Wednesday, November 11, 2026

    அறியாமல் தொலைந்தேனே

    அறியாமல் தொலைந்தேனே -23 அத்தியாயம் -23 இரவில் மீராவுடன் சேர்ந்து நேரமாகவே உறங்கியதால் காலையிலும் அவளுடன் சேர்ந்து ஏழு மணிக்கெல்லாம் விழித்து விட்டான் சஞ்சய். காலை உணவாக உலர்ந்த பழங்கள் பாலில் போட்டு அடித்த ஸ்மூத்தி கொடுத்தாள். “எது இதான் பிரேக் ஃ பாஸ்ட்டா?” முகம் சுருக்கினான் சஞ்சய். “எப்படி வேலைக்கு போய்ட்டு வீட்டுலேயும் சமாளிக்கிறீங்கன்னு மினி சேச்சிகிட்ட கேட்டேன். அவங்க...
    வாஷிங்மெஷினுக்கு உபயோகிக்கும் லிக்விட் ஒவ்வொன்றாக விலை பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று உயரத்தில் இன்னொரு பிராண்ட் இருக்க, யாராவது கடை ஊழியர்கள் இருக்கிறார்களா என தேடினாள். “என்ன எடுக்கணும்னு சொல்லு, நான் எடுக்கிறேன்” என்றான். அவள் கை காட்ட, அவன் எம்பிக் குதித்து எடுத்தான். அதில் வரிசையாக நிறைய பொருட்கள் கீழே விழுந்தன. சூப்பர்வைசர் வந்து பெங்காலியில் திட்ட...
    மாலையில் சஞ்சய் வீடு திரும்பிய போது மலர்ந்த முகத்துடன் அவனை வரவேற்றாள் மீரா. பையை ஓரமாக வைத்தவன் ஒரு கையால் இன் செய்திருந்த சட்டையை எடுத்து விட்டுக் கொண்டே, இன்னொரு கையால் அவளை தன்னிடம் இழுத்து அணைத்துக் கொண்டான். பின் இரண்டு கைகளையும் கொண்டு அவளை நன்றாக சுற்றி வளைத்துக் கொண்டான். “வந்த உடனே என்ன சஞ்சய்...
    அறியாமல் தொலைந்தேனே -22 அத்தியாயம் -22  காலையில் மீராவை மருத்துவமனையில் விட கிளம்பினான் சஞ்சய். இருவரையும் அப்படி சேர்ந்து பார்க்கவும் ஐஸக்கிற்கு நிம்மதியாக இருந்தது.  அவரிடம் வரும் போது பைக்கின் வேகத்தை குறைத்தவன், “என்ன அங்கிள்… இப்போலேருந்து உங்க ஸ்பை வேலை ஸ்டார்ட் ஆகிருக்குமே. அவருக்கு ஃபோன் போட்டு நாங்க ரெண்டு பேரும் ஜாலியா ஊர் சுத்த போறோம்னு...
    கைப்பேசி எடுத்துக் கொண்டு பிரவீண் தனியாக செல்ல, “பிரவீண்…” என கண்டிப்போடு அழைத்தார். ‘ஐயோ ஏதோ சந்தேகம் வந்து விட்டதோ!’ என்ற ஐயத்துடன் அப்பாவை பார்த்து நின்றான் அவன். “உன் பாசத்தை காட்டுறேன்னு அவனுக்கு பணம் அனுப்பி தப்பு செய்யாத. அவனோட சின்ன வயசிலேருந்து நீங்க எல்லாரும் சேர்ந்துதான் அவனை கெடுத்து வச்சீங்க, இப்போ எங்க வந்து...
    அறியாமல் தொலைந்தேனே -21 அத்தியாயம் -21 சஞ்சயும் மீராவும் எடுத்த முடிவில் கார்த்திகேயனுக்கும் ஐஸக்கிற்கும் அத்தனை மகிழ்ச்சி. முதலில் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்கி, ‘அப்பாடா!’ என்பது போல பார்த்தனர். வீரராகவன் இப்படி தான் நினைத்தது எல்லாம் தலைகீழாக மாறிப் போகும் என எதிர்பார்க்கவில்லை. இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தவர் கைகளை கோர்த்தும் பிரித்தும் ஏதோ யோசனையில் இருந்தார்.  அடுத்து என்ன...
    நீ ஒருத்தன்தான் புள்ளையா எனக்கு? போய்த் தொலைன்னு தலை முழுக எவ்ளோ நேரம் ஆகும்னு நினைக்கிற? பெத்து தொலைச்சிட்டோமேன்னு நீ இழுத்து வைக்கிற ஒவ்வொரு பிரச்சனையையும் சரி பண்ணிட்டு இருக்கேன், ஸ்கூல், காலேஜ், ஃப்ரெண்ட்ஸோட வெளில போற வர்ற இடம், வேலை பார்க்கிற இடம்னு எங்க நீ பிராப்லம்ஸ் கிரியேட் பண்ணாம இருந்திருக்க? எல்லாத்திலேருந்தும்...
    இமைகள் சிமிட்டாமல் தன் கடைக்குட்டி மகனை அழுத்தமாக பார்த்திருந்தார் வீரராகவன். “டேய் சஞ்சு! எல்லார் முன்னாடியும் இப்படி மரியாதை இல்லாம பேசலாமா அப்பாவை? வா வந்து உட்கார், சொல்ல வேண்டியதை அமைதியா சொல்லு” என்றான் பிரவீண். “நீ பேசாத ண்ணா. எப்படி… அப்பா வந்து அண்ணியை விட்டுட்டு வான்னா நீ கேட்டுப்பியா?” எனக் கேட்டான் சஞ்சய். தம்பியின் கை...
    “என்ன சொல்லிட்டு இருக்க நீ?” என எரிச்சலுடன் கேட்டான். “எல்லாரையும் யோசிச்சுதான் நீங்க முடிவெடுக்க முடியும். எந்த முடிவெடுத்தாலும் நீங்க தப்பானவர் ஆக மாட்டீங்கன்னு சொல்றேன். எனக்கு எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லைனு சொல்றேன்” என்றாள். “அப்படியா?” என நக்கல் சிரிப்போடு கேட்டான். அவள் ஆமாம் என அழுத்தம் திருத்தமாக சொன்னாள். “சரி இப்படியே...
    அறியாமல் தொலைந்தேனே -20 அத்தியாயம் -20 செவிலியர்களுக்கான தனியறையில் மீரா இருக்க, மதிய உணவு உண்ண வந்தாள் மினி. இன்சார்ஜ் என்பதால் மாலை நான்கு மணி வரை அவளுக்கு பணி இருக்கும். “சாம்பார் ரைஸ் சாப்பிடுறியா?” எனக் கேட்டாள் மினி. ஒரு வாய் வாங்கிக் கொண்டவள் போதும் என சொல்லி விட்டாள். இருவரும் அவரவர் தாய்மொழியில் பேசிக் கொள்வார்கள். இன்று...
    பைரவ் மஜும்தார் வீட்டில் இல்லை. அவரின் குடும்பத்தினர் நெருங்கிய உறவில் நடக்கவிருக்கும் திருமணத்தில் பங்கு பெற இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியூர் சென்றிருக்க, பைரவ்வும் சற்று முன்பு இங்கிருந்து புறப்பட்டு விட்டார்.  கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாமா எனக் கேட்டாள் மீரா.  “பிரயோஜனம் இருக்கும்னு தோணலம்மா. பாபுவால ஏற்கனவே ஒன்னும் செய்ய முடியாம போயிடுச்சே. வேற வழி இல்ல...
    அறியாமல் தொலைந்தேனே -18 அத்தியாயம் -18 அதிகாலை மூன்று மணிக்கு மீராவுக்கு விழிப்பு தட்டியது. சஞ்சய் மீது படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறோம் என புரிந்து அதிர்ச்சியும் வெட்கமுமாக எழுந்து நின்றாள். அவனையும் எழுப்பி அறைக்குள் போக சொல்லலாமா எனதான் நினைத்தாள்.  எங்கே உறக்கம் கலைந்தால் மீண்டும் உறங்க சிரம படுவானோ என நினைத்து எழுப்பாமல் விட்டாள். தலையணை எடுத்து...
    அவளின் தலையை தன் மார்போடு அழுத்திக் கொண்டவனுக்கும் நெஞ்சம் கலங்கியது. “பொண்ணுங்களுக்கு எங்கேயுமே பாதுகாப்பு இல்லையா சஞ்சய்? நான் எங்கேதான் போய் நிம்மதியா வாழ? எல்லா இடத்திலேயும் ஏதாவது பிரச்சனை வருது” என்றாள். “அங்கேயே அவனுக்கு நாலு அறை கொடுத்திருக்கணும் நீ, எதுக்காக அழற?” “நான் அப்படி பண்ணுவான்னு எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை சஞ்சய். திடீர்னு பின்னாலே இருந்து...
    ஓய்வறைகள் இருக்கும் மூலையில் இருக்கை ஒன்றில் மேசையில் முகம் கவிழ்த்த படி அமர்ந்திருந்தாள் மீரா. என்ன சொல்ல போகிறாளோ என நினைக்கவே அவனுக்கு பயமாக இருந்தது. அவளிடம் ஓடிச் சென்று அவளின் தோளில் கை வைத்து “மீரா…” என்றான். நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் கலங்கி சிவந்து போயிருந்தன. அவன் என்னவென கேட்கும் முன், சுதாரித்து எழுந்தவள், “நல்ல...
    மீராவை கண்ட ஒருவன் பதிலுக்கு இவளை அப்படி நான் இடித்து விட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என சொல்லி அவளை நெருங்கினான். சட்டென மீராவை தன்னிடம் இழுத்துக் கொண்ட சஞ்சய், “தெரியாம செஞ்சிருந்தாலும் தப்பு எம்மேலங்கிறதால பணிவா பேசிட்டு இருக்கேன். கிட்ட வந்து பாரு, நான் யாருன்னு காட்டுறேன்” என்றான். அந்த மேல்தட்டு வர்க்க பசங்கள் திமிர்...
    அறியாமல் தொலைந்தேனே -17 அத்தியாயம் -17 மதியம் இரண்டு மணிக்கு மருத்துவமனையிலிருந்து மீராவை அழைத்துக் கொண்டு பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தான் சஞ்சய். “மெதுவா போங்களேன் சஞ்சய்” பயத்துடன் அவனை கடிந்து கொண்டாள் மீரா. “த்ரீக்கு நமக்கு டைம் சொல்லிருக்காங்க. நீ ஹாஸ்பிடல்லேருந்து வெளில வர லேட் பண்ணிட்டு இப்போ மெதுவா போன்னு சொல்லாத. இன்னிக்கு முடியாதுன்னு சொல்லிட்டா இன்னொரு...
    அரை மணி நேரம் சென்றுதான் மீராவிடம் வந்தான் சஞ்சய். ஏதோ குழப்பமாக இருக்கிறான் என அவளுக்கு தெரிந்தது. என்ன வர போகிறதோ என நினைக்கும் போதே மீராவின் நெஞ்சம் தட தடக்க ஆரம்பித்து விட்டது. மீரா அவளது அம்மாவுடன் இப்போதைக்கு பேச வேண்டாம் என்பதைத்தான் வலியுறுத்தியிருந்தார் கார்த்திகேயன். இவளிடம் என்ன காரணம் சொல்வது எனதான் யோசித்துக் கொண்டிருந்தான்...
    “ம்ம்… ஒரே ஆஃபிஸ்ல இருக்கோம், அவளுக்கு கீழதான் நான் ஒர்க் பண்றேன். பேட்ச் அப் ஆகிட்டோம்” “ஹ்ம்ம்… வந்து… நமக்கு மேரேஜ் ஆன விஷயத்தை சொல்லிட்டீங்கதானே?” என மீரா கேட்ட விதம் இயல்பானதாக அவனுக்கு படவில்லை.  உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், “என் பெர்சனல் விஷயமெல்லாம் அவளுக்கு ஏன் சொல்லணும்ன்னு சொல்லலை நான்” என்றான். மாலினியுடன் பிரச்சனை வருவதற்கு முன்பே...
    அறியாமல் தொலைந்தேனே -16 அத்தியாயம் -16 அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் காபி ஷாப் ஒன்றில் இருந்தனர் சஞ்சயும் மாலினியும். காதலர்கள் சந்தித்து பேச என்பதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்க பட்டிருந்தது அந்த ஷாப். மிதமான ஏசியின் குளிரில் மங்கலான வெளிச்சத்தில் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர் இருவரும். சஞ்சயின் முன் கோல்டு காபி இருக்க, மாலினியின் முன் சூடான காபி. “உன்னோட தப்பை நான்...
    மருத்துவமனைக்கு காண்பிக்க வந்த வயதான இருவர் தனியாக பேசிக் கொண்டு நிற்கும் இவனை விசித்திரமாக பார்த்தனர். அவர்களை பார்த்து அசடு வழிய சிரித்துக்கொண்டே பைக்கை எடுத்தான். அவன் திரும்பி செல்லும் போதும் டிராபிக் போலீஸ் நின்றிருக்க, எதற்கு வம்பு என கூகுள் மேப் போட்டு ஊரை சுற்றிக் கொண்டு அவன் வீடு வந்து சேர ஒன்பது...
    error: Content is protected !!