Friday, July 17, 2026

    Thamaraiyaal Kaelvan

    Thamaraiyaal Kaelvan 32

    0
    அத்தியாயம் 32 செந்தாமரை தனது வீட்டிற்கு வந்ததும் அவருக்குக் கைப்பேசியில் அழைத்த அவரது மகன் செல்வம், "அம்மா, தாமரை இன்னிக்கு நைட் வீட்டுக்கு வந்தானா பாயாசம் கொடுத்துடாத! பிளான் சேஞ்ச் ஆகிடுச்சு" என்று சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவராய், "ஐயோ இப்ப தானடா கொடுத்துட்டு வந்தேன். நான் போய்த் திரும்ப வாங்கிட்டு வந்துடவா" படபடவெனப் பதட்டத்துடன் கேட்டிருந்தார். "என்னது கொடுத்துட்டியா?...

    Thamaraiyaal Kaelvan 31

    0
    அத்தியாயம் 31 கோதை ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தனர் நால்வரும். தங்களது முன்ஜென்ம கதையைக் கூறியிருந்த தாமரை, கூடவே சக்தியின் அனுமதிப் பெற்று அவர்களின் முன்ஜென்மக் கதையையும் மாதவனிடம் உரைத்திருந்தாள். அவர்களின் கதையைக் கேட்ட மாதவன், "இன்னிக்கு தியானத்துல என்னோட முன்ஜென்மத்தை பார்த்தப்ப, எனக்கு ஏன் முன்னாடியே என்னோட முன்ஜென்ம நினைவுகள் வரவே இல்லைனு கேள்வி மனசுல வந்துட்டே இருந்துச்சு சக்தி...

    Thamaraiyaal Kaelvan 30

    0
    அத்தியாயம் 30 அழகிய‌ மாதவப் பெருமாள் கோவிலில் உற்சவச் சிலையாய் போலிச் சிலை வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போயினர் இருவரும். மாதவப் பெருமாளின் போலிச் சிலையைக் கையில் ஏந்தியவனாய் வேதனைப் படர்ந்த முகத்துடன் மாதவன் அதிர்ந்து நின்றிருந்த பொழுது, தூரத்தில் யாரோ வரும் ஆளரவம் கேட்க, 'அய்யோ யாரோ வராங்க போலருக்கே' என மனத்தோடு நினைத்தவளாய் விறுவிறுவெனத் துரிதக்...

    Thamaraiyaal Kaelvan 29

    0
    அத்தியாயம் 29 மருத்துவமனையின் காத்திருப்பு இடத்தில் அமர்ந்திருந்தனர் மாதவனும் தாமரையும். "இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க கண்ணா?" எனக்கு எதுக்கு ஃபுல் பாடி செக்அப்?" எனக் கேட்டாள் தாமரை. "அந்த அம்மா கையால தானே இரண்டு நாளா சாப்பிடுற தாமரை. கோதைக்கு குடிக்கிற நீராகாரத்துலயே விஷத்தை கலந்து கொடுத்திருக்காங்கனா, உனக்கு சாப்பாட்டுல எதுவும் கலந்து கொடுத்திருக்காமலா இருந்திருப்பாங்க" என்றவன்...

    Thamaraiyaal Kaelvan 28

    0
    அத்தியாயம் 28 அன்று அந்நாட்டின் அனைத்து திக்கு திசைகளிலும் கோதையின் வீரச் செயலே செவி வழிச் செய்தியாய்ப் பரவியிருக்க, அவளின் புகழே அன்று அனைவரின் பேசு பொருளாய் இருந்தது. இரவு நெருங்கிக் கொண்டிருக்க, மருத்துவக் குடிலில் தீப்பந்த ஒளியில் மயக்கத்தில் படுத்திருந்தாள் கோதை. அவளின் கரத்தைப் பற்றியவனாய் பதைபதைத்த நெஞ்சத்துடன், "வந்து விடு கோதை! மீண்டு வந்து...

    Thamaraiyaal Kaelvan 27

    0
    அத்தியாயம் 27 இமையான் நாட்டின் அரசன் இமையேந்திரனுக்கு அரிதான பொக்கிஷங்களைச் சேகரித்துப் பாதுகாத்து வைப்பதில் அதீத விருப்பமும் ஆர்வமும் உண்டு. அவரின் இத்தகைய ஆசையைப் பற்றி அறிந்த செங்கோடன், எதிரி நாட்டின் அரசனாய் இருப்பவரிடம் இந்நாட்டு பொக்கிஷத்தைப் பற்றி உரைத்தால் அதனைக் கைப்பற்றுவதற்காகவே போர் மூளும் என்று நம்பினான். அதற்கேற்ப இந்நாட்டின் பொக்கிஷங்களைப் பற்றி அந்த அரசரிடம்...

    Thamaraiyaal Kaelvan 26

    0
    அத்தியாயம் 26 "நீ உனது ஏகாதசி விரதப் பலனை உன்னவருக்கான சாபத்தை நீக்க தாரை வார்த்ததால், எப்பிறவியிலும் உன்னை மணக்க முடியாதென உன்னவருக்கு உன் தந்தை அளித்த சாபத்திற்குத் தீர்வு கிடைத்திருக்கிறது மகளே" முத்தரசி கூறியதைக் கேட்டுக் கண்கள் ஒளிர, "தீர்வு கிடைத்து விட்டதா?" மகிழ்ச்சியுடன் வினவியிருந்தாள் கோதை. "ஆம் மகளே! உன்னுடைய ஏகாதசி விரதப் பலனால் உன்...

    Thamaraiyaal Kaelvan 25

    0
    அத்தியாயம் 25 "ஏகாதசி விரதம் இருப்பதால், மனத்தின் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும். நோய் நீங்கும், வறுமை நீங்கும், செல்வம் சேரும்" (மாச்சரியம் - பிறர் மீது பொறாமை கொண்டு, கோபம் வெறுப்புடன் வாழ்வது) "இறைவனை வணங்குவதற்கு உடல் தூய்மையுடன்...

    Thamaraiyaal Kaelvan 24

    0
    அத்தியாயம் 24 யார் கூறுவதை நம்புவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார் முருகையன். அதன் பிறகு இவ்வழக்கு வேறு வழக்காய் மாறிவிட, அந்தச் சடாமுடி சாமியாரின் சாட்சியத்தை ஏற்றவர்களாய், தனது ஜாதகத்தை மாற்றியளித்து ஏமாற்றி ஒரு பெண்ணை மணம் புரிய முனைந்த குற்றத்திற்காகச் செங்கோடனை ஒரு வருடம் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகத் தீர்ப்பு வழங்கியிருந்தனர்...

    Thamaraiyaal Kaelvan 23

    0
    அத்தியாயம் 23 ஓங்கி உயர்ந்த மலையின் அடர்வனத்திற்குள் மகிழ மரத்தினடியில் தனது மடியில் கண்களை மூடியவாறு தலைச்சாய்த்துப் படுத்திருப்பவனை இமைக்காதுப் பார்த்திருந்தாள் அவள். கருத்த தேகமும் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் களையான முகத்தில் அடர்ந்த மீசையுமாய்த் திடகாத்திரமான ஆண்மகன் அவன் தனது மடியினுள் புதைந்து போவதைப் போல் இடையிறுக்கிய அணைப்புடன் உறங்கிக் கொண்டிருப்பதை எப்பொழுதும் போல்...

    Thamaraiyaal Kaelvan 22

    0
    அத்தியாயம் 22 கோதை ஆற்றங்கரையில் யாருமற்ற தனிமையில், ஆற்று மணலில் வானத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தவனின் மார்பினில் தாடையைப் பதித்து அவன் முகத்தை நோக்கியவளாய் படுத்திருந்தாள் கோதை. "நான் இவ்வாறு களவியலில் ஈடுபடுவேன் என்றெல்லாம் கனவிலும் நினைத்ததில்லை கண்ணா" என்றாள். "களவியலா? அப்படியென்றால்" தெரிந்தும் தெரியாதவன் போல் கேட்டிருந்தான். "அன்புடைய இருவர் நல்வினையால் எதிர்ப்பட்டு, காதல் கொள்வது. ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும்...

    Thamaraiyaal Kaelvan 21

    0
    அத்தியாயம் 21 வீரபத்திரனிடம் கருப்பண்ணன் கோதை மீதான தனது விருப்பத்தைக் கூறிய மறுநாள், வீரபத்திரனின் வீட்டிற்கு வந்திருந்தார் முருகையன். மார்கழி முதல் நாளான அன்று தான் கோதை விரதத்தைத் தொடங்கியிருந்தாள். அன்று வீரபத்திரனைக் காணவென அவன் இல்லத்திற்குச் சென்ற முருகையன், "கோதைக்கேற்ற வரனை தேடிக் கொண்டிருக்கிறேன் மருமகனே! சோலைவனத்தில் வசிப்போர் பெரும்பாலும் அரசாங்க படை வீரர்களாகவும் காவலர்களாகவும் பணிபுரிபவர்கள்...

    Thamaraiyaal Kaelvan 20

    0
    அத்தியாயம் 20 "தாங்கள் தான் அதிவீரபராக்கிரமரான கருப்பண்ணரோ?" புருவத்தை உயர்த்தியவாறு தனக்கு முன்னே நின்று அலட்சியமாய்க் கேட்டிருந்த கோதையை ரசித்த அவனது கண்கள் அவளின் கையைப் பற்றித் தன்னருகே இழுத்திட, தன் மீது பூ போல் விழுவாள் என்று எண்ணியிருந்தவனின் நெஞ்சின் மீது பாராங்கல் மோதிய உணர்வு உண்டாக, பட்டெனக் கண்களைத் திறந்து பார்த்தான் கருப்பண்ணன். "எதற்காக உன்னை...

    Thamaraiyaal Kaelvan 19

    0
    அத்தியாயம் 19 "எப்படித் தான் அன்றாடம் அரசிமா இந்தப் பாதை வழியாய் நடந்து வந்து மாதவனுக்கு மாலைச் சூட்டினாரோ?" என்றவளாய் மூச்சு வாங்க மலை ஏற்றத்தில் நடந்திருந்தாள் கோதை. ஆத்மநல்லூர் மாதவப் பெருமாள் கோவிலிலிருந்து பின் பக்கமாய் இருந்த குறுக்குப் பாதை வழியாகச் சோலைவனம் நோக்கி நடந்திருந்தனர் கோதையும் அவளின் அன்னை நீலாம்பிகையும். "ஆமாம் கோதை! திருமணமாகிச் சென்ற...

    Thamaraiyaal Kaelvan 18

    0
    அத்தியாயம் 18 வண்டியில் இருந்து இறங்கி இருவரும் சேர்ந்து பிரகலாதப் பெருமாள் கோவிலினுள் காலடி எடுத்து வைத்ததும், தலை முதல் பாதங்கள் வரை உடலுக்குள் சிலிர்ப்பை உணர்ந்தனர். தானாய் அவனது கரம் அவளின் கரத்தோடு கோர்த்துக் கொண்டது. தாங்கள் பன்னெடுங்காலத்திற்கு முன் வணங்கிய எம்பெருமாளைக் காணப் போகிறோம் என்கின்ற நெகிழ்வான மனநிலையுடன் உள்ளே சென்றனர். கோவிலின் நடை திறக்கப்பட்டிருக்க,...

    Thamaraiyaal Kaelvan 17

    0
    அத்தியாயம் 17 "சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாள் ஏகாதசி. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி தான் ஏகாதசி. இது விஷ்ணுவை வழிபடுவதற்கு உரிய மிக முக்கியமான நாள். இது மிக முக்கிய...

    Thamaraiyaal Kaelvan 16

    0
    அத்தியாயம் 16 "சொல்லுங்க சார்! ஆத்மநல்லூர் கோவில்ல தான் இருக்கேன். இதோ வந்துடுறேன் சார்" என்றவளாய் எழுந்தவள் ஓட்டுனர் முருகேசனை அழைத்தாள். "ஏதோ அர்ஜன்ட் மீட்டிங் இருக்காம். உடனே சார் வர சொன்னாரு. என்னை ஆபிஸ்ல இறக்கி விட்டுடுங்கண்ணா" என்றவளாய் அங்கிருந்து கிளம்பினாள். அங்குச் சென்று பார்க்க, இவளும் இவளின் மேலதிகாரி மட்டுமே இருக்க, அலுவலகமே வெறிச்சோடி இருந்தது. 'யாருமே...

    Thamaraiyaal Kaelvan 15

    0
    அத்தியாயம் 15 மாதவப்பெருமாளின் உற்சவ சிலையைப் பார்த்து அதிர்ந்தவளாய் நின்றவள், "நான் கனவுல பார்த்த பெருமாள் சிலை இங்கே பாதுகாப்பா இருக்கும் போது, எனக்கு ஏன் அடிக்கடி அப்படிக் கனவு வந்துச்சு. அந்தச் சாமியார் சொல்ற மாதிரி நான் இங்கே செய்ய வேண்டிய காரியம் தான் என்ன?" எனச் சிந்தித்தவாறு சிலையைப் பார்த்திருந்த நேரம், "உங்களைப்...

    Thamaraiyaal Kaelvan 14

    0
    அத்தியாயம் 14 விடியற்காலையில் வீட்டின் பால்கனியில் தேநீரைக் குடித்தவாறு தீவிர சிந்தனையில் ஆட்பட்டிருந்தவளாய் அமர்ந்திருந்தாள் தாமரை. காலை அப்பாட்டைக் கேட்டுக் கண் விழித்ததும் தனது இல்லத்தில் தான் இருப்பதாக நினைத்து, "அம்மா" என்று கோபத்துடன் அழைத்தாள். தாயிடமிருந்து பதில் வராது போகவும், சோலைவனத்தில் தான் இருப்பதை உணர்ந்தாள். 'இங்கே எப்படி இந்தப் பாட்டுக் கேட்டுச்சு' என்றெண்ணியவளாய் எழுந்தவள் சுற்றும்...

    Thamaraiyaal Kaelvan 13

    0
    அத்தியாயம் 13 "அடுத்து எங்கே போகனும் தாமரை? ஏதோ பெருமாள் கோவில் சொன்னீயே! அங்கேயா?" எனக் கேட்டான் மாதவன். கையில் இருந்த கோப்பை வாசித்தவளாய் பயணித்திருந்தவள் அவன் கேட்ட கேள்விக்கு ஆமெனத் தலையசைத்துப் பின் நிமிர்ந்து பார்த்து, "இங்கே ஏதோ அய்யனார் கோவில் இருக்குனு செந்தாமரை அம்மா சொன்னாங்களே! சக்தி வாய்ந்த அய்யனாருனு சொல்லி அவருக்கிட்ட வேண்டிக்கிட்டு...
    error: Content is protected !!