியாவா வந்த? மாப்பிள்ளை எங்க? ஏன் முகம் ஒருமாதிரி இருக்கு?” அரக்க பரக்க வாசலை எட்டிப்பார்த்து பேத்தியை வாங்கிக்கொண்டார்.
அத்தனை நேரம் இறுக்கமாக இருந்த உடல் தளர்ந்துவிட்டது. மகளை பாதுகாப்பாக கொடுத்துவிட்டு அங்கேயே ஒரு ஓரமாய் அமர்ந்துவிட்டாள் சமுத்திரா.
“என்னமா ஆச்சு?” அந்நேரம் வீட்டிலிருந்த...
*13*
விரல்கள் நடுங்க உள்ளங்கைக்குள் அதனை மடக்கி, அடக்க முயன்றுகொண்டிருந்தாள் சமுத்திரா. உள்ளம் உதறல் எடுத்தது. என்ன பேசினோம் எப்படி பேசினோம் என்று மனதிற்குள் ஓட்டிப்பார்த்தவளுக்கு தானா இப்படி பேசியது என்றெண்ணம் அச்சமும் ஆச்சர்யமும் கொடுத்தது. அதோடு அத்தனை வருத்தம், இப்படி பேசும்படி ஆகிவிட்டதே. பேச வைத்துவிட்டார்களே. சச்சரவுகளின்றிய ஒரு வாழ்வை வேண்டியவளே சர்ச்சையாக மாற...
“டேய் அமைதியா இரு.” செழியன் தம்பியின் தோளை பிடித்து அழுத்த, அதை உதறித் தள்ளியவன், மனைவியை உறுத்து விழித்தான்.
“எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கேனு புரியல. எதுக்கா இருந்தாலும் இதோட நிறுத்திக்கோ.” எச்சரிப்பது போல் சொல்ல, மூக்கு விடைக்க கண்கள் கலங்க நின்றாள் சமுத்திரா.
“டேய் எதுக்கு இப்போ கத்திட்டு இருக்க? சின்னப் புள்ளைங்க காரணமே இல்லாம...
*12*
அந்த வாரத்தில் தொடர்ந்து வந்த நாட்களும் சமுத்திரா நேரத்திற்கு எழாமல் போக மகனை பிடித்துவிட்டார் பத்மா.
“என்னடா பிரச்சனை சமுவுக்கு? உன் அண்ணிதான் குடும்பத்தோட ஒத்துப்போகாம அவ ஒருபக்கம் இருக்கான்னா ஒழுங்கா இருந்த சமுவும் இப்போ ஒன்னும் சரியில்லை. காலையில நீங்க கிளம்புனதும் சாப்பிட்டு கோவிலுக்குனு அவளும் கிளம்பிடுறா. கூட வரேன்னு சொல்ற என்னையும் ஏதாச்சு...
கதவை லேசாக சாற்றிவிட்டு பின்னோடே வந்த பத்மா, “தனியா எப்படி போவ? சாயந்திரம் மகிழ் வந்ததும் சேர்ந்து போங்க.”
காதில் வாங்கினாலும் வாங்காதது போல் உள்நுழைந்துகொண்டவள் வேகமாக உடைமாற்றி உமையாளையும் தயார் செய்து அவளுக்கு மாற்றுடை ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.
“இப்போவே போகணும்னு என்ன அவசரம் சமு? அவ அழுவுறா பாரு.” என்று பேத்தியை தூக்க வந்தவரிடம்,
“வெளில...
*11*
“உடம்பு முடியலையா சமு?”
சமுத்திரா பழக்கி வைத்திருந்த பழக்கம் அப்படி கேட்க வைத்தது. உடல் உபாதை என்றால் மட்டுமே சமுத்திரா வேலை செய்ய இயலாது ஓய்வெடுப்பாள் என்பதால் அவள் உடல்நிலையை பற்றி கேட்டுக்கொண்டே பின்தொடர்ந்த பத்மாவிற்கு பதில் சொல்ல விழையாதவள் மகளுக்கு கஞ்சி காய்ச்சும் வேலையில் இறங்க, அவளை பார்த்துக்கொண்டே இன்னொரு அடுப்பில் இட்லி ஊற்ற...
என்ன பேச்சு பேசிவிட்டாள்? மகிழ்நனின் காதுகள் சிவந்தது. தாடை இறுக, கைமுஷ்டிகளை மடக்கியவன், கண்கள் மூடி வேக மூச்சுக்கள் எடுத்து தன்னை நிதானப்படுத்திக்கொள்ளப் பார்த்தான். வெளிவர சில நிமிடங்கள் தேவைப்பட்டது அவனுக்கு. ஆனாலும் அவள் வார்த்தை கொடுத்த குற்றச்சாட்டு அவனைப் போட்டு அழுத்த,
“இவ்ளோதான் நீ என்னை புரிஞ்சி வச்சிருக்கியா? என்னை பார்த்தா அப்படியாடி தெரியுது...
*10*
மாலை கணவன் வரும் நேரம் கூடத்தில் அமர்ந்து மகளுக்கென பிரத்தியேகமாக வாங்கியிருந்த புத்தகங்களைப் பரப்பி வைத்து அதிலிருந்த படங்களை உமையாளுக்கு காட்டி கதை சொல்லிக்கொண்டிருந்தாள் சமுத்திரா. சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருந்த உமையாளும் ஈடுபாட்டுடன் பதில் சொல்லிக்கொண்டிருக்க, உள்ளே தந்தை நுழையவும் புத்தகத்தோடு அவனிடம் ஓடிச் சென்றாள்.
புத்தகத்தில் இருந்ததை சுட்டிக்காட்டி சமுத்திரா சொல்லிக்கொடுத்ததை அவனுக்கு சொல்லிக்கொடுத்தாள்.
“அவனை உக்காரவிடேன்...
அன்று தீபாவளி சீர் செய்ய வந்திருந்தனர் கலைவாணியும் அய்யாவுவும். மாலை மகிழ்நன் வீட்டிற்கு வரும் நேரம் கணக்கிட்டு வந்துவிட, ஒரு மாதம் கழித்து பெற்றோரை பார்த்த மகிழ்வில் பம்பரமாய் சுழன்றாள் சமுத்திரா. காபி, தீனி கொடுத்து உபசரித்து மகளும் பெற்றோரும் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருந்தவளை,
“நேரமே நைட் சாப்பாடு ரெடி பண்ணிட்டா அப்பாவும் அம்மாவும் சாப்பிட்டு போவாங்க...
*9*
இரவு பிரித்து வைத்திருந்த காய்கறிகளை அலசி எடுத்து மதியத்திற்காக மளமளவென நறுக்க ஆரம்பித்தாள் சமுத்திரா.
வாசல் தெளித்து வந்த பத்மா, “நைட்டே சொல்ல மறந்துட்டேன். புலியை கொஞ்சம் கூட ஊற போடு. வத்த குழம்பும் வடை பாயசமும் சேர்த்து செஞ்சிடலாம்.”
“யாரும் வராங்களா அத்தை?” விஷேஷ நாட்களில், கல்யாணி வரும் சமயங்களில் மட்டுமே இதுபோன்று உணவுப் பட்டியல்...
“இன்னும் தூங்கலையா நீ?” என்ற மகிழ்நனை சங்கடமாகப் பார்த்த செழியன்,
“டிஸ்டர்ப் பண்ணிட்டேனாடா?”
“எதுவும் பிராப்லமா செழியா? இந்த நேரம் வந்திருக்க?” அக்கறையாக கேட்ட மகிழ்நன் கூடத்தில் நிலவும் இருளுக்கு தன் கண்களை பழக்கினான்.
“பேங்க் போயிருந்தேன், இதை வச்சிக்கோ.” பணத்தை மகிழ்நன் கையில் கொடுக்க, குழப்பமாக பார்த்த மகிழ்நன் தெளிந்து அதனை மீண்டும் அண்ணன் கையிலேயே திணிக்கப்பார்த்தான்.
“உனக்கே...