Friday, April 26, 2024

    Marakka Manam Kooduthillaiyae

    அத்தியாயம் – 26 காலையில் முதல் ஆளாய் சிட்டிக்கு வெளியே இருந்த ஆகாஷின் இரும்பு குடோனுக்கு வந்த ஷிவா திறந்திருந்த முன் கேட்டில் செக்யூரிட்டியைக் காணாமல் உள்ளே செல்ல குடோனும் திறந்திருக்கவும் திகைத்தான். “ஆகாஷ் என்னைத்தானே செக்யூரிட்டி கிட்ட சாவி வாங்கிட்டு, அவனுக்கு ரெண்டு நாள் லீவ் குடுத்து அனுப்பிட்டு குடோனைத் திறக்க சொன்னான்... இப்ப யார்...
    அத்தியாயம் – 25 அந்த உயர்தர ஹோட்டலின் பார்ட்டி ஹால் ஜெகஜோதியாய் அலங்காரம் செய்யப்பட்டிருக்க, அழகான மாலையில் ஆண்களும் பெண்களுமாய் பளபள கெட்டப்பில் அங்கங்கே  நிறைந்திருந்தனர். கிருஷ்ணன் கோட், சூட் போட்டு ஜம்மென்று இருக்க, அருகே அழகான பட்டு சேலையின் மீது கணவன் வாங்கிக் கொடுத்த முத்துமாலை எடுப்பாய் தெரிய மனதுக்குள் உள்ள பிரச்சனைகளை வெளியே காட்டாமல்...
    அத்தியாயம் – 24 “இல்லமா, நான் வரல... உன் புத்திரன் வெளிநாட்டுக்கு கிளம்பினதும் சொல்லு... வீட்டுக்கு வரேன்...” கோபமாய் அதே நேரம் அழுத்தமாய் வந்த மகள் ஆஷிகாவின் வார்த்தையில் கண்ணில் நீர் துளிர்த்தது யசோதாவுக்கு. “நீயே இப்படி சொன்னா எப்படி மா... இந்த வீட்டுல என்னையும் ஒரு மனிஷியா நினைச்சு அன்பா இருக்கறது நீ மட்டும் தான்......
    அத்தியாயம் – 23 “நரேன்... நல்லாருக்கியா, எப்ப வந்தே...” கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்த அடுத்த வீட்டுப் பெண்மணியிடம் புன்னகையுடன் பதில் சொல்லிவிட்டு நகர்ந்த நரேன் தங்கையின் நிச்சயதார்த்தப் பரபரப்பில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். அழகான குறுந்தாடி அவன் கோதுமை நிற முகத்துக்குப் பாந்தமாய் இருக்க சந்தன நிற ஜிப்பாவும் வேஷ்டியுமாய் கம்பீரமாய் இருந்தான். நெருங்கிய உறவுகளையும்...
    அத்தியாயம் – 22 மகள் கல்யாணம் முடிந்து புகுந்த வீடு சென்று விட்டதால் பேசுவதற்கு ஆளில்லாமல் வீடே வெறிச்சென்று தோன்றியது மீனாட்சிக்கு. நிதினும் ஏதோ வேலை விஷயமென்று அடிக்கடி வெளியூர் சென்று விடுவதால் தொலைக்காட்சியின் உதவியோடு ஒவ்வொரு நிமிடத்தையும் தனிமையில் நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தார். கேரளா சென்றுவிட்டு நிதின் காலையில்தான் திரும்பி வந்திருக்க, வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்....
    அத்தியாயம் – 21 புருவங்கள் முடிச்சிட கண்களில் சட்டென்று நீர் நிறைய யோசனையுடன் நிதினைப் பார்த்தாள் சஹானா. “இ...இவன் என்ன சொல்கிறான்... எனக்கு நடந்த கசப்பான, கொடூரமான விஷயம் இவனுக்குத் தெரியுமென்றா...” அவள் கண்ணில் துளிர்த்த நீருடன் தன்னையே அதிர்ச்சியோடு பார்ப்பதைக் கண்ட நிதின், “சஹி... நடந்ததுல உன் தப்பு எதுவும் இல்லையே... அப்புறம் எதுக்கு உனக்கு...
    அத்தியாயம் – 20 காரில் ஏறியவள் எதுவும் பேசாமல் வண்டி ஓட்டினாலும் அவள் மனதில் பெரிய பூகம்பமே நடந்து கொண்டிருப்பதன் அடையாளமாய் ஏதேதோ பாவ மாற்றங்களும், குழப்பங்களும், கோபமுமாய் சிவந்து கிடந்தது முகம். ஏதாவது கேட்டால் கடித்துக் குதறிவிடுவாளோ என்ற பயத்தில் சசிகலாவும் வாயை மூடிக் கொண்டு அச்சத்துடனே மௌனமாய் அமர்ந்திருந்தார். அபார்ட்மென்ட் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு...
    அத்தியாயம் – 19 வெகுநேரம் பூஜையறை முன்பு அம்பாளின் சிலையையே கண்ணெடுக்காமல் தீர்க்கமாய் பார்த்துக் கொண்டு மனதில் ஏதோ கலக்கத்துடன் அமர்ந்திருந்த யசோதா ஹால் சோபாவில் தனது அலைபேசி சிணுங்கும் சத்தத்தைக் கேட்டும் எழுந்திருக்கவில்லை. ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது பூஜா ஓடிச் சென்று அலைபேசியை எடுத்தவள் அதில் ஒளிர்ந்த ஆகாஷின் புகைப்படத்தைக் கண்டு உற்சாகமானாள். “ஆகாஷ்...
    அத்தியாயம் – 18   சோகமான சிலையொன்று உயிர் பெற்று வந்தது போல அலைபேசி மெசேஜை வாசித்து புன்னகையுடன் எழுந்து நடந்தவளை கோவில் தூணின் பின்னிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த நிதினின் மனதில் அவள் மனதை மாற்றிவிட முடியுமென்ற நம்பிக்கை விதை வேகமாய் வளர்ந்தது.    காலையில் அவள் கோவிலுக்கு கிளம்பியது முதல் அவளறியாமல் அவளுடனே...
    அத்தியாயம் – 17 நாட்கள் கடந்திருக்க காரை சர்வீஸ் சென்டரில் விட்டுவிட்டு பேருந்து நிலையத்திற்கு வந்து நின்றாள் சஹானா. சர்வீஸ் விட வேண்டிய கிலோ மீட்டரைத் தாண்டி வெகு நாட்களாகி இருந்தது. வங்கிக்கு செல்வதற்கான பேருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவளின் கண்கள் சில நாட்களின் வழக்கம் போல் இன்றும் ஆவலுடன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்து, தேடியது காணாததால் ஏமாற்றத்துடன்...
    அத்தியாயம் – 16 அழகான மாலை நேரத்தின் இனிமையைக் கூட்ட மழை சாரலிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னலருகே நின்றிருந்த சஹானா வெளியே தூரத்தில் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள். ஏதேதோ நினைத்து அலைபாய்ந்து கொண்டிருந்த மனம் இன்றே அமைதிப்பட்டிருந்தது. அவளது பின்னில் காபிக் கோப்பையுடன் வந்து நின்ற சாதனா மெதுவாய் தோள் தொட திரும்பினாள். உடலும், மனமும் சோர்ந்திருப்பதை முகம்...
    அத்தியாயம் – 15 அந்த நாள் விடியாமலே இருந்திருக்கக் கூடாதா என்பது போல் ஒரு செய்தி அவர்களை வந்தடைந்தது. திருச்சூர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அழைத்து சஹானாவை அங்கு அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறினர். அவளைப் பற்றிய இவர்களின் கேள்வியில் நான்கைந்து மிருகங்கள் ஒன்று சேர்ந்து அவள் உடலில் உயிரை மட்டும் மிச்சம் வைத்து எச்சில் இலையாய் குப்பைத்...
    அத்தியாயம் – 14 அலைபேசியை ஆவலுடன் எடுத்து காதுக்குக் கொடுத்த நிதின் “ஹலோ...” எனவும், எதிர்ப்புறத்தில் இருந்து “யார் பேசறீங்க...” என்றாள் சாதனா. “சஹி, நான்...” அவன் தொடங்கவுமே புரிந்து கொண்டவள், “நிதினா...” என்றாள். அவளது கேள்வியிலேயே அழைத்தது சஹானா அல்ல எனத் தெரிய, “நீங்க சாதனாவா...” என்று கேட்டான். “ம்ம்... எதுக்கு கால் பண்ணீங்க நிதின்...” “அதுவந்து... சஹி...
    அத்தியாயம் – 13 திமிறிக் கொண்டு நின்றவளை ஆகாஷ் காருக்கு தள்ளிச் செல்ல முயல்கையில் பிரகாசமாய் வெளிச்சத்தை சிந்திக் கொண்டு அவர்களை நோக்கி வேகமாய் வந்தது கார் ஒன்று. சட்டென்று திகைத்தவன் சுதாரிப்பதற்குள் அருகில் வண்டி நிற்க காரைத் திறந்து வேகமாய் இறங்கினாள் சாதனா. “மேடம்... ஹெல்ப் மீ மேடம்... இவன் என்னைக் கடத்திட்டுப் போகப் பார்க்கிறான்...”...
    அத்தியாயம் – 12 “சேச்சி... ஏட்டன் டியூசன் சென்டரில் போயோ...” கல்லூரியில் இருந்து வந்த நிர்மலா டியூஷனுக்கு கொண்டு செல்ல வேண்டிய புத்தகங்களை பாகில் எடுத்து வைத்துக் கொண்டே அக்கா நிஷாந்தியிடம் கேட்டாள். சந்தன நிறத்தில் அழகாய் இருந்தவள் இடுப்புக்கு கீழ் நீண்டிருந்த கருகரு கூந்தலை    தளர்வாய் பின்னலிட்டிருந்தாள். (அவர்கள் மலையாளத்தில் பேசிக் கொண்டாலும் நாம்...
    அத்தியாயம் – 10 வெகு நேரம் டான்ஸ் ஆடிக் களைத்துப் போனவர்கள் போட்டின் ஓரமாய் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஒரு சிலர் மட்டும் ஆடிக் கொண்டிருந்தனர். அழகான மாலை மயங்கத் தொடங்கியிருக்க நீரைக் கிழித்துக் கொண்டு மென்மையான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது படகு. சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த சஹானாவை நோக்கி ரூபன் ஜாடை காட்டி அழைக்க, என்னவென்று...
    அத்தியாயம் – 8 “டேய் மாப்ள... யாருடா அந்தப் பொண்ணு... கழுத்துல மாலை போட்டு லவ் யூன்னு சொல்லிட்டுப் போகுது... முன்னமே செட் பண்ணிட்டியா... எங்ககிட்ட சொல்லவே இல்ல...” என்ற நண்பனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் திகைப்புடனே அமர்ந்திருந்தான் நிதின். “ஓஹோ... பேய் அடிச்சா மட்டுமில்ல... தேவதை மாலை போட்டாலும் மந்திரிச்சு விட்ட போல ஆயிடுவாங்க போலருக்கு...”...
    அத்தியாயம் – 7 வேரற்ற மரமாய் கட்டிலில் சோர்ந்து கிடந்தவளைக் காணக் காண நிதினுக்கு நெஞ்சை அடைத்தது. கண்கள் அனிச்சையாய் கலங்க அசைவில்லாமல் கிடந்தவளைப் பார்த்துக் கொண்டே ஓரமாய் நின்றிருந்தான். சரவணன் நிதின் அப்படி நடந்து கொண்டமைக்கு காரணம் கேட்க எதுவும் அவன் காதைத் தாண்டி மனதுக்குள் செல்லாததால் பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று அவனும்...
    அத்தியாயம் – 6 “அண்ணா... அம்மா எவ்ளோ நேரமா சாப்பிட கூப்பிட்டு இருக்காங்க... கீழ வராம என்ன பண்ணிட்டு இருக்கே...” கேட்டுக் கொண்டே அண்ணனின் அறைக்குள் நுழைந்த பிரபா அவனது கோலத்தைக் கண்டு அதிர்ந்து போனாள். இரவெல்லாம் உறங்காத கண்கள் கொவ்வைப் பழமாய் சிவந்திருக்க தலையெல்லாம் கலைந்து ஆபீஸ் கிளம்ப வேண்டிய நேரத்தில் சோபாவில் எங்கோ வெறித்துக்...
    அத்தியாயம் – 5 “நிதின்... இந்த இன்விடேஷன் டிஸைன்ஸ் பாரேன்... உனக்குப் பிடிச்சிருக்கா... உன்னையும் கூட வர சொன்னா வேலை இருக்குன்னு ஓடிட்ட...” அங்கலாப்புடன் சொல்லிக் கொண்டே அவனது கட்டில் மீது நான்கைந்து அழைப்பிதழ் டிஸைன்களை பரப்பினார் மீனாட்சி. “உங்களுக்கும், பிரபாவுக்கும் பிடிச்சாப் போதும்... சரவணன் வீட்டுலயும் கேட்டுடுங்க... பார்க்காமலே கையிலிருந்த டாகுமென்ட் எதையோ பார்த்துக் கொண்டு...
    error: Content is protected !!