(நிய) மனம்
அத்தியாயம் - 18
அந்த அறையில் இருந்த நால்வர் மீது உமாவின் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது. திடீரென்று, அவர்களுடைய பெற்றோரும் அவளும் அவளுடைய அக்காவின் வாழ்க்கையிலிருந்து மறைந்தவுடன், அவள் எப்படி அந்த நாள்களைக் கடத்தியிருக்கக்கூடும் என்ற ப்ரீத்தியின் அன்றைய கேள்விக்கு, இன்று, உமாவின் வாயிலாக, பயத்தில் கடத்தியிருக்கிறாளென்ற பதில் கிடைத்தது.
அவளுக்கு எதுவுமே...
அத்தியாயம்-17-1
எந்த வித குறையும் இல்லாமல், எல்லா விதத்திலும் மிகச் சிறப்பாக நடைபெற்றது உமேஷ், உமாவின் திருமணம். சிவரஞ்சனி, சுந்தரேசனின் பெரிய புகைப்படத்தை மணமேடைக்கு பின்னால் வைத்து, பாரம்பர்யத்தை உடைத்து, அவனுடைய மனம் கவர்ந்த கன்னியை யாரிடமிருந்தும் தானமாகப் பெறாமல், அவனருகில் அமர்த்தி, உமாவின் பார்வதியின் கழுத்தில், மீனாக்ஷி, சுந்தரேஸ்வரர் பொறித்திருந்த திருமாங்கல்யத்தை அணிவித்து அவளுடையவனான்...
அத்தியாயம் - 17
அடுத்த நாள் மாலையில், மதுரை வீட்டின் வரவேற்பறையில் கூடியிருந்தனர் பசுபதி குடும்பத்தினர். நேற்றிலிருந்து அழுது அழுது, மீனாவின் முகம் வீங்கி இருந்தது. நேற்று மதியம் போல், ஜெயந்தி சென்ற பின், படுக்கையறைக்குள் நுழைந்தவர் ஒரு நாளாகியும் வெளியே வரவில்லை. உமேஷும் பார்வதியும் சென்னையிலிருந்து வந்த பின் தான் அவருடைய அறையிலிருந்து வெளியே...
அத்தியாயம் - 16
அவள் சொன்னதைத் திரித்துச் சொன்னவுடன், படபடப்புடன்,”ஐயோ பாட்டி..இவங்க தான் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க.” என்று உண்மையை உடைத்தாள் உமா.
பேரன் மீது கண்டனப் பார்வை வீசிய பார்வதி, உமாவிடம்,”நீ அப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும்..இதெல்லாம் இவனோட வேலைன்னும் எனக்குத் தெரியும்.” என்றார்.
உடனே, தோரணையாக, கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு, கால்கள்...
அத்தியாயம்-15-1
அதைக் கேட்டு, அப்போ எப்படி நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தாங்க? என்ற கேள்வியும் அதைவிட முக்கியமாக, இவ ஏன் உமேஷை அண்ணானு கூப்பிடறா? என்ற கேள்வி எழுந்தது உமாவிற்கு.
அதே நேரத்தில், ப்ரீத்தியின் அண்ணன், அவனுடைய அப்பா நாகேஸ்வரனுடன் பேசிக் கொண்டிருந்தான். உமா வீட்டில் பார்வதியும் ப்ரீத்தியும் தங்கியிருப்பதைத் தெரிவித்து விட்டு, அடுத்த நாள் காலை...
அத்தியாயம் - 15
“நீயும் உமான்னே கூப்பிடு..சின்ன வயசுலே அப்படி தானே கூப்பிட்டிருக்க..அதனால் தான் பாட்டி வாயை மூடிட்டு இருந்திருக்காங்க.” என்று அப்போதைக்கு அந்த விவாததிற்கு முடிவு கட்டினான் உமேஷ்.
காரினுள்ளே அமர்ந்தபடி, உமாவின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த உமேஷ், நடு நடுவே, ப்ரீத்தியிடம், “இன்னைக்கு ஆஃப் டேன்னு சொன்னாளா? இல்லை வேலை இருக்குன்னு சொன்னாளா?”...
அத்தியாயம் - 14
சுந்தரி பாட்டிக்கும் உமேஷிற்கும் இடையே இருந்த நெருக்கத்தை மனத்தில் வைத்துக் கொண்டு தான், அவரின் இப்போதைய மனநிலையை அவனுடன் பகிர்ந்து கொண்டாள் உமா. அவளின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாவிட்டாலும், கண்டிப்பாக, அவனால் முடிந்ததைப் பாட்டிக்காக செய்வான் என்று திண்ணமாக நம்பினாள். அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை என்பதை கவிதாவின் ஸ்டேட்டஸ்ஸைப் பார்த்துத் தெரிந்து...
அத்தியாயம் - 13
உமாவின் குரலில் நடுக்கமும் கலக்கமும் இருந்தது. சுந்தரி பாட்டியைச் சந்தித்த பின் ஏற்பட்ட பயத்தினால், வீட்டிற்குத் திரும்பியவுடனேயே உமேஷை அழைத்து விட்டாள். அவனிடம் உதவி கேட்ட பின் தான் அதிலிருந்த சிக்கல்களை உணர்ந்தாள். அதனால், உமேஷ் பதில் சொல்லுமுன்,
”பாட்டி எந்தத் தப்பும் செய்யலை..பணம் இல்லாம என்னை எப்படிச் சித்தி வீட்லே வளர்த்திருக்க...
அத்தியாயம் - 12
ஆரவாரமில்லாமல் அமைதியாகப் புயல் அடித்துக் கொண்டிருந்தது. அதற்கு முதலில் பலியானது சுந்தரி பாட்டி தான். அதன் விளைவாக, பல வருடங்கள் மௌனத்திற்கு பிறகு, தன்னுடைய மூத்த மகன், மருமகள், ப்ரீத்தி மூவரைப் பற்றியும் திடீர் திடீரென்று ஏதாவதுயொரு நிகழ்வை நினைவுப்படுத்தி, அதை நிகழ்விற்கு அழைத்து வந்தார். அதற்குப் பின்னால் இருப்பது ப்ரீத்தியின்...
அத்தியாயம் - 11
வெகு திருப்தியாக சாப்பிட்ட பின் அந்தக் காரக் குழம்பை ஒரு டிஃபன் பாக்ஸில் பேக் செய்யச் சொன்னான் உமேஷ். சாதாரணச் சுவையுடன் இருந்த குழம்பை ‘ஓஹோ’ என்று உமேஷ் புகழ்ந்தவுடன் குழம்பிப் போனாள் உமா பார்வதி. ‘நிஜமாவே சுவையா இருந்திச்சா..நமக்குத் தான் தெரியலையா?’என்று ஒரு சொட்டு குழம்பை உள்ளங்கையில் விட்டு, நாவால்...
அத்தியாயம் - 10
உமா பார்வதியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல்,”பாட்டி எப்படி இருக்காங்க? எதுவும் பிரச்சனை இல்லையே?” என்று விசாரித்தான் உமேஷ்.
”இல்லை..நல்லா இருக்காங்க..தூங்கிட்டு இருக்காங்க.” என்றாள்.
“ராம் அங்கிள்?”
“நாளைக்குக் காலைலே சீக்கிரமாப் புறப்படணும்னு பாட்டிக்கு முன்னாடியே தூங்கப் போயிட்டாங்க.”
“நீ இன்னும் தூங்கலையா..வேலை பார்த்திட்டு இருக்கேயா? என்று பேச்சை அவள் புறம் சாமார்த்தியமாகத் திருப்பி, அடுத்த சில நிமிடங்களில்,...
அத்தியாயம் - 9
அன்று காலை பத்து மணி போல் சுந்தரி பாட்டிக்கு டிஸ்சார்ஜ் என்று தெரிந்தவுடன், எட்டு மணிக்கு அலுவலகம் சென்று, சிறிது நேரம் வேலை பார்த்து விட்டு, பத்து மணியாக சில நிமிடங்கள் இருக்கும் போது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் உமேஷ். இந்த மருத்துவமனைக்குப் பலமுறை வந்திருக்கிறான். அதனால், அவர்கள் வேலை செய்யும்...
அத்தியாயம் - 8
“மத்தியானம் நேரத்திலே ஃபிளைட் கிடையாதே டா..சாயந்திரம் தானே.” என்றார் ஏகாம்பரம்.
அவர் சொன்னது சரிதான். மாலை நேர ஃபிளைட்டிற்குத் தான் டிக்கெட் போடயிருந்தான். அப்போது, அதற்கு முன்னால் மதிய நேரத்தில் டிக்கெட் இருப்பது போல் தகவல் வர, அதைச் சரி பார்த்து, டிக்கெட் புக் செய்து விட்டான்.“இன்னைக்கு இருக்கு..அதிலே நாலு டிக்கெட்டு கிடைச்சிடுச்சு..தயாராகுங்க.”...
அத்தியாயம் - 7
ராம நாதனின் முடிவிற்குப் பின்னால் இருந்த காரணத்தைக் கேட்டு ஊமையாகிப் போனார் நாகேஸ்வரன். நேற்று மாலை, இவரையா இரக்கமில்லாதவர் என்று வாய்க்கு வந்தபடி பேசினோமென்று வேதனைபட்டுக் கொண்டிருந்தான் உமேஷ். அவளுடைய முழுப் பெயரை அறிந்த பின், கடந்த சில நிமிடங்களாக, ஏன்? எப்படி? யார்? என்று அவனுள் எழுந்த கேள்விகளுக்கு, எதிர்பாராமல்...
அத்தியாயம் - 6
சுந்தரியின் வேண்டுகோளைக் கேட்டு பார்வதியின் உள்ளம் அதிர்ந்து போகாமல் உடைந்து போனது. அவர் கேட்பதை நிறைவேற்ற முடியாத நிலையில் அவர் இருக்கிறார். இன்றைக்கும் அவருடைய கணவரின் கட்டுப்பாட்டில், கணவரின் எண்ணங்களைச் செயல்படுத்தும் கருவியாக தான் வாழ்ந்து வருகிறார். அதனால் எந்த வாக்குறுதியும் கொடுக்கமுடியாமல், இயலாமையில், அமைதியாக அழுது கொண்டிருந்தார். அதை உணரும்...
அத்தியாயம் - 5
தன்னுடைய கையை உமா பற்றிக் கொண்டவுடன் அவர் என்ன உணர்ந்தார் என்று பார்வதி உணரும் முன் மின்தூக்கியின் கதவு திறக்க, முதலில் உள்ளே நுழைந்த நாகேஸ்வரன், “உள்ளே வாங்க ம்மா.” என்று அவருடைய கையை நீட்ட, உமாவிடமிருந்து கையை விடுவித்துக் கொண்டு மகனின் கையைப் பற்றிக் கொண்டு உள்ளே சென்றார் பார்வதி....
அத்தியாயம் - 4
அந்த வீட்டில் சிவரஞ்சனியைப் பற்றிய பேச்சு நின்று போய் பல வருடங்களாகி விட்டது. ப்ரீத்தியிடம் கூட அவளுடைய அம்மாவைப் பற்றி யாரும் பேசியதில்லை. அவளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்த பின், அவளுடைய அம்மா, அப்பா இருவரும் ஒரு விபத்தில் இறந்து போய் விட்டார்கள் என்ற தகவலை அவளுக்குத் தெரியப்படுத்தியது நாகேஸ்வரன் தான்....
அத்தியாயம் - 3
அவனுடைய கைப்பேசியைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனது தீவிரமாக உமா என்ற பெயரையும் அந்தப் பெயர் கொண்ட பெண்ணையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது. அவனுடைய பாட்டி அவனுக்கு வைக்க விரும்பிய பெயர் உமா மகேஸ்வரன். அவன் அம்மாவிற்கு அது கொஞ்சமும் பிடிக்காததால் அதை மகேஷ் என்று மாற்றினார். மகேஷ் என்ற பெயரில்...
அத்தியாயம் - 2-1
அவர்கள் சொந்தத்தில் ஒரு திருமணம். அதில் பங்கேற்க மதுரையிலிருந்து சென்னை வந்திருந்தனர். ப்ரீத்தியை ஜெயந்தியின் வீட்டில் விட்டிருந்தனர். அவளையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கலாம். அவளுக்கு இந்த விஷயம் இப்போது தெரிய வேண்டாமென்று வீட்டுப் பெரியவர்கள் முடிவு செய்ததால், அவளை அழைத்து வரவில்லை. உமேஷிற்கும் இந்த விஷயமெல்லாம் தெரியாது. சம்மந்தி வீட்டில் இந்தப்...
அத்தியாயம் - 2
யாருக்கு இரக்கமில்லாமல் போனது என்ற உண்மை தெரிய வந்துவிடுமோ என்ற பயத்தில் தான் உமேஷை அதட்டி, அவனைப் பேசவிடாமல் செய்தார் நாகேஸ்வரன்.
உமேஷ் கத்தியதைக் கேட்டு சமையலறையில் இருந்த உமாவினுள் நடுக்கம் ஏற்பட்டது. படுக்கையறையிலிருந்த இந்துமதிக்கு ஆத்திரம் வந்தது. கண்மூடி படுத்திருந்த அவருடைய மாமியாரின் முகத்திலிருந்து அவர் என்ன உணருகிறாரென்று இந்துமதியால் கண்டுபிடிக்க...