Perugaadhal Kooduthadi
பெருங்காதல் கூடுதடி! – 8
வற்றாத ஊற்றெனப் பொங்கும்
உன் நினைவுகளை வைத்துக்கொண்டு
எப்படி சொல்வேன் நான்???
உன்னை மறந்து விட்டேன் என்று!!!
சித்தார்த் அன்று மாலையில் பிரதீப்புடன் தோப்பை சுற்றிவரும் போது, “என்ன உங்க அக்கா இன்னைக்கு ரொம்ப டல்லா இருந்தா?” என தூண்டில் போட்டான்.
பொதுவாக மற்ற விஷயங்கள் பற்றி பேசினாலும் வைஷுவை குறித்த பேச்சு அதிகம் இருவருக்குள்ளும் எழுந்ததில்லை....
பெருங்காதல் கூடுதடி! – 7
அழகும் பழமையுமான இரண்டடுக்கு தோப்பு வீடு அந்த மாந்தோப்பில் வீற்றிருந்தது. அந்த வீட்டின் வலது புறம் வரிசையாக ஐந்து சிறு வீடுகள். அங்கு தான் வேலை பார்ப்பவர்கள் சிலர் தங்கி இருந்தார்கள். மீதமிருப்பவர்கள் அருகிலிருக்கும் கிராமங்களிலிருந்து தினமும் பணிக்கு வந்து செல்பவர்கள்.
தோப்பு வீட்டின் மாடி பகுதி முதலாளி குடும்பம் வந்தால் தங்குவதற்காக...
பெருங்காதல் கூடுதடி! – 6
நதிக்கரைகளும், நதியோர மரங்களும்
வற்றிய நதி எங்கே என்று தேடாமல் போகுமா???
மேகக்கூட்டங்களும், நட்சத்திரங்களும்
தேய்ந்த நிலவு எங்கே என்று தேடாமல் போகுமா???
பொன்ராமிற்கு மகன் பேசியதிலிருந்து பெரும் மனவுளைச்சல்.
பெண்களை மதிக்கத் தெரியாதவர் நீங்கள், உங்கள் புத்தி கீழ்த்தரமானது, அம்மாவை வேலைக்காரியைப் போல நடத்துகிறீர்கள், இத்தனை சம்பாதித்தும் உங்களால் அம்மாவை சந்தோஷமாக வைத்திருக்க முடிந்ததா என்றெல்லாம் மகன்...
“நீங்க அம்மாவை ட்ரீட் செய்யறதை பார்த்துத் தான் நான் வளர்ந்தேன். என் பார்வையில அம்மா உங்களுக்கு எப்படி ஒரு பொம்மை மாதிரி உங்களை சுத்தியே இருக்காங்களோ… எனக்கும் அப்படி ஒரு பொண்ணு வேணும்ன்னு எண்ணம். ச்சே! எவ்வளவு மட்டமான புத்தி... நீங்க எப்படி வேணா இருந்திருக்கலாம். நான் படிச்சவன் தானே? எனக்கு சுயபுத்தி வேணாம்......
பெருங்காதல் கூடுதடி! – 5
“அப்படின்னா இந்த வருஷமும் பிறந்தநாள் கொண்டாட்டம் வைக்கக் கூடாது அப்படித்தானே?” தெளிவாகச் சொல்லிவிட்ட விஷயத்திற்கு மீண்டும் தெளிவு தேவைப்பட்டவரை போலக் கேட்பவரை என்ன தான் செய்வது என்பது போல எரிச்சலாகப் பார்த்து வைத்தான் சித்தார்த்.
மகனின் பிறந்தநாள் என்று வாழ்த்து சொல்லியிருந்தால் பரவாயில்லை. அதற்கு மனம் இல்லை. இவர் கௌரவத்திற்குப் பிறந்தநாள்...
ஏன் இப்படி இறுகிப் போனான்? ஏன் யாரையும் மதிக்க மாட்டேன் என்கிறான்? ஏன் இப்படி தான்தோன்றித்தனமாக எந்தவித பிடிப்பும் இல்லாமல் வாழ்கிறான்? என ஒன்றும் புரியவில்லை பகவதிக்கு.
அவனிடம் இதுகுறித்து கேட்கவும் முடியாது. அவனை தன்னால் சீர்ப்படுத்தவும் முடியாது. மனைவியாகத் தோற்று நின்றபோதை விட அன்னையாய் தோற்று நிற்கும் இந்த சூழல் அத்தனை வலித்தது. தான்...
பெருங்காதல் கூடுதடி! – 4
தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை…
தேடிப் பார்ப்பதென்றே மெய்த்தேடல் தொடங்கியதே…
அவனது அறையில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலின் வரிகள் சித்தார்த்தின் மனதை அழுத்திப் பிசைய, தொய்ந்து போனவனாகக் கையாலாகாத தனத்துடன் இருக்கையில் கண் மூடி அமர்ந்திருந்தான்.
அவன் விழிகளுக்குள் அவன் தொலைத்து விட்ட தேவதையின் பிம்பம்.
வைஷ்ணவியைத் தேடி அலைந்தவனுக்கு இந்த முறையும்...
பெருங்காதல் கூடுதடி! – 3
அடுத்த மூன்று நாட்களுக்கு கல்லூரி செல்லும் நிலையில் வைஷ்ணவி இல்லை. காய்ச்சலால் ரொம்பவும் அவதிப்பட்டாள்.
மகளின் நிலைக்குத் தான் தான் காரணம் என்று எண்ணி மறுகிய லலிதாவிற்கு அவளின் வேதனையை காணவே முடியவில்லை. அவள் அவஸ்தைப் படும்போதெல்லாம் தாயாய் அவரின் உள்ளம் துடித்தது.
ஏதோ ஒரு கோபத்தில் கண்டபடி அடித்து விட்டவருக்கு, தான்...
“ஏன்டா விவஸ்தையே இல்லாமா அந்த பொண்ணுக்கு காலேஜ் பீஸ் கட்டினதை பத்தி எல்லாம் பேசிட்டு… அவ இவனை தேடி வந்ததே பணத்துக்காகன்னு சொல்லிட்டு, இப்ப இப்படி பேசிட்டு திரியறான். இவன் பேசினதெல்லாம் இவனுக்கு ஞாபகம் இருக்குமா இல்லையா?” என கௌசிகா புலம்ப,
“அதெல்லாம் ஏன் இல்லாம… அப்ப இருந்த கோபத்துல அந்த பொண்ணை நோகாடிச்சே ஆகணும்ன்னு தான்...
பெருங்காதல் கூடுதடி! – 2
வைஷ்ணவிக்கு வகுப்பைக் கவனிக்கும் மனநிலை சுத்தமாக இல்லை. உயிர் வற்றிப் போன நிலையில் இருந்தாள்.
‘ஏன் தன் வாழ்வில் இப்படி ஒரு ஏமாற்றம்? என் காதல் கனவாகக் கரைய வேண்டுமா? அதுவும் இத்தனை பழிச் சொற்களோடு…’ என்ற தவிப்பில் துக்கம் தொண்டையை அடைத்தது. பட்ட அவமானத்தில் முகம் சிறுத்துச் சிவந்துவிட, வகுப்பறைக்குப்...
ஆழ்ந்த மூச்சிழுத்து தன்னை சமன் செய்தவள், மெல்ல அவனை ஏறிட்டுப் பார்த்து, “இன்னைக்கு உன் பர்த் டே செலிபிரேட் பண்ணிட்டு, மெல்ல நாளைக்கு நிதானமா சண்டை போடுவோம்” என்றாள் கசங்கிப் போன முகத்தோடு. முகத்தில் உயிர்ப்பே சுத்தமாக இல்லை.
“ஹான் செலிபிரேஸன்… அது போயிட்டு தான் இருக்கு… மேடம் கூட சேர்ந்தா அட்வைஸ் மழை தானே...
பெருங்காதல் கூடுதடி! – 1
“அரச்சனை யாரு பேருக்குன்னு சொல்லுங்கோ…” என்று கோயில் குருக்கள் கேட்க,
“சித்தார்த்… பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி சுவாமி…” என சொல்லி அர்ச்சனை கூடையை நீட்டியிருந்தாள் வைஷ்ணவி.
காலையில் எழுந்து வழக்கமாகச் செல்லும் வேலைகளுக்குத் தம்பியை அனுப்பிவிட்டு தன்னவனின் பிறந்ததினம் என்பதால் கோயிலுக்கு வந்திருந்தாள் அவள்.
வழக்கமாக செல்லும் வேலைகள் என்றால், தினமும் காலையில்...