Advertisement

கண்மணி 2:
அன்று யாழ்முகைக்கும் திருநாவுக்கரசுக்கும் நல்லபடியாக திருமணம் முடிந்தது.
யாழ்முகையின் மனமோ ,’இந்த படத்துல தான்டா அழகா கல்யாணம் நடக்குது..பாட்டெல்லாம் பாடுறாங்க…பெங்களூர் டேய்ஸ் போல கல்யாணம் நடக்கும்னு கனா கண்டா இங்க அதுக்கு எங்க வழி…?’ என அவள்  நினைத்து பெருமூச்சு விட
பெங்களூர் டேய்ஸ் மாதிரி கல்யாணம் நடக்கனும்னா நீ முதல்ல நஸ்ரியாவாகவும்  உன் மாமா பசங்க நிவின் பாலியாவும் துல்கர் சல்மானாவும் இருக்கணும் என்று பழித்த மனசாட்சியை அடக்கியவள் ,
‘நான் கூட நஸ்ரியா போல க்யூட் தான்…சொல்லப்போனா நஸ்ரியாவை விட உயரமும் கூட..ஆனா அந்த தடி தாண்டவராயன் நிவின் பாலியா..? அந்த துரும்பா இருக்கவன் துல்கர் சல்மானா..? இட்ஸ் ஆல் ஃபேட்..ஆனா அட்லீஸ்ட்  மார்கழி மாசத்து மல்லிகைப் பூவொன்னு சாங்-ஆவது நடந்திருக்கலாம்…’ என்று நொந்து கொண்டாள்.
திருமணம் முடிந்து இரவும் வரவும் இவளை கணவனது அறைக்குள் அனுப்ப அவன் இருந்த கோலம் கண்டு அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.அவள் பார்த்த படங்களிலெல்லாம் மாப்பிள்ளை முதலிரவு அன்று குடித்திருப்பான் இல்லாவிட்டால் சிகரெட் பிடிப்பான் இன்னும் மிஞ்சிப்போனால் அவன் பழைய காதலியோடு பேசியிருப்பான்.
‘ஆனால் காஸ்ட்யூம் அது பட்டு வேஷ்டி சட்டை தானே.ஒருவேளை யூனிஃபார்மை மாத்திட்டாங்களோ…? நமக்கு இன்னமும் அதே சேலை தானே இருக்கு…’ என இவள் எண்ணி விழிகள் அதிர்ந்தபடி நிற்க
அவனோ ஷார்ட்சும் ஸ்லீவ்லெஸ் பனியனும் அணிந்து அவளருகில் கூலாய் வந்து நின்று ,
“ஹே…! யாழ் வை ஷாக்மா..எனக்கு இப்படி இருந்தா தான் கம்பர்டபிள்…நம்ம ரூம்ல நம்ம இஷ்டப்படி தான் இருக்கணும்..நான் டெய்லி இப்படி தான் தூங்குவேன்..அதான்..நீயும் போய் உனக்கு வசதியான டிரஸை மாத்திக்கோ..” என  சர்வசாதாரணமாக சொல்ல
இவளுக்கோ கோபம் வந்தது.இவள் மட்டும் இவ்வளவு நேரம் அலங்காரம் செய்து கொண்டு முகமெல்லாம் கழுவி மேக்கப் போட்டு தூங்குவதற்கு  வாய்ப்பே இல்லாது வந்தால் இவன் என்னவென்றால் இப்படி நிற்கிறான்..? என கடுப்பானவள்
“இதை முன்னாடியே சொல்லியிருந்தா நானும் சேலை மாத்தாம மேக்கப் அப் போடாம இருந்திருப்பேன்ல…இப்ப முகம் கழுவி எனக்குத் தூக்கம் போயிடுச்சு…” என சிடுசிடுத்துக் கொண்டே அவனிடம் பாலை நீட்டினாள்.
“ஓஹ்…சாரிம்மா…சரி விடு..என்ன இது பாலா?” என அவன் கேட்க
“காலம் காலமா இதான் கொடுப்பாங்க…” என முணுமுணுக்க
“ப்ச்…கல்யாணத்துக்குக் கூட மெனுவை மாத்துறாங்க…இதுக்கு மாத்த மாட்றாங்களே..என்ன செய்யலாம்..” என்றவன் அவளிடமிருந்து பாலை வாங்கி அங்கிருந்த டீபாயின் மீது வைத்து அவனது  கப்போர்டைத் திறந்து எதையோ எடுத்துக் கொண்டு வந்தான்.இவள் அதுவரையில் நிற்பதைப் பார்த்தவன்,
“உட்காரு யாழ்..!” என சொல்ல அவளும் கட்டிலில் உட்கார்ந்தாள்.
யாழ்முகையைப் பார்த்துக் கொண்டே ,”அக்சுவலி எனக்குப் பால்னாலே அலர்ஜி…ஸ்மெல்லே ஒத்துக்காது..அதான் காபி பவுடர் எடுத்து வைச்சிருந்தேன்…இப்ப இந்த பாலில் காபி பவுடரைக் கலந்துட போறேன்…ஈசியா குடிச்சிடலாம்..உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு யாழ்” என கர்மசிரத்தையாக காபி கலந்து கொண்டே கேட்க
“நைட்ல காபி குடிச்சா எப்படி தூங்குறது…? தூக்கம் போயிடும் எனக்கு..”
அவளை கண்களை சுருக்கி குறுகுறுவென பார்த்தவன் “இன்னிக்கு நமக்கு சிவராத்திரி தான் யாழ்…நீ தூங்கமா தான் இருக்கணும்..சும்மா தூக்கம் தூக்கமா வருதுன்னு புலம்புற நீ…கண்டிப்பா நீ காபி குடிச்சே ஆகணும்..” என்றவன் அவளை காபி குடிக்க வைத்து தானும் கொடுத்தான்.
“முதலிரவில் காபி கலந்த முதல் மாப்பிள்ளைனு என்னை வரலாறு பேசும்ல யாழ்…” என திரு சிரித்துக்கொண்டே கேட்க
“ம்ம்….முதலிரவுல ஷார்ட்ஸ் அணிந்த மாப்பிள்ளையை விட்டுட்டீங்களே..!” என எடுத்துக் கொடுக்க அவளுக்கே அவனிடம் அத்தனை இயல்பாய் உரையாடிதில் ஆச்சரியம் தான்.
ஆனால் இப்படி இரவில் ஓரிரு முறையே பார்த்த ஆடவனோடு  தனியாக திருமண என்ற பந்தத்தில் இணைந்த பின் இதெல்லாம் சாதாரணம் என்றே தோன்றியது.
 
“வாவ்…சூப்பர்…மிஸஸ்.திருன்னு நிரூபிக்கிற..அதே அதே…இந்த காபி புரட்சியைப் பத்தி நாளையை வரலாறு பேசும்..இது எல்லாம் திரு ரூல்ஸ் யாழ்…என் வழி..தன் வழி…” என சொல்ல அவளோ பக்கென்று சிரிக்க
“ஹா ஹா…சரி யாழ்..உங்கிட்ட நிறையா பேசணும்…” என்றவன்
“நான் உன்னைக் கல்யாணம் செஞ்சிக்க உண்மையான ரீசன் என்னனா..சீக்கிரம் கல்யாணம் செஞ்சாதான் எனக்கு தாத்தா சொத்தையெல்லாம் தருவேன்னு சொன்னாரு…” என  சாதாரணமாக சொல்ல அவளோ அதை அசாதாரணமாக எடுத்துக் கொண்டாள்.
கற்பனை குதிரை ஜெட் கணக்காய் ஓட கணவனைப் பற்றி கண்டமேனிக்கு யோசித்தாள்.
‘இவனுக்கு சொத்து கிடைக்க என்னைக் கல்யாணம் பண்ணிருக்கான்..அதனால தான் அவசர அவசரமா கல்யாணம் செஞ்சானா..? இவன் மட்டும் இப்படி செய்யலன்னா  நான் மேல படிச்சிருப்பேன்ல..எரும….பன்னி..’ என அவனை திட்ட
அவளது அமைதியைக் கண்டவன் , “யாழ்….யாழ்….நீ தாறுமாறா யோசிக்காத தாயே….முதல்ல நான் சொல்ல வரதையெல்லாம் நீ புரிஞ்சிக்கிட்டு மொத்தமா திட்டு..” என சொல்லி விட்டு தொடர்ந்தான்.
“நான் என்னோட வேலையை ரிசைன் பண்ணிட்டேன்…” என அடுத்த அணுகுண்டைப் போட அவளோ விழிகள் குடையாய் விரிய அவனை நோக்க,
“யூ சீட்…………..என்னை இன்னும் எத்தனை விசயத்துல ஏமாத்தி இருக்கீங்க…எல்லாமே பொய்…பித்தலாட்டம்….” என கத்த, அவசர அவசரமாக அவள் வாயை மூடியவன்,
“ஷ்….அய்யயோ……யாழ்மா…நீ நினைக்கிற மாதிரி  நான் வில்லன்லாம் இல்லமா..அக்மார்க் ஹீரோ தான்..நீ கண்ட படம் கதையெல்லாம் படிச்சு என்னை தப்பா பார்க்காத…” என சொல்ல அவளோ விடாது அவனை முறைத்தாள்.
அவனும் தொடர்ந்து சொல்லத் துவங்கினான்.
“யாழ்மா… நான் படிச்சது என்னனு உனக்குத் தெரியுமா…?”
‘அடப்பாவி படிக்கவும் இல்லையா..? படிச்ச மாப்பிள்ளைன்னு சொல்லி ஏமாத்திட்டியா..?ஃபராடு பயலே…அய்யோ அப்பா பெரியப்பாவுக்கெல்லாம் உண்மை தெரிஞ்சா தாங்க மாட்டாங்களே….’ என மனதுக்குள் புலம்ப அவளது விழிகள் பேய் படம் பார்த்த பிரதிபலிப்பைக் கொடுக்க அதைக் கண்டுகொண்டவன்
“அடியே….என்னடி….மறுபடியும் தப்பாவே தாட் போகுதா உனக்கு…?  நான் என்ன படிச்சேனு கேட்டேன்…?”
“எம்பிஏ..” என்றாள் மெதுவாக.அடுத்து எந்த பாம் போடுவானோ என்று பயந்து.
“எஸ்.எம்பிஏ..எம்பிஏ இன் ட்ராவல் அண்ட் டூரிஸம் மேனேஜ்மெண்ட்…எனக்கு சின்ன வயசிலேந்து ட்ராவல்னா அவ்வளவு பிடிக்கும்…ஒரு ஆட்டோ ரைட்னா கூட அப்படி ரசிப்பேன்…சோ பெருசா ஒரு ட்ராவல் மேனேஜ்மெண்ட் கம்பெனி ஆரம்பிக்கணும்னு தான் என்னோட ப்ளான்..ஆனால் இதுல நான் எப்படி ஜெயிப்பேன்னு என் தாத்தாவுக்கு கவலை….அது மட்டுமில்லாம நிறையா இன்வெஸ்ட்மெண்ட் தேவை…என்னோட ஐடியாஸ் பெருசு…அதான்..பேங்க்ல லோன் வாங்கினாலும் என் தாத்தா தானே ஷ்யூரிட்டி போடனும்..அதுக்கு தாத்தாகிட்டேயே லோன் வாங்கிடலாம்னு பணம் கேட்டா..சீக்கிரம் நான் கல்யாணம் பண்ணிக்கனுமாம்..அதை அவர் பார்க்கணுமாம்..அது மாதிரி கொஞ்ச நாள் வேலை செய்யணுமாம்..அப்பதான் என்னால முழுசா தொழிலைப் புரிஞ்சிக்க முடியுமாம்..அதனால் தான் சீக்கிரம் மேரேஜ்..”
“அதுக்கு வேற யாராவது பண்ணிக்க வேண்டியது தானே.. நானாவது லேட்டா கல்யாணம் செஞ்சிருப்பேன்ல…”
“அப்புறம்..” என நொடித்தவன் ,
“நினைப்புத்தான்…உங்க பெரியப்பா உனக்கு அஞ்சு மாப்பிள்ளைப் பார்த்து வைச்சிருந்தார்…அதில் நான் ஃப்ர்ஸ்ட் சாய்ஸ்…நானில்லைன்னா இன்னொருத்தர்…உன்னை எக்ஸ்போர்ட் செய்யாம அவங்க தூங்குறதா இல்ல..சரி நமக்கும் சீக்கிரம் கல்யாணம் செய்யணுமே பொண்ணும் நல்லாயிருக்கே.. நம்ம வீட்டுக்கே இம்போர்ட் செஞ்சுடலாம்னு ப்ளான் போட்டேன்..”
அவள் அமைதியாக இருக்க ,அவள் கைகளை எடுத்துத் தன் கைக்குள் பொத்தி வைத்தவன் ,
“எதுக்கு சீரியஸ் ஆகுற யாழ்..?யாராவது ஒருத்தரைக் கல்யாணம் செஞ்சித்தானே ஆகனும்.அதான் எங்க தாத்தா காட்டினா உன்னைப் பண்ணிக்கிட்டேன்..இப்ப கூட ஏன் நான் இதையெல்லாம் சொல்றேனா எனக்கும் என் மனைவிக்கும் எந்த  விசயத்திலேயும் ஒளிவு மறைவே இருக்க கூடாது…எல்லா விசயத்திலேயும்…அதான்..”
“என்னம்மா..இன்னும் அமைதியா இருக்க…?”
“இல்ல….ஒண்ணுமில்ல.. நீங்க சொல்லுங்க..?”
“இப்ப என்னோட கனவு டூர் கம்பெனி ஸ்டார்ட் செய்யணும்…அதான்..உலகம் முழுக்க சுத்தணும்..ட்ராவல் செய்யலன்னா வாழ்றதே வேஸ்ட் அப்படினு தான் என் தாட்.. ட்ராவல் செஞ்சா தான் தெரியும் நம்ம இருக்க இடம் உலகத்துல எவ்வளவு சின்னதுனு…ஒரு அடக்கத்தை தரும்…ட்ராவல் கிவ்ஸ் மாடஸ்டி..ஒரு இடத்தைப் பத்தி படிக்கிறதோ கேட்கிறதோ விட நேர்ல உயிரும் உணர்வுமா அந்த இடத்தை உணரும் சுகம் இருக்கே….சான்சே இல்ல..” என்றான் ஆர்வம் ஆழியாய் அருவியாய் பொங்க..
அவனது ஆர்வம் கண்டவள் ,”எந்த இடம்லாம் போயிருக்கீங்க.?” என கேட்க
“நான் யூ.எஸ் போயிருக்கேன்…தென் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா,டர்கீ இங்கெல்லாம் போயிருக்கேன்… இஸ்தான்புல் அப்படி இருக்கும் தெரியுமா..? டர்கீயோட தலை நகரம்..இரவில் பார்த்தால் அந்த நகரமே  நிலா போல இருக்கும்.. இந்தியாவுல நான் டெல்லி,கேரளா,ஆந்திரா,கர்நாடகா,மும்பை,கோவா,ராஜஸ்தான்,காஷ்மீர் எல்லாம் போயிருக்கேன்..”
“விட்டா எல்லா ஸ்டேட் பெயரும் சொல்வீங்க போல…?”
“ஹாஹா..கண்டிப்பா சொல்லிடணும்…அதான் ஆசை..நீ எங்க போயிருக்க..?”
“ப்ச்..நான் குன்றத்தூர் தாண்டி எங்க காலேஜ் போயிருக்கேன்..அப்புறம் திருப்பதி,கொடைக்கானல் போயிருக்கேன்…”
“ஏன்..?”
“ஏன்னா…அவ்வளவுதான் எங்க வீட்ல கூட்டிட்டுப் போனாங்க…” என கொஞ்சம் கடுப்போடு சொல்ல
“சரி…சரி..நான் இன்னும் ப்ரான்ஸ் போகல…ஏன் தெரியுமா..?”
யாழ்முகையோ கண்ணில் சிரிப்போடு, ”காசு இல்லயா..??இல்ல விசா கிடைக்கலயா..?”
“நீ கிடைக்கல…” என்றான் அவளை ரசனையாகப் பார்த்துக்கொண்டே.
அவன் தான் பெண்பார்க்க வந்த அன்றே அவளை அப்படி பார்த்தானே.. கடமையில் அவன் கர்மவிரனாயிற்றே…!! அன்றே அப்படியின்றால் இன்றோ மொத்தமாக அவளுக்கான ராயல்டி அவனிடம் தானே…!! அவனுக்கே அவனுக்கானவள்..!! அதில் என்ன கஞ்சத்தனம்..!!
அவள் தேகயறையில் சில்லென்ற சாரல் தூவ அவனை விழியகல நோக்க “எஸ்…ப்ரான்ஸ்ல பாரீஸ் காதல் நகரம்..சோ அதை என்னோட மனைவியோட தான் பார்க்கணும்னு ஆசை…” என்றதில் குமரியுள்ளத்தில் குற்றால சாரல்.
“அப்போ டெல்லி போனப்ப ஆக்ராவுல தாஜ்மஹால் பார்க்கலயா..நீங்க….?” என அவனை லாக் செய்ய கேட்டாள் யாழ்முகை.
ஆனால் திருநாவுக்கரசன் அதுக்கெல்லாம் அசரமாட்டானே..அவன் ‘நாவுக்கரசன் ஆயிற்றே…!’
“ஓஹ்…அது வேறயா…காதல் நகரம் ரொம்ப அழகு…சோ உன்னோட பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்..பட் என்னைப் பொருத்தவரை தாஜ்மஹால் காதலோட சின்னமெல்லாம் இல்லை..உயிரோட இருக்கும்போது காதலியை நல்லா பார்த்துக்கணும்.மனைவியை நேசிக்கணும்..அதை விட்டு செத்த பின்னாடி என்ன கல்லறை வேண்டி கிடக்கு…?அவ செத்த பின்னாடி அவர் என்ன வேற ஒருத்தியோட வாழலையா என்ன…?” என அவன் புருவம் உயர்த்தி கேட்க
“ஆனாலும் எல்லாருக்குமா கட்டினார்…மும்தாஜை மட்டும் தான் நேசிச்சார்…அதனால் கட்டினார்..அவரோட காதல் மும்தாஜுக்கு மட்டும் தானே…?” என இவள் காரமான குரலில் கேட்க
“காதலா..?நோ வே…!…அந்தம்மா உயிரோட இருந்தப்போ அவரோட பிள்ளைங்களை சுமக்க தான் யூஸ் செஞ்சு கடைசில அவங்க பிரசவத்துல தான் இறந்தாங்க..சோ அது ஒண்ணும் எனக்குப் பெருசா காதல் சின்னமா தெரில..ஆனா கட்டிட கலையில் அது ஒரு மைல்கல்…அந்த காலத்துல அவ்வளவு அழகான ஒரு பில்டிங்…மார்பிள்ஸை இழைச்சுக் கட்டினது ரியலி க்ரேட்..” என அவன் சிலாகிக்க யாழ்முகைக்கோ கடுப்பாக இருந்தது.
‘ப்லீங்க்ஸ் பத்தி பேசினா பக்கி பில்டிங் பத்தி பேசுறான்…காதலை பார்க்காம கட்டிடத்தைப் பார்க்கிறான்… இடியட்! ஆயிரம் பேர் இருந்தாலும் மும்தாஜ் ஒருத்திக்குத் தானே கட்டினாரு…?’ என அவள் மனம் வாதம் செய்தது.
அவளைப் பொருத்தவரை காதல் என்பது மனம் மட்டுமே இணைந்த ஒன்று.அது மும்தாஜுக்கு மட்டுமே வாய்த்தலால் அவள் அதிர்ஷ்டசாலி.மீதி அத்தனை பேகம்களும் ஷாஜகானின் மனதை தொடவில்லை என்பதே அவளது எண்ணமாய் இருக்க,
அவள் கணவனுக்கோ கவிப்பேரரசு வைரமுத்து சொன்னதுபோல் ,’காதல் மனம் மட்டும் சம்மந்தப்பட்டால் அது நாய்க்குட்டியிடமும் உடல் மட்டுமே சம்மந்தப்பட்டால் விலைமாதுவிடம் இருந்திருக்கலாம்..ஆனால் அது உயிரும் உடலும் ஒருசேரும் உன்னத உணர்வன்றோ…?
அது ஷாஜகானைப் பொருத்தவரையில் மும்தாஜிடம் மட்டுமே உடல் மனம் இரண்டும் இணைந்திருக்கலாம். ஆனால் திருநாவுக்கரசனைப் பொருத்தவரையில் காதல் ஒருத்தியிடம் ஒரு முறை உடல் உள்ளம் எல்லாம் உன்மத்தமாகி  உயிர்செல்களின் உயிர்ப்பாய் தோன்றும் உணர்வு…!!
அந்த வகையில் யாழ்முகை மும்தாஜை விட அதிர்ஷ்டசாலி தான்..
ஆனால் என்று அவள் உணர்வாள்..?இல்லை திரு அதை உணரவைப்பான்…??
ஒரு பெருமூச்சை விட்டவன் ஹஸ்கி குரலில் ,”யாழ்……எனக்கு ரொம்ப நாளா ஒரு இடத்தை சுத்திப் பார்க்க ஆசை…” என சொல்ல
அவனது ஹஸ்கி குரலில் இவளுக்கு தேகம் சிலிர்த்த்து.காதருகில் அல்லவா கணவனின் குரல் கானமாய் ஒலித்தது?
“நீ ஹெல்ப் பண்ணுவியா…?”
என்ன ஏது என்று கேட்காமலேயே சரி என்றாள்.
இதுவரை இருந்த ஷாஜகான் விசயத்தில் இருந்த கோபம் கூட பின்னுக்குப் போய் விட்டது..ஒருவேளை இவன் இவளிடம் மனம் விட்டு பேசியதாலோ என்னவோ..? அவள் வீட்டு ஆண்கள் யாரும் இப்படி மதித்து விசயங்களை சொல்லமாட்டார்கள்..ஒரு வேளை அப்பா அம்மாவிடம் சொல்வாரோ என்னவோ..?கண்டாளா என்ன..?
அவளது யோசனைகள் ஒரு அனாலிசிஸாக ஓடிக்கொண்டிருக்க அவளது கணவனோ ,
“ஹே…நிஜமாத்தான் சொல்றியாம்மா..?” என்றான் அத்தனை உற்சாகமாய்.
அவனது உற்சாகம் எதனால் என அறியாமல் அவள் முழிக்க அவளை இழுத்தவன்,
“நான் உன்னை தான் சுத்திப்பார்க்க ஆசைப்பட்டேன் டா…” என்றான் ஆசை மட்டுமே வார்த்தைகளை நிறைத்திருந்த குரலில்.
அதன்பின் சுற்றுதலும் புணர்தலும் உணர்தலும் உயிர்வரை ஒரு இன்ப நகர்தலுமாய் செல்ல விடியலும் இனிதே பிறந்தது.

Advertisement