Wednesday, November 11, 2026

    அறியாமல் தொலைந்தேனே

    அறியாமல் தொலைந்தேனே -4 அத்தியாயம் -4 கைப்பை வேறெங்கும் விழுந்து கிடக்கிறதா என அந்தப் பக்கம் தேடிப் பார்த்து விட்டு எங்கேயும் தென்படாமல் போகவும், மீராவின் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது. தளர்ந்து போனவளாக அப்படியே இருக்கையில் அமர்ந்து விட்டாள். அம்மா மற்றும் அண்ணன் இருவரது கைப்பேசி எண்களை தவிர வேறு யாருடையதும் அவளுக்கு நினைவில் இல்லை. இவ்வளவு...
     “என்னாச்சு உங்களுக்கு? கைல மெடிசின் இருந்தா போட்டுக்கலாமே” என்றான். தன்னுடைய நிலை இப்படியே தொடர்ந்தால்  விரைவிலேயே கவலைக்கு இடமாகி விடுவோம் என்பதை உணர்ந்தவள் அவனை சங்கடமாக பார்த்தாள். “என்ன? இப்படி வச்ச கண் வாங்காம பார்த்தா என்னன்னு நினைக்கிறது நான்?” என அவன் கேட்ட கேள்வியில் அவனிடம் ஏதும் உதவி கேளாமல் திரும்பி படுத்துக் கொண்டாள். “ஐயைய… ரொம்ப...
    அறியாமல் தொலைந்தேனே -9 அத்தியாயம் -9 தன்னுடைய குற்றச்சாட்டில் அதிர்ந்த மீராவை கண்கள் இடுங்க பார்த்தார் பைரவ் மஜூம்தார்.  ஐஸக்கிடம், “என்ன நடந்ததுன்னு கேட்டு சொல்லு” என பணித்தார்.  தனக்கு நடந்ததை மீரா சொல்லவும் அவளை பாவமாக பார்த்தார் ஐஸக்.  இங்கு சஞ்சய் அவளுக்கு உதவியதையும் அப்படியே அவள் சொல்ல, “என்னம்மா சொல்ற நீ? சஞ்சய் தம்பியும் நீயும் ஒருத்தரையொருத்தர் விரும்பலையா?”...
    தலையாட்டிக் கொண்டவள், “நீங்க எதுக்காக கொல்கத்தா வந்திருக்கீங்க?” என விசாரித்தாள். “உன்னை மாதிரியேதான், வேலை தேடி. இண்டர்வியூல செலக்ட் ஆகனும்” என்றான். “ஓ, உங்களுக்கு எப்போ இண்டர்வியூ?” எனக் கேட்டாள். “டேட் இன்னும் கன்ஃபார்ம் ஆகலை” என சாதாரணமாக சொன்னான். “அப்புறம் ஏன் முன்னாடியே வந்திட்டீங்க?” “வீட்ல சண்டை” என மட்டும் சொன்னான். அதற்கு மேல் அவளும் விசாரிக்கவில்லை. அவனாகவும் சொல்லவில்லை. “என்...
    அறியாமல் தொலைந்தேனே -8 அத்தியாயம் -8 சஞ்சயின் வீட்டில் அவனது அப்பா வீரராகவனுக்கு மற்ற குடும்ப உறுப்பினர்களால் ஒரே அழுத்தம். எப்படியாவது சஞ்சயை சென்னைக்கு அழைத்து வந்து விட வேண்டுமாம்.  சஞ்சயின் அம்மா தேவகி கணவரிடம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரிந்தார். திருமணம் ஆன நாள் முதலாக அதிர்ந்து கூட பேசாத மனைவியின் பாராமுகத்தில் வீரராகவனுக்கு கவலையாகி...
    அவள் முறைக்க, “பின்ன என்ன, நைட் ஒரு மனுஷன் உயிரை பணயம் வச்சு உனக்கு மெடிசின் வாங்கி தந்திருக்கான். இன்னும் யாரோ எவனோன்னு தள்ளி தள்ளி போனா… என் ஹார்ட் புஸுன்னு ஆகுமா ஆகாதா?” எனக் கேட்டான். “குட் மார்னிங்!” முணு முணுத்தாள் மீரா. சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தான். “நைட் வரை இதே ட்ரெயின்லதான் டிராவல்...
    அம்மா அவர்களிடம் வந்து சேரவே சற்று நேரம் பிடிக்கும். அந்த நேரம் அவர்களுக்கு மட்டுமேயானது என இப்போது அவனுக்கு புரிகிறது. “டீ போடவா சஞ்சய்?” எனக் கேட்ட தன் மனைவியை சின்ன சிரிப்புடன் பார்த்துக் கொண்டே சோபாவில் அமர்ந்தான். “என்ன சரியாதானே கேட்டேன்? எதுக்கு சிரிக்கிறீங்க?” என்றாள் மீரா. தான் நினைத்ததை பகிர்ந்தவன், “அப்பாம்மா விளையாட்டு விளையாடுறோம்னு ஃபீல்...
    “இன்னிக்கு உனக்கு சோதனை போதும்னு நினைக்கிறன், ப்ளீஸ் அதை வச்சிடு” என்றான் சஞ்சய். விரக்தியாக சிரித்தவள் இன்னொரு வாய் பருக போனாள். “ரிஸ்க் எடுக்காத. மறுபடியும் உனக்கு ஒத்துக்காம போனா அடுத்து ஹாஸ்பிடல்தான் போகணும்” என அவன் சொல்லவும் அவளுக்கும் சரியாக பட தேநீரை பருகவில்லை. மீரா கேட்டுக் கொண்டதால் மீண்டுமொரு முறை அவர்கள் வந்த ரயில் நின்ற...
    அறியாமல் தொலைந்தேனே -7 அத்தியாயம் -7 வேலை பிடிக்கவில்லை என சஞ்சய் சொல்லியிருந்த காரணத்தால் அவனிடம் பேசும் போது சில அறிவுரைகளை வழங்கியிருந்தாள் மீரா.  மாலினி சென்னிடம் நற்பெயர் வாங்கும் படி ஏதாவது சவாலான வேலையை கேட்டு வாங்கி சிறப்பாக செய்து காண்பிக்க சொல்லியிருந்தாள்.  சஞ்சய்க்கு நற்பெயர் வாங்கவெல்லாம் ஆசையில்லை. அழகான மாலினி சென் அவனைப் பார்த்து சிரித்து பேசினால்...
    நீ ஒருத்தன்தான் புள்ளையா எனக்கு? போய்த் தொலைன்னு தலை முழுக எவ்ளோ நேரம் ஆகும்னு நினைக்கிற? பெத்து தொலைச்சிட்டோமேன்னு நீ இழுத்து வைக்கிற ஒவ்வொரு பிரச்சனையையும் சரி பண்ணிட்டு இருக்கேன், ஸ்கூல், காலேஜ், ஃப்ரெண்ட்ஸோட வெளில போற வர்ற இடம், வேலை பார்க்கிற இடம்னு எங்க நீ பிராப்லம்ஸ் கிரியேட் பண்ணாம இருந்திருக்க? எல்லாத்திலேருந்தும்...
    அவள் செல்லமாக முறைக்க, “நீதான் ஃபிரெண்ட்ஸ் மட்டும்தாங்கிறதுல ஸ்ட்ராங்கா இருக்கியே. எனக்கு ஊர் சுத்த கம்பெனிக்கு நல்ல கேர்ள் ஃபிரெண்ட் வேணும். இப்படி வெளில வந்தாதானே யாராவது நமக்கு சிக்குவாங்க” என தீவிர தொனியிலேயே சொன்னான். “பெங்காலி சரியா பேச தெரியல, அடுத்தவங்க பேசினாலும் புரியல, இந்த லட்சணத்துல பெங்காலி பொண்ணு கேர்ள் ஃபிரெண்ட்டா வேணுமா...
    அறியாமல் தொலைந்தேனே -6 அத்தியாயம் -6 நடந்த நேர்காணலில் அப்படியொன்றும் பிரமாதமாக அவனது திறமையை காண்பித்திருக்கவில்லை சஞ்சய். ஆனால் சிபாரிசின் பெயரில் அவனுக்கு வேலை கிடைத்து விட்டது. ரித்தேஷ் அழைத்து வாழ்த்து சொல்ல, சஞ்சயிடம் மகிழ்ச்சியே இல்லை. மீராவின் சம்பளத்தையே குறைவு என நினைத்தவன் அவளை விட குறைவான சம்பளம்தான் தனக்கு எனும் போது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏதோ...
    வாஷிங்மெஷினுக்கு உபயோகிக்கும் லிக்விட் ஒவ்வொன்றாக விலை பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று உயரத்தில் இன்னொரு பிராண்ட் இருக்க, யாராவது கடை ஊழியர்கள் இருக்கிறார்களா என தேடினாள். “என்ன எடுக்கணும்னு சொல்லு, நான் எடுக்கிறேன்” என்றான். அவள் கை காட்ட, அவன் எம்பிக் குதித்து எடுத்தான். அதில் வரிசையாக நிறைய பொருட்கள் கீழே விழுந்தன. சூப்பர்வைசர் வந்து பெங்காலியில் திட்ட...
    அறியாமல் தொலைந்தேனே -10 அத்தியாயம் -10 பைரவ் மஜூம்தார் ஏதோ அவசர வேலையாக வெளியில் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில், சஞ்சய் மற்றும் மீராவை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்கு சென்றார் ஐஸக்.  சஞ்சய் கைகள் குவித்து ஆங்கிலத்தில் நன்றி உரைத்தான். அவனது தோளில் தட்டிக் கொடுத்து மீராவை காண்பித்து பெங்காலியில் ஏதோ பேசினார் பைரவ். சஞ்சய்க்கு ஒன்றும் புரியாமல்...
    அறியாமல் தொலைந்தேனே -22 அத்தியாயம் -22  காலையில் மீராவை மருத்துவமனையில் விட கிளம்பினான் சஞ்சய். இருவரையும் அப்படி சேர்ந்து பார்க்கவும் ஐஸக்கிற்கு நிம்மதியாக இருந்தது.  அவரிடம் வரும் போது பைக்கின் வேகத்தை குறைத்தவன், “என்ன அங்கிள்… இப்போலேருந்து உங்க ஸ்பை வேலை ஸ்டார்ட் ஆகிருக்குமே. அவருக்கு ஃபோன் போட்டு நாங்க ரெண்டு பேரும் ஜாலியா ஊர் சுத்த போறோம்னு...
    “போ மீரா, நான் கத்து தர்றேன், லெஷர் டைம்ல விளையாடு” “ஹையோ டைம் போத மாட்டேங்குது எனக்கு, எங்கேருந்து கேம் விளையாட?” “ஹேய் ரொம்பத்தான்! அப்படியென்ன ட்வென்டி ஃபோர் ஹவர்ஸ்ம் எங்கேஜ்டா இருக்க நீ? சொல்லு சொல்லு”  எனக் கேட்டான். “நிஜமா டைம் போயிடும்” என அடக்கமான குரலில் சொன்னாள். சென்டரில் என்ன சொன்னார்கள் என விசாரித்தான். ஐந்து நபர்களை...
    அரை மணி நேரம் சென்றுதான் மீராவிடம் வந்தான் சஞ்சய். ஏதோ குழப்பமாக இருக்கிறான் என அவளுக்கு தெரிந்தது. என்ன வர போகிறதோ என நினைக்கும் போதே மீராவின் நெஞ்சம் தட தடக்க ஆரம்பித்து விட்டது. மீரா அவளது அம்மாவுடன் இப்போதைக்கு பேச வேண்டாம் என்பதைத்தான் வலியுறுத்தியிருந்தார் கார்த்திகேயன். இவளிடம் என்ன காரணம் சொல்வது எனதான் யோசித்துக் கொண்டிருந்தான்...
    அறியாமல் தொலைந்தேனே -16 அத்தியாயம் -16 அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் காபி ஷாப் ஒன்றில் இருந்தனர் சஞ்சயும் மாலினியும். காதலர்கள் சந்தித்து பேச என்பதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்க பட்டிருந்தது அந்த ஷாப். மிதமான ஏசியின் குளிரில் மங்கலான வெளிச்சத்தில் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர் இருவரும். சஞ்சயின் முன் கோல்டு காபி இருக்க, மாலினியின் முன் சூடான காபி. “உன்னோட தப்பை நான்...
    மருத்துவமனைக்கு காண்பிக்க வந்த வயதான இருவர் தனியாக பேசிக் கொண்டு நிற்கும் இவனை விசித்திரமாக பார்த்தனர். அவர்களை பார்த்து அசடு வழிய சிரித்துக்கொண்டே பைக்கை எடுத்தான். அவன் திரும்பி செல்லும் போதும் டிராபிக் போலீஸ் நின்றிருக்க, எதற்கு வம்பு என கூகுள் மேப் போட்டு ஊரை சுற்றிக் கொண்டு அவன் வீடு வந்து சேர ஒன்பது...
    அறியாமல் தொலைந்தேனே -11 அத்தியாயம் -11 அப்பாவின் பேச்சில் கோவம் கொண்டு வெளியில் வந்த சஞ்சயின் கையில் பைக் சாவி  இல்லை. அதை எடுக்க உள்ளே சென்றால் மீண்டும் அப்பாவை பார்க்க நேரிடும் என்பதால் நடந்தே போனான் சஞ்சய். “சஞ்சய் தம்பி எங்க கிளம்பிட்டீங்க? சாப்பாடு வாங்கவா? பைக் எடுக்கல?” என ஐஸக் கேட்க, அதற்கு பதிலே சொல்லாமல்...
    error: Content is protected !!