Advertisement

நதியின் ஜதி ஒன்றே! 9

முன் மாலை பொழுதில் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. கல்யாண் அப்பாவிடம் பேசினான்

எதுக்கு பேச்சு வார்த்தை எல்லாம்? அவர் போன் பண்ணுவார் தம்பி, இருஎன்றார் சேனாதிபதி.

ப்பா.. இப்படி ஒரு கல்யாணம் எனக்கு வேண்டாம். பொண்ணை பெத்தவர் மனசார கொடுக்கணும்என்றான் மகன்.

அதான் கொடுக்க மாட்டேங்கிறாரே. உன்கிட்ட கூட அவருக்கு குறை தெரியுதுன்னா அவர் ஆளு சுதாரிப்பு இல்லை தம்பிஎன்றார் சேனாதிபதி.

நீங்க ரொம்ப விவரமான ஆளு தான். அதான் கல்யாணத்துக்கு முன்னாடியே நம்ம மருமகளுக்கு அம்மா வீடு இல்லாம பண்றீங்கஎன்றார் காமாட்சி கோவமாக.

அதெப்படி அம்மா வீடு இல்லாம போயிடும். அதையும் பார்த்துடலாம் வாஎன்றார் அவர்.

அவன் வாழ்க்கையை அவனை வாழ விடுங்க. எல்லாத்தையும் பெத்தவங்களே பார்க்க முடியாது” 

நான் அவனுக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சு கொடுக்க தான் பாடுபடுறேன் கண்ணு

இந்தளவு பாடுபட வேண்டாம்ன்னு தான் நாங்களும் சொல்றோம். பொறுமையாக பொண்ணை பெத்தவர்கிட்ட பேசினா போதும்

நீங்க பொறுமையா பேசலையா?”

நீங்க பேசுங்க இந்த முறை

அப்படியென்ன பேசியே ஆகணும்ன்னு. நமக்கு கல்யாணம் நடக்கணும் அவ்வளவு தானே?” கட்ட பஞ்சாயத்துக்காரர் கேட்க, காமாட்சியின் பொறுமை பறந்தது.

இங்க பாருங்க மாமா. நம்ம மகன் கல்யாணம் பெத்தவங்க ஆசீயோட நடக்கணும். சாபத்துல இல்லை. அவன் குழந்தை குட்டின்னு நல்லா வாழணும் தானே

கண்ணு என்ன பேசுற நீ” 

பதறுது இல்லை. நமக்கு நம்ம மகன் வாழ்க்கை முக்கியம். பொண்ணை பெத்தவர் சந்தோஷமா தாரை வார்த்து கொடுக்கட்டும். என் மகன் வாழ்க்கை செழிக்கும். நிலைக்கும். இப்படி வேண்டவே வேண்டாம்காமாட்சி உறுதியாக நின்றுவிட்டார்.

கல்யாண் அப்பாவின் கை பிடித்து கொண்டான். “வெளியில நீங்க வேற. வீட்ல நீங்க வேற. என் அப்பா எவ்வளவு நல்லவர்ன்னு எனக்கு தெரியும். அவரை மத்தவங்க தப்பா நினைக்கிறது எனக்கு வேதனையா இருக்குப்பா. ப்ளீஸ். எங்ககிட்ட நீங்க எப்படி நடந்துப்பீங்களோ அதுல கொஞ்சம் தாரணி அப்பாகிட்ட இருந்தா போதும். அவர் நிச்சயம் சம்மதம் சொல்வார்என்றான் மகன் நம்பிக்கையுடன்

அவனின் நம்பிக்கையை காப்பாற்ற தந்தைக்கு ஆவல் தான். ஆனா பலராம்? “சரி உங்களுக்காக மட்டும் பேசி பார்க்கிறேன். ஆனா அவர் ஓர் அளவுக்கு மேல் கிராக்கி பண்ணா என் லைனுக்கு தான் நீங்க வரணும். பார்த்துக்கோங்கஎன்று ஒத்துக்கொண்டு  மகனுடன் கிளம்பினார்.

இருப்பக்கமும் வந்துவிட நேருக்கு நேர் அமர்ந்தனர். அஜய், சங்கர், MP, பலராம் இந்த பக்கம்

கல்யாண் பக்கம் அவன், அவனின் அப்பா, அப்பாவின் வலது கை

ஆட்கள் அதிகம் சேராமல் பார்த்து கொண்டனர். MPக்கு மரியாதை கொடுத்த சேனாதிபதி அஜய், சங்கரை  கேள்வியாக பார்த்தார்

கல்யாண் தான் அஜய், அவன் அப்பாவை அறிமுகம் செய்து வைத்தான். பலராம் அதை செய்யவில்லை. அஜய்க்கு அவரின் செயல் சுருக்கென குத்தியது.

நான் சின்ன பையன், என் அப்பா. அவருக்கான மரியாதை?’ மகனாக யோசித்தான்.

சேனாதிபதியின் வலது கை தான் பேச்சை ஆரம்பித்தார். “எங்க தம்பிக்கு உங்க பொண்ணை கொடுக்கிறதை பத்தி என்ன முடிவு எடுத்திருக்கீங்க?” என்று கேட்டார்.

சேனாதிபதி கேட்க வேண்டி கேள்வி இது. அவர் மௌனமாக பார்த்திருக்க, “பையனோட அப்பா நீங்களா?” என்று கேட்டார் சங்கர்.

சரி நான் கேட்கிறேன் சார். என்ன முடிவு எடுத்திருக்கீங்க?” என்று கேட்டார் சேனாதிபதி.

முடிவு பத்தி கேட்கிறதுக்கு முன்னாடி, போன் வந்தே ஆகணும்ன்னு மிரட்டினதை பத்தி பேசிடலாமேஎன்றார் MP.

சேனாதிபதி சாதாரணமாக, “அது இவர் கொடுக்கவே முடியாதுன்னு நின்னார். சொல்ல வேண்டியதா போச்சுஎன்றார்.

பொண்ணை பெத்தவருக்கு அந்த உரிமை இல்லைன்னு நினைக்கிறீங்களா சேனாதிபதி?” MP கறாராக கேட்க,

நிச்சயம் இருக்கு தலைவரே. பையனை பெத்தவனுக்கும் அவன் ஆசையை நிறைவேத்துற கடமை இருக்கே. அதை தான் நான் செய்ய நினைக்கிறேன்” 

பொண்ணை தூக்கிட்டு போய் கட்டி வைக்கிறது தான் பெத்தவங்க கடமையா சார். முறையா கேட்டு கல்யாணம் பண்ணி வைக்கிறது இல்லையா?” அஜய் கேட்டுவிட்டான்.

அஜய்என்று கல்யாண் சமாதானமாக பேச வர, அஜய் அவனை பார்க்க கூட இல்லை. கல்யாண் முகம் வாடி போனது.

சேனாதிபதி இதை கவனித்தார். “தம்பி பேர் என்ன சொன்னீங்க?” என்று கேட்க,

பேர் தெரிஞ்சா தான் பதில் சொல்வீங்களா?” என்றான் அஜய்.

அஜய்.. அஜய்ப்பாஎன்றான் கல்யாண். “தாரணியோட சைல்டு உட் ப்ரெண்ட். ரொம்ப குளோஸ்என்றான்

மருமக மேல இருக்கிற பாசம் தான் கோவமா வருது. நல்ல விஷயம். ரொம்ப நல்ல விஷயம்சேனாதிபதி எழுந்து வந்து அஜய் தோள் தட்டினார்

நீ கேட்கிறது சரி தான் தம்பி. அதான் முறையா கேட்டு கல்யாணம் பண்ணலாம்ன்னு வந்தாச்சு. சொல்லுங்க சார்என்று பலராமிடம் நல்ல முறையிலே கேட்டார்.

அவர் மௌனத்திலே இருக்க, “சொல்லுங்க சார்என்றார் சங்கர்

நான் பேச என்ன இருக்கு சார்?”  பலராம் கேட்க,

“உங்களுக்கு என்ன பேசணுமோ அதை பேசுங்க சார்” என்றார் சங்கர்.

பலராம் வாய் திறந்தார் இல்லை. அவர் மனதுக்குள் அவ்வளவு போராட்டம். இதுவே என் சொந்தங்கள் என்னுடன் இருந்திருந்தால் எனக்கு ஆதரவாக அல்லவா எல்லாம் நடந்திருக்கும்.

நான் தப்பு பண்ணிட்டேன். சட்டு, புட்டுன்னு நைட்டோட நைட்டா அவளுக்கு நான் பார்த்த மாப்பிள்ளையோட கல்யாணம் பண்ணி வைச்சிருந்திருக்கணும். தாலின்னு ஏறிட்டா மனசு மாறி வாழ்ந்திருக்க போறா

இப்போ கூட பொண்ணை கூட்டிட்டு ஊருக்கு போயிடலாமா? என் ஊர் அது. அங்க வந்து என் பொண்ணை தூக்கிட முடியுமா?

சேனாதிபதி பற்றி தெரியாமல் ஏதேதோ எண்ணம்

அவரின் மனதின் கனம் அப்படி. ஏதேதோ யோசிக்க வைத்தது. யார் யாரையோ குற்றம் காண துடித்தது.

பலராமின் அமைதியில் அவரை தனியே அழைத்து சென்று, “என்னாச்சு சார்?” என்று கேட்டார் MP.

எனக்கு இந்த மீட்டிங்கே பிடிக்கலைஎன்றார் பலராம்.

உங்க பையன் சொல்லி நீங்க மீட்டிங் வைப்பீங்களா சார்? அவன் சின்ன பையன். அவனுக்கு என்ன தெரியும்?” என்று தள்ளி இருந்த அஜயை கோவமாக பார்த்து பொரிந்தார்

அவன் கேட்டான் தான் சார். நாங்க மறுக்கலை. ஆனா அவன் கேட்டுக்கிட்டதுக்காக நாங்க மீட்டிங் வைக்கலை. உங்களுக்காக மட்டும் தான் வைச்சோம்சங்கர் சொல்ல,

எனக்கு தான் பிடிக்கலைன்னு சொல்லிட்டேனே. பொண்ணு கொடுக்க முடியாது சொல்லியும் எதுக்கு இந்த மீட்டிங் எல்லாம். அவங்களை கிளம்பி போக சொல்லுங்கஎன்றார் பலராம்.

சார்.. ஒளிச்சு மறைச்சு பேச முடியாது. உங்க பொண்ணுக்கு இந்த பையன் மேல இஷ்டம்ன்னு தெரிஞ்சு தான் நாங்க வேறு வழி இல்லாமல் இந்த மீட்டிங்குக்கு ஒத்துக்கிட்டோம்” என்றார் MP. 

உண்மையை சொல்ல போனால் MPக்கு கடுப்பு. பெண்ணுக்கு அந்த பையன் மேல் விருப்பம் என்பதை இதுவரை பெற்றவர் சொல்லவே இல்லை. அஜய் மூலம் தெரிய வந்தது. இல்லையென்றால் இவரை நம்பி சேனாதிபதி போன்று ஆட்களிடம் என்னவென்று பஞ்சாயத்து பண்ணுவது?

பலராம், என் பொண்ணு நான் சொன்னா கேட்பாஎன்றார்.

சரி உங்க பொண்ணுகிட்ட பேசுங்க. அவங்க மேஜர். பார்த்துக்கோங்கஎன்றார் MP எச்சரிக்கையாக.

பலராம்க்கும் அப்போது தான் புரிந்தது. உடனே போன் எடுத்து மகளுக்கு பேசினார். அவ்வளவு மூளை சலவை. இறுதியாக கொஞ்சம் எமோஷனாக பேசி வைக்க, அஜய் அங்கு வந்தான்.

போலாம்என்று மீட்டிங் நடக்கும் இடம் செல்ல, அஜய், MP மட்டும் தேங்கி நின்றனர்.

என்னமோ நாம அவர் பொண்ணு லைஃப் கெடுக்கவே கிளம்பி வந்தோம்ங்கிற மாதிரி பேசுட்டிருக்கார் அஜய். நாம ஒதுங்கிக்கலாம்என்றார் MP. 

சேனாதிபதி பற்றி முழுதும் விசாரித்தாகிவிட்டது. அவரிடம் பலராமை தனியே விட அஜய்க்கு மனமில்லை. தாரணி, ஜீவிதா, கல்பனா அவன் கண் முன் வந்தனர்.

அங்கிள் இப்போ ஸ்டெடி மைண்ட்ல இல்லை பெரியப்பா. ஏதாவது ஏடாகூடமா பண்ணிட்டா தாரணிக்கு தான் கஷ்டம்என்றான் அஜய்.

இது அவருக்கு புரியலையேடா. உன்னை எப்படி எல்லாம் நாங்க மோல்ட் பண்ணிட்டு இருக்கோம். என்கிட்டேயே  உன்னை சின்ன பையன்னு எல்லாம் பேசுறார். ஆனா நீ கேட்டதை கூட அவர் கேட்கலை. நமக்கு  வேணும், வேணாம்ங்கிறதை கிளியரா, தைரியமா பேசணும் இல்லை. இப்படி இருந்தா எப்படி?” 

நான் வேற பெரியப்பா. அப்பா இடத்துல நான் இருந்தாகணும். ஊர் பஞ்சாயத்து, பங்காளிங்க பஞ்சாயத்துன்னு உங்களோட சேர்ந்துட்டேன். ஊர்காரரா இருந்தாலும் இவர் வேற. நாம விட்டு கிளம்பிட்டாலும் இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும். அவர் மகன் கல்யாணாலே சேனாதிபதியை  அட்டக்கட்ட முடியாது

பண்ணா பண்ணிட்டு போகட்டும் அஜய். அது அவங்க பாடு

பெரியப்பா ப்ளீஸ், என் ப்ரெண்ட் அவ. ஆசை, விருப்பம் எல்லாம் தாண்டி நல்ல முறையில அவ வாழ்க்கை செட்டில் ஆகணும்ன்னு நினைக்கிறேன். நாம சுமூகமா பேசி இதை உறுதிப்படுத்திட்டு கிளம்பிடுவோம்என்றான் வேண்டுகோளாக.

MP ஆயசமாக தலையாட்டி கொண்டவர் மகனுடன் வந்தார். கல்யாணும்  அப்பாவிடம் அதற்குள்எனக்காகப்பா. ப்ளீஸ்என்று வேண்டி கேட்டிருந்தான்.

திரும்ப எல்லாம் அமர, “நேத்து நான் அப்படி பேசியிருக்க கூடாது தான்என்றார் சேனாதிபதி.

உண்மையை சொல்லணும்ன்னா அவர் பேசுற வரை எனக்கு அங்க பொண்ணெடுக்க இஷ்டமில்லை. தங்கச்சி பொண்ணை தான்  என் மகனுக்கு  பேசி வைச்சிருக்கோம். ஆனா அவன் விருப்பம் வேறன்னும் போது நான் முதல்ல மறுத்திருந்தாலும் பின்னாடி அவனுக்காக ஓகே தான் சொல்லியிருப்பேன். இது என் மகனுக்கும் தெரியும்” 

இவரை போல கண்ணை மூடிக்கிட்டு மறுக்கிற ஆள் நான் இல்லை

என் பொண்ணு லைப் சார். நான் நாலையும் யோசிக்க மாட்டேனா?” பலராம் கேட்க,

நாலு என்று நாலு கோடி கூட யோசிங்க. அப்பான்னா அப்படி தான். ஆனா நீங்க என்னை வைச்சு அவனை மறுக்காதீங்கன்னு தான் நானும் சொல்றேன். அவன் நல்லவன்

சார் அவர் நல்லவரா இருந்தாலும் எனக்கு வேண்டாம்பலராம் சொல்ல, சேனாதிபதி பொறுமை கரைந்தது.

நான் இப்படி இருக்கேன்னா அதுக்கு காரணம் நான். என் கேரக்டர் அப்படி. என் மகன் இப்படி இருக்கான்னா அதுக்கு காரணம் அவன் கேரக்டர். அவன் குணம் அப்படி”

அப்பா படிக்காத காட்டனா இருந்தாலும் அவன் நல்லா படிச்சு, நல்ல வேலையில சொந்த கால்ல நிக்கிறான். பணத்துக்கு எப்போவும் குறைவில்லை. ஆனா அவன் பாதையில அவன் சரியா இருக்கான்

இவர் என்னை வைச்சு அவனை முடிவெடுத்தா அப்புறம் அவனோட குணத்துக்கு, படிப்புக்கு என்ன மரியாதை இருக்கு சொல்லுங்க?”

என்னை போல இருக்கிறவங்க பிள்ளைங்க எல்லாம் நல்லா வாழவே கூடாதுன்னு இவங்களை மாதிரி ஆளுங்க தான் நினைக்கிறாங்கஎன்று சேனாதிபதி வெடித்துவிட்டார்.

எல்லோருக்குமே அவர் பேச்சின் பொருள் மட்டுமில்லை, ஆதங்கமும் நன்றாகவே புரிந்தது. பலராம் உட்பட

ஏன் சார் நீங்க இவ்வளவு பேசுறீங்களே இன்னைக்கு உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்ததும் நீங்க தேடின ஆட்கள் யாருங்க? ஏன் யாரும் வேண்டாம்ன்னு நீங்களே தனியா நின்னு என்னை சமாளிக்க வேண்டியது தானே?” என்று சேனாதிபதி கேட்க, பலராமால் பதில் சொல்ல முடியவில்லை.

உங்களுக்குன்னு வரும் போது மட்டும் தான் எல்லாம் வேணும். அரசியல்ல இருந்து அடியாள் வரை. ஆனா அவனுக்கு ஒரு நல்லது மட்டும் நடக்க விட மாட்டீங்க இல்லை”  

“MP மட்டும் உள்ள வரலைன்னா இன்னைக்கு பேச்சு வார்த்தையே நடந்திருக்காது. காலையிலே எல்லாம் முடிஞ்சிருக்கும். அவர் மேல நான் வைச்ச மரியாதைக்கு தான் யோசிச்சேன். என் மகனுக்காக தான் உங்ககிட்ட பேசிட்டு உட்கார்ந்திருக்கேன்

என் பங்காளிங்களும் சாதாரண ஆளுங்க இல்லைபலராம் சொல்ல,

எல்லாம் விசாரிச்சாச்சு. இவங்களை போல என் முன்னாடி வந்து நிக்க அங்க யாரும் இல்லைஎன்ற சேனாதிபதி, “எதுக்கு சார் வீணா பேசிட்டு. இவர் புரிஞ்சுக்கிற ஆள் இல்லை. எவ்வளவு படிச்சு பெரிய பதவியில இருந்தாலும், கற்கால புத்தி மாறாதவங்க

நாம நேரா பொண்ணுகிட்ட பேசிடுவோம். அவங்க பதில் தான் பஞ்சாயத்து முடிவுஎன்றார் சேனாதிபதி திட்டவட்டமாக.

பலராமும் மகளிடம் பேசிவிட்ட தைரியத்தில், நான் இதுக்கு ஒத்துகிறேன்என்றுவிட்டார்

நாம யாரும் வேணாம். அஜய் தம்பி நீயே கூப்பிடுப்பாஎன்றார் சேனாதிபதி. அவர்களே அஜய் போன் எடுத்து தாரணிக்கு அழைக்கவும் செய்தனர்.

அவள் எடுக்க, “உன் பதில் தான்மா வேணும்என்று சேனாதிபதியின் வலது கை இருக்கும் நிலையை எடுத்து சொல்லி கேட்டார்

அப்பாஎன்று பெண் தயங்க,

அவர் இருக்கார். நீங்க உங்க விருப்பத்தை சொல்லுங்க. கடைசி முடிவு உங்களோடது தான். விருப்பட்ட வாழ்க்கை வேணும்ன்னா மனசுல இருக்கிறதை சொல்லுங்கம்மாஎன்றார் அவர்.

தாரணி அப்பா பேசினது ஞாபகம் இருக்கு இல்லை. இந்த சம்மந்தம் நமக்கு வேணாம். நமக்கு ஏத்தவங்க இவங்க இல்லை. எனக்கு பிடிக்கலை. இதை விட ரொம்ப நல்ல சம்மந்தம் தான் அப்பா உனக்கு பார்த்து வைச்சிருக்கேன். நமக்கு பொருத்தமானவங்க அவங்க தான்” என்று பலராம் மகளிடம் திரும்ப வலியுறுத்தினார்.

அஜய்என்றாள் தாரணி.

பலராம் அவனுக்கு கண் காட்டினார். மறுக்க சொல்லி சொல்ல சொன்னார்

தாரணி. நல்லா யோசிச்சு சொல்லு. இது உன் லைப்” என்றான் அஜய் அக்கறையாக.

பலராம் அஜயை கோவமாக பார்த்தார்.

மருமகளே சொல்லும்மாஎன்றார் சேனாதிபதி.

தாரணி தயங்கி தயங்கி ஒரு வழியாக, ” எனக்கு கல்யாண் மேல் தான் விருப்பம்என்றாள்.

பேச்சு வார்த்தை முடிந்து, முடிவு கிடைத்துவிட்டது

Advertisement