Tuesday, July 14, 2026

    Pani Sinthum Sooriyan

    அஞ்சலியின் அத்தை பெண் நேகாவுக்கும், அபர்ணாவின் வயதுதான். மனிஷ், மமதி, அகில், அஞ்சலி இவர்கள் எல்லோருக்கும் ஒன்று அல்லது இரண்டு வயது வித்தியாசம்தான். அதே போல அகிலாவுக்கும், சோனாவுக்கும் ஒரு வயதுதான் வித்யாசம். முதல் தளத்தில் இருந்த மணிஷின் அறையில் அகில் தங்கிக்கொண்டான். முன்றாவது தளம் முழுவதும், இவர்கள் எல்லோரும் ஆக்ரமித்துக் கொண்டனர். சோனாவின் அறையில்...
    பனி சிந்தும் சூரியன் இறுதி அத்தியாயம் 2 மூன்று வருடங்கள் கழித்து... அன்று மமதியின் திருமணம். அகிலா திருமணம் போலப் பிரம்மாண்டமாகச் செய்தனர். வீட்டின் தலைமகனாக ராம் அங்கும் இங்கும் பரபரப்பாகச் சுற்றி வந்தவர்களைக் கவனிக்க, அவனுக்கு ஈடாக மனிஷும் சுழன்றான். கார்த்திக் அகிலா தங்கள் மகன் சஞ்சையோடும், அவனினாஷ் சோனா தங்கள் மகள் ஸ்ருதியோடும், வரவேற்பில் நின்று வந்தவர்களை...
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 38 பணியாளர்கள் தங்கி இருந்த இடத்திற்கு அருகிலேயே, இரண்டு பெரிய அறையாகத் தடுத்து, இரண்டு ஆசிரியர்களும் போட்டு, அங்கேயே பாடம் நடத்த ஆரம்பித்து விட்டனர். கொஞ்சம் பெரிய பிள்ளைகளை, பக்கத்தில் இருந்த பள்ளியில் சேர்த்து விட்டனர். பிள்ளைகள் பாடம் படிக்கச் சென்றதால்... அவர்களுக்காக வீட்டில் இருந்த பெண்களும் வேலைக்கு வந்தனர். எந்தப் பக்கமும்...
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 37 அஞ்சலி முன்பு ஒளித்து, மறைத்து உமேஷை சந்தித்துக் கொண்டு இருந்தாள். அவள் பெற்றோரை பற்றித் தெரிந்ததில் இருந்து பயமே கிடையாது. அவனோடு தைரியமாக வெளியே சுற்றிக் கொண்டு இருந்தாள். நீலிமாவிற்கு விஷயம் தெரிய, மகளைக் கண்டித்தாள். “அந்த உமேஷ் எல்லம் ஒரு ஆளுன்னு, நீ அவன் பின்னாடி சுத்திட்டு இருக்கியா?” “ஏன் அவனுக்கு என்ன?...
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 36 ஒரு வாரத்தில் ஸ்வர்ணாவே அவர் அம்மாவையும் அண்ணியையும் ஊருக்கு அனுப்பி விட்டார். “நான் இப்ப நல்லா இருக்கேன், அதுதான் அபர்ணா இருக்கா இல்ல. ஒரு பிரச்சனையும் இல்லை கிளம்புங்க.” என்றார். ஸ்வர்ணாவே மருமகள் பார்த்துக் கொள்வாள் எனச் சொல்லும் போது அவர்கள் என்ன சொல்ல முடியும்? அவருக்கு மருமகளைப் பிடித்தால், சரிதான்...
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 35 காலையில் ராம் தன்னையும் மீறி உறங்கி விட்டான். அபர்ணாவும் தாமதமாகத்தான் கண்விழித்தாள். அவன் உறங்குவதைப் பார்த்து அவனைத் தொந்தரவு செய்யாமல் குளியல் அறை சென்று குளித்து விட்டு வந்தாள். அவளுக்குத் தன் உடல்நிலையைக் குறித்துக் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. ஆனால் இப்போது ராம் இருக்கும் நிலையில், அவனிடம் எதையும் சொல்ல முடியாது....
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 34 ஸ்வர்ண ஹாலில் உட்கார்ந்து இருந்தால்... அபர்ணாவும் அங்குதான் இருப்பாள். காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு மொபைலில் பாட்டுக் கேட்டுக் கொண்டு இருப்பாள். அவர் உறங்க சென்று விட்டால். மாடியில் இருக்கும் ஊஞ்சலில் அல்லது கீழே முன்புறம் தோட்டத்தில் அமர்ந்து இருப்பாள். அபர்ணா அந்த வீட்டில் சின்னச் சின்ன வேலைகள் அவளே செய்ய ஆரம்பித்தாள்....
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 33 இரவு தாமதமாக வந்ததால்... காலையும் எட்டு மணியாகியும் அபர்ணா எழுந்துகொள்ளாமல் உறங்கிக் கொண்டே இருக்க... ஏற்கனவே எழுந்து தன் வேலைகளை முடித்தவன், அவள் அருகில் படுத்து அவள் உறக்கத்தைக் கலைக்க ஆரம்பித்தான். “தூங்க விடுங்க.” என அபர்ணா திரும்பி படுக்க, “மேடம், நாம ஹனிமூன்ல இருந்து திரும்பி வந்தாச்சு. இது வீடு நியாபகம்...
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 32 மூன்றாவது நாள் காலை ஆறுமணிக்கு விமானம். ஏழு மணி இருபது நிமிடங்களுக்கு எல்லாம் பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்திருந்தனர். அபர்ணா ஏற்கனவே பெங்களூரில் இருந்து இருக்கிறாள். ஜீன்ஸ் டி ஷர்ட்டில், கணவனின் தோளில் தொத்திக்கொண்டு வந்தவள், “இங்கயா ஹனிமூன் வந்திருக்கோம். இங்க ஒண்ணுமே இருக்காதே, மைசூர் போனா கூட...
    பனி சிந்தும் சூரியன் இருவரும் சேர்ந்து கீழே இறங்கி சென்றனர். அகிலாண்டேஸ்வரி அபர்ணாவை பார்த்ததும், “போய் விளக்கு ஏத்திட்டு வா.” என்றார். ராம்மும் அவளுடன் சென்றான். அவள் விளக்கு ஏற்றி விட்டு ஊதுபத்தியை பொருத்தி வைக்க... இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். ராம் ஸ்வர்ணாவை அழைத்து, அபர்ணாவோடு அவர் காலில் விழுந்து வணங்கியவன், பிறகு தன்...
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 31 திருமணத் தன்று காலை ராமிற்கு அபர்ணாவுக்கும் இனிமையாக விடிந்தது என்றால்.... மற்றவர்களுக்குப் பரபரப்பாக விடிந்தது. பெண் வீட்டினர் முன் தின இரவே மண்டபம் சென்று இருக்க.... மாப்பிள்ளை வீட்டினர் காலையில் வருவதாக இருந்தது. காலை ஒன்பது பத்தரை முஹுர்த்த நேரம். காலை எட்டு மணிக்கே அங்கே இருக்க வேண்டும் என நினைத்து...
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 30 திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. ராமிற்கு நிற்க நேரமில்லாமல் சுழண்டு கொண்டிருந்தான். முதலில் அகிலா திருமணம் இப்போது உடனே இவனுடைய திருமணம். தொழிலையும் வேறு பார்க்க வேண்டும். அவனுடைய அப்பாவும், சித்தப்பாகளும் பார்கிறார்கள் தான். இருந்தாலும், இவனிடம்தான் நிறையப் பொறுப்புகள் இருந்தது. ஹனிமூன் போக நேரம் இருக்குமா...
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 29 அகிலா திருமணம் முடிந்து புகுந்த வீடு செல்ல... கிளம்பிக் கொண்டு இருந்தாள். அவள் செல்வதற்கு முன் தன் அண்ணனுடன் தனியாக நின்று பேசிக்கொண்டு இருந்தாள். பத்து நிமிடங்களாக இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்படி என்னதான் ரெண்டு பேரும் பேசுவாங்களோ...என அபர்ணா யோசித்துக் கொண்டு இருந்தாள். அபர்ணா அகிலாவை அழைத்துச் செல்வதற்காகக் காத்திருந்தாள். அந்த...
    பனி சிந்தும் சூரியன் அபர்ணா காரில் இருந்து இறங்கும் போதே, மேலே இருந்து ராம் அவளைப் பார்த்து விட்டான். “ஏற்கனவே அழகா இருப்பா... இதுல இப்படி வேற டிரஸ் பண்ணிட்டு வந்து கொல்றாளே.... நான் வேலையைப் பார்ப்பேனா... இல்லை இவளை பார்ப்பேனா...” என அவனுக்கு ஒரே கவலையாகப் போய் விட்டது. அபர்ணா வரும் வழியில் எதிர்பட்ட ஒவ்வொருவருடனும்...
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 28 “என்ன சோனா எதுக்குக் கூப்பிட்ட?” “பாட்டி போய் அஞ்சலியை கூப்டிட்டு வர சொன்னாங்க. நீயும் வா.” “நான் எதுக்கு?” “ராம் அண்ணாதான் உன்னைக் கூடக் கூடிட்டுப் போகச் சொன்னாங்க.” இவளை எதுக்குப் போகச் சொல்கிறான், அபர்ணாவுக்குப் பயங்கிற கோபம், அவள் திரும்பி ராம்மை பார்க்க, அவன் யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தான். அபர்ணா விடாமல் அவனைப்...
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 27 வரவேற்பில் ஒரு பக்கம் மாப்பிள்ளை வீட்டின் சார்பில் நித்யா, மகேந்திரன் மற்றும் அவர்கள் உறவினர்கள் நின்றிருக்க... மறுபக்கம் சோனா அவளது கணவர் அவினாஷும் நின்றிருந்தனர். ராம் அவர்களை விட்டு சற்று தள்ளி... ஆனால் முன்னால் தெரிவது போல நின்றிருந்தான். “வா... அபர்ணா.” என்ற நித்யா “போ... உனக்கு உள்ள...
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 26 இரவு எட்டு மணிக்கு அகிலாவின் அலுவலகத்திற்குக் கார்த்திக்கும் ராம்மும் வந்திருந்தனர். இன்னும் திருமணதிற்கு இரண்டு மாதங்கள்தான் இருந்தது. திருமண ஏற்பாடுகளைப் பற்றிப் பேசிவிட்டு, பேச்சு அபர்ணாவின் பக்கம் திரும்பியது. “என்ன டா இது? நீங்க ஒத்து வந்தா... அவங்க ஒத்து வர மாட்றாங்க. அந்த எருமை வேற போன் எடுக்க மாட்டேங்குது....
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 25 ராம் வெளிநாடு கிளம்புவதற்கு முன் பெண் பார்க்கும் படலத்தை முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் வேகமாக ஏற்பாடுகள் நடந்தது. அவன் கிளம்பும் அன்றுதான் நாள் நன்றாக இருந்தது. அதனால் அன்று மாலை ஈ. சி. ஆர் ரோட்டில் இருந்த உணவகம் ஒன்றில், இரு குடும்பமும் சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு. ஸ்வர்ணா அகிலாவோடு பிரவீணாவும்...
    ராம் சொல்வதும் சரிதான் என்று ஸ்வர்ணாவுக்குத் தோன்றியது. ஆனால் இந்தச் சம்பந்தத்தை விடவும் மனசில்லை. “சரி நீ இந்தப் பொண்ணு பார்த்து ஓகே வான்னு சொல்லு. நாம அம்மு கல்யாணம் முடிஞ்சா பிறகே பேசலாம்.” என்றார், “நான்தான் சொல்லிட்டேன் இல்ல... உங்களுக்குப் பிடிச்சா ஓகே. எனக்கு யாருனாலும் சம்மதம்தான்.” எனச் சொல்லிவிட்டு போட்டோ பார்க்காமலே...
    பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 24 அபர்ணா வீட்டிற்கு வந்தபோது சுகன்யா மட்டுமே அவளுக்காகக் காத்திருந்தார். மற்றவர்கள் ஏற்கனவே படுக்கச் சென்று இருந்தனர். கதவை திறந்து விட்டவர், உடை மாற்றி விட்டு வருவாள் எனக் காத்திருக்க... அவள் வருவதாகத் தெரியவில்லை. “இந்தப் பொண்ணு என்ன பண்றா? எனப் பார்ப்பதற்காக, அவளின் அறைக் கதை திறந்து கொண்டு சென்றால்.... அபர்ணா...
    error: Content is protected !!