வர்மனின் காதலி
சாந்தா சிறு வயதிலே தாய் தகப்பனை இழந்ததால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தான் அவளை பார்த்து கொண்டார்கள். அவர்களுக்கு சாந்தா செல்ல குழந்தை. அவள் பூப்பெய்திய போது, தான் முதல் முறை நரேந்திரவர்மனை கண்டாள்.
அவளுக்கு சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து சடங்கு செய்து முற்றத்தில் அமர வைத்திருந்தார்கள். அனைவரும் வந்து அவளுக்கு குங்குமம் இட்டு...
"அப்படியே ஆகட்டும் இளவரசே. ஆனால் தாங்கள் சரியான நேரத்தில் வந்து விடுங்கள். நாம் பயணம் செய்ய வேண்டும்", என்று புன்னகைத்தான் சுதமன்.
இளவரசே என்று அழைத்ததால் சுதமனை முறைத்து விட்டு "விரைவில் வந்து விடுவேன் சேனாதிபதியாரே", என்று கூறி விட்டு சென்று விட்டான் நரேந்திரவர்மன்.
கண்களில் கண்ணீருடன் நரேந்திரவர்மனின் நினைவுகளுடன் ராமர், சீதை சிலையையே பார்த்து கொண்டு...
அத்தியாயம் 18
உன் நினைவுகளை
தூண்டி விடுவதால்
கொலுசொலியும் என்னைப்
பொறுத்த வரை இம்சை தான்!!!
முகம் முழுவதும் புன்னகையுடன் அவளை பார்த்த சுதமன், "நீ மெய்யாக தான் உரைக்கிறாயா?", என்று கேட்டான்.
"ஆம், எனக்கு சம்மதம்"
"மிக்க மகிழ்ச்சி சாந்தா. நான் இப்போதே இளவரசரிடம் கூறி விடுகிறேன்"
"ம்ம், சரி", என்று அவள் கூறியதும் அங்கிருந்து செல்ல பார்த்தான். "அந்த சலங்கை", என்று கூறி...
இருவரையும் பார்த்து சிரித்து விட்டு அங்கிருந்து சென்றான் சுதமன். அவன் போன பின்பு மகிழ்ச்சியுடன் வான்மதியை திரும்பி பார்த்த நரேந்திரவர்மன் திகைத்தான். அவள் அவனை தீ பார்வை பார்த்து கொண்டிருந்தாள்.
"தேவி, என் உயிரையே உருக்கும் உன் காதல் பார்வை எங்கே போனது? பார்வையாலே என்னை பொசுக்கி விடுவதை போல பார்க்கிறாயே? என்னவானது?", என்று கேட்டான்...
அனைவரின் கவலையையும் சரி செய்வது போல இரண்டு மணி நேரத்தில் கண் விழித்து விட்டாள் சாந்தா.
கண் விழித்ததும் முதலில் சாந்தா கண்டது கண்களில் நீருடன் தன்னையே பார்த்து கொண்டிருக்கும் வான்மதியை தான்.
"இளவரசி", என்று உச்சரித்து எழுந்து கொள்ள பார்த்தாள். "அப்படியே படுத்திரு சாந்தா", என்று கூறி அவள் தலையை வருடி விட்டாள் வான்மதி.
அதை வியந்து...
அத்தியாயம் 1
ஆழ் கடலும் கவிதை
எழுதும் உன் கால் தடம்
அங்கே பதிந்தால்!!!
வான்மதி தேவி, அழகின் மொத்த வடிவம் கொண்டவள். நளினம், கம்பீரம் என அனைத்தும் கொண்ட ராஜகுமாரி. அவள் முகத்தில் எப்போதும் ஒரு தேஜஸ் இருக்கும். வீரத்துக்கு பெயர் போன பேரரசர் வாசுதேவ சக்கரவர்த்தியின் மகள். அவருடைய சாம்ராஜ்யத்தின் இளவரசி. அந்த வானத்து நிலவின் ஒளி போன்றவள்.
மகாராஜா வாசுதேவ...
அந்த களமே போராட்டமான யுத்த களமானது. இரண்டு பக்கமும் சண்டை வலுத்தது.
எதிரிகளும் வீரமாக போரிட்டார்கள். ஒரு பக்கம் குதிரை படையும், மறு பக்கம் யானை படையும் யுத்தம் புரிந்து கொண்டிருந்தன.
மேடையில் இருந்து பாய்ந்து ஓடும் நீரை விட வேகமாக செல்லும் குதிரைகளும், பெரிய மலைகளை போன்ற இருந்த கரிய யானைகளும் கதறி கொண்டிருந்தன. அந்த...
அதே நேரம் கண்ணாடி முன்னே அமர்ந்து தலை அலங்காரத்தை களைத்து கொண்டிருந்தாள் வான்மதி. மஞ்சத்தில் அமர்ந்து அவள் செயலை கண்காணித்து கொண்டிருந்தான் நரேந்திரவர்மன். சுற்றி ஏற்ற பட்டிருந்த எண்ணெய் விளக்குகளால் அந்த அறையே தேவலோகம் போல காட்சி தந்தது.
மனம் நிறைந்த காதலியை ரசித்து கொண்டிருந்தவன் அவள் அழகை பார்வையால் பருகினான். அவனை பற்றி கவனியாமல் அலங்காரத்தை...
அத்தியாயம் 3
நமக்குள் எழுந்த
விரிசலை காதலால்
தைக்க வா பெண்ணே!!!
மனம் முழுவதும் ஆனந்தத்துடன் அந்த வீரனுடன் நடந்தான் நரேந்திரவர்மன்.
அவன் கண்கள் சுற்றிலும் பார்வையை ஓட்டியது. முதல் பார்வையிலே மனம் கவர்ந்தவளை அவன் கண்கள் தேடின. அவளை நினைத்த மாத்திரத்தில் அவன் நெஞ்சமெல்லாம் இனித்தது.
"இந்த தேசத்தின் நந்தவனம் அவ்வளவு அழகானதா வீரரே?", என்று பேச்சு கொடுத்தான் நரேந்திரவர்மன்.
"ஆம் இளவரசே. ...
அத்தியாயம் 7
முகம் பார்க்கும்
கண்ணாடி நீயென்றால்
அது காட்டும்
பிம்பம் நானாவேன்!!!
மூடிய அவள் முகத்தை ரசித்து பார்த்த நரேந்திரவர்மன், மெதுவாக அவள் கைகளை விலக்கினான். இமை மூடி அவள் நின்றிருந்த தோற்றம் அவனை மயக்கம் கொள்ள வைத்தது.
மெதுவாக அவள் முகம் நோக்கி குனிந்து அவள் கண்ணிமையின் மீது முத்தம் பதித்தான். அவனுடைய முத்தத்தை தாங்க முடியாமல் வான்மதியின் தளிர் உடல்...
அத்தியாயம் 17
எந்தன் அரசன்
நீயென்றால் உந்தன்
அடிமை நானாவேன்!!!
அவளை தன் அருகே இழுத்து கொண்ட நரேந்திரவர்மன் அவள் காதில் "இன்று இரவு முழுவதும் நாம் உரையாடி கொண்டே இருக்கலாம்", என்றான்.
"ஹா ஹா, அப்படி செய்தால் நாளை அரண்மனையில் சபை கூடும் போது தாங்கள் உறங்கி கொண்டிருப்பீர்கள்", என்று புன்னகைத்தாள் வான்மதி.
"நீ கூறுவதும் சரி தான். பின் என் தந்தை அரசவையில் உறங்குகிறாயா?...
"அந்த செங்கல்வராயனை மணந்து கொண்டால் போர் நடக்காது தான். எந்த துயரமும் இல்லை தான். எந்த உயிரும் போகாது தான். என் நாடும் என் நாட்டு மக்களும் இன்னல்கள் இன்றி வாழ்வார்கள் தான். ஆனால் என் நிலைமை. என் நிலைமை என்னவாகும் என்று யோசித்து பார்த்தீர்களா? எவனோ ஒரு ராஜாவுக்கு அந்த புறத்தில் மட்டும்...
"தங்களிடம் ஒரு முக்கியமான விசயத்தையே பற்றி உரைக்கவே நான் இங்கு வந்தேன் இளவரசி", என்றாள் விசாலம்.
"அது தானே பார்த்தேன். என்னை பார்க்கவா நீ வர போகிறாய்? போ விசாலம்"
"கோபித்து கொள்ளாதீர்கள் இளவரசி. நீங்களோ பகல் வேளைகளில் நந்தவனத்தில் குடி புகுந்து விடுகிறீர்கள். இரவில் தங்களை காண என்னை என் வீட்டில் விட மறுக்கிறார்கள். நான்...
அப்போது ஒரு பணியாள் வந்து "வணங்குகிறேன் இளவரசே, தங்களையும் இளவரசியையும் மகாராஜா உடனடியாக வர சொன்னார்", என்றான்.
"இதோ வருகிறோம்", என்று எழுந்த நரேந்திரவர்மன் வான்மதியை பார்த்தான்.
"ஓய்வெடு சாந்தா. உன்னை பிறகு வந்து பார்க்கிறோம். பார்த்து கொள் விசாலம்", என்று கூறிய வான்மதி நரேந்திரவர்மனுடன் சென்றாள்.
அவர்கள் சென்ற பிறகு, "சேனாதிபதியாரே, சில கணங்கள் சாந்தாவை பார்த்து...
"ஆம் சுதமன். நாளை நீ வேறு போரில் கலந்து கொள்ள முடியாது. சரி உன்னை யார் இந்த நிலைமைக்கு ஆள் ஆக்கியது. உன்னை பின்னால் இருந்து கோழை போல் கழுத்தில் தாக்கி இருக்கிறானே யார் அவன்? அவனை கொன்றே தீர வேண்டும்", என்றான் நரேந்திரவர்மன்.
"என் முதுகுக்கு குறி வைத்து ஈட்டி எரிந்தது அந்த வல்லவரையன்...
அத்தியாயம் 2
என்னுள் இருக்கும்
மோசமான பலவீனங்களில்
ஒன்று உன் மீதான காதல்!!!
வான்மதியின் கழுத்தில் அவள் வைத்திருந்த வாள் அழுந்தி படிந்தது. அந்த வீரனின் வாளின் கூர்மையால் அவள் கழுத்தில் அது சிறு கீறலையும் ஏற்படுத்தியது.
வெண்ணையை குழைத்தது போல இருந்த அவள் வெண்ணிற சங்கு கழுத்தில் அந்த சிறு கீறலினால் வந்த ரத்தத்தின் சிவப்பு அனைவரையும் கலங்கடித்து.
"இப்படி எல்லாம் செய்யாதே வான்மதி....
வெற்று மார்பில் அடர்த்தியாக முடி படர்ந்திருந்தது. அவனுடைய பள்ளியறை என்பதால் இளவரசனுக்குரிய அடையாளம், ஆபரணங்கள் இல்லாமல் சாதாரண நரேந்திரவர்மனாக சயனித்திருந்தான்.
அவனை காண காண அவன் மீது காதல் பெருக்கெடுத்தது அவளுக்கு. "இப்படி இருக்கும் ஒருவன் மீது பெண்கள் இச்சை கொள்ளாமல் இருப்பார்களா? எனக்கு கிடைத்த பொக்கிஷம் இவன். இவனுக்காக ஒரு சாந்தா என்ன? ஆயிரம் சாந்தா...
உள்ளம் முகம் முழுவதும் மகிழ்ச்சியுடனும், கண்கள் முழுவதும் கண்ணீருடனும் அவன் கை காட்டிய ராமன், சீதையை பார்த்தாள் வான்மதி.
இப்போது ராமர், சீதையின் முகம் இவர்களின் முகம் போல அவளுக்கு காட்சி அளித்தது. அதில் அவள் முகம் பூவாக மலர்ந்தது. அவளுடைய இத்தனை வருட தேடலுக்கும் விடை கிடைத்தது போல இருந்தது. ஆனந்தத்துடன் அவனை பார்த்தாள்.
"இளவரசே...
அத்தியாயம் 15
விழிகளும் வீணை மீட்டும்
என்று உணர்ந்தேன் உந்தன்
விழிகளைக் கண்ட போது!!!
தன்னுடைய யோசனையை நினைத்து தன்னையே வெறுத்தாள் வான்மதி. "இந்த குழப்பத்தில் என்னவனையே சந்தேகம் கொள்கிறேனே? இளவரசர் என்னை தவிர எந்த பெண்ணையும் நினைக்க மாட்டார். அது தெரிந்தும் நான் ஏன் அவ்வாறு நினைத்தேன்? நான் இப்படி நினைத்தேன் என்று தெரிந்தாலும் துடித்து போவார். எனக்கு...
ஒரு நொடியில் இந்த புதிரை கண்டு கொண்டான். அவன் கண்கள் அங்கே இவர்களை பார்த்து கொண்டிருந்த சுதமனை நோக்கின. சுதமனோ வாழ்வையே வெறுத்து போய் எங்கேயோ வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.
விசாலமோ சாந்தவையே முறைத்து கொண்டிருந்தாள். "அப்படி என்றால் இந்த பெண் மனதில் இருக்கும் ஆடவன் நான் தானா? என்னை பற்றி தான் இவர்கள் இவ்வாறு...