மழைவர பூமி மறுத்திடுமா?
அப்படி ஒருவழியாக பெரும் போராட்டத்திற்குப் பிறகு வெளியில் வந்தததற்கு, இன்று ஒரே நாளில் நிறைய பேச்சுக்களை போதும் போதும் என்றளவில் கேட்க நேர்ந்தாயிற்று! ஒரே ஒருவனின் நம்பிக்கையான வார்த்தைகள் மட்டும் அந்த காயங்களுக்கு மயிலிறகில் மருந்திடுவது போல இருப்பது கடவுள் அவள்மீது காட்டிய கருணையாக இருக்கக்கூடும்.
இந்த உலகத்தில் எல்லா தவறுகளையும் பெண் மீது மட்டுமே சுமத்தாத...
மழைவர பூமி மறுத்திடுமா? – 3
தீபாலியைப் பரிவுடன் நோக்கி, “குழந்தையை யாரு பார்த்துக்கிறாங்கப்பா?” என்று கேட்டார் அசோகன்.
அருள்மித்ரனிடம் சன்னமான பெருமூச்சொன்று வெளிப்பட்டது. “வீட்டுல அம்மாவும், தங்கச்சியும் இருக்காங்க சார்” என்றான். பார்வை என்னவோ அவர்களை எதிர்கொள்ளவே தயங்கியது. கணவனும் மனைவியும் தன்மீதும், தன் மகள் மீதும் அனுதாபப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவனால் உணர முடிந்தது. என்னவோ அதை எதிர்கொள்ளவே முடியவில்லை.
“கேட்கவே வருத்தமா...
*** அழகான அலங்காரங்கள், இங்கும் அங்கும் ஓடியாடி விளையாடி மகிழும் குழந்தைகள், பூட்டி வைத்த பட்டுப்புடவைகளையும், நகைகளையும் பூட்டி மகிழும் இல்லத்தரசிகள் என்று அந்த திருமண மண்டபமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
இன்று காவ்யாவுக்குத் திருமணம். திருமணம் நிச்சயமானதும் வீட்டிற்கு அழைக்க வருகிறேன் என்று சொன்னவர்களை அவன் தடுக்கவும் இல்லை. அம்மாவையும் சண்டை போடும் விதமாகவோ, அவமானப்படுத்தும் விதமாகவோ எதையும் பேசவும் அனுமதிக்கவில்லை.
அமைதியாகவே அவர்களிடம்...
மழைவர பூமி மறுத்திடுமா? – 2
எப்பொழுதும் வீட்டில் அருள்மித்ரனின் சத்தம் ஓங்கி இருக்காது. ஆனால், அன்று பேசினான். “அம்மா... என் மக என் கூட இருக்கட்டும், பார்க்க விருப்பம் இல்லைன்னு சொல்லறவங்க கிட்ட ஏன் இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கீங்க” என்றான் நிதானமான குரலிலேயே! ஆனால், அவன் பேச்சில் இருந்த அழுத்தம், புறக்கணிப்பு அனைவருக்கும் புதிது!
அம்மாவின் மீதும் அவனுக்கு மனத்தாங்கல் இருக்கிறது தான்! அதைவிடவும் பிரீத்தியின்...
அருள் இந்த பேச்சினை நம்ப மாட்டாமல் மாமனாரை வெறித்துப் பார்த்தான். பிரீத்தியை திருமணம் செய்துகொள் என்று நடையாய் நடந்த மாமனும் அத்தையும் அவனுக்கு நினைவில் வந்தார்கள்.
பிரீத்தி பூஞ்சை உடம்புக்காரி, படிப்பிலும் ஒன்றும் சூட்டிப்பு இல்லை. அழகு, படிப்பு, ஆரோக்கியம் என அனைத்தும் குறைவாக இருக்க, அவளுக்கான மணமகனைத் தேடுவதற்குள் அவளைப் பெற்றவர்களுக்கு போதும் போதும் என்றாகிப் போனது.
இருபத்தியேழு வயதாகியும் பிரீத்திக்கு...
மழைவர பூமி மறுத்திடுமா? – 1
வெண்ணிலவு தாலாட்டிக் கொண்டிருந்த இரவு நேரம். ஜன்னல் வழியே வழிந்த நிலவொளி அருள்மித்ரனின் அறையை மென்மையாகத் தழுவிக் கொண்டிருந்தது. அவனோ இன்னமும் உறங்காமல் விழிகளை மட்டும் வெறுமனே மூடி, முகத்தை மறைக்கும்படி வலது கையை குறுக்காக வைத்து படுத்திருந்தான்.
இரவின் அமைதியையும் குளிர்ச்சியையும் அவன் அனுபவித்துப் பல நாட்கள் ஆகியிருந்தது. ஓயாத ஓட்டமும், இயந்திரத்தனமான நாட்களும் அவனிடமிருந்து இத்தகைய நிதானமான நிமிடங்களை எப்பொழுதோ...