Monday, June 17, 2024

    நதியின் ஜதி ஒன்றே!

    "என்ன புதுசு. அதெல்லாம் இல்லை, நீங்க எப்போவும் என் அஜு தான்" என்றாள் பெண்.  அஜயின் முகம் மாற ஆரம்பித்தது. கீழ் உதட்டை மடக்கி கடித்தான். "நீங்க கோவப்பட்டீங்க எனக்கு பேச முடியாது" என்றாள் உஷாராக. அஜய், "மேல சொல்லு" என்றான். "அதான் சொல்லிட்டேனே" என்றாள் பெண். "என்ன சொன்ன?" "நீங்க என் அஜுன்னு" பெண் குரல் மெலிதாக மாற, பார்வை...
    நதியின் ஜதி ஒன்றே! 5 தொடர்ந்த நாட்கள் பெரிதான மாற்றம் இல்லாமல் சென்றது. ஜீவிதாவிற்கு கல்லூரி வாழ்க்கை பழகியது. நண்பர்கள் கிடைக்க, கொஞ்சம் ஜாலியாகவும் இருந்தாள். நண்பர்களுக்கு இறுதி வருடம் என்பதால் மெனக்கெட்டு படித்தனர். ப்ரொஜெக்டில் நேரம் இழுத்தது. இருவருக்கும் மேற்படிப்பு செல்லும் எண்ணம் இல்லை. தாரணிக்கு ஒரு வருடமாவது வேலை பார்க்க வேண்டும். சொந்த உழைப்பில், சுதந்திரமாக...
    இளையவர்கள் ஓரிடத்திலே நிற்க, அம்மாக்கள் புடவை எடுத்து வந்துவிட்டனர். "அதுக்குள்ள முடிச்சிட்டீங்களாம்மா" ஜீவிதா வாய் பிளந்தாள். ஒரு புடவையை நாள் முழுதும் எடுத்த ரிக்கார்ட் எல்லாம் உண்டே! "அண்ணி உதவி பண்ணாங்க" என்று காமாட்சியை காட்டினார். "அண்ணியா?" இளையவர்கள் திகைக்க, கல்யாண் முகம் கொஞ்சம் தெளிந்தது. "உங்களுக்கும் அண்ணியாம்மா" என்று அஜய் அவனின் அம்மாவிடம் புருவம் தூக்கி கேட்டான். "என்னை...
    நதியின் ஜதி ஒன்றே 18 அஜய் "எனக்கு டைம் கொடு" என்று ஜீவிதாவிடம் கேட்டான். அவளும்  ஏற்று கொண்டாள். ஆனால் இருவரின் வீட்டினரும் அதற்கு தயாராக இல்லை போல. சூட்டோடு சூட்டாக பானையை அடுப்பில் ஏற்றி வைத்திருந்தனர். முதலில் நான்  தயாராக வேண்டும். அதன் பின் தந்தையை சமாளிக்க வேண்டும். இறுதியாக தான் பலராமிடம் பேச வேண்டும்  என்ற அஜயின்...
    நதியின் ஜதி ஒன்றே! 8 இங்கு சேனாதிபதி வீட்டில், "ப்பா ஏன்ப்பா இப்படி?" என்று கல்யாண் நொந்து போய் கேட்டான். "இதுதான் ரவுடிசம். இதுக்கு தான் அவர் பொண்ணு தரமாட்டேனு சொன்னார். நீங்க அதையே லைவா அவருக்கு பண்ணி காமிச்சிட்டு வந்திருக்கீங்க. அப்புறம் எப்படி அவர் பொண்ணை கொடுப்பார்?" காமாட்சியும் கேட்டார். "என் முன்னாடியே என் மகனுக்கு அவர்...
    "அவன் உங்களுக்கு சப்போர்ட் பண்ணத்தான் சென்னையில் இருந்து கிளம்பி வந்தான். நான் தான் போன் பண்ணி அவன்கிட்ட கெஞ்சி கேட்டுக்கிட்டேன். அப்போவும் எனக்கு அவன் சப்போர்ட் பண்ணலை. கல்யாண்க்கு ஒரு வாய்ப்பு தான் வாங்கி கொடுத்தான்" "என் மாமனார் போன் பண்ணி பேசினார். இப்போ விட்டா வேற எப்போவும் நீ கல்யாணை நினைச்சு பார்க்க முடியாது....
    அக்கா, தங்கை சண்டை மூன்று நாள் நீடிக்க, "இன்னுமா சமாதானம் ஆகலை?" என்று கேட்டான் கல்யாண். "ஆகலை. ரொம்ப பண்றா" சின்னவள் கடுப்பாக சொன்னாள். "நானும், என் தம்பியும் சண்டைன்னு வந்தா ரத்தம் பார்க்காம ஓயமாட்டோம். ஆனாலும்  அடுத்த நாளே பேசிடுவோம்" "உங்களுக்கு தம்பி இருக்காங்களா? வேற யார் சிப்லிங்ஸ்?" "தம்பி மட்டும் தான். டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கான்" "சூப்பர் சீனியர்....
    நதியின் ஜதி ஒன்றே! 20 அஜய், ஜீவிதா திருமணத்தை தொடர்ந்து,  சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. ஜீவிதா புகுந்த வீட்டிற்குள்  வலது கால் எடுத்து வைத்து நுழைந்தாள். பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டாள்.  தம்பதிகள் வீட்டின் பெரியவர்களிடம் ஆசீ வாங்கி கொண்டனர். விருந்தினர் வருகை மதிய உணவோடு குறைய ஆரம்பித்தது. மாலை போல் ஜீவிதா உறவுகளும் விடைபெற்றனர். அம்மா வீட்டை...
    தாரணியிடமும் விசாரித்து கொள்வான். கல்யாணிடம் அவளின் படிப்பை பற்றி அறிந்து கொள்வான். அவ்வளவு தான் அந்த நேரம் அவனுக்கு செய்ய முடிந்தது. ஏதோ நம்ம மேல கோவம். சின்ன பொண்ணு தானே. புரிஞ்சுப்பா என்று விட்டுவிட்டான். ஆனால் இதுவே வருடங்கள் சில கடந்து சிறியவள், பெரியவளாகி சம்பாதிக்கவும் ஆரம்பித்த பிறகும் தொடர்கிறதே. அஜய்க்கு நேரில் அவளின் வளர்ச்சி...
    நதியின் ஜதி ஒன்றே! 24 அஜய், ஜீவிதா இருவரும் விமான நிலையத்தில் இருந்தார்கள். தேனிலவிற்கான பயணம் இது. மணாலி செல்கின்றனர். வழியனுப்ப தயாரான இருவீட்டினரையும் மறுத்துவிட்டனர். கல்யாண் மட்டும் வந்து டிராப் செய்துவிட்டு சென்றான்.  "ஹனிமூன் போற போல. உன் வயசு தான்டா எனக்கும்" ஆனந்தன் கடுப்பில் போன் செய்து பெரு மூச்சுவிட்டான். "மாமாகிட்ட பேச சொல்லுங்க. உடனே அவரும்...
    ஒரே பெண். சென்னையில் வேலை பார்க்கிறாள். பெரிய குடும்பத்தில் கொடுக்க ஆசைப்பட்டு அஜய்க்கு கேட்டது.  "இல்லைம்மா" என்று அவளின் அப்பா பேச வர, "இது எதிர்பாராம நடந்த மாதிரி தான் இருக்கு. பெருசு பண்ண வேண்டாம்ப்பா" என்றாள் அவள் தெளிவாக. "MP மாமா கொண்டு வந்த சம்மந்தம். தெரிஞ்சே அவரும் பண்ண மாட்டார். விடுங்க" என்றார் அவரின் மனைவியும். பெண்ணை...
    கல்பனாவின் கண்ணீரை நிறுத்தும் பொருட்டு, ஜீவிதா அந்த வருடம் பெரிய பெண்ணாகி இருந்தாள். விடுமுறை நாளிலே நிகழ்ந்துவிட, ஜீவிதாவிற்கு முதலில் அப்படி ஒரு அழுகை. தாரணி தான் முழு நேரமும் தங்கை உடன் இருந்து அவளை சமாளித்தாள். ஊரில் இருந்து உறவுகள் ஒவ்வொருவராக வந்தனர். சகுந்தலா தினமும் எதாவது செய்து கொண்டு வருவார். அங்கே இருக்கும் ஹாலில்...
    நதியின் ஜதி ஒன்றே! 10 மிகவும் பிரமாண்டமாக நடந்தேறி கொண்டிருந்தது கல்யாண், தாரணி திருமணம். இன்னும் சில நொடிகளில் முகூர்த்தம். மணமக்கள் மேடைக்கு வந்துவிட்டனர்.  காதல் கை கூடிய மகிழ்ச்சியில் மணமக்களின் முகங்கள் ஜொலித்தன. ஜீவிதா அக்கா பக்கத்திலே நின்றிருந்தாள். அவளின் முகத்தில் அளவான புன்னகை.  சேனாதிபதி பக்கம் ஆட்கள் மிக அதிகம். காமாட்சி ஓடியாடி எல்லாம் செய்து...
    நதியின் ஜதி ஒன்றே! 9 முன் மாலை பொழுதில் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. கல்யாண் அப்பாவிடம் பேசினான்.  "எதுக்கு பேச்சு வார்த்தை எல்லாம்? அவர் போன் பண்ணுவார் தம்பி, இரு" என்றார் சேனாதிபதி. "ப்பா.. இப்படி ஒரு கல்யாணம் எனக்கு வேண்டாம். பொண்ணை பெத்தவர் மனசார கொடுக்கணும்" என்றான் மகன். "அதான் கொடுக்க மாட்டேங்கிறாரே. உன்கிட்ட கூட அவருக்கு குறை தெரியுதுன்னா...
    பெண் புரியாமல் பார்க்க, "என்ன முழிக்கிற? நான் மேரேஜ்க்கு முன்னாடி ஒரு நாள் பேசினோமே. உன் வேலை பத்தி" என்றான். "ஆஹ்ன். அது அப்புறம் பேசுவோம் அஜு. எனக்கு பலாப்பழம் வேணும்" என்றாள். "ம்ஹூம், முடியவே முடியாது. நேத்தே அவ்வளவு சாப்பிட்ட" என்று மறுக்க, இவள் அடம் பிடிக்க ஆரம்பித்தாள். அஜய் அவன் பிடியில் நிற்க, "சரி முந்திரி...
    நதியின் ஜதி ஒன்றே 22 அஜய் மனைவியின் விருப்பப்படி அவளை சென்னையிலே விட்டு, தான் மட்டும் ஊருக்கு கிளம்பிவிட்டான்.  ஜீவிதா தன் நாட்களுக்கு திரும்ப முயன்று கொண்டிருந்தாள். ஒரு வாரம் கடந்துவிட்டது. இன்னமும் முயன்று கொண்டே தானிருக்கிறாள். மனம் நினைப்பதை எல்லாம் செயல்படுத்த முடியாது, கூடாது என்று மெல்ல மெல்ல உணரவும் செய்கிறாள். முன்பே அவளின் எல்லாம் அஜய்! இப்போது...
    நதியின் ஜதி ஒன்றே 15 அஜய் வீட்டிற்க்கு ஜீவிதாவின் உறவுகள் எல்லாம் முன் தினமே  கிளம்பிவிட்டனர். விடிந்தால் கட்டிட திறப்பு விழா. ஜீவிதாவிற்கு கடைசி நேர வேலை. முடிக்க வேண்டிய ப்ரொஜெக்டில் அவளும் இருந்தாள். விடுமுறை கிடைக்கவில்லை. வேலை சேர்ந்த புதிது என்பதால் கல்யாண், "ஒரு நாள் லீவ் கிடைச்சா போதும். விடு" என்றான். ஜீவிதாவிற்கு வருத்தம் தான்,...
    முதலில் இருந்த ஒரு தடுமாற்றமும் அஜய் கொண்டே. இத்தனை வருடங்களில் அஜய் மீதான தன் உரிமையை சொல்ல ஒரு போராட்டம். சொல்லியபின் உரிமையை கைப்பற்ற மற்றுமொரு போராட்டம்.  இதற்கிடையில் பெண்ணுக்கான ரகசிய கனவுகள் அவளுக்கும் உண்டு. அதிலும் எல்லாம் கை கூடி, திருமணம் முடிவான நாளில் இருந்து கனவில், நினைவில், கற்பனையில் பல முறை தனக்குள் கண்ட காட்சி...
    நதியின் ஜதி ஒன்றே! 3 சங்கர் குடும்பம் ஊருக்கு கிளம்பி விட்டிருந்தார்கள்! கல்பனாவிற்கு கணவன் எப்போது வீடு திரும்புவார்  என்றிருந்தது. முக்கியமான மீட்டிங் என்று ஹெட் ஆபிஸ் சென்றிருக்கிறார் மனிதர். போனில் இது பற்றி பெரிதாக பேச முடியவில்லை. "நான் நேர்ல வந்து பேசுறேன்" என்று முடித்து கொண்டார் பலராம். இரண்டு நாட்கள் சென்று பலராம் வந்தார். "ப்பா" என்று...
    நதியின் ஜதி ஒன்றே 12 பெண் மனதில் அஜய் பற்றிய உணர்வுகள் மிகவும் விநோதம் ஆனது. இது தான், இப்படி தான் என்று எதிலும் இணைக்க முடியா உறவு அது. ஜீவிதாவிற்கு அவனை பிடிக்கும், பிடிக்காது என்பதை எல்லாம் கடந்து அவளில் அவன் மிக மிக  முக்கியமானவன்.  குழந்தையில் அவள் முகம் பார்த்து மனதில் பதிய வைக்க தொடங்கிய...
    error: Content is protected !!