அறியாமல் தொலைந்தேனே
“ஜெனரலா நைட்ல அதிகமா சாப்பிட மாட்டேன். நீ என் ரூல்ஸ் எல்லாம் பிரேக் பண்ற பிளான்ல இருக்கியா?” என குற்றம் சுமத்தினான்.
“நல்லாருக்கா சஞ்சய், இப்படி நல்லா வரும்னு நானே நினைக்கல” என்றாள்.
“செம செம!” என பாராட்டிக் கொண்டே சாப்பிட்டான்.
அளவாகத்தான் செய்திருந்தாள் மீரா. பாத்திரம் காலியாகி விட்டது. அங்கிருந்த தண்ணீர் குழாயிலேயே கை கழுவி, தட்டுகளையும்...
அறியாமல் தொலைந்தேனே -15
அத்தியாயம் -15
மீரா சமையலறையில் பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருக்க, கார்த்திகேயனுக்கு இன்னொரு முறை அழைத்தான் சஞ்சய்.
முக்கிய விஷயம் இல்லை என்றால் பின்னர் அழைப்பதாக செய்திதான் அவரிடமிருந்து வந்தது.
யோசனையாக மீராவிடம் வந்தவன், “ஸார் அப்புறம் பேசுறேன்னு மெசேஜ் போட்ருக்கார். நீ வேணும்னா ஆன்ட்டிகிட்ட பேசு, ஆனா மேரேஜ் விஷயத்தை ஸார்கிட்ட சொல்லாம சொல்ல வேணாம்”...
அம்மா அவர்களிடம் வந்து சேரவே சற்று நேரம் பிடிக்கும். அந்த நேரம் அவர்களுக்கு மட்டுமேயானது என இப்போது அவனுக்கு புரிகிறது.
“டீ போடவா சஞ்சய்?” எனக் கேட்ட தன் மனைவியை சின்ன சிரிப்புடன் பார்த்துக் கொண்டே சோபாவில் அமர்ந்தான்.
“என்ன சரியாதானே கேட்டேன்? எதுக்கு சிரிக்கிறீங்க?” என்றாள் மீரா.
தான் நினைத்ததை பகிர்ந்தவன், “அப்பாம்மா விளையாட்டு விளையாடுறோம்னு ஃபீல்...
பாத்திரம் கழுவி, தேநீர் போட்டு அவனுடையதை ஃபிளாஸ்க்கில் வைத்து, காய்கறிகள் சேர்த்த சேமியா கிச்சடி செய்து முடிக்கவுமே, தயாராக நேரமாகி விட்டதை கண்டு பதற்றமடைந்தாள்.
வீட்டு வேலைகளில் கை தேர்ந்தவள் கிடையாது. ஆகவே அவ்வளவு விரைவாக அவளால் செய்ய முடியவில்லை. சட்னிக்கு எடுத்து வைத்ததை அப்படியே வைத்து விட்டு குளிக்க சென்று விட்டாள்.
தேநீர் சாப்பிட்டதால் அவளுக்கு...
அறியாமல் தொலைந்தேனே -14
அத்தியாயம் -14
வேலைக்கு செல்லத் தயாராகிய மீரா தன் கை வளையல்களை கழட்டினாள். சற்று சிரமமாக இருக்க வளையல்களுக்கு சேதமாகி விடக்கூடாது என்பதில் கவனம் வைத்தாள்.
பார்த்திருந்த சஞ்சய், “அதென்ன அவ்ளோ டைட்டா இருக்கா? அப்புறம் எப்படி போட்ட நீ?” எனக் கேட்டான்.
“போடும் போது பைரவ் ஸார் வைஃப் போட்டு விட்டுட்டாங்க, அப்பவே கொஞ்சம்...
அவனுமே கைப்பேசியில் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால் முழுக் கவனத்தையும் வைக்க முடியவில்லை.
வெளியில் சென்றிருந்த போது தோன்றாத சங்கடம் வீட்டுக்குள் ஏன் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
இருவருமே தங்களுக்குள் பேசுவதற்கு எதுவுமே இல்லை என்பது போல நடந்து கொண்டனர். அப்படியே நேரம் நகர்ந்தது.
பசி என்ற ஒன்று இல்லையென்றால் பேசாமலே படுக்க போயிருப்பார்களா இருக்கும்.
“சாப்பிட என்ன வாங்கட்டும்...
அன்றைய அப்பாவின் பேச்சில் இப்போதும் அவனது முகம் கன்றியது.
‘நான் யார் என உங்களுக்கு காட்டுறேன் ப்பா’ என மனதில் சத்தமாக சொல்லிக் கொண்டான்.
மனதை இலகுவாக்கலாம் என எண்ணி சற்று நேரம் படுத்துக் கொண்டே கைப்பேசி பார்த்திருந்தவன் அப்படியே உறங்கிப் போய் விட்டான்.
மாலையில் எழுந்து கொண்ட மீரா, திருமண புடவையை களைந்து காலையில் உடுத்தியிருந்த சுடிதாரை...
அறியாமல் தொலைந்தேனே -13
அத்தியாயம் -13
சஞ்சயும் மீராவும் வீடு வந்து சேர்ந்திருந்தனர். மீராவுக்கு நல்ல தலைவலி. இன்னும் நடந்த எதிலிருந்தும் மீண்டிருக்கவில்லை அவள்.
சஞ்சய்யும் அந்த நேரம் திருமணத்தை முடித்துக் கொண்டு விட்டான். வீட்டினரை நினைத்து கலக்கமாக இருந்தது. அம்மாவெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வார் என சிந்திக்கும் போதுதான் தான் செய்ததின் வீரியம் அவனுக்கு புரிந்தது.
ஓய்ந்து போய்...
“ஐஸக் அங்கிளை காண்ட்டாக்ட் பண்ண வேற நம்பர் கிடைக்குமா?” என எரிச்சல் குறையாமல் கேட்டான் சஞ்சய்.
சுனிதாவின் கைப்பேசி எண்ணை அவர் பகிரவும் அவசரமாக அழைப்பு விடுத்தான் சஞ்சய்.
ஒரு வழியாக ஐஸக்கை தொடர்பு கொண்டு இவன் பேச ஆரம்பிக்க புரோகிதர் வந்து விட்டார்.
சஞ்சய் இங்குள்ள நிலைமையை சுருக்கமாக சொல்ல, பதறிப் போன ஐஸக்கிற்கும் என்ன செய்வது...
ஐந்து நிமிடங்களாக பெங்காலியில் பைரவ் பேசியதை புரியாமலே கேட்டுக் கொண்டிருந்தான் சஞ்சய். இறுதியாக அவர், “தோமாதேர் பியே தேபோ! புஜ்லே?” என்றார்.
சலனமே இல்லாமல் சஞ்சய் நிற்க, மீராவையும் சேர்த்து பார்த்துக் கொண்டே மீண்டும் சொன்னதை சொல்லி, “திக் ஆச்சே?” என்றார்.
இத்தனை நாட்களில் திக் ஆச்சே என்றால் ஓகேவா என பொருள் என்பது சஞ்சய் மீரா...
அந்த ஆளுக்கு ராஜசேகரன் பெரும் தொகை கொடுத்திருக்க, இதை இத்தோடு விட மனமில்லை. பைரவ் இல்லையென்றால் என்ன, வேறு வழி இருக்கிறது இன்னும் கொஞ்சம் செலவாகும் என ராஜசேகரனிடம் சொல்லி முதல் முறையை காட்டிலும் அதிகமான பணத்தை பெற்றுக் கொண்டான்.
இந்த முறை மீராவை கூட்டிப் போக அவன் நாடியது இன்ஸ்பெக்டர் சௌரப் கோஷ். அவனது...
அறியாமல் தொலைந்தேனே -12
அத்தியாயம் -12
சென்னைக்கு திரும்பும் மனநிலைக்கு வந்து, அதற்கு பின் போக முடியாமல் கொல்கத்தாவிலேயே இருக்கும் நிலை ஏற்படவும் சஞ்சய்க்கு நேரம் கொடுமையாகவே நகர்ந்தது.
மகனை அழைத்து வரவில்லை என வீரராகவனிடம் தேவகி கோவித்துக் கொண்டார்தான். ‘வேலையை உடனே விட முடியாது என்கிறான், அவனே அங்கே இருப்பதாக சொல்லும் போது நான் கட்டித் தூக்கிக்...
‘இதென்ன புதிதாக?!’ என்பது போல விழித்தார் ஐஸக்.
“என்ன ஐஸக்?”
“ஸார் ஸார்… எனக்கு இதெல்லாம் சரி வராது. தம்பி கூட கொஞ்ச நாள் பழக்கம்னாலும் நல்லா பழகிட்டோம். தம்பியோட விஷயங்களை அவருக்கு தெரியாம உங்களுக்கு சொன்னா என் நிம்மதிதான் போகும். என்னால முடியாது ஸார்” என்றார் ஐஸக்.
“என் மனைவிக்கு மட்டுமில்ல ஐஸக் எனக்கும் அவன்னா உயிர்....
நேற்று தாதாவுக்கு நன்றி தெரிவிக்க போன சமயத்தில் ‘அந்தப் பெண் உன்னை நம்பி வந்து விட்டாள், அவள் தனியாக இருப்பது அவளுக்கு பாதுகாப்பு அல்ல, விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள், நான் ஏற்பாடு செய்து தருகிறேன்’ என்கிற சாராம்சத்தில்தான் சஞ்சயிடம் பேசியிருந்தார் பைரவ்.
சட்டென என்ன சொல்லவென தெரியாமல் ஐஸக்கே அதிர்ந்து போய் விட்டார். தாதாவும்...
அறியாமல் தொலைந்தேனே -11
அத்தியாயம் -11
அப்பாவின் பேச்சில் கோவம் கொண்டு வெளியில் வந்த சஞ்சயின் கையில் பைக் சாவி இல்லை. அதை எடுக்க உள்ளே சென்றால் மீண்டும் அப்பாவை பார்க்க நேரிடும் என்பதால் நடந்தே போனான் சஞ்சய்.
“சஞ்சய் தம்பி எங்க கிளம்பிட்டீங்க? சாப்பாடு வாங்கவா? பைக் எடுக்கல?” என ஐஸக் கேட்க, அதற்கு பதிலே சொல்லாமல்...
அறியாமல் தொலைந்தேனே -10
அத்தியாயம் -10
பைரவ் மஜூம்தார் ஏதோ அவசர வேலையாக வெளியில் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில், சஞ்சய் மற்றும் மீராவை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்கு சென்றார் ஐஸக்.
சஞ்சய் கைகள் குவித்து ஆங்கிலத்தில் நன்றி உரைத்தான். அவனது தோளில் தட்டிக் கொடுத்து மீராவை காண்பித்து பெங்காலியில் ஏதோ பேசினார் பைரவ். சஞ்சய்க்கு ஒன்றும் புரியாமல்...
அறியாமல் தொலைந்தேனே -9
அத்தியாயம் -9
தன்னுடைய குற்றச்சாட்டில் அதிர்ந்த மீராவை கண்கள் இடுங்க பார்த்தார் பைரவ் மஜூம்தார்.
ஐஸக்கிடம், “என்ன நடந்ததுன்னு கேட்டு சொல்லு” என பணித்தார்.
தனக்கு நடந்ததை மீரா சொல்லவும் அவளை பாவமாக பார்த்தார் ஐஸக்.
இங்கு சஞ்சய் அவளுக்கு உதவியதையும் அப்படியே அவள் சொல்ல, “என்னம்மா சொல்ற நீ? சஞ்சய் தம்பியும் நீயும் ஒருத்தரையொருத்தர் விரும்பலையா?”...
அறியாமல் தொலைந்தேனே -8
அத்தியாயம் -8
சஞ்சயின் வீட்டில் அவனது அப்பா வீரராகவனுக்கு மற்ற குடும்ப உறுப்பினர்களால் ஒரே அழுத்தம். எப்படியாவது சஞ்சயை சென்னைக்கு அழைத்து வந்து விட வேண்டுமாம்.
சஞ்சயின் அம்மா தேவகி கணவரிடம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரிந்தார். திருமணம் ஆன நாள் முதலாக அதிர்ந்து கூட பேசாத மனைவியின் பாராமுகத்தில் வீரராகவனுக்கு கவலையாகி...
அறியாமல் தொலைந்தேனே -7
அத்தியாயம் -7
வேலை பிடிக்கவில்லை என சஞ்சய் சொல்லியிருந்த காரணத்தால் அவனிடம் பேசும் போது சில அறிவுரைகளை வழங்கியிருந்தாள் மீரா.
மாலினி சென்னிடம் நற்பெயர் வாங்கும் படி ஏதாவது சவாலான வேலையை கேட்டு வாங்கி சிறப்பாக செய்து காண்பிக்க சொல்லியிருந்தாள்.
சஞ்சய்க்கு நற்பெயர் வாங்கவெல்லாம் ஆசையில்லை. அழகான மாலினி சென் அவனைப் பார்த்து சிரித்து பேசினால்...
“போ மீரா, நான் கத்து தர்றேன், லெஷர் டைம்ல விளையாடு”
“ஹையோ டைம் போத மாட்டேங்குது எனக்கு, எங்கேருந்து கேம் விளையாட?”
“ஹேய் ரொம்பத்தான்! அப்படியென்ன ட்வென்டி ஃபோர் ஹவர்ஸ்ம் எங்கேஜ்டா இருக்க நீ? சொல்லு சொல்லு” எனக் கேட்டான்.
“நிஜமா டைம் போயிடும்” என அடக்கமான குரலில் சொன்னாள்.
சென்டரில் என்ன சொன்னார்கள் என விசாரித்தான். ஐந்து நபர்களை...