Wednesday, November 11, 2026

    நிலவும் நுரையும்

    *8* உன்னை நம்பினேன் என்று இருவரும் மாறி மாறி சாடிக்கொண்ட பின் முகம் பார்க்கவே அத்தனை சங்கடம் சமுத்திராவுக்கு. தன்னை இப்படி சொல்லிவிட்டான் என்ற ஆதங்கம் பின்சென்று தான் அவனை பேசிவிட்டோமே என்று சஞ்சலம் கொண்டாள்.  காலை எழுந்து எப்போதும் போல் வேலையில் இறங்கிவிட்டவள் அவ்வப்போது தங்கள் அறையை பார்த்துக்கொண்டாள். மகிழ்நன் இன்னும் எழுந்து வரவில்லை. இரவு...
    சாலையில் நிற்கும் அவன் வண்டியை ஆச்சர்யமாக பார்க்க,  “நம்ம வீட்டுக்கு போலாமா தங்கம்? தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா எல்லாரும் பாப்பா எப்போ வருவான்னு பாத்துட்டு இருக்காங்க.” பேச்சு கொடுத்தபடி வண்டியின் முன்னே அவளை அமரவைத்து வண்டியை உயிர்பித்தவன் அதனை உருமவிட, திடுக்கிட்டு அவன் பின் ஏறிக்கொண்டாள் சமுத்திரா. என்னவோ சரியில்லை என்று உள்மனம் கூற,...
    *7* இட்லி தோசை வைத்தால்தானே அடிக்கடி வீட்டில் மாவு அரைக்க வேண்டியிருக்கிறது என சிற்றுண்டியை மாற்றிவிட்டாள் நன்மதி. வாரயிறுதியில் கிரைண்டர் போட்டு மாவு ஆட்டி வைப்பவள் வாரத்தின் முதல் பாதிக்கு அதை பயன்படுத்திவிட்டு மீதி நாட்களில் காலைக்கும் மதியத்திற்கு சேர்த்து சாதம், குழம்பு வைக்க ஆரம்பித்துவிட்டாள். “இதென்ன மதியத்துக்கு சமைச்சதே இப்போவும் இருக்கு?” என கந்தவேல் பார்க்க, “எங்களால...
    இரண்டு மூன்று நாட்கள் சென்றதும் வீட்டு ஆண்களின் நாக்குக்கு ருசி தேவைப்பட்டது.  “இன்னொரு சட்னியாச்சு அரைக்கலாம்ல? உப்புமாதான் வச்ச, சரின்னு சாப்பிட்டா அதுக்கு சட்னி கூட தனியா இல்லை.” கந்தவேல் மனைவியிடம் கேட்க, “உப்புமா வேண்டாம் ம்மா, உப்பு கம்மியா இருக்கு.” என்றான் மகிழ்நன். இளையவனுக்கு தோசை ஊற்றுகிறேன் என்று சென்றார் பத்மா. ஏதோ சொல்ல வாய் திறந்த...
    *6* “உன் வீட்டுக்காரர் வந்து கூட்டிட்டு போற வரைக்கும் இங்கேயே இரு. கொஞ்சமாச்சும் அந்த மனுஷனுக்கு தன் குடும்பங்குற எண்ணம் வரட்டும்.  தூரமாவா இருக்கோம் பக்கம்தான, வரட்டும்.” மகளை அமர வைத்து காலையிலேயே வீட்டுப்பாடத்தை துவங்கிவிட்டார் கலைவாணி. கணவனை அம்மா தவறாக சித்தரிப்பதில் சுத்தமாய் உடன்பாடில்லை சமுத்திராவுக்கு. பரிதவிப்பாக அம்மாவைப் பார்த்தாள். “நீ இப்படி பாக்குறதாலதான் சுலபமா நினைச்சுக்கிறாங்க...
    உடை மாற்றி வந்த நன்மதி சமையலறையைப் பார்க்க, பத்மா தோசை ஊற்றிக் கொண்டிருந்தார். “வந்துட்டியா, சமுத்திரா ஊருக்கு போயிருக்கா. ஒருவாரம் நீதான் சமைக்கணும் பாத்துக்கோ.” படபடவென பொரிந்தார்.  கண்களைச் சுருக்கிய நன்மதி எதுவும் சொல்லவில்லை.  “தோசை ஊத்தியிருக்கேன். எல்லாருக்கும் எடுத்து வச்சிடு.” என அடுப்பை அணைத்தவர், “ஹப்பப்பா என்ன வேர்வை. வயசு ஏற ஏற கொஞ்சம் வேர்த்துவிட்டாலே படபடன்னு...
    *5* சமைத்து முடித்துவிட்டு ஏதோவொரு சிந்தையில் கொல்லைப்புறத்திலே அமர்ந்துவிட்டவளை உசுப்பியது அவள் அலைபேசி அழைப்பு. “உன் போன்தான் அடிக்குது சமு. என்ன யோசனையில இருக்க நீ? கூப்பிட்டுட்டே இருக்கேன்.” என்று அவள் அலைபேசியை வந்துக்கொடுத்தான் கணவன். “ப்ச்…” நெற்றியில் அடித்துக்கொண்டவள், “சாரிங்க கவனிக்கல.” பரபரப்பாக அலைபேசியை வாங்கிப் பார்த்தவள், “அம்மாதான் கூப்பிடுறாங்க. அப்புறம் பேசிக்குறேன்.” என்றபடியே அவனை கவனித்தவள்,...
    பக்கத்து அறையில் உறக்கம் தொலைத்திருந்தான் மகிழ்நன். மனைவி இப்போது வருவாள் அப்போது வருவாள் என எதிர்பார்த்து காத்திருந்தவனை அதிகம் யோசிக்கவிடவில்லை உமையாள். அவனுடன் விளையாடுவதில் ஆர்வம் காட்டினாள். “அம்மா வர்றதுக்குள்ள தூங்கு செல்லம்.” என சொல்லிப் பார்த்தான். அவளுக்கு என்ன புரியப்போகிறது? எப்போதும் தாயின் அரவணைப்பில் உறங்குபவள் இன்றும் அவள் வரவிற்கு காத்திருந்தாள். உமையாளுக்கு என்னவோ...
    *4* “இந்த ஆரமும் நெக்லெஸும் செட்டா கிடைக்கும்னு நினைக்கவே இல்லை. இந்த பூ டிசைன் அழகா வந்துருக்கு.” வீட்டிற்கு வந்ததும் வாங்கியதை பிரித்துப் பார்த்து சொல்லிக்கொண்டிருந்தாள் கல்யாணி. கடையில் அம்மாவும் பிள்ளைகளும் தேர்ந்தெடுக்க, இறுதிவரை அவர்கள் தெரிவில் தலையிடவில்லை அவள். செழியன் சார்பாய் ஒரு ஆரமும் அதற்கு தோதாக அமைந்துவிட்ட நெக்லெஸ் மகிழ்நன் கணக்கிலும் வந்தது. இரண்டும்...
    “சின்ன க்ளாஸ்கு இல்லை டென்த் பசங்களுக்கு அவ க்ளாஸ் எடுக்குறா அக்கா. அதோட நீட் கோச்சிங் அவங்க ஸ்கூல்ல ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க, அந்த டீம்ல மதியும் ஒருத்தி. அதுக்கான ஒர்க் லோட் இருக்கும்ல.” “அப்போ நீ சீக்கிரம் வந்துட்டு அவளை பஸ்ல வர சொல்லாம்ல. அவ க்ளாஸ் எடுக்குறான்னு நீயும் ஏன்டா அங்க உக்காந்து காயுற?”...
    *3* பரபரவென அன்றைக்கான சமையலில் ஈடுபட்டிருந்தவள் முன் நீண்டது அக்கரம். யோசனையுடன் அவள் பார்வையை அப்பக்கம் திருப்ப, “மகிழ் நேத்தி வாங்கிட்டு வந்தான். எல்லாருக்கும் மதியம் வச்சிடு.” என்று மிக்சர் பாக்கெட்டை நீட்டினார் பத்மா. இதை எப்போ வாங்கிட்டு வந்தாங்க, எங்க இருந்துச்சு இவ்வளவு நேரம் என்ற யோசனையுடன் வாங்கி வைத்தவள் மதியம் உணவு கட்டுகையில் அனைவரும்...
    “உங்களுக்கு கல்யாணமாகி அஞ்சு வருஷமாகிடுச்சுடா. இன்னும் அண்ணிக்கு நீ வண்டி கூட ஓட்ட சொல்லித்தரல.” என அண்ணனின் வயிற்றி லேசாக குற்ற, “நீ மட்டும் சமுத்திராவுக்கு சொல்லிக் கொடுத்தியாடா?” என கேட்டபடி தம்பியை தடுத்தான் செழியன்.  “அதான் டிரைவரா நான் இருக்கேனே. அப்புறம் அவ வேற தனியா கத்துக்கணுமா? அண்ணி மாதிரி அவ தினம் வெளில போயிட்டா...
    “ஆசை ஆசையா வளத்துக் கட்டிக்கொடுத்த என் பொண்ணை ராணி மாதிரி நடத்தலைனாலும் போகட்டும்னு விடலாம், வேலைக்காரி மாதிரில்ல அந்த வீட்ல கிடந்து அல்லாடுறா. அதை சரிபண்ண துப்பில்லாம நாதியத்து நிக்குறேனே நானு. மூணு வேலை நெய்யும் பாலும் கொடுத்து வளத்தேன். கலகலன்னு இருக்குற பொண்ணு இன்னைக்கு குரல்ல சுரத்தே இல்லை. பேசிட்டு இருக்குறப்போவே தூங்கிட்டா....
    “சமையல் முடிஞ்சிருச்சுல? நான் எக் பாயில் பண்ணிக்குறேன்.” என்று அவள் பாட்டிற்கு ஒரு அடுப்பை பிடித்துக்கொள்ள, உடனே வெளியேறிவிட்டாள் சமுத்திரா. முட்டையின் வாசம் அவளுக்கு சுத்தமாய் ஆகாது. அவளுக்கு மட்டுமல்ல, அவ்வீட்டில் யாருக்கும் ஆகாது. குடும்பமே சைவம், நன்மதி மட்டுமே முட்டை எடுத்துக்கொள்வாள்.  “என்ன முட்டை அவிக்குறாளா? இவளை என்னனு சொல்றது? சொன்னாலும் கேக்குறளா? அவ...
    *1* பார்வை சென்று சேரும் இடமெல்லாம் இளம்பச்சையும் அடர்பச்சையும் இடையிடையே மலர்ந்து குலுங்கும் மலர்களுமாய் விரிந்திருந்த அவ்விடம் கண்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது போலிருந்தது. பஞ்சென மேனி தீண்டிய பொடி மழைத்தூறல்கள் அவ்விடத்திற்கு இன்னும் குளுமை சேர்த்து மனதை குளிர வைத்தது. ஆரவாரமின்றி மென்மையாக வீசும் தென்றல் தேகம் உரசிச் செல்ல, கைகளை பரபரவெனத் தேய்த்து சூடேற்றி...
    error: Content is protected !!