Monday, May 6, 2024

    Mr.Kanmani

    கண்மணி 5: கணவனின் கேள்வி சரியென உணர்ந்தவள், “அது நீங்கதான் எப்பவுமே எங்கிட்ட எதையும் மறைக்காம சொல்வீங்க..நம்ம கல்யாணம் ஆனா அன்னிக்கு நைட் கூட நீங்க உங்க வேலை கனவு எல்லாம் சொன்னீங்க…நான் கேட்கலயே..சோ அது மாதிரி நீங்க சொல்வீங்கனு நினைச்சேன்..” என அவள் எண்ணத்தை உரைக்க “ஹ்ம்ம்..அது என்னைப் பத்திம்மா..அதனால உங்கிட்ட எதையும் மறைக்கல…ஆனா இது...
    கண்மணி 4: ஊரெல்லாம் வெள்ளக்காடாய் இருக்க,எங்கும் மழை..மழை…மழை மட்டுமே..! இரண்டு ஆண்டுகளுக்கு முந்திய புயலை நினைவுப்படுத்தும் வண்ணம் தம்மக்களை நனைக்கவென இரவெல்லாம் ஓயாத அடித்த மழையால் சாலைகளில் வழமைப் போல் தண்ணீர் தேங்கி இருக்க…காரை செலுத்துவதே திருவுக்கு பெரும்பாடாய் இருக்க…ஒருவழியாக கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றவன் இவாஞ்சலின் இருக்கும் இடம் அறிந்து அவளை அழைக்கச் சென்றான். அந்த...
    கண்மணி 3: அடுத்த நாள் காலையில் யாழ்முகை மணி எட்டாகியும் ஆழ்ந்த நித்திரையில் இருக்க, திருநாவுக்கரசன் எழுந்து குளித்து விட்டு மனைவியின் அருகில் செல்பேசியில் அன்றையை செய்திகளை ஆன்லைனில் வாசித்துக்கொண்டே படுத்திருந்தான். நேரமாகியும் அவள் எழாமல் இருக்க,”யாழ்மா…யாழ்…எழுந்திரு..” என சொல்ல யாழ்முகையோ நித்திரை கலைந்து கண்களை சுருக்கி இயல்புக்கு வர முயன்றாள்.பின்பு தான் நேற்றைய திருமணம் அதைத்...
    கண்மணி 2: அன்று யாழ்முகைக்கும் திருநாவுக்கரசுக்கும் நல்லபடியாக திருமணம் முடிந்தது. யாழ்முகையின் மனமோ ,’இந்த படத்துல தான்டா அழகா கல்யாணம் நடக்குது..பாட்டெல்லாம் பாடுறாங்க…பெங்களூர் டேய்ஸ் போல கல்யாணம் நடக்கும்னு கனா கண்டா இங்க அதுக்கு எங்க வழி…?’ என அவள்  நினைத்து பெருமூச்சு விட பெங்களூர் டேய்ஸ் மாதிரி கல்யாணம் நடக்கனும்னா நீ முதல்ல நஸ்ரியாவாகவும்  உன் மாமா...
    கண்மணி 1:   ‘அழகா முருகா குமரகுருபரா விமல பாலா வினையை வெல்ல அருள்வாய் வசந்தனே ஆதரிப்பவனே..!’    என்று மனதில் தன் கஷ்டத்தில் உதவும் இஷ்ட தெய்வத்திடம் வேண்டிய யாழ்முகை தன் அறைக்குள் நுழைந்த அன்னையிடம் தனது வேண்டுதலை விண்ணப்பிக்கத் துவங்கினாள்.   “அம்மா….இன்னும் இரண்டு வருசம் கழிச்சு நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்மா…அப்பாகிட்ட சொல்லுமா…” என   கிட்ட தட்ட இரு நூறாவது முறையாக கெஞ்சிக் கொண்டிருந்தாள்.   “கண்மணி…நானெல்லாம்...
    error: Content is protected !!