அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் காபி ஷாப் ஒன்றில் இருந்தனர் சஞ்சயும் மாலினியும்.
காதலர்கள் சந்தித்து பேச என்பதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்க பட்டிருந்தது அந்த ஷாப்.
மிதமான ஏசியின் குளிரில் மங்கலான வெளிச்சத்தில் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தனர் இருவரும்.
சஞ்சயின் முன் கோல்டு காபி இருக்க, மாலினியின் முன் சூடான காபி.
“உன்னோட தப்பை நான் கண்டிச்சது தப்பில்ல, அதுக்காக உன்னை நான் பேசின விஷயம் கண்டிப்பா தப்பு. அன்னிக்கு நைட்டே நான் ரியலைஸ் பண்ணிட்டேன் சஞ்சய். உனக்கு கால் பண்ணி ஸாரி கேட்க கூட நினைச்சேன். அப்போ அந்த ப்ராப்லம் சால்வ் ஆகாம இருக்கவும் அந்த டென்ஷன் வேற. அடுத்த நாள் என் அம்மாக்கு முடியலை, என்னால ஆபிஸ் வர முடியல” என ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தாள் மாலினி.
“என் மிஸ்டேக்குக்காக நீ என்னை என்ன திட்டியிருந்தாலும் பரவாயில்லை, கேரக்டர் அசாசினேஷன் பண்ணுவியா? நான் ஹர்ட் ஆகிட்டேன். இப்போ கூட உன்னை பார்க்கும் போதெல்லாம் நீ சொன்னதுதான் நினைவு வருது” என்றான் சஞ்சய்.
“உணர்ந்து ஸாரி கேட்கிறேன் சஞ்சய். இனி எப்பவும் அப்படி பேச மாட்டேன். ஆச்சுவலி நீ நான் கொடுத்த வேலைய நல்லா பண்ணி கொடுத்திட்ட. உன் மிஸ்டேக் கூட கேர்லெஸ் மிஸ்டேக்தான். நீ மெயில் பண்ணினவன்… ப்ச் விடு அது பழைய கதை” என்றாள்.
கணவனால் கைவிடப் பட்ட பெண் மாலினியின் தாய். அதனால் மாலினிக்கு அவளது சிறு வயதிலிருந்தே சங்கடங்களும் அவமானங்களும் கணக்கில்லாமல் நேர்ந்திருக்கிறது.
அம்மாவை போலவே மாலினியும் காதல் எனும் பெயரால் துரோகத்தை எதிர் கொண்டவள். அதிலிருந்து முழுதாக தேறிக் கொள்வதற்குள் அம்மாவின் விருப்பத்துக்காக ஒருவனுடன் திருமணம் வரை வந்து, அவனது அடக்குமுறை பண்பால் சரியாக வராது என முன்பே சுதாரித்து, திருமணத்தை நிறுத்தி விட்டாள். அதன் பிறகுதான் மாலினியின் அம்மாவுக்கு உடல்நலம் சீர் கெட்டு போனது.
சஞ்சய் தவறாக மெயில் அனுப்பியவன் திருமணமான நடுத்தர வயதுக்காரன். மாலினி வேலைக்கு சேர்ந்த புதிதில் அவளை தன்னுடன் இருக்க கேட்டு மாலினியிடம் நன்றாக வாங்கி கட்டிக் கொண்டவன்.
வேலையில் கெட்டிக்காரியான மாலினி, சஞ்சய் உண்டாக்கிய பிரச்சனையை சமாளித்து விட்டாள். ஆனால் அந்த நேரம் அந்த ஆள் பேசிய பேச்சில் நிலையிழந்து சஞ்சயிடம் தன் கோவத்தை காண்பித்து விட்டாள்.
“இதெல்லாம் சொல்லி நான் பேசினதை நியாய படுத்திக்கல சஞ்சய். அஃபிஷியலா மட்டும்தான் எல்லார்கிட்டேயும் பழகுவேன் நான். யார்கிட்டேயும் நெருங்க மாட்டேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு இன்னொசன்ட், ஃபன் லவிங் பையனை பார்த்தேன். அந்த பையன் மூஞ்ச திருப்பிட்டு போறதுதான் சகிச்சுக்க முடியல, அதை சார்ட் அவுட் பண்ண இப்போ காபி ஷாப்ல உட்கார்ந்திருக்கேன்” என சொல்லி சிரித்தாள்.
இதற்கு மேலும் மாலினியிடம் பகைமை பாராட்டுவானா என்ன சஞ்சய்?
மாலினியின் கதை அவனை இளக்கி விட்டது. இவ்வளவு கடந்தும் இன்று மற்றவர்களுக்கு இரும்பு பெண்ணாக தெரிகிறாள் என்பதில் அவளின் மீது மதிப்பு கூடியது.
“நாம நிறைய பேரை சந்திக்கிறோம் மாலினி, சிலர் பிரம்மிக்க வைப்பாங்க, நீயும் அப்படித்தான். உனக்கு இவ்ளோ பெரிய ஸ்டோரி இருக்கும், இவ்ளோ ஸ்ட்ரகில்ஸ் தாண்டி வந்திருப்பேன்னு எனக்கு தெரியலை. ஸாரி” என்றான்.
“நீ எதுக்கு ஸாரி சொல்ற சஞ்சய். இனி பழைய படி இருப்பதானே?” எனக் கேட்டாள்.
“பழைய படி… ஹையோ அப்படி முடியாது” என்றான்.
அவன் சொன்ன வேகத்தை கண்டு குழப்பமானாள் மாலினி.
“ஆஃபிஸ்ல யாருக்கும் தெரியாது. இப்போ நான் சிங்கில் இல்லை மாலினி. மேரீட்” என்றான்.
நம்ப முடியாமல் பார்த்தவள், “விளையாடுறியா?” எனக் கேட்டாள்.
“திடீர் கல்யாணம். இன்னொரு நாள் என் வைஃபை உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்” என அவன் சொல்லவும் உண்மைதான் என புரிந்து கொண்டவளுக்கு இன்னுமே வியப்பு நீங்கியிருக்கவில்லை.
“அவளும் தமிழ் பொண்ணுதான், அவ மீரா” என்றவன் எங்கு வேலை செய்கிறாள் என்பதையும் சொன்னான்.
“ஓ அந்த ஹாஸ்பிடல்லதான் அம்மாவையும் காட்டுறேன்” என்றாள் மாலினி.
“பர்டிகுலரா என்னன்னு சொல்றது? டயபடீஸ் ப்ரெஷர் இப்படி நிறைய ஹெல்த் இஸ்யூஸ்” என்றவளிடம் அம்மாவை நன்றாக கவனித்துக் கொள் என அக்கறையாக சொன்னான்.
அவளும் அவனுக்கு கை கொடுத்து தன் வாழ்த்துகளை சொன்னாள்.
“மீராவோட நீ என் வீட்டுக்கு விருந்துக்கு வா. எங்க வீட்டுக்கு யாருமே வர்றது இல்லை. அம்மா ரொம்ப சந்தோஷ படுவாங்க” என்றாள்.
“கண்டிப்பா வர்றேன் மாலினி. ஆனா உடனே முடியாது. வீக் எண்ட்ல மீராக்கு ஆஃப் கிடைக்கும் போது பிளான் பண்ணிக்கலாம்” என்றான்.
“ம்ம்… ஆமாம் நீ என்கிட்ட பழைய படி இருக்க முடியாதுன்னு சொன்னியே, என்ன சஞ்சய்?” என கிண்டலாக கேட்டாள்.
சற்றே அசடு வழிய சிரித்தான்.
“மீராக்கு அதெல்லாம் சொல்ல போறேன் நான்”
“ஓ… நானே கொஞ்சம் சொல்லிருக்கேன். அதெல்லாம் அவ தப்பா எடுக்க மாட்டா”
“அப்படியா? உன் ஹஸ்பண்ட் அவனை விட ஒரு வயசு பெரிய பொண்ணுகிட்ட வழிஞ்சு வழிஞ்சு பேசினான்னு சொல்லத்தான் போறேன். இப்படி சமாளிச்சா சொல்ல மாட்டேன்னு மட்டும் நினைக்காத”
“முன்ன மாதிரி நடந்துக்கன்னு நான் சொன்னத உன் பார்வையில நீயா அர்த்தம் எடுக்காத. நான் எதிர்பார்க்கிறது ஒரு கார்டியல் ரிலேஷன்ஷிப், அவ்ளோதான். அப்புறம் உனக்கொரு முக்கியமான அட்வைஸ் சொல்றேன் கேட்டுக்க. என்னதான் மெச்சூர்ட்னாலும் இந்த விஷயத்துல கேர்ள்ஸ் பொஸஸிவாதான் இருப்பாங்க, ஜாக்கிரதை”
“எந்த விஷயத்துல?”
“ஹஸ்பண்ட் விஷயத்துல”
“ஆனா அப்படித்தான் அவ இருக்கணும்னு நான் ஆசை படுறேன்” என சஞ்சய் சொல்ல, “சஞ்சய்…” என குறும்பாக அழைத்தாள் மாலினி.
புன்னகை செய்து கொண்டே நேரத்தை பார்த்தவன், “லேட் ஆகிடுச்சு, மீரா தனியா இருப்பா” என்றான்.
“நான் சொல்ல நினைச்சதை சொல்லிட்டேன், கிளம்பலாம் சஞ்சய்” என சொல்லி எழுந்து கொண்டாள் மாலினி.
தங்களுக்குள் ஏற்பட்டிருந்த பிணக்கை சரி செய்து கொண்டு, நட்புக்கும் உரமிட்டு அங்கிருந்து புறப்பட்டனர் இருவரும்.
வழக்கமான நேரத்தை விட இரண்டு மணி நேரம் தாமதமாகத்தான் வீடு வந்து சேர்ந்தான் சஞ்சய். மீராவை காணவுமே அவள் பேசியதும் அவனுக்கு நினைவுக்கு வர, இயல்பான முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டே உள்ளே நுழைந்தான்.
“இன்னிக்கு ரொம்ப வேலையா சஞ்சய், லேட்டா வர்றீங்களே?” என விசாரித்துக் கொண்டே அவன் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டாள் மீரா.
“அதெல்லாம் இல்லை. மாலினி கூட காபி ஷாப் போயிருந்தேன். மாலினி… தெரியும்ல?” என்றான்.
“உங்க சீனியர், உங்களை திட்டினா சொன்னீங்களே…”
“ம்ம்… அவளேதான். ஸாரி கேட்டா, அப்படியே பேசிட்டு இருந்ததில லேட் ஆகிடுச்சு” என்றான்.
“ஓ…” மீரா ஓ போட்டதில் வித்தியாசத்தை உணர்ந்தவனுக்கு மனைவிகளின் பொஸஸிவ் பற்றி மாலினி சொன்னது நினைவுக்கு வந்தது.
“இப்போ பேசி சமாதானம் ஆகிட்டீங்களா?” எனக் கேட்டாள் மீரா.