Yaagaavaaraayinum Naakaakka
யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 3
“அ அம்மா”
“அ ..ம்மா”
“ஆ ஆடு”
“ஆ ஆது”
“ஆது இல்ல குட்டிமா.. ஆடு” “அம்மா நாக்க பாரு..டு.. ஆடு.. சொல்லு?”
“சொல்ல நேனா.. குட்டிமா ஆது பாலு..” (சொல்ல வேண்டாம். குட்டிமா ஆடுரத பாரு)
சொல்லிவிட்டு ப்ரணவ் ஆட ஆரம்பித்தான். தன் குட்டி ‘டையப்பர் பாட்டமை’ ஆட்டி ஆட்டி..
அமுதாவும் ப்ரணவும் பாடம் படித்துக் கொண்டிருந்த...
யாகாவார் ஆயினும் நா காக்க - அத்தியாயம் 7(2)
“என்ட்ட கேட்டிருக்கலாமே… தப்பு தான். உங்கட்ட சொல்லாம.. நானா முடிவெடுத்தது என் மேல தப்பு தான்! ஆனா நான் தப்பானவ இல்லை. நான் சொல்லாமலே உங்களுக்கா தெரியவேண்டியது இது! உங்களுக்கு ஏன் அப்படி என்னைப் பத்தி தோணிச்சுனு கூட எனக்கு புரியலை.. நீங்க இல்லாதப்போ யாராவது...
“பாக்க லட்சணமா இருக்க.. நல்ல உத்தியோகம்.. கை நிறையச் சம்பளம்.. போதாக் குறைக்கு உன் பங்கு குடும்ப சொத்தே கோடிகள தாண்டிடும்.. அத பார்த்துத் தான் உன்ன கட்டிகிட்டா.. நீயே சொல்லு எத்தன நாள் உன் கூட பொண்டாட்டியா இருந்தா? பிடிச்சு கட்டிகிட்டா ஏன் நீ தூங்கர வரைக்கும் அடுக்களையே சுத்தி சுத்தி வாரா?...
யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 8
கைக்கெட்டும் தூரத்தில் மலர். கண்ணுக்கும் மனதுக்கும் உகந்த மலர். வண்டாய் அதை ருசிக்க எண்ணம் எழும்பவில்லை. பூசைக்குரிய மலராய் அதை அரவணைக்க மட்டும் ஆசை. ஆனால் தொட முடியாத தூரம்..
அமுதாவின் முதுகையே பார்த்துப் படுத்திருந்த அவள் கணவன் நிலை இது.
ஆமையாய் நாட்கள் நகர்ந்தாலும் வேகமாய் மாதம் இரண்டு ஓடிவிட்டது,...
யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 4
“டேய் வாலு பையா.. நில்லு டா..” அமுதா அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டிருந்தாள் ‘கக்கப் பிக்க’ என்று சிரித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த ப்ரணவோடு. ஒரு ஜோடி கண்கள் அவள் பின்னோடு ஆசையாய் ஓடிக்கொண்டிருந்தது.
ப்ரணவ் கொஞ்சம் புஷ்டி ஆகி இருந்தான். குட்டி தொப்பையும்.. நிமிர்ந்து நிற்க முடியாமல் தொங்கிய அழகு கன்னமும்… பார்ப்பவர் உள்ளம்...
யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 1
“அன்னம் எங்க போன?” காலை ஜாகிங் முடித்து வீட்டில் நுழைந்த அர்ஜுன் காதில் குழந்தையின் அலறல் விழவே வீட்டு வேலையாள் மேல் எரிந்து விழுந்தான். அர்ஜுன் கோபக்காரன் இல்லை.. அவன் இயலாமை கோபமாய் வெடித்தது.
“தம்பி?” என்று இடுப்பில் முகம் கருக்க வீரிட்ட பதினான்கு மாதமேயான ப்ரணவோடு வந்து நின்றார்...
அம்மாவிடம் பேசவேண்டும்.. பொறுமையாய் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்ல வேண்டும்… ‘இவள் என் மனைவி.. உன் உயிராய் போனவள்.. இரண்டு வருடம் தனியே இருந்தேன்.. அந்த இரண்டு வருடமும் அவள் நினைவு தான் என்னைக் கொன்றது. எனக்கு அமுதாவை மிகவும் பிடித்திருக்கின்றது. அதனால் அவளோடு அன்பாய் இரு’ என்று சொல்லவேண்டும். அம்மா புரிந்து கொள்வார்..
என்ன சொல்லவேண்டும்...
யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 6
“என்ன அன்னம் இன்னைக்கே வந்துட்டீங்க? நாளைக்குத் தான் வருவீங்கனு பார்த்தேன்” அடுக்களையில் சமையல் செய்து கொண்டே அன்னத்திடம் கதை அடித்துக்கொண்டிருந்தவள் மேல் தான் அர்ஜுனின் முழு கவனமும். ஹாளில் இருந்தாலும் காது முழுவதும் அடுக்களையில்.
“தம்பி தான் மா, பார்த்து நாள் ஆச்சு வா அன்னம்.. உன்ன பார்க்கனும் போல...