Thamaraiyaal Kaelvan
அத்தியாயம் 13
"அடுத்து எங்கே போகனும் தாமரை? ஏதோ பெருமாள் கோவில் சொன்னீயே! அங்கேயா?" எனக் கேட்டான் மாதவன்.
கையில் இருந்த கோப்பை வாசித்தவளாய் பயணித்திருந்தவள் அவன் கேட்ட கேள்விக்கு ஆமெனத் தலையசைத்துப் பின் நிமிர்ந்து பார்த்து, "இங்கே ஏதோ அய்யனார் கோவில் இருக்குனு செந்தாமரை அம்மா சொன்னாங்களே! சக்தி வாய்ந்த அய்யனாருனு சொல்லி அவருக்கிட்ட வேண்டிக்கிட்டு...
அத்தியாயம் 22
கோதை ஆற்றங்கரையில் யாருமற்ற தனிமையில், ஆற்று மணலில் வானத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தவனின் மார்பினில் தாடையைப் பதித்து அவன் முகத்தை நோக்கியவளாய் படுத்திருந்தாள் கோதை.
"நான் இவ்வாறு களவியலில் ஈடுபடுவேன் என்றெல்லாம் கனவிலும் நினைத்ததில்லை கண்ணா" என்றாள்.
"களவியலா? அப்படியென்றால்" தெரிந்தும் தெரியாதவன் போல் கேட்டிருந்தான்.
"அன்புடைய இருவர் நல்வினையால் எதிர்ப்பட்டு, காதல் கொள்வது. ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும்...
அத்தியாயம் 26
"நீ உனது ஏகாதசி விரதப் பலனை உன்னவருக்கான சாபத்தை நீக்க தாரை வார்த்ததால், எப்பிறவியிலும் உன்னை மணக்க முடியாதென உன்னவருக்கு உன் தந்தை அளித்த சாபத்திற்குத் தீர்வு கிடைத்திருக்கிறது மகளே" முத்தரசி கூறியதைக் கேட்டுக் கண்கள் ஒளிர,
"தீர்வு கிடைத்து விட்டதா?" மகிழ்ச்சியுடன் வினவியிருந்தாள் கோதை.
"ஆம் மகளே! உன்னுடைய ஏகாதசி விரதப் பலனால் உன்...
அத்தியாயம் 1
நாராயண மந்திரம் – அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து
பரமன் அருள் தரும் சாதனம்.
உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை!
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை!
மா தவா மது சூதனா என்ற மனதில் துயரமில்லை
ஆதியும் அந்தமும் = நாராயணனே
அன்னையும் தந்தையும் = நாராயணனே
பக்தியும் முக்தியும் = நாராயணனே
பகலும் இரவும் = நாராயணனே
பிறவியில்...
அத்தியாயம் 24
யார் கூறுவதை நம்புவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார் முருகையன்.
அதன் பிறகு இவ்வழக்கு வேறு வழக்காய் மாறிவிட, அந்தச் சடாமுடி சாமியாரின் சாட்சியத்தை ஏற்றவர்களாய், தனது ஜாதகத்தை மாற்றியளித்து ஏமாற்றி ஒரு பெண்ணை மணம் புரிய முனைந்த குற்றத்திற்காகச் செங்கோடனை ஒரு வருடம் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகத் தீர்ப்பு வழங்கியிருந்தனர்...
அத்தியாயம் 30
அழகிய மாதவப் பெருமாள் கோவிலில் உற்சவச் சிலையாய் போலிச் சிலை வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போயினர் இருவரும்.
மாதவப் பெருமாளின் போலிச் சிலையைக் கையில் ஏந்தியவனாய் வேதனைப் படர்ந்த முகத்துடன் மாதவன் அதிர்ந்து நின்றிருந்த பொழுது, தூரத்தில் யாரோ வரும் ஆளரவம் கேட்க,
'அய்யோ யாரோ வராங்க போலருக்கே' என மனத்தோடு நினைத்தவளாய் விறுவிறுவெனத் துரிதக்...
அத்தியாயம் 11
"சோலைவனத்துக்குள்ள டூரிஸ்ட் இடம் என்னலாம் இருக்கு அண்ணா" என்று ஓட்டுனரிடம் கேட்டாள் தாமரை.
"இங்க அருவியும் கோவிலும் தான் இருக்கு மேடம். பெரிசா சுத்திப் பார்க்கிற மாதிரி எதுவும் இல்ல. இங்கே எப்பவுமே சிலுசிலுனு இருக்கக் கிளைமேட்னால சுற்றிலும் காடுகரைனு பார்க்க பிரியப்படுறவங்க தான் பெரும்பாலும் வருவாங்க" என்றார் அவர்.
"ஓ சரிண்ணா. கண்ணா நீங்க...
அத்தியாயம் 31
கோதை ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தனர் நால்வரும்.
தங்களது முன்ஜென்ம கதையைக் கூறியிருந்த தாமரை, கூடவே சக்தியின் அனுமதிப் பெற்று அவர்களின் முன்ஜென்மக் கதையையும் மாதவனிடம் உரைத்திருந்தாள்.
அவர்களின் கதையைக் கேட்ட மாதவன், "இன்னிக்கு தியானத்துல என்னோட முன்ஜென்மத்தை பார்த்தப்ப, எனக்கு ஏன் முன்னாடியே என்னோட முன்ஜென்ம நினைவுகள் வரவே இல்லைனு கேள்வி மனசுல வந்துட்டே இருந்துச்சு சக்தி...
அத்தியாயம் 10
ஆத்மநல்லூர் மாதவப்பெருமாள் கோவிலிற்குச் சென்றிருந்தாள் தாமரை.
அங்குக் கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் நடந்தவாறு இருக்க, அக்கோவிலின் உள்ளே இருந்த அலுவலக அறையில் அமர்ந்து கோப்புகளைப் பார்வையிட்டிருந்தாள்.
எந்தெந்த கோவில்கள் எல்லாம் அவளின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன என்ற பட்டியலை அந்தக் கோப்பினுள் வாசித்தவாறு வந்தவள், அதிலிருந்த பிரகலாதப் பெருமாள் கோவில் என்ற பெயரைப் பார்த்ததும், 'இது சோலைவனத்துல...
அத்தியாயம் 8
ஓங்கி உயர்ந்த மலையின் அடர்வனத்திற்குள் மகிழ மரத்தினடியில் தனது மடியில் கண்களை மூடியவாறு தலையைச்சாய்த்துப் படுத்திருப்பவனை இமைக்காதுப் பார்த்திருந்தாள் அவள்.
கருத்த தேகமும் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் களையான முகத்தில் அடர்ந்த மீசையுமாய்த் திடகாத்திரமான ஆண்மகன் அவன் தனது மடியினுள் புதைந்து போவதைப் போல் இடையிறுக்கிய அணைப்புடன் உறங்கிக் கொண்டிருப்பதை எப்பொழுதும் போல்...
அத்தியாயம் 16
"சொல்லுங்க சார்! ஆத்மநல்லூர் கோவில்ல தான் இருக்கேன். இதோ வந்துடுறேன் சார்" என்றவளாய் எழுந்தவள் ஓட்டுனர் முருகேசனை அழைத்தாள்.
"ஏதோ அர்ஜன்ட் மீட்டிங் இருக்காம். உடனே சார் வர சொன்னாரு. என்னை ஆபிஸ்ல இறக்கி விட்டுடுங்கண்ணா" என்றவளாய் அங்கிருந்து கிளம்பினாள்.
அங்குச் சென்று பார்க்க, இவளும் இவளின் மேலதிகாரி மட்டுமே இருக்க, அலுவலகமே வெறிச்சோடி இருந்தது.
'யாருமே...
அத்தியாயம் 23
ஓங்கி உயர்ந்த மலையின் அடர்வனத்திற்குள் மகிழ மரத்தினடியில் தனது மடியில் கண்களை மூடியவாறு தலைச்சாய்த்துப் படுத்திருப்பவனை இமைக்காதுப் பார்த்திருந்தாள் அவள்.
கருத்த தேகமும் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் களையான முகத்தில் அடர்ந்த மீசையுமாய்த் திடகாத்திரமான ஆண்மகன் அவன் தனது மடியினுள் புதைந்து போவதைப் போல் இடையிறுக்கிய அணைப்புடன் உறங்கிக் கொண்டிருப்பதை எப்பொழுதும் போல்...
அத்தியாயம் 12
"பத்து வருஷம் முன்னாடி நான் காலேஜ் படிச்சி முடிக்கிற நேரம் வந்த மாப்பிள்ளை தான் பிரதாபன். அவர் ஒரு சாஃப்ட்வேர் பிசினஸ் செஞ்சிட்டு இருந்தாரு. அந்தச் சாஃப்ட்வேரைப் பத்தி புரோமோட் செய்றதுக்காக எங்க காலேஜூக்கு வந்தப்ப என்னைப் பார்த்துப் பிடிச்சி போய், என்கிட்ட புரபோஸ் செஞ்சாரு" என்றவள் சொன்னதும்,
"உன்னோடதும் என்னை மாதிரி லவ்...
அத்தியாயம் 36
மூன்று மாதங்கள் கடந்திருந்தன!
ராமானுஜத்திடம் பேசிய மறுவாரமே சென்னைக்கு வந்த மாதவனும் தாமரையும் அடுத்த ஒரு வாரத்தில் திருமணத்தை முடித்து விட்டு ஆத்மநல்லூருக்கு வந்திருந்தனர்.
"உன் புள்ள என்னை மாதிரி பொண்டாட்டிதாசன் ஆகிட்டான்டி! கல்யாணம் முடிஞ்சி ஆத்மநல்லூருக்குப் போய் மூனு மாசமாகப் போகுது! அம்மா அப்பா எப்படி இருக்காங்க என்ன செய்றாங்கனு எட்டிப் பார்த்தானா?" என்று...
அத்தியாயம் 14
விடியற்காலையில் வீட்டின் பால்கனியில் தேநீரைக் குடித்தவாறு தீவிர சிந்தனையில் ஆட்பட்டிருந்தவளாய் அமர்ந்திருந்தாள் தாமரை.
காலை அப்பாட்டைக் கேட்டுக் கண் விழித்ததும் தனது இல்லத்தில் தான் இருப்பதாக நினைத்து, "அம்மா" என்று கோபத்துடன் அழைத்தாள். தாயிடமிருந்து பதில் வராது போகவும், சோலைவனத்தில் தான் இருப்பதை உணர்ந்தாள்.
'இங்கே எப்படி இந்தப் பாட்டுக் கேட்டுச்சு' என்றெண்ணியவளாய் எழுந்தவள் சுற்றும்...
அத்தியாயம் 19
"எப்படித் தான் அன்றாடம் அரசிமா இந்தப் பாதை வழியாய் நடந்து வந்து மாதவனுக்கு மாலைச் சூட்டினாரோ?" என்றவளாய் மூச்சு வாங்க மலை ஏற்றத்தில் நடந்திருந்தாள் கோதை.
ஆத்மநல்லூர் மாதவப் பெருமாள் கோவிலிலிருந்து பின் பக்கமாய் இருந்த குறுக்குப் பாதை வழியாகச் சோலைவனம் நோக்கி நடந்திருந்தனர் கோதையும் அவளின் அன்னை நீலாம்பிகையும்.
"ஆமாம் கோதை! திருமணமாகிச் சென்ற...
அத்தியாயம் 4
எப்படியேனும் அவன் புகைப் பிடித்தான் என்று நிரூபித்து விட வேண்டுமென்ற அவசரத்தில் உள்ளே நுழைந்தவள் மெல்லிய கோடாய் அகர்பத்தியின் புகை அந்த வீட்டின் ஜன்னலின் வழியே வெளியே செல்வதைக் கண்டு வாயடைத்து நின்றாள்.
'அய்யய்யோ நாம தான் தப்பா நினைச்சிட்டோமா?' என்று நினைத்தவளாய் கெஞ்சும் கண்களுடன் அவனைப் பார்க்க, அவளைப் பொசுக்கும் கோபத்துடன் நெருப்பாய்ப்...
அத்தியாயம் 3
தியானம் செய்து தன்னைச் சமன் செய்தவளாய் தனது வீட்டிற்குச் சென்ற தாமரை அன்னையிடம் பேசி சமாதானம் செய்தாள். பின்பு இருவருமாகச் சேர்ந்து உண்டுவிட்டு ஓய்வெடுத்தனர்.
ஆத்மநல்லூரைப் பற்றி விமலா கூறியதிலிருந்து அந்தக் கோவிலைப் பற்றியும் ஊரைப் பற்றியும் அங்குச் செல்வதற்கு முன்பு விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென எண்ணியிருந்தாள் தாமரை. அதன் பொருட்டு அன்று...
அத்தியாயம் 33
மறுநாள் விடியற்காலை ஐந்து மணியளவில் ராஜா வந்த பொழுதே மாதவனும் வந்திருந்தான்.
ராஜாவிடம் அந்தப் பாயாச டப்பாவை கொடுத்தவளாய் மாதவனுடன் அந்தச் சாமியார் கூறிய மணி மண்டபத்தை நோக்கிப் பயணித்திருந்தாள் தாமரை.
தாமரை அந்தப் பக்கமாகச் சென்றதும், இந்தப் பக்கம் மகனுக்குக் கைப்பேசியில் அழைத்துத் தகவல் சொல்லியிருந்தார் செந்தாமரை.
தாய் கூறியதைக் கேட்டு, "இந்தச் சிவலிங்கப் பிரச்சினை...
அத்தியாயம் 17
"சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாள் ஏகாதசி. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி தான் ஏகாதசி. இது விஷ்ணுவை வழிபடுவதற்கு உரிய மிக முக்கியமான நாள். இது மிக முக்கிய...