AP
ஆனந்த போர்க்களம் – 14
சந்தியா வாடிய பயிர் போல ஆனாள். ஒரு வீம்பில், கோபத்தில் விலகி நின்றவளுக்குக் கணவன் தன்னை இத்தனை நாட்களாகியும் திரும்பியும் பார்க்காதது பலத்த அடியாக இருந்தது.
‘கோபம் வந்தால் தன்னை வேண்டவே வேண்டாம் என்று இருந்து விடுவாரோ... இந்த கல்யாணமே ஏன் செய்தோம் என்று கவலைப்பட்டவர் தானே!’ அவளுக்கு நினைக்க நினைக்க...
ஆனந்த போர்க்களம் – 13
கணவன் என்ற உறவிருந்தும் உரிமையாக இதுவரை எதற்கும் வீரேந்திரனை சந்தியா அணுகியதில்லை.
முன்பு ஒருமுறை அவன் கல்லூரி நண்பர்கள் சந்திப்பில் சண்டையிட்டபோது தடுக்க முயன்றாள். அதற்கே அவன் தன் கழுத்தை நெறிக்குமளவு முயன்றதை இன்று வரையிலும் அவளால் கடந்ததுவர முடியவில்லை.
என்னவோ அதிசயத்திலும் அதிசயமாக இப்பொழுது சில தினங்களாகத் தான் அவன் பார்வையே...
ஆனந்த போர்க்களம் – 12
“அது... அவரு இன்னைக்கு கடைக்கு கூட்டிட்டு போனாங்கப்பா. துணி எல்லாம் இங்கே தானே தைக்க கொடுத்து பழக்கம். அதுதான் ஸ்ரீதரன் கூட இங்கே வந்து இறங்கிட்டேன்…” சங்கடமாகச் சொன்னாள் சந்தியா.
நாராயணனுக்கு இன்னமும் முகம் தெளியவில்லை. மகளின் முகத்திலிருந்த சோர்வு, அவரின் கூரிய பார்வையைக் கண்டதும் அவளின் உடல்மொழியில் தென்பட்ட பதற்றம்,...
ஆனந்த போர்க்களம் – 11
சந்தியாவின் இரவு அலறல்களால் வீரேந்திரனுக்கு முன்பே அவளின் அச்சம் குறித்து உறுத்தத் தொடங்கியிருந்தது.
ஆக, மாமனார் நாராயணனிடம் பொதுவாக இதுகுறித்து அப்பொழுதே விசாரித்திருந்தான்.
“சந்தியா ரொம்ப வீக்கா இருக்கா மாமா… அடிக்கடி காய்ச்சல் வேற வருது… சரியா சாப்பிடறதே இல்லை” என்று அவன் சுற்றி வளைத்துக் கேட்டபோது, அவர் முகத்தில் அளவற்ற ஆனந்தம்....
ஆனந்த போர்க்களம் – 10
சந்தியாவும், ஸ்ரீதரனும் உடைகளை எடுத்து முடித்திருந்தனர். வீரேந்திரனும் பொறுப்பாக அவர்களை ஆட்டோவில் ஏற்றி விடுவதற்காக வாயில் வரை வந்திருந்தான்.
அந்த நேரத்தில் தான் யாரும் எதிர்பாராத விதமாக அந்த சம்பவம் நடந்தது.
கடையின் வெளியே யாருக்காகவோ இரு இளம் பெண்கள் காத்திருக்க, அதில் ஒரு பெண்ணிடம் ஒரு இளைஞன் வம்பளந்து கொண்டிருந்தான்.
அத்தனை நேரமும்...
ஆனந்த போர்க்களம் – 9
நேற்று இரவு உறங்கிய மனைவிக்கு முத்தமிட்டதற்காக மன்னிப்பு கேட்ட வீரேந்திரன், இன்றிரவு மீண்டும் தன் வசமிழந்து சில முத்திரைகளை அவள் முகத்தில் பதித்த பிறகே கண் அயர்ந்தான்.
ருசி கண்ட பூனை அனுதினமும் இதைத் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
சந்தியா இப்பொழுதெல்லாம் கணவனிடம் ஒருசில வித்தியாசங்களை உணர்கிறாள். கணவன் ஓரிரு நொடி அவளையே ஊன்றிப்...
ஆனந்த போர்க்களம் – 8
இத்தனை நாட்களும் தம்பதியருக்குள் இணக்கம் இருந்ததில்லை என்றபோதும் சண்டையும் இருந்ததில்லை.
ஆனால் இன்றைய சண்டை இருவரையுமே வெகுவாக பாதித்தது.
அனைவரின் முன்பும் தன்னை அடக்கினாளே என்று மனைவி மீது கோபத்தில் இருந்த வீரேந்திரன், திருமணத்தன்று உறக்கத்தில் அரற்றியது போலவே இன்றும் மனையாள் அரற்றுவதைப் பார்த்ததும் தன் கோபம் மொத்தமும் மறந்து போனான்.
அவளின் ஒவ்வொரு...
ஆனந்த போர்க்களம் – 7
ஒருவித எரிச்சலோடு புடவையைச் சுற்றிக் கொண்டிருந்தாள் சந்தியா. இந்த வீட்டில் அவளுக்கு ஒத்து வராத ஒரே ஜீவன் அவளின் அருமை கணவன் தான்.
பெரும்பாலும் ஒதுங்கியே இருப்பவன், அத்தி பூத்தாற்போல் எங்காவது அழைத்துச் செல்வதும் உண்டு. திருமணம் முடிந்த சில வாரங்கள் உறவினர் வீட்டில் கொடுத்த விருந்துகளுக்குப் போய் வந்தார்கள். அதன்பிறகு...
ஆனந்த போர்க்களம் – 6
புது மஞ்சள் தாலி மின்ன அழகு பதுமையாய் அமர்ந்திருந்தாள் சந்தியா. திருமணம் நல்லபடியாக முடிந்திருந்தது. இதுநாள் வரை ஒரு துளி ஈடுபாட்டைக் கூட வீரேந்திரன் அவள்மீது காட்டியிருந்ததில்லை. இருந்தாலும் இந்த இரவை எதிர்கொள்வதில் அவளுக்கு அத்தனை பயமாக இருந்தது.
வெட்க சிவப்பே கன்னங்களில் ஏறாமல் மணமகளாகிய பெருமைக்குரிய சந்தியா, இந்த நாளின்...
ஆனந்த போர்க்களம் – 5
எல்லாரையும் ஓடவிட்டு விட்டு சோபாவில் நடுநாயகமாகக் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான் வீரேந்திரன்.
கொஞ்சம் தள்ளி கையை பிசைந்தபடி சந்தியா நின்றிருந்தாள். பயத்தில் அவளின் இதயம் தடதடத்துக் கொண்டிருந்தது.
“எனக்கு ஒரு டீ…” என்றான் அதிகாரமாக.
‘என்னது?’ என அதிர்ந்து விழித்து விட்டாள். ஏற்கனவே அவன் சொன்ன மிசஸ். வீரேந்திரனிலேயே சரியாகச் சுவாசிக்க...
ஆனந்த போர்க்களம் – 4
“சந்தியா…” வேலைக்குக் கிளம்பிய நாராயணன் வாசல் வரை சென்றுவிட்டு மீண்டும் அழைக்க, “சொல்லுங்கப்பா…” என உடனேயே ஓடி வந்தாள்.
அவளின் தலையை ஆதரவாக வருடிப் பரிவுடன் பார்த்தார். ஒன்றும் புரியாமல் அவரையே பார்த்திருக்க, “அப்பா மேல எதுவும் கோபம் இல்லையே…” என்றார் கவலையுடன்.
அவரின் குரலின் தவிப்பிலும், கவலையைச் சுமந்திருந்த முகத்திலும் சந்தியாவுக்கு...
ஆனந்த போர்க்களம் – 3
வேறு வழியில்லாமல் தான் பெண் பார்க்கும் நிகழ்விற்கு வீரேந்திரன் கிளம்பி வந்தான். இங்கு வந்த பிறகும் ஏதாவது ஒரு வாய்ப்பில் இந்த திருமணம் தடைபடுமாயின் அதிகம் மகிழப்போவது அவனாகத்தான் இருக்கும்.
இவனை விட அதிகமாக மகிழ மணப்பெண் இருக்கிறாள் என அவனுக்கு எங்கே தெரியப் போகிறது?
நாராயணன் வீட்டிற்கு உறவுகள் சூழ வந்திறங்கியவனுக்கு...
ஆனந்த போர்க்களம் – 2
“ஏன் மாப்பிள்ளை உனக்குன்னு பொண்ணு கொடுக்க நான், நீன்னு போட்டி போடறாங்க. இத்தனை நாளும் யாருகிட்டேயும் பிடி கொடுக்காம இருந்த… இப்ப அந்த நாராயணன் கேட்டதும் ஒத்துக்கிட்ட. கொஞ்சம் யோசிச்சு பார்த்திருக்கலாமே…”
வீரேந்திரனிடம் அத்தனை எளிதில் யாரும் கேள்வி கேட்டுவிட முடியாது. யாரும் கேட்கத் துணியாததை அவனது ஒன்றுவிட்ட அக்கா கணவன்...
ஆனந்த போர்க்களம் – 1
சொந்த தந்தையிடம் தான் இத்தனை தூரம் போராட வேண்டியிருக்கும் என்று சந்தியா எண்ணிப்பார்த்ததே இல்லை. அதிலும் தன்மீது உயிரையே வைத்திருக்கும் தந்தையிடம்!
கண்ணில் கரைகட்டி நின்ற கண்ணீருடன் மீண்டும் தந்தையிடம் மன்றாடினாள். “அப்பா… பிளீஸ் புரிஞ்சுக்கங்க அவருக்கும் எனக்கும் ஒத்தே வராதுப்பா…”
அவள் சொல்லிக்கொண்டிருக்கும் விஷயத்தில் இம்மிகூட இணக்கம் காட்டாமல், “வீரா தான்...