Wednesday, November 11, 2026

    சிவஞானபுரம்

    அத்தியாயம் 22: அவர்களின் அடுத்த இலக்கான, மர்மங்கள் நிறைந்த தேரிக்காடு பாலைவனத்தை நோக்கி அனைவரும் புறப்பட்டனர்.   சில மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, தேரிக்காடு பகுதியை வந்தடைந்தனர். குறிப்பிட்ட பகுதிக்கு மேல் காரில் செல்ல முடியாததால், சாலையோரமாகக் காரை நிறுத்திவிட்டு அனைவரும் கீழே இறங்கினர்.   சாதாரணமாகக் காணப்படும் பாலைவனங்களைப் போல இல்லாமல், அங்கங்கே பனை மரங்களும் கருவேல மரங்களும்...
    கோகிலாவும் கோவிலின் இருப்பிடத்தைக் கூற, அனைவரும் வீட்டை விட்டுக் கிளம்பினர். முதலில் பரமேஷ் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்தான். அவனைப் பின்தொடர்ந்து ஒவ்வொருவராகக் காரில் ஏறிக்கொண்டனர். அனைவரும் அமர்ந்ததும், கோவிலை நோக்கிக் காரைச் செலுத்தத் தொடங்கினான் பரமேஷ். ஓரிரு தெருக்களைக் கடந்ததும், திடீரென ஒருமுறை ஹரிக்குட்டியைப் பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று ருத்ராவின் மனதில் தோன்றியது. உடனே, "ஒரு...
    அத்தியாயம் 20 இதை எதுக்கு இவ்வளவு நேரம் யோசிச்சேன்? சாட்ஜிபிடி கிட்டேயே மணல் கடன்னா என்னன்னு கேட்டிருக்கலாம்   !' என்று இவ்வளவு நேரம் யோசித்துத்ததை நினைத்துச் சிரித்துக்கொண்டவளின் மனதில் மீண்டும் ஒரு கேள்வி எழுந்தது. 'சரி, பாலைவனம்னு தெரிஞ்சாச்சு... ஆனா, அந்தப் பாலைவனம் எங்கே இருக்கு?' மற்றொரு கேள்வியாக, 'இந்த ஓலைச்சுவடியைப் பற்றிப் பரமேஷ்ட்ட சொல்லவா? வேண்டாமா?' என்று...
    திடீரென்று இவர்களுக்கு முன்னால் வந்து வழியை மறைத்துக்கொண்டு நின்றது பிரம்மாண்டமான கருநாகம் ஒன்று. அது தாரகையைவிடப் பல மடங்கு பெரிதாகத் தோன்றியது. அவர்களை நோக்கிச் சீறிய அந்த நாகத்தைப் பார்த்த மூவரும் அச்சத்தில் பின்வாங்கினார்கள். ஆனால், தாரகை மட்டும் அஞ்சாமல் துணிச்சலுடன் நாக உருவம் எடுத்து அதனோடு மோதச் சென்றாள். அவளை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாத கருநாகம்,...
    “சரி” என்று அவளும் தலையாட்ட, வரப்போகும் ஆபத்தை உணராமல் மூவரும் நுழைவாயிலுக்குள் நுழைந்தனர். மிகப் பிரம்மாண்டமாக அமைந்திருந்த அந்த நுழைவாயிலின் மேற்புறத்தில் சிங்கத்தின் முகம் பொறிக்கப்பட்டிருந்தது. வாயிலின் இருபுறங்களிலும் நாகங்கள் மனித உருவில் காவல் காத்துக்கொண்டிருந்தன. மற்றவர்கள் நுழைவதைப் போலவே மக்களோடு மக்களாக மூவரும் அந்த ராஜ்யத்திற்குள் நுழைந்தனர். அங்கே காணப்பட்ட பிரம்மாண்டமான கட்டிடங்களும் அழகிய வேலைப்பாடுகளும்...
    அத்தியாயம் 17: சிவபெருமானை இருகரம் கூப்பி வணங்கிவிட்டு, பின்னரே சுற்றியிருந்தவற்றை உற்று நோக்கினாள். குகை நீண்டு கொண்டே சென்றது. சிவலிங்கத்தைச் சுற்றியிருந்த தூண்களில் உயிர்ப்புடன் செதுக்கப்பட்ட சிங்கச் சிற்பங்கள் கம்பீரமாகக் காட்சியளித்தன. சுற்றிலும் இருந்த சிற்பங்களைக் கண்டு வியந்த ருத்ரா, கீழே பார்க்க, பரமேஷ் அமர்ந்திருந்த நிலையைக் கண்ட கணம், அறியாமலே அவளின் இதயம் அவனுக்காக வலித்தது....
    அதற்குள் செடி கொடிகளை விலக்கிக்கொண்டு உள்ளே நுழைந்த ருத்ராவின் கண்கள் வியப்பில் விரிந்தன. பாறைகளின் இடுக்குகளுக்கு இடையே ஒரு பாதை செல்வதைக் கண்டவள், ஆச்சரியத்துடன் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். "அப்படி என்ன பார்த்துட்டு இருக்க? வா, கோவிலுக்குப் போகலாம்!" என்று பரமேஷ் அவளை அழைத்துக்கொண்டிருந்தபோது, மலைகளின் இடுக்குகளுக்கு இடையே செல்லும் அந்தப் பாதையை அவனும் வித்தியாசமாகப் பார்த்தான். ருத்ரா அந்தப்...
    தன் அலைபேசியில் யாருக்கோ அழைப்பு விடுத்தான் அஜித். மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது. "இரண்டாவது சாவி கண்டுபிடிச்சேங்களா இல்லையா?" என்ற அதிகாரத் தோரணையுடன் கேள்வி கேட்கப்பட்டது. தன் குரலைத் தாழ்த்திய அஜித், "இன்னும் இல்லை சார். கண்டுபிடிச்சதும் நானே உங்ககிட்ட சொல்றேன் " என்றான். மறுபக்கம் எதுவும் கூறாமலேயே அழைப்பு துண்டிக்கப்பட்டது. அலைபேசியை வைத்துவிட்டு மெதுவாக மீண்டும் அறைக்குள் சென்றவன், படுத்துக்கொண்டான். மறுநாள்...
    மறுபுறம், பெண்கள் அறைக்குள் நுழைந்த அஜித், ருத்ராவின் பையில் எதுவும் இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தான். கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க, அவசரமாக அவளது பையை மூடிவிட்டு எதுவும் தெரியாததுபோல் திரும்பி நின்றான். கதவு திறக்கப்பட, பரமேஷும் ருத்ராவும் அறைக்குள் நுழைந்தனர். அங்கே அஜித் தனியாக நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த பரமேஷ், “என்னடா, இங்க என்ன பண்ற?” என்று...
    அதை எதிர்பார்க்காத பரமேஷ், "உட்காரு, எந்திரிக்காத! படகு கவிழ்ந்திடும்!" என்று எச்சரித்தான். ஆனால்..அவன் எச்சரித்து முடிப்பதற்குள், ருத்ரா எழுந்ததால் படகு நிலைதடுமாறி, இருவரும் இருந்த படகு கவிழ்ந்தது. இருவரும் தண்ணீருக்குள் 'தொப்' என்று விழுந்தனர். ருத்ராவின் மார்புப் பகுதி வரை தண்ணீரில் மூழ்கியிருக்க, கழுத்துக்கு மேல் முகம் மட்டும் வெளியே தெரிந்தது. அணிந்திருந்த தாவணி முழுவதும் நனைந்திருக்க,...
    அத்தியாயம் 13: 'இந்தத் தடவை வேணா நீ தப்பிச்சியிருக்கலாம் ருத்ரா, அடுத்த தடவை கண்டிப்பா தப்பிக்க மாட்ட. எனக்கும் பரமேஷ்க்கும் நடுவுல யாரும் வரக்கூடாது' என்று மனதில் நினைத்துக்கொண்டு, ரோஸினி ருத்ராவை முறைத்துப் பார்த்தாள். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆழ்ந்த யோசனையில் வெளியில் பார்த்தபடி இருந்தாள் ருத்ரா. "நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா?" என்ற ரிங்டோன் ருத்ராவின்...
    முரசு கொட்டப்பட, போட்டி தொடங்கியது. அரசர் அரியணையில் இருந்து கீழே இறங்கி வந்தார். சுற்றிலும் இருந்த வீரர்கள் ஆர்ப்பரிக்க, ருத்ராவிற்கும் அரசருக்கும் இடையில் வாள் சண்டை தொடங்கியது. அரசரின் வாள் மிகுந்த பலத்துடன் தாக்க, ருத்ராவின் வாள் பின்வாங்கிக் கொண்டே சென்றது. அவளுக்குள் மீண்டும் ஏதோ புகுந்த உணர்வு ஏற்பட, வேகம் எடுத்துத் தன் வாளால் அரசரைத்...
    அத்தியாயம் 11: அனைவரும் காவலர்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்க, ருத்ரா மட்டும், ‘எப்படி அவர்களைத் தாக்கிவிட்டு வெளியில் செல்வது?’ என்று தீவிரமாக மனதில் யோசித்தாள். காவலர்களில் ஒருவன், இவர்கள் பேசிக்கொள்ளும் சத்தத்தைக் கேட்டுவிட்டு, அந்த இடத்தை நோக்கி ஈட்டியுடன் நடந்து வந்தான். இவர்கள் ஐவரையும் கண்ட காவலாளி, “நீங்கள் அனைவரும் யார்? எதற்காக கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளீர்கள்?” என்று கேள்விகளை...
    அத்தியாயம் 10: பரமேஷ் அவனைத் துரத்த, “தனியா போகாத டா… நாங்களும் வரோம்!” என்று அஜித் அவனின் பின்னால் ஓட, மற்ற மூவரும் அஜித்தைப் பின்தொடர்ந்து ஓடினர். காட்டிற்குள் இருக்கும் ஆபத்து தெரியாமல் அனைவரும் ஓடிக்கொண்டிருந்தனர். மாலையில் சூரியன் மெல்ல மறைய ஆரம்பித்திருக்க, முன்னால் ஓடிக்கொண்டிருந்த மனிதன் திடீரென்று ஓரிடத்தில் அசைவற்று நின்றான். அதைக் கண்ட நண்பர்களும் ஓடுவதை...
    அதை எதையும் காதில் வாங்காதவள், அந்த ஒற்றையடிப் பாதையை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அடர்ந்த மரங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பாதையை ரசித்த வண்ணம் நடந்தாள். அவளின் பின்னால் பரமேஷ், அவள் எங்கு செல்கிறாள் என்று புரியாமல், ‘சரியான பைத்தியம்’ என்று மனதில் நினைத்துக்கொண்டு சென்றான். "இந்த இடம் பார்க்க அழகா இருக்குல்ல?" என்று ருத்ரா...
    இதுவரை ஒளிந்து நின்று பார்த்துக்கொண்டிருந்த உருவம், அவர்கள் இருவரும் வெளியே சென்றதை உறுதிப்படுத்திக்கொண்டு சிவலிங்கத்தைத் திருப்பி, மண்பானையில் இருந்த தங்க நாணயங்களை ஆசையுடன் எடுத்துக்கொண்டது. வெளியில் வந்த பரமேஷும் ருத்ராவும் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றனர். “நீங்க உங்க ரூமுக்குப் போங்க. மத்ததை காலையில பேசிக்கலாம். அப்புறம் இனி யாராவது உங்களைக் கூப்பிட்டா தனியா போயிடாதீங்க,” என்று எச்சரிக்கையாக...
     அத்தியாயம் 7: கார் மலை அடிவாரத்தை நோக்கி சீரான வேகத்தில் நெருங்கிக் கொண்டிருக்க, திடீரென்று காரை பிரேக் பிடித்து நிறுத்தினான் அஜித். ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று அனைவரும் முன்னால் பார்க்க, அஜித்தின் கண்களோ ஸ்தம்பித்து நின்றன. முன்னால் பார்த்த அனைவரும் அஜித் பேயறைந்தது போல் அமர்ந்திருப்பதைப் பார்த்து, "டேய், என்னடா ஆச்சு? ஏன் வண்டியை நிறுத்துன?"...
    அத்தியாயம் 6: ஓரமாக நிறுத்தியிருந்த தன் காரை நோக்கி சென்ற பரமேஷ், அனைவரும் அதில் ஏறியதும் வண்டியைக் கிளப்பினான். அவர்கள் செல்வதை மரங்களுக்கு இடையில் இருந்து, குதிரையில் அமர்ந்திருந்த அந்த முதியவர் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். மெதுவாகக் காரைக் காட்டை விட்டு ஊருக்குள் செலுத்தினான் பரமேஷ். அவர்களின் காரைப் பார்த்ததும், ஊர் மக்கள் ஒவ்வொருவராகத் திரண்டு வர ஆரம்பித்தனர். இதுவரை அந்தக் காட்டிற்குள்...
    அத்தியாயம் 5: பரமேஷின் கோபத்தைப் பார்த்தவள் சிறிது அமைதி அடைந்து, பின் சிவலிங்கம் இருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் முகில். சரியாகப் பாலம் போல் இருந்த அந்த அமைப்பில் ஓர் அடி எடுத்து வைத்தவளுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அவள் காலை எடுத்து வைத்தவுடன் சதுரமான அந்தக் கல் விலகிக்கொள்ள, கீழே விழப் பார்த்தவளைச்...
    4 கூடாரத்திலிருந்து வெளிவந்த ருத்ரா, யாரிடமும் சொல்லாமல் கையில் ஒரு டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு, குழந்தையின் அழுகை கேட்ட திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் அதன் அருகில் செல்லச் செல்ல அழுகை சத்தம் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஆனால், திடீரென்று அந்தச் சத்தம் நின்று அமைதி நிலவியது. இதுவரை அழுகை சத்தம் கேட்ட இடம் எதுவென்றே தெரியாமல் போக,...
    error: Content is protected !!