அறியாமல் தொலைந்தேனே
அறியாமல் தொலைந்தேனே -18
அத்தியாயம் -18
அதிகாலை மூன்று மணிக்கு மீராவுக்கு விழிப்பு தட்டியது. சஞ்சய் மீது படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறோம் என புரிந்து அதிர்ச்சியும் வெட்கமுமாக எழுந்து நின்றாள். அவனையும் எழுப்பி அறைக்குள் போக சொல்லலாமா எனதான் நினைத்தாள்.
எங்கே உறக்கம் கலைந்தால் மீண்டும் உறங்க சிரம படுவானோ என நினைத்து எழுப்பாமல் விட்டாள். தலையணை எடுத்து...
“ம்ம்… ஒரே ஆஃபிஸ்ல இருக்கோம், அவளுக்கு கீழதான் நான் ஒர்க் பண்றேன். பேட்ச் அப் ஆகிட்டோம்”
“ஹ்ம்ம்… வந்து… நமக்கு மேரேஜ் ஆன விஷயத்தை சொல்லிட்டீங்கதானே?” என மீரா கேட்ட விதம் இயல்பானதாக அவனுக்கு படவில்லை.
உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், “என் பெர்சனல் விஷயமெல்லாம் அவளுக்கு ஏன் சொல்லணும்ன்னு சொல்லலை நான்” என்றான்.
மாலினியுடன் பிரச்சனை வருவதற்கு முன்பே...
“என்னாச்சு உங்களுக்கு? கைல மெடிசின் இருந்தா போட்டுக்கலாமே” என்றான்.
தன்னுடைய நிலை இப்படியே தொடர்ந்தால் விரைவிலேயே கவலைக்கு இடமாகி விடுவோம் என்பதை உணர்ந்தவள் அவனை சங்கடமாக பார்த்தாள்.
“என்ன? இப்படி வச்ச கண் வாங்காம பார்த்தா என்னன்னு நினைக்கிறது நான்?” என அவன் கேட்ட கேள்வியில் அவனிடம் ஏதும் உதவி கேளாமல் திரும்பி படுத்துக் கொண்டாள்.
“ஐயைய… ரொம்ப...
அறியாமல் தொலைந்தேனே -12
அத்தியாயம் -12
சென்னைக்கு திரும்பும் மனநிலைக்கு வந்து, அதற்கு பின் போக முடியாமல் கொல்கத்தாவிலேயே இருக்கும் நிலை ஏற்படவும் சஞ்சய்க்கு நேரம் கொடுமையாகவே நகர்ந்தது.
மகனை அழைத்து வரவில்லை என வீரராகவனிடம் தேவகி கோவித்துக் கொண்டார்தான். ‘வேலையை உடனே விட முடியாது என்கிறான், அவனே அங்கே இருப்பதாக சொல்லும் போது நான் கட்டித் தூக்கிக்...
நீ ஒருத்தன்தான் புள்ளையா எனக்கு? போய்த் தொலைன்னு தலை முழுக எவ்ளோ நேரம் ஆகும்னு நினைக்கிற? பெத்து தொலைச்சிட்டோமேன்னு நீ இழுத்து வைக்கிற ஒவ்வொரு பிரச்சனையையும் சரி பண்ணிட்டு இருக்கேன், ஸ்கூல், காலேஜ், ஃப்ரெண்ட்ஸோட வெளில போற வர்ற இடம், வேலை பார்க்கிற இடம்னு எங்க நீ பிராப்லம்ஸ் கிரியேட் பண்ணாம இருந்திருக்க? எல்லாத்திலேருந்தும்...
அன்றைய அப்பாவின் பேச்சில் இப்போதும் அவனது முகம் கன்றியது.
‘நான் யார் என உங்களுக்கு காட்டுறேன் ப்பா’ என மனதில் சத்தமாக சொல்லிக் கொண்டான்.
மனதை இலகுவாக்கலாம் என எண்ணி சற்று நேரம் படுத்துக் கொண்டே கைப்பேசி பார்த்திருந்தவன் அப்படியே உறங்கிப் போய் விட்டான்.
மாலையில் எழுந்து கொண்ட மீரா, திருமண புடவையை களைந்து காலையில் உடுத்தியிருந்த சுடிதாரை...
அறியாமல் தொலைந்தேனே -24
அத்தியாயம் -24
அன்று ஞாயிற்றுக் கிழமை, பைரவ் மஜும்தார் வீட்டில் வசந்த உற்சவத்துக்கான விழா காலையிலேயே ஆரம்பித்து விட்டது.
சஞ்சய் வலியுறுத்தி சொன்னதால் மினியிடம் கெஞ்சி கேட்டு அன்று விடுப்பு எடுத்திருந்தாள் மீரா. மினியும் அத்தனை எளிதில் தந்திருக்கவில்லை, பைரவ் தாதா வீட்டின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என மீரா காரணம் சொல்லவும்...
கைப்பேசி எடுத்துக் கொண்டு பிரவீண் தனியாக செல்ல, “பிரவீண்…” என கண்டிப்போடு அழைத்தார்.
‘ஐயோ ஏதோ சந்தேகம் வந்து விட்டதோ!’ என்ற ஐயத்துடன் அப்பாவை பார்த்து நின்றான் அவன்.
“உன் பாசத்தை காட்டுறேன்னு அவனுக்கு பணம் அனுப்பி தப்பு செய்யாத. அவனோட சின்ன வயசிலேருந்து நீங்க எல்லாரும் சேர்ந்துதான் அவனை கெடுத்து வச்சீங்க, இப்போ எங்க வந்து...
பைரவ் மஜும்தார் வீட்டில் இல்லை. அவரின் குடும்பத்தினர் நெருங்கிய உறவில் நடக்கவிருக்கும் திருமணத்தில் பங்கு பெற இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியூர் சென்றிருக்க, பைரவ்வும் சற்று முன்பு இங்கிருந்து புறப்பட்டு விட்டார்.
கைப்பேசியில் தொடர்பு கொள்ளலாமா எனக் கேட்டாள் மீரா.
“பிரயோஜனம் இருக்கும்னு தோணலம்மா. பாபுவால ஏற்கனவே ஒன்னும் செய்ய முடியாம போயிடுச்சே. வேற வழி இல்ல...
அறியாமல் தொலைந்தேனே -8
அத்தியாயம் -8
சஞ்சயின் வீட்டில் அவனது அப்பா வீரராகவனுக்கு மற்ற குடும்ப உறுப்பினர்களால் ஒரே அழுத்தம். எப்படியாவது சஞ்சயை சென்னைக்கு அழைத்து வந்து விட வேண்டுமாம்.
சஞ்சயின் அம்மா தேவகி கணவரிடம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரிந்தார். திருமணம் ஆன நாள் முதலாக அதிர்ந்து கூட பேசாத மனைவியின் பாராமுகத்தில் வீரராகவனுக்கு கவலையாகி...
அவளின் தலையை தன் மார்போடு அழுத்திக் கொண்டவனுக்கும் நெஞ்சம் கலங்கியது.
“பொண்ணுங்களுக்கு எங்கேயுமே பாதுகாப்பு இல்லையா சஞ்சய்? நான் எங்கேதான் போய் நிம்மதியா வாழ? எல்லா இடத்திலேயும் ஏதாவது பிரச்சனை வருது” என்றாள்.
“அங்கேயே அவனுக்கு நாலு அறை கொடுத்திருக்கணும் நீ, எதுக்காக அழற?”
“நான் அப்படி பண்ணுவான்னு எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை சஞ்சய். திடீர்னு பின்னாலே இருந்து...
அரை மணி நேரம் சென்றுதான் மீராவிடம் வந்தான் சஞ்சய். ஏதோ குழப்பமாக இருக்கிறான் என அவளுக்கு தெரிந்தது. என்ன வர போகிறதோ என நினைக்கும் போதே மீராவின் நெஞ்சம் தட தடக்க ஆரம்பித்து விட்டது.
மீரா அவளது அம்மாவுடன் இப்போதைக்கு பேச வேண்டாம் என்பதைத்தான் வலியுறுத்தியிருந்தார் கார்த்திகேயன்.
இவளிடம் என்ன காரணம் சொல்வது எனதான் யோசித்துக் கொண்டிருந்தான்...
“போடி மண்டி!” என்ற மினி வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
மாலினிக்கும் புடவைக்கட்டு புதிது, அசௌகர்யமாக இருந்ததால் ஆடியது போதும் என வந்து விட்டாள். அப்போதும் சஞ்சய் வராமல் மற்ற இளம் பெண்களுடன் சேர்ந்து ஆடிக் கொண்டிருந்தான்.
இயல்பாக மீராவின் பக்கத்தில் வந்தமர்ந்த மாலினி, அவளையும் இரண்டு நிமிடங்கள் சஞ்சயுடன் ஆடி வா என்றாள். அவளிடமும் மறுத்து...
அம்மா அவர்களிடம் வந்து சேரவே சற்று நேரம் பிடிக்கும். அந்த நேரம் அவர்களுக்கு மட்டுமேயானது என இப்போது அவனுக்கு புரிகிறது.
“டீ போடவா சஞ்சய்?” எனக் கேட்ட தன் மனைவியை சின்ன சிரிப்புடன் பார்த்துக் கொண்டே சோபாவில் அமர்ந்தான்.
“என்ன சரியாதானே கேட்டேன்? எதுக்கு சிரிக்கிறீங்க?” என்றாள் மீரா.
தான் நினைத்ததை பகிர்ந்தவன், “அப்பாம்மா விளையாட்டு விளையாடுறோம்னு ஃபீல்...
“என்ன சொல்லிட்டு இருக்க நீ?” என எரிச்சலுடன் கேட்டான்.
“எல்லாரையும் யோசிச்சுதான் நீங்க முடிவெடுக்க முடியும். எந்த முடிவெடுத்தாலும் நீங்க தப்பானவர் ஆக மாட்டீங்கன்னு சொல்றேன். எனக்கு எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லைனு சொல்றேன்” என்றாள்.
“அப்படியா?” என நக்கல் சிரிப்போடு கேட்டான். அவள் ஆமாம் என அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.
“சரி இப்படியே...
அறியாமல் தொலைந்தேனே -13
அத்தியாயம் -13
சஞ்சயும் மீராவும் வீடு வந்து சேர்ந்திருந்தனர். மீராவுக்கு நல்ல தலைவலி. இன்னும் நடந்த எதிலிருந்தும் மீண்டிருக்கவில்லை அவள்.
சஞ்சய்யும் அந்த நேரம் திருமணத்தை முடித்துக் கொண்டு விட்டான். வீட்டினரை நினைத்து கலக்கமாக இருந்தது. அம்மாவெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வார் என சிந்திக்கும் போதுதான் தான் செய்ததின் வீரியம் அவனுக்கு புரிந்தது.
ஓய்ந்து போய்...
‘இதென்ன புதிதாக?!’ என்பது போல விழித்தார் ஐஸக்.
“என்ன ஐஸக்?”
“ஸார் ஸார்… எனக்கு இதெல்லாம் சரி வராது. தம்பி கூட கொஞ்ச நாள் பழக்கம்னாலும் நல்லா பழகிட்டோம். தம்பியோட விஷயங்களை அவருக்கு தெரியாம உங்களுக்கு சொன்னா என் நிம்மதிதான் போகும். என்னால முடியாது ஸார்” என்றார் ஐஸக்.
“என் மனைவிக்கு மட்டுமில்ல ஐஸக் எனக்கும் அவன்னா உயிர்....
அறியாமல் தொலைந்தேனே -20
அத்தியாயம் -20
செவிலியர்களுக்கான தனியறையில் மீரா இருக்க, மதிய உணவு உண்ண வந்தாள் மினி. இன்சார்ஜ் என்பதால் மாலை நான்கு மணி வரை அவளுக்கு பணி இருக்கும்.
“சாம்பார் ரைஸ் சாப்பிடுறியா?” எனக் கேட்டாள் மினி. ஒரு வாய் வாங்கிக் கொண்டவள் போதும் என சொல்லி விட்டாள். இருவரும் அவரவர் தாய்மொழியில் பேசிக் கொள்வார்கள்.
இன்று...
மருத்துவமனைக்கு காண்பிக்க வந்த வயதான இருவர் தனியாக பேசிக் கொண்டு நிற்கும் இவனை விசித்திரமாக பார்த்தனர். அவர்களை பார்த்து அசடு வழிய சிரித்துக்கொண்டே பைக்கை எடுத்தான்.
அவன் திரும்பி செல்லும் போதும் டிராபிக் போலீஸ் நின்றிருக்க, எதற்கு வம்பு என கூகுள் மேப் போட்டு ஊரை சுற்றிக் கொண்டு அவன் வீடு வந்து சேர ஒன்பது...
அறியாமல் தொலைந்தேனே -15
அத்தியாயம் -15
மீரா சமையலறையில் பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருக்க, கார்த்திகேயனுக்கு இன்னொரு முறை அழைத்தான் சஞ்சய்.
முக்கிய விஷயம் இல்லை என்றால் பின்னர் அழைப்பதாக செய்திதான் அவரிடமிருந்து வந்தது.
யோசனையாக மீராவிடம் வந்தவன், “ஸார் அப்புறம் பேசுறேன்னு மெசேஜ் போட்ருக்கார். நீ வேணும்னா ஆன்ட்டிகிட்ட பேசு, ஆனா மேரேஜ் விஷயத்தை ஸார்கிட்ட சொல்லாம சொல்ல வேணாம்”...