பெண்ணியம் பேசாதடி
பெண்ணியம் பேசாதடி -17
நிசப்தமான நள்ளிரவில் ஓர் கனவு,
தேவைதை என் கன்னம் தாங்கி,
நிறைவு கொண்ட மனிதன் நீ,
என்று சொல்ல.
ஏன்? என்றேன்
அன்பு,அறம்,ஒழுக்கம்,
காதல், காமம், இன்பம்,
துன்பம், துயரம், கோபம்,
அனைத்தையும் பெற்றவன் நீ என்பதால் என்றது பெண்.
தேவதைக்கு என் பதில்
உண்மைதான் ஆனால் முழுமை அடைய செய்தவள் பெண்ணியம் அல்லவா பேசுகிறாள் ராட்சசி.
வாமனன் முன் தலை குனிந்து அமர்ந்து இருந்தான் வளவன்....
பெண்ணியம் பேசாதடி – 14
ராட்சசியோ நான்!
பாவியோ நான்!
பாசமில்லாக் கல்லோ நான்!
பசியறியாத் தாயோ நான்!
கண்ணீர் மல்க பேரிளம் பெண்.
பொறுக்குமா எழுத்தாளருக்கு
வறண்ட என் வாழ்க்கைக்கு,
வரமாய் வந்த வன தேவதை நீயடி.
“தாத்தா!.........” என்ற கத்தலில் மூர்த்தி அடித்துப் பிடித்துத் தனது வயதையும் மறந்து ஓடி வந்தா் “என்னப்பா” பாவம் போல் மூச்சு வாங்கக் கேட்ட மனிதரை பார்த்துப் பாவம்...
பெண்ணியம் பேசாதடி -12
கனவு பலித்ததடி கண்ணம்மா!
களிப்பு பெருகுதடி கண்ணம்மா!
கள்ளம் ஓங்குதடி கண்ணம்மா!
உன் மேல் கள்வெறி கொள்ளுதடி கண்ணம்மா!
எழுத்தாளனின் களிப்பிற்குப் பேரிளம் பெண்ணின் மௌனமே பதில்.
ஒரு வரமாகக் கண்ணாமூச்சி விளையாட்டு தான் குடும்பத்தார் இடத்தில். இதோ வரேன் என்று வாண்டுடன் சென்றவள் பிறந்தகத்திலே டேரா போட்டு, இப்போ அப்போ என்று சாக்கு சொல்லி நாட்களைப் போக்கி...
பெண்ணியம் பேசாதடி -4
கரை மீறும் வெள்ளமாக என் காதல்!
அணை கொண்டு தடுப்பாக உன் அன்பு!
நான் மீற,நீ தடுக்க என்னடி விளையாட்டு இது?
இரவு வேளை உணவை முடித்தவர்கள் சற்று நேரம் அமர…..
மனம் மகிழ்ச்சியில் நிறைந்து இருக்கத் தனது தந்தையை இறுக்க அனைத்துக் கொண்டான் வளவன்,“என்ன கண்ணா ரொம்பச் சந்தோசமா இருக்க கண்டு பிடிச்சிட்டியா அவள” ஆர்வம்...
பெண்ணியம் பேசாதடி – 6
காதல் கொண்டு சாகடிப்பேன்
சகித்தாக வேண்டும் நீ!..
உன் சுவாசம் கொண்டு சுவாசிப்பேன்
பொருத்தாக வேண்டும் நீ!...
கற்பை கலக்கம் செய்வேன்,
காத்தாக வேண்டும் நீ!...
இப்பிறவியில் என் காதல் அடிமை நீயென்று
சாசனம் எழுதி தரவேண்டும் நீ!.....
அனைத்தும் என் கட்டளை அடிபணிவது ஒன்றே உன் வேலை.
உணவை உண்டு கொண்டே தீவிர யோசைனையில் இருந்தான் வளவன்.அவனுக்கு உணவை பரிமாறி...
பெண்ணியம் பேசாதடி – 15
தாய்மையைப் போற்றாத கவி உண்டோ,
வார்த்தைக் கோர்க்க முடியவில்லை உன் எழுத்தாளனுக்கு,
தேடித்திண்டாடி தவிக்கிறேன் உன் பெண்ணியம் போற்ற,
கரம் கொடுடி பேரிளம் பெண்ணே நான் கரை சேர.
அழகான பச்சைப் பட்டுத்தி மிதமான நகைகள் அணிந்து உறவுகள் சூழ அழகாக நடந்து முடிந்தது வளைகாப்பு. இரு ஆண்களும் ஒற்றைக் காலில் நின்று சாதித்து விட்டனர்....
பெண்ணியம் பேசாதடி – 16
மல்லி பூ தோட்டத்தில் ஒற்றை ரோஜாவின் வரவோ!
பெண்ணியம் பேச இன்னும் ஓர் பெண்ணோ!
மூன்று தேவதைகளின் காலடி கொலுசின்,
கீர்த்தனம் நிறைந்ததடி உள்ளம்.
“டேய் வளவா பாவம்டா அந்தப் பொண்ணு விடுடா”
“நீ பேசாம இருடா எப்படி அவ எங்க அம்மாவைப் பார்க்க முடியாதுனு சொல்லுவா”
“முட்டாப் பையலே அந்தப் பொண்ணுக்கு டூட்டி முடுஞ்சுப் போச்சுடா. அதான்...
பெண்ணியம் பேசாதடி – இறுதி
எழுத்தாளரின் பிதற்றல்………..
என்னை ரசிக்கும் ரசிகையாய்,
என்னைத் தாங்கும் தாயாய்,
என்னை நேசிக்கும் தாரமாய்,
என்னை வம்பு செய்யும் தோழியாய்,
என் உயிர் குடிக்கும் ராட்சசியாய்,
பெண்ணியம் பேசும் பைங்கிளியாய்,
என்றும் நீ இறுதி பயணம் வரை.
ஐந்தாண்டு திட்டம் வெற்றி பெற்ற நிலையில் வளவன் -மஹாலக்ஷ்மி இருவருக்கும் இன்றோடு திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது.மஹாலக்ஷ்மி கொஞ்சமே கொஞ்சம் வளவனின்...
பெண்ணியம் பேசாதடி – 11
எச்சில் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு
காதல் யுத்தம் புரிவோமாடி?
சத்தியம் செய்கிறேன் தோல்வி எனதே.
தோல்வியில் வெற்றி காணும் ஜித்தன் நீர்,
இத்தனை தந்திரம் ஆகாது எழுத்தாளரே!
“என்ன கோவம் எழுத்தாளருக்கு? என்னையும் புரிஞ்சுக்கணும்” கட்டிலில் ஓய்வாகப் படுத்தவரை நெருங்கி வந்து கேட்க.
“உங்கிட்ட நான் எதாவது பேசுனேனா போடி” முறுக்கிக் கொண்டார் எழுத்தாளர்.
“ப்ச்… என்ன எழுத்தாளரே பிடிவாதம்...
பெண்ணியம் பேசாதடி – 18
“என்னடி இது படுத்துற சத்தியமா முடியல ராட்சசி இப்போ பேசப் போறியா இல்லையா” தனது நிலையை மறந்து ஒரு மாதமாகத் தன்னிடம் சண்டையிட்டுப் பேசாமல் இருக்கும் காதல் மனைவிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தார் வாமனன்.
தொழிற்சாலை வேலைகளை வளவனிடம் முழுதாகக் கொடுத்து விட்டு மேற்பார்வை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தார்.அதுவும் மனமே...
பெண்ணியம் பேசாதடி - 1
காகிதமும் எழுது கோலும் கலவி கொண்டால் கவிதை பிறக்குமாம்!
நீயும் நானும் காதல் கொண்டால் ரசனை பிறக்குமாம்!
வா சோதனை செய்வோம்!
கண்ணாடி முன் நின்று தனது தலையை வாரி கொண்டு இருந்தார் வாமணன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதாலே அவர் அழகன் என்று எண்ணி கொள்வோம். வயது என்று பார்த்தால் நாற்பதை...
பெண்ணியம் பேசாதடி – 2
கவி எழுத எண்ணும் போதெல்லாம்
தடை செய்கிறது உன் மென்மை!
சரி உன் மென்மை கொண்டு நான்
கவி படிக்க எண்ணினால்
தடை செய்கிறது உன் பெண்மை!
எதை கொண்டு நான் கவி படிக்க சொல்லடி.
நாளை அக்கா மதுவுக்கு திவசம் அதனால் வீடு முழுவதும் சுத்தம் செய்து கொண்டு இருந்தாள் காஞ்சனை.அவளது...