Tuesday, July 21, 2026

    Marakka Manam Kooduthillaiyae

    அத்தியாயம் – 6 “அண்ணா... அம்மா எவ்ளோ நேரமா சாப்பிட கூப்பிட்டு இருக்காங்க... கீழ வராம என்ன பண்ணிட்டு இருக்கே...” கேட்டுக் கொண்டே அண்ணனின் அறைக்குள் நுழைந்த பிரபா அவனது கோலத்தைக் கண்டு அதிர்ந்து போனாள். இரவெல்லாம் உறங்காத கண்கள் கொவ்வைப் பழமாய் சிவந்திருக்க தலையெல்லாம் கலைந்து ஆபீஸ் கிளம்ப வேண்டிய நேரத்தில் சோபாவில் எங்கோ வெறித்துக்...
    அத்தியாயம் – 18   சோகமான சிலையொன்று உயிர் பெற்று வந்தது போல அலைபேசி மெசேஜை வாசித்து புன்னகையுடன் எழுந்து நடந்தவளை கோவில் தூணின் பின்னிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த நிதினின் மனதில் அவள் மனதை மாற்றிவிட முடியுமென்ற நம்பிக்கை விதை வேகமாய் வளர்ந்தது.    காலையில் அவள் கோவிலுக்கு கிளம்பியது முதல் அவளறியாமல் அவளுடனே சுற்றிக் கொண்டிருக்கிறான். மூன்று வருடப்...
    அத்தியாயம் – 20 காரில் ஏறியவள் எதுவும் பேசாமல் வண்டி ஓட்டினாலும் அவள் மனதில் பெரிய பூகம்பமே நடந்து கொண்டிருப்பதன் அடையாளமாய் ஏதேதோ பாவ மாற்றங்களும், குழப்பங்களும், கோபமுமாய் சிவந்து கிடந்தது முகம். ஏதாவது கேட்டால் கடித்துக் குதறிவிடுவாளோ என்ற பயத்தில் சசிகலாவும் வாயை மூடிக் கொண்டு அச்சத்துடனே மௌனமாய் அமர்ந்திருந்தார். அபார்ட்மென்ட் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு...
    அத்தியாயம் – 21 புருவங்கள் முடிச்சிட கண்களில் சட்டென்று நீர் நிறைய யோசனையுடன் நிதினைப் பார்த்தாள் சஹானா. “இ...இவன் என்ன சொல்கிறான்... எனக்கு நடந்த கசப்பான, கொடூரமான விஷயம் இவனுக்குத் தெரியுமென்றா...” அவள் கண்ணில் துளிர்த்த நீருடன் தன்னையே அதிர்ச்சியோடு பார்ப்பதைக் கண்ட நிதின், “சஹி... நடந்ததுல உன் தப்பு எதுவும் இல்லையே... அப்புறம் எதுக்கு உனக்கு...
    அத்தியாயம் – 15 அந்த நாள் விடியாமலே இருந்திருக்கக் கூடாதா என்பது போல் ஒரு செய்தி அவர்களை வந்தடைந்தது. திருச்சூர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அழைத்து சஹானாவை அங்கு அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறினர். அவளைப் பற்றிய இவர்களின் கேள்வியில் நான்கைந்து மிருகங்கள் ஒன்று சேர்ந்து அவள் உடலில் உயிரை மட்டும் மிச்சம் வைத்து எச்சில் இலையாய் குப்பைத்...
    அத்தியாயம் – 27 வயிற்றுக்குள் ஏற்றுமதி செய்திருந்ததை இறக்குமதி செய்யும் வேலையில் டாய்லட் உள்ளே இருவர் இருக்க, வெளியே சோர்ந்து காத்திருந்த மற்றவர், முன்னில் நின்ற நால்வரைக் கண்டதும் புதிதாய் ஒரு ஹார்மோன் அச்சத்தை சுரக்க வியர்த்துப் போயினர். நிதினைக் கண்டதும் மிரண்டு விழித்தவர்களுக்கு விஷயம் புரிபட பயத்தை மறைத்து கோபத்துடன் முறைத்தனர். “ஏய், யாரு நீங்கல்லாம்......
    அத்தியாயம் – 7 வேரற்ற மரமாய் கட்டிலில் சோர்ந்து கிடந்தவளைக் காணக் காண நிதினுக்கு நெஞ்சை அடைத்தது. கண்கள் அனிச்சையாய் கலங்க அசைவில்லாமல் கிடந்தவளைப் பார்த்துக் கொண்டே ஓரமாய் நின்றிருந்தான். சரவணன் நிதின் அப்படி நடந்து கொண்டமைக்கு காரணம் கேட்க எதுவும் அவன் காதைத் தாண்டி மனதுக்குள் செல்லாததால் பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று அவனும்...
    அத்தியாயம் – 19 வெகுநேரம் பூஜையறை முன்பு அம்பாளின் சிலையையே கண்ணெடுக்காமல் தீர்க்கமாய் பார்த்துக் கொண்டு மனதில் ஏதோ கலக்கத்துடன் அமர்ந்திருந்த யசோதா ஹால் சோபாவில் தனது அலைபேசி சிணுங்கும் சத்தத்தைக் கேட்டும் எழுந்திருக்கவில்லை. ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது பூஜா ஓடிச் சென்று அலைபேசியை எடுத்தவள் அதில் ஒளிர்ந்த ஆகாஷின் புகைப்படத்தைக் கண்டு உற்சாகமானாள். “ஆகாஷ்...
    அத்தியாயம் – 25 அந்த உயர்தர ஹோட்டலின் பார்ட்டி ஹால் ஜெகஜோதியாய் அலங்காரம் செய்யப்பட்டிருக்க, அழகான மாலையில் ஆண்களும் பெண்களுமாய் பளபள கெட்டப்பில் அங்கங்கே  நிறைந்திருந்தனர். கிருஷ்ணன் கோட், சூட் போட்டு ஜம்மென்று இருக்க, அருகே அழகான பட்டு சேலையின் மீது கணவன் வாங்கிக் கொடுத்த முத்துமாலை எடுப்பாய் தெரிய மனதுக்குள் உள்ள பிரச்சனைகளை வெளியே காட்டாமல்...
    அத்தியாயம் – 8 “டேய் மாப்ள... யாருடா அந்தப் பொண்ணு... கழுத்துல மாலை போட்டு லவ் யூன்னு சொல்லிட்டுப் போகுது... முன்னமே செட் பண்ணிட்டியா... எங்ககிட்ட சொல்லவே இல்ல...” என்ற நண்பனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் திகைப்புடனே அமர்ந்திருந்தான் நிதின். “ஓஹோ... பேய் அடிச்சா மட்டுமில்ல... தேவதை மாலை போட்டாலும் மந்திரிச்சு விட்ட போல ஆயிடுவாங்க போலருக்கு...”...
    அத்தியாயம் – 24 “இல்லமா, நான் வரல... உன் புத்திரன் வெளிநாட்டுக்கு கிளம்பினதும் சொல்லு... வீட்டுக்கு வரேன்...” கோபமாய் அதே நேரம் அழுத்தமாய் வந்த மகள் ஆஷிகாவின் வார்த்தையில் கண்ணில் நீர் துளிர்த்தது யசோதாவுக்கு. “நீயே இப்படி சொன்னா எப்படி மா... இந்த வீட்டுல என்னையும் ஒரு மனிஷியா நினைச்சு அன்பா இருக்கறது நீ மட்டும் தான்......
    அத்தியாயம் – 14 அலைபேசியை ஆவலுடன் எடுத்து காதுக்குக் கொடுத்த நிதின் “ஹலோ...” எனவும், எதிர்ப்புறத்தில் இருந்து “யார் பேசறீங்க...” என்றாள் சாதனா. “சஹி, நான்...” அவன் தொடங்கவுமே புரிந்து கொண்டவள், “நிதினா...” என்றாள். அவளது கேள்வியிலேயே அழைத்தது சஹானா அல்ல எனத் தெரிய, “நீங்க சாதனாவா...” என்று கேட்டான். “ம்ம்... எதுக்கு கால் பண்ணீங்க நிதின்...” “அதுவந்து... சஹி...
    அத்தியாயம் – 29 “நிதின், காபி கேட்டியே இந்தாப்பா...” டீவியில் பார்வையைப் பதித்திருந்த நிதின் அன்னை நீட்டிய காபி கோப்பையை வாங்கிக் கொண்டு புன்னகைத்தான். “அப்புறம் போன விஷயம் நல்லபடியா முடிஞ்சுதா...” அவர் கேட்கவும் அவன் முழிக்க, “”என்னடா முழிக்கற, புது ஆர்டர் விஷமா நாலு நாள் வெளியூர் போயிட்டு வந்தியே... என்னாச்சுன்னு கேட்டேன்...” என்றார் அவர். “ஓ......
    அத்தியாயம் – 2 “சஹா... இந்த மிக்ஸி ஓகே வான்னு பாரு...” அன்னையின் குரலில் திரும்பிய சஹானா கண்டதுமே மனதில் சாரல் வீசும் அழகோடு இருந்தாள். பளிச்சென்ற வெள்ளை சல்வாரில் நெற்றியில் ஒரே ஒரு கறுப்புப் பொட்டு தவிர எந்த அலங்காரமும் இல்லை. காது, கழுத்து எல்லாமே காலியாய் கிடக்க ஒளி வீசும் கண்களில் மட்டும்...
    அத்தியாயம் – 1 சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமாஸூதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்... மங்களகரமாய் கை கூப்பி நின்று இனிய குரலில் கணபதி மந்திரத்தைத் தெளிவாய் உச்சரித்துக் கொண்டிருந்த மகளைப் பெருமையும் புன்னகையுமாய் நோக்கிக் கொண்டே...
    அத்தியாயம் – 30 பிரபா, ஆனந்தியின் குரல் வீடெங்கும் சந்தோஷமாய் ஒலித்துக் கொண்டிருக்க, அவர்களுடன் பேசிக் கொண்டே விருந்துக்கான ஏற்பாடுகளை தடபுடலாய் கவனித்துக் கொண்டிருந்தார் மீனாட்சி. சரவணன் ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தான். புகுந்த வீட்டு விசேஷங்களை மகள் வாய் கொள்ளாமல் சொல்லுவதைக் கேட்டு அவருக்கு நிறைவாய் இருந்தது. அண்ணி காரியத்தில் கறாராய் பேசினாலும்...
    அத்தியாயம் – 31 “சஹா... எல்லாரும் வரத் தொடங்கியாச்சு... என் பேத்திய ரெடி பண்ணியாச்சா இல்லியா...” மீனாட்சி கீழிருந்து குரல் கொடுக்க, “இதோ வந்துட்டேன் அத்தை...” மாடியிலிருந்து எதிர்குரல் கொடுத்த சஹானா அடுத்த நிமிடத்தில் மாடிப்படியில் பிரசன்னமானாள். உடலைச் சுற்றியிருந்த பர்ப்பிள் வண்ண பட்டுப் புடவையும் கூந்தலில் சூடியிருந்த பூவும் மெருகேறியிருந்தவளை மேலும் அழகாய் காட்ட முகத்தில்...
    அத்தியாயம் – 28 யசோதா, ஆகாஷ் இருவரின் புகைப்படம் முன்னும் ஊதுபத்தி புகைந்து கொண்டிருக்க எந்த சலனமும் இல்லாமல் ஒளிர்ந்து கொண்டிருந்தது விளக்கு. காரியம் முடிந்து உறவுகள் எல்லாம் சென்றுவிட வீடே வெறிச்சென்று இருந்தது. சோபாவில் சாய்ந்து கண் மூடி இருந்த கிருஷ்ணனின் இமைக்குள் கண்ணீர்த் துளிகள் உருண்டு கொண்டிருந்தன. குற்ற உணர்வில் மனம் குறுகுறுக்க தனது...
    அத்தியாயம் – 26 காலையில் முதல் ஆளாய் சிட்டிக்கு வெளியே இருந்த ஆகாஷின் இரும்பு குடோனுக்கு வந்த ஷிவா திறந்திருந்த முன் கேட்டில் செக்யூரிட்டியைக் காணாமல் உள்ளே செல்ல குடோனும் திறந்திருக்கவும் திகைத்தான். “ஆகாஷ் என்னைத்தானே செக்யூரிட்டி கிட்ட சாவி வாங்கிட்டு, அவனுக்கு ரெண்டு நாள் லீவ் குடுத்து அனுப்பிட்டு குடோனைத் திறக்க சொன்னான்... இப்ப யார்...
    அத்தியாயம் – 23 “நரேன்... நல்லாருக்கியா, எப்ப வந்தே...” கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்த அடுத்த வீட்டுப் பெண்மணியிடம் புன்னகையுடன் பதில் சொல்லிவிட்டு நகர்ந்த நரேன் தங்கையின் நிச்சயதார்த்தப் பரபரப்பில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். அழகான குறுந்தாடி அவன் கோதுமை நிற முகத்துக்குப் பாந்தமாய் இருக்க சந்தன நிற ஜிப்பாவும் வேஷ்டியுமாய் கம்பீரமாய் இருந்தான். நெருங்கிய உறவுகளையும்...
    error: Content is protected !!