மாலையில் சஞ்சய் வீடு திரும்பிய போது மலர்ந்த முகத்துடன் அவனை வரவேற்றாள் மீரா. பையை ஓரமாக வைத்தவன் ஒரு கையால் இன் செய்திருந்த சட்டையை எடுத்து விட்டுக் கொண்டே, இன்னொரு கையால் அவளை தன்னிடம் இழுத்து அணைத்துக் கொண்டான்.
பின் இரண்டு கைகளையும் கொண்டு அவளை நன்றாக சுற்றி வளைத்துக் கொண்டான்.
“வந்த உடனே என்ன சஞ்சய் இது?” எனக் கேட்டாள்.
“மார்னிங் உன்னை பார்த்தது. ஐம்புலன்களும் உன்னை கண்டதும் நலம் விசாரிக்குது” என அவன் மையலாக சொல்லவும் அவளும் அவனுள் அடங்கி நின்றாள்.
சஞ்சய்க்கு மனதில் தானாக இதம் கூடும் அந்த உணர்வு மிகவும் பிடித்தது. மீராவுக்கு மட்டும் என்ன? அவன் வழக்கமாக வரும் நேரம் தெரிந்தாலும் எத்தனை முறை நேரத்தையும் வாயிலையும் பார்த்து விட்டாள்.
மீராவுக்கு பணி நிமித்தமாக நல்ல உடல் அலுப்பு. என்னதான் படுத்து ஓய்வெடுத்திருந்தாலும் மனம் சோர்வாகத்தான் இருந்தது. மாலினியுடன் பேசிய பிறகு பொருளாதார தேவைகளை எப்படி பூர்த்தி செய்து கொள்வது என்ற எண்ணமும் அப்பாவின் பேச்சுக்களும் சஞ்சயை மருக வைத்து விட்டன.
இருவருக்கும் தங்கள் துணையின் இந்த அணைப்பும் நெருக்கமும் அன்றைய நாளின் அத்தனை பாரங்களையும் மாயமாக விலகி ஓடச் செய்து விட்டன.
“எவ்ளோ நேரம் சஞ்சய், நலம் விசாரிச்சாச்சுன்னா விடுங்க என்னை” என்றாள் மீரா.
“என்ன அவசரம் மீரா? உன்கிட்ட இருக்க எனர்ஜில கொஞ்சம் எனக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிக்கிறேனே” என்றான்.
“டீ குடிச்சிட்டே பொறுமையா டிரான்ஸ்ஃபர் பண்ணிக்கலாம்” என சொல்லி விலகியவள் அவனது லஞ்ச் பேக் எடுத்துக் கொண்டு சமையலறை சென்றாள்.
“ஹேய் உன் லெமன் ரைஸ் சூப்பர்னு சொன்னா மாலினி” என்றான் சஞ்சய்.
வேகமாக திரும்பியவள், “நம்ம மேரேஜ் விஷயத்தை மாலினிகிட்ட சொல்லிட்டீங்களா?” எனக் கேட்டாள்.
உடனே சுதாரித்தவன், “இல்லை நான் சமைச்சேன்னு நினைச்சுதான் சொன்னா. நானும் தேங்க்ஸ்னு சொல்லி முடிச்சிட்டேன்” என்றான்.
“இன்னுமா சொல்லாம இருக்கீங்க? நான் என் கொலீக்ஸ் எல்லாருக்கும் சொல்லிட்டேன்”
“பசங்க சிங்கிள்னு மெயின்டெயின் பண்ணிக்கிறதுல சில அட்வான்டேஜஸ் இருக்கு”
“அப்படி என்ன இருக்கு?”
“அப்பதான் நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க”
“ஹையோ ரொம்பத்தான். மேரேஜ் ஆனவர்னு சொன்னா, பரவாயில்லை எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆளுன்னு இன்னும் மவுசு கூடுமே” என நக்கலாக சொன்னாள்.
“கரெக்ட்தான். ஆனா எனக்குத்தான் எக்ஸ்பீரியன்ஸ் இல்லையே, பேஸிக்கா பொய் சொல்றது எனக்கு பிடிக்காது”
“என்ன எக்ஸ்பீரியன்ஸ்?” என வேகமாக கேட்டவள் அவனது சிரிக்கும் பார்வையில் தடுமாறி திரும்பிக் கொண்டாள்.
சுவற்றில் ஒரு கை முட்டு கொடுத்து அவளை பார்த்திருந்தவனுக்கு மீண்டும் அவளை இழுத்தணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
இன்னும் அவளை சீண்டி ரசிக்க ஆவல் கொண்டவன், “நாளைக்கு ஸ்பெஷலா சமைச்சு அசத்துறேன்னு மாலினிகிட்ட ஜம்பமா சொல்லிட்டேன், நீதான் காப்பாத்தணும்” என்றான்.
“ம்ம்… இப்போல்லாம் மாலினி கூடத்தான் லஞ்ச் போல?” எனக் கடுப்பாக கேட்டாள்.
“தனியா சாப்பிட பிடிக்கல. மாலினி நல்லா கம்பெனி தர்றா. மாலினி செம ஸ்மார்ட் மீரா, அழகும் அறிவும் சேர்ந்த மாதிரி ஒரு பொண்ணை இப்படி ரேராத்தான் பார்க்க முடியும்” என்றான். தன் விழிகளை குத்தீட்டிகளாக மாற்றி அவனை துளைத்தாள்.
அவளது கன்னங்களை கிள்ளி கொஞ்சியவன், “ஹேய் செல்லோ… நீயெல்லாம் ரேரஸ்ட் பீஸ்டா” என்றான்.
“நான் நார்மல் பீஸாவே இருந்திட்டு போறேன்” என செல்லக் கோபத்துடன் சொன்னாள்.
“ஹேய் மீரா… ஜெலஸ் ஆகுறதானே?”
“ஹைய… அவல்லாம் ஒரு ஆளுன்னு நான் ஜெலஸ் ஆகணுமாக்கும்?”
“உன் ஹஸ்பண்ட் வேற யாரையும் புகழ்ந்தா உனக்கு ஓகே?”
“அதான் முன்னாடியே சொல்லிட்டேனே, எனக்கு அப்படிலாம் தாட்ஸ் கிடையாது. எவ வந்தா எனக்கென்ன?”
“ஹையோ பார்த்து மெதுவா டீ போடு. உன் கோவம் வேலை செய்ற வேகத்துல தெரியுது”
“ப்ச் போங்க ரெஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க”
“ம்ம்ம்… இந்த வீக் எண்ட் உனக்கு லீவ் கிடைக்குமா மீரா?”
“இல்லை சஞ்சய், நேத்து சண்டேல லீவ் போட்டாச்சே, வீக் டேஸ்லதான் இந்த வீக் ஆஃப் வரும், ஏன் வெளில போகலாம்னு நினைச்சீங்களா?”
“அவ உங்க ஃபிரெண்ட், நான் வரலை” என்னதான் இயல்பாக அவனிடம் சொல்ல நினைத்தாலும் அவளால் முடியவில்லை.
“சரி வராத. நான் மட்டும் போறேன். அவ அம்மாக்கு ஏதாச்சும் கிஃப்ட் கொடுக்கணும். அதுக்கு நீதான் ஹெல்ப் பண்ணணும்”
“மாலினி வீட்ல ஏதும் ஃபங்ஷனா?”
“அதெல்லாம் இல்லை. சும்மாதான் போறேன். கூப்பிட்டுட்டே இருக்கா. நீயும் இல்லாம வீட்ல போர் அடிக்கும், போய்ட்டு வர்றேனே” என சொல்லி குளியலறை சென்று விட்டான்.
பகுதி நேர வேலை பற்றியெல்லாம் மீராவிடம் சொல்லவில்லை. இது ஒரு முயற்சிதானே, சரியாக வராமல் கூட போகலாம், ஆகவே இப்போதைக்கு மறைத்து விட்டான்.
மாலினியை சஞ்சய்க்கு முன்னரே பிடிக்கும் என்பதாலோ என்னவோ மீராவுக்கு அவளை நேரில் பார்க்காமலே பிடிக்காமல் போய் விட்டது.
அவன் திரும்ப வரவும் கவனமாக மாலினி பற்றிய பேச்சு எழாமல் பார்த்துக் கொண்டாள். அதை புரிந்தவனுக்கும் உள்ளுக்குள் ஒரே சிரிப்பு. ஆனால் அவர்களுக்கு மட்டுமேயான இந்த நேரத்தை வீண் செய்ய விரும்பாமல், மாலினி பற்றி அவனும் பேசவில்லை. விளையாட்டு அளவுடனே இருக்கட்டும் என நல்ல பிள்ளையாக நினைத்தான்.
அவனுடன் நேரம் செலவிடலாம் என எண்ணி முன்பே இரவு உணவு தயாரித்து ஹாட் கேஸில் வைத்து விட்டாள் மீரா. ஆகவே பரிசு வாங்க இப்போதே போகலாம் என்றாள்.
“அவ்ளோ அர்ஜென்சி இல்லை மீரா” என்றான் அவன்.
“நாளையிலேருந்து செகண்ட் ஷிப்ட், வெளில போகவெல்லாம் டைம் கிடைக்காது. வீட்டுக்கும் திங்ஸ் வாங்க வேண்டியிருக்கு” என அவள் சொல்லவும் அவனும் கிளம்பினான்.
அதிக நேரமெடுக்காமல் வேலைப்பாடு கொண்ட ஷால் ஒன்றை மாலினியின் அம்மாவுக்கு என வாங்கினாள். அவளேதான் பணம் செலுத்தினாள். அவனுடைய சேலரி அக்கவுண்ட் வரும் சேமிப்பு அட்டையை அவளிடம்தான் கொடுத்து வைத்திருந்தான்.
“என்ன மீரா இவ்ளோ சீக்கிரம் யோசிச்சு, அதை விட சீக்கிரம் வாங்கிட்ட?” என வியப்பாக கேட்டான்.
“அப்படியா? இதுல என்ன கஷ்டம்?” என அவள் கேட்க, கண்களை விரித்து உதடுகளை வளைத்து நீ பெரியாளுதான் என்றான்.
அடுத்து சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு சென்றனர். இது எடுக்கவா அது எடுக்கவா என கேட்டுக் கொண்டே இருந்தான். ஒவ்வொன்றின் விலையையும் பார்த்து பார்த்துதான் வாங்கினாள்.
“சத்தியமா எனக்கு பொறுமை இல்லை. நான் டிராலி மட்டும் தள்ளுறேன். நீயே எடு” என சொல்லி விட்டான். அவள் ஓரிடத்தில் நின்று பொருட்களை பார்த்து தேர்வு செய்ய சற்று நேரம் பிடித்தது. இவன் கைப்பேசியில் விளையாட ஆரம்பித்து விட்டான்.
பார்த்தவள், “வேணாம் சஞ்சய், ஃபோனை உள்ள வைங்க” என்றாள்.
“டைம் பாஸ் ஆக வேணாமா எனக்கு?”
“இப்படி ஃபோன்ல கவனம் இருந்தா அப்புறம் யார் மேலயாவது போய் மோதிப்பீங்க, பிரச்சனை ஆகும்”
“ஒரு இடத்துல நின்னுதானே கேம் விளையாடுறேன்?” என அவன் கேட்க, அவனை கண்டனமாக பார்த்து நின்றாள்.
“ரொம்ப டாமினேட் பண்ற நீ” என சலித்துக் கொண்டே கைப்பேசியை பாக்கெட்டில் போட்டான்.