Sunday, July 19, 2026

    Engaeyo Paartha Ngabagam

    அத்தியாயம் 11 அந்தப் பூஞ்சோலை வனத்தில் பூக்களைப் பறித்தவாறு நின்றிருந்தவளின் பின்னே வந்து நின்றான் அவன்‌. "அடடே என்னைத் தேடியும் வந்து விட்டீர்களே! வியப்பாக உள்ளது" என்று முகத்தில் எவ்வித பாவனைகளையும் வெளிப்படுத்தாமல் உரைத்த பாவையின் கைகளோ பூக்களைப் பறித்து கூடையில் போட்ட வண்ணம் இருந்தன. "திரும்பி பாராமலேயே என்னை அறிந்து கொண்ட தங்களின் நுண்ணறிவு தான் என்னை...
    அத்தியாயம் 10 கண் முன் கண்ட காட்சியில், உடலும் உள்ளமும் பதற, "சக்தீஇஇஇ" என அலறியவாறு அவனை நோக்கி ஓடினாள் இளவஞ்சி. அந்த கல்லூரியின் வாயிலில் இருந்த காவல் பணியாளர் (செக்யூரிட்டி) இவளின் அலறலில் சாலையைப் பார்த்தவர் அவள் பின்னேயே ஓடினார். ஓடிய வேகத்தில் சேலைத் தடுக்க தார்சாலையிலேயே விழுந்தாள். அந்தத் தார்சாலை அவளின் முழுங்கையை பதம்...
    அத்தியாயம் 9 வஞ்சி என ஆங்காரத்துடன் கோபமாய் அழைத்த தாயின் குரலில் வஞ்சியின் உடல் நடுங்க, சட்டெனத் தனது கையை அவனது கையிலிருந்து உருவியவளாய் வீட்டினுள்ளே சென்றாள் இளவஞ்சி‌. உள்ளே சென்ற மகளையும், வெளியே அவளையே பரிதவிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் சக்தியையும் கோபமாய் பார்த்தார் வசந்தா. வீட்டினுள்ளே சென்ற வஞ்சியின் உள்ளம் நடுக்கத்தை நிறுத்தாமல் இருக்க, ஜன்னல் வழியாக...
    அத்தியாயம் 8 எதிர் வீட்டு மேல் மாடியில் பார்த்திருந்த அந்த பெண் தான் நின்றிருந்தாள். "ஹாய் வஞ்சி! என் பேரு மேனகா! எதிர்வீட்டுல புதுசா குடி வந்திருக்கோம். நாங்க பால் காய்ச்சும் போது நீங்க வரலைல அதான் இப்ப ஸ்வீட் கொடுக்கலாம்னு வந்தேன்" எனக் கையிலிருந்த இனிப்புப் பொட்டலத்தை அவள் கையில் திணித்தாள் மேனகா. மேனகாவின் கழுத்தினில் இருந்த...
    ஆமென தலையசைத்தவளாய், "என்னால நார்மலா இருக்க முடியலை‌ ஜானு. ஒரு மாதிரி அவர் நினைப்பாவே இருக்கு‌. நான் இது வரைக்கும் யார்கிட்டேயும் இப்படி ஃபீல் செஞ்சது இல்லை ஜானு. அவர் நினைப்பை ஒதுக்கி வைக்க நினைச்சாலும் முடியாம தவிச்சிட்டு இருக்கேன்" குற்றவுணர்வுடன் தன்னிலையை இளவஞ்சி விளக்க, ஆச்சரியமடைந்தவளாய், "ஓ மை காட்! யாரது? எங்க வஞ்சியோட...
    அத்தியாயம் 7 கல்லூரிப் பேருந்தில் ஜன்னலருகே இருக்கைப் பார்த்து அமர்ந்தவளை வெளியே நின்று பார்த்திருந்தான் சக்தீஸ்வரன். பேருந்து நகரவும் வெளியே பார்த்தவள் அவனது கண்களைச் சந்திக்க, கை அசைத்து சிரித்தான் அவன். சட்டெனத் தலையை திருப்பிப் பார்வையைத் திசை திருப்பியவளுக்கு அவனை மீண்டுமாய் திரும்பிப் பார்க்கச் சொல்லி மனம் உந்தித் தள்ள, "ம்ம்ம்ஹூம் பார்க்க மாட்டேன். இந்தாளு சரியான...
    அத்தியாயம் 6 தனது அறைக்குச் சென்று படுத்தவளிடம் வந்த மங்கை, "சாப்பிட்டுப் படு வஞ்சி" என்றாள். "பசியில்லைக்கா! சாரி என்னால நீயும் திட்டு வாங்குறல!" என்றவாறு வஞ்சி எழுந்து அமர, "என்னால என் காதல்னால தானே அம்மா உன்னை இந்த கல்யாணத்துக்கு வற்புறுத்துறாங்க. நான் தான் சாரி சொல்லனும். என்னால் தானே உன் கல்யாணமும் டிலே ஆகி இப்படி...
    அத்தியாயம் 5 தாயிடமிருந்து தேநீர் கோப்பையை வாங்கிவிட்டு மன அமைதியைத் தேடி மாடியிலிருக்கும் தனது அறைக்கு வந்த சக்தீஸ்வரன், தனது அறையில் அமைக்கப்பட்டிருந்த ஹோம் தியேட்டரில் பாடலை ஓட விட்டான். என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே எண்பதுகளின் பாடல்கள் அவனது காதினில் இன்ப தேன் பாயச்செய்ய, மாடியிலிருக்கும் தனது அறையின் பால்கனியில் வந்து அமர்ந்தான் சக்தீஸ்வரன். சொந்தமாகக்...
    அத்தியாயம் 4 "அறிவிருக்கா உனக்கு? அந்த பொண்ணு பாதுகாப்பா நீ எங்கேயாவது கூட்டிட்டு போவனு உன்னை நம்பி வந்தா.. என்ன செஞ்சி வச்சிருக்க நீ?" ஜானகியின் கணவன் ராஜாராமன் அவளைப் பொரிந்தவாறு வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். இளவஞ்சியை அவளின் தாய் வசந்தா கோவிலில் இருந்து அழைத்துச் சென்றதும் சில நிமிடங்களில் அங்கு வந்து சேர்ந்தான் ராஜாராமன். மனைவியின் முக...
    அத்தியாயம் 3 கருவறையில் சாமி தரிசனம் செய்து விட்டு நெற்றியில் திருநீறு இட்டவாறு வெளியே வந்த போது, தன் வாழ்வின் இன்னல்கள் யாவையும் எம்பெருமான் பார்த்துக் கொள்வான் என்கின்ற நம்பிக்கை அவளையும் மீறி அவளுக்குள் உருவாகி நிம்மதி அளித்திருந்தது. ஈஸ்வரனின் கருணையைத் தாண்டி இது அந்த குரலின் மகிமையாக உணர்ந்தவள் அவசரம் அவசரமாக அந்த குரலுக்கானவரை சந்திக்க...
    அத்தியாயம் 2 இளவஞ்சியும் ஜானகியும் கல்லூரித் தோழிகள். மிண்ணனு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்கள். இருவரும் படித்து முடித்து பல மென்பொருள் நிறுவனங்களில் நேர்முக தேர்வில் கலந்து கொண்டும் தேர்வாகாமல் இருந்தனர். அதன் பின்பு கண்டிப்பாக ஒரு வேலையில் சேர்ந்தே ஆக வேண்டிய குடும்ப சூழலில் இருவரும் விரிவுரையாளராக பாலிடெக்னிக்கில் சேர்ந்தனர். இங்கே...
    அத்தியாயம் 1 ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே - எங்கள் ஆதி சக்தி நாயகியின் துணை பெறுவோமே இப்பாடல் ஒலித்தவாறு கைப்பேசி அலற, கவனித்தும் கவனியாதது போல் அந்த அழைப்பைப் புறம் தள்ளியவளாய் அமர்ந்திருந்தவளின் கரம் ஒரு தாளில் கை போன போக்கில் குட்டிக் குட்டியாய் பல சிவலிங்கங்களைக் கிறுக்கலாய் வரைந்த வண்ணம் இருந்தன. நெஞ்சத்தின் பெரும் குமுறலை...
    error: Content is protected !!