Advertisement

பெண்ணியம் பேசாதடி இறுதி

எழுத்தாளரின் பிதற்றல்………..

என்னை ரசிக்கும் ரசிகையாய்,

என்னைத் தாங்கும் தாயாய்,

என்னை நேசிக்கும் தாரமாய்,

என்னை வம்பு செய்யும் தோழியாய்,

என் உயிர் குடிக்கும் ராட்சசியாய்,

பெண்ணியம் பேசும் பைங்கிளியாய்,

என்றும் நீ இறுதி பயணம் வரை.

ஐந்தாண்டு திட்டம் வெற்றி பெற்ற நிலையில் வளவன் -மஹாலக்ஷ்மி இருவருக்கும் இன்றோடு திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது.மஹாலக்ஷ்மி கொஞ்சமே கொஞ்சம் வளவனின் காதலில் முன்னேறி விட்டாள் முன்னேற வைத்துவிட்டான் என்றே சொல்ல வேண்டுமோ.

தினசரி வேலையாகத் தேதியைப் பார்த்து எண்ணிக் கொண்டே இருப்பான் போல.சரியாக ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே வாமணனிடம் வந்து நின்று விட்டான்.அவரும் அவனது கட்டுப்பாடு அறிந்து மகனது காதலுக்குப் பச்சை கொடி காட்டிவிட்டார்.

அவர்கள் பெண் கேட்டு சென்றதே பெரும் கூத்து தான்.அந்த கதையைப் பார்ப்போம் சிறு கொசுவத்தி சுருள் கொண்டு.சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு பெண் கேட்க முன் அறிவிப்பு இல்லாமல் வாமனன் குடும்பம் சென்று நிற்க.

முழித்துக் கொண்டு நின்றனர் மஹாலக்ஷ்மியின் பெற்றோர் மற்றும் தமயன்.மஹாலக்ஷ்மி இருந்திருந்தால் கூட அவர்களைப் பற்றிச் சொல்லி இருப்பாள் அவளும் வேளைக்குச் சென்று இருக்க இவர்கள் யாரென்று தெரியாமல் ‘வாங்க’ என்று அழைத்துச் சென்றனர்.

பெரியவர்கள் பின்னே வர சில்வண்டு ஒன்று பெரிய பெண்ணாகத் தோரணை செய்து கொண்டு பிஞ்சு பாதங்களை வைத்துக் கெத்தாக நடப்பதாக எண்ணி முயல்குட்டியாகத் துள்ளித் துள்ளி வந்தது.

யாரென்று சொல்ல வேண்டுமா என்ன.எழுத்தாளரின் காதலுக்குச் சாட்சி அல்லவா அந்தத் தேவதை.பெண்ணின் சேட்டையைத் தாங்க முடியாத காஞ்சனை.

“ஏய் எதுக்குடி இப்போ முன்னாடி முந்திக் கிட்டு போற”

“ப்பா…. கொஞ்சம் பேசாம இருக்கச் சொல்லுப்பா” என்று மழலை மாறாத பால் முகம் சுருங்கச் சொல்ல பொறுக்காமல் எழுத்தாளரும் குழந்தையை அள்ளிக் கொண்டு.

“எதுக்குடி என் பொண்ண திட்டர”

“அப்புடியே திட்டிட்டாலும்” கணவனிடம் நொடித்தவள் பெண்ணிடம் பாய்ந்தாள் “என் புருஷன் முதல இறங்குடி கீழ எப்போ பாரு தொத்திக் கிட்டே”

“ப்பா.. பாருங்க… ப்பா”

அந்தச் சின்னத் தேவதையைக் கையில் வாங்கிக் கொண்ட வளவன் “என்ன எப்போப்பாரு என் முயல் குட்டிய திட்டுற. முதல எங்களுக்கு அப்பா அப்புறம் தான் உனக்குப் புருஷன்’

“முதல எனக்குத் தான் டா புருஷன்”

“இல்ல அப்பா” இப்போது அந்த முயலும் தனது தமயனுடன் கை கோர்த்தது

இவர்களது சண்டையைப் பார்த்து தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் ஆகி விட்டது மஹாலக்ஷ்மி பெற்றோர்க்கு.யாரு என்னவென்று தெரியாமல் வீடு தேடி வந்து அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டால்.

அதுவும் காஞ்சனை சிறு பிள்ளையைச் சண்டையிட,அவளது பெண்ணோ பெரியவளாகக் கேள்வி கேட்க மஹாலக்ஷ்மியின் தாய் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்தார்.(பாவம் முதல் முறை தானே போகப் போகப் பழகி விடும்)

மூர்த்திப் பாவமாக வாமனனை பார்க்க அவர் பார்வையின் அர்த்தம் புரிந்து “சரி வாங்க நம்பச் சண்டையை வீட்டுல போய் வச்சுக்கலாம்.இவுங்க முன்னாடி சண்ட போட்டா என்ன குடும்பம் இப்புடி இருக்குனு பொண்ணு தர மாட்டாங்க” குறி பார்த்து அடித்தார் எழுத்தாளர், அவர் சொன்னது தான் தாமதம் வளவன் முதல் முயல் வரை கப் சிப்.

அனைவரும் வந்தவுடன் மஹாலக்ஷ்மியின் தந்தை அமர செய்து ‘என்ன’ என்பது போல் பார்க்க வாமனன் பேசினார்.

“வணக்கம் என் பெயர் வாமனன்” என்று தனது தொழில் மற்றும் அவரது குடும்பம் பற்றிச் சொல்லியவர்.சிறு மௌனத்திற்குப் பிறகு வளவன் காதல் பற்றிச் சொல்லி பெண் கேற்க.மூவரும் சற்று அதிர்ந்து தான் போனார்கள்.

நல்ல குடும்பம் தான் என்றாலும் வசதியில் ஏற்றத் தாழ்வு உள்ளதே என்று மருகி நிற்க.வளவனை நோக்கி கண் காட்டினார் வாமனன் ‘இனி நீ பேசு என்பது போல்’

அவனும் தனது தயக்கம் தகர்த்து “உங்க பொண்ண எனக்கு ரொம்பப் புடுச்சு இருக்கு.கல்யாணம் பண்ணி குடுங்க நல்லா பார்த்துக்குவேன்” என்றவன் மேலும் “உங்க பொண்ணுக்கு என்ன முடியுமோ செய்யலாம் வசதி பத்தி பேச்சுக்கே இங்க இடமில்லை”

எதற்காக அவர்களது தயக்கம் என்று முன்பே யூகித்துத் தான் தந்தையும் மகனும் செயல்பட்டனர் போலும்.

அவர்களுக்கு மறுத்து பேச வாய்பளிக்காமல் தங்களது விருப்பமே முதன்மையாகக் கொண்டு செயல் பட்டனர்.மஹாலக்ஷ்மியின் தமயன் வண்டி சாவி எடுத்துக் கொண்டு மஹாவை அழைக்கக் கிளம்பி விட்டான்.

அவள் இருந்தால் தான் ஒரு முடிவு எடுக்க முடியும் மற்றும் ஒரு அண்ணனாக அவளை விசாரிக்க வேண்டி உள்ளது.அதனால் அவளை அழைத்து வர சென்றான்.

“அம்மாடி அமுதா வந்தவுங்களுக்குக் காப்பிக் கொண்டு வா” என்றவர். “பாப்பா வரட்டும் அது கிட்ட கேட்டுட்டு ஒரு முடிவு சொல்லுறேன். வீட்டுல பையன் கிட்டயும் கொஞ்சம் பேசணும்” குடும்ப உறுப்பினர் விருப்பமும் முக்கியம் என்றவரை பார்த்து.

“நல்லா பேசிட்டே சொல்லுங்க” என்ற வாமனன் தனது வருங்கால மருமகளுக்குக் காத்திருந்தார்.

அங்கோ மஹாலக்ஷ்மியின் தமயன் அவளைக் கேள்விகளால் துளைத்துக் கொண்டே வண்டி ஓட்டினான் “உனக்கு எப்புடி பழக்கம் மஹா அந்தப் பையன்,ஆசைப்பட்டேனு சொல்லுறான் பெரிய இடமா இருக்கு நீ எதுவும்……..”மேல் கொண்டு கேட்க முடியாமல் தடுமாற.

முதலில் ‘வந்து விட்டானா என்ன காதலடா என் மேல்’ என்று சிலிர்ந்தவள் அடுத்து தனது தமயன் கேட்டதற்கு நடந்தவை அனைத்தும் சொன்னவள் “அவர் நல்லவர் தான்ண்ணா” கேட்காததற்கும் விடை சொல்ல தங்கையின் மனதைக் கண்டு கொண்டான் தமயன்.

வீட்டுக்குள் நுழைந்தவள் மீண்டும் அதிர்ந்து தான் போனால் சொன்னது போல வந்துவிட்டானே அதுவும் மிகத் துல்லியமாக இந்த ஐந்தாண்டை கணக்கிலிட்டு பொல்லாத கள்ளன் டா நீ.

அனைவரையும் இருகரம் கூப்பி வணங்கி வாங்க என்று அழைக்க அவளது அழகான புன்னகையில் பூவாக மலர்ந்தது அனைவரது முகமும் “ஒரு நிமிஷம்” என்றவள் தனது தாயை நாடி செல்ல அவள் பின்னே அவளது தந்தையும் “இதோ வந்துறோம்” என்று சென்றார்.

“என்ன பாப்பா அந்தத் தம்பி என்னமோ சொல்லுதே”

“அப்பா அவர முன்னாடியே தெரியும் ப்பா” என்றவள் மீண்டும் நடந்தவை கூற.

“அப்போ அவருக்கு ரெண்டாந்தாரமா அந்தம்மா வரும் போதே சண்டைடி அந்தத் தம்பிகூட”

அழகாகச் சிரித்தவள் “அவுங்க அப்புடிதான் நானும் முதல பார்க்கும் போது பயந்து தான் போனேன் அப்புறம் ரமேஷ் அண்ணான்னு இருக்காங்க அவுங்க அவர் குடும்பத்தைப் பத்தி சொன்னாங்க”

“இப்போ என்னடி சொல்ல வர” தாய் அவளது நாடி பிடித்துக் கேட்க தலையைக் குனிந்துக் கொண்டாள் பெண் “அமுதா இனி மேல் கொண்டு பேச ஒண்ணுமில்ல பாப்பாக்கு பிடிக்குது போல இனி என்ன பேச வா” என்றவர்

மனைவி மகனை அழைத்துக் கொண்டு சென்றார்.

எந்தவித அசட்டு பேச்சுகளும் இல்லாமல் “எங்களுக்குச் சம்மதம் மேல் கொண்டு ஆக வேண்டியதை பேசலாம் எங்களால் முடுஞ்சத செய்வோம் நீங்க ஏத்துக்கனும்”

“கண்டிப்பா” என்ற வாமனன் காஞ்சனைக்குக் கண் காட்ட தான் கொண்டு வந்த புடவையை எடுத்துக் கொண்டு மஹாலக்ஷ்மி அறையை நோக்கி சென்றாள்.அவளும் சிரித்த முகத்துடன் வரவேற்றாள்

“காஞ்சனை மருமகளா இருந்துட்டு இனி நீ பயப்புடக் கூடாது”

“இனி நம்ப இரண்டும் பேரும் தான் எல்லாம்” சொல்லிக் கொண்டு இருக்கும் போதே உள்ளே நுழைந்தது அந்த முயல் “என்ன பேசிகிட்டு இருக்கீங்க அங்க அண்ணா ரொம்ப நேரம் வெயிட் பண்ணுதான் வாங்க”

“பெரிய மனுசி நீ முடியாது போடி”

“அம்மா நான் உன்கூடப் பேசல அண்ணிக் கூதப் பேசுறேன்”

“அவ என் மருமக”

“உன்னோட முடியல இரு அப்பாவக் கூப்புடுறேன்”

“ஏய்! ராட்சசி நில்லுடி எரும” என்றவாறே காஞ்சனை பின்னே செல்ல சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது மஹாவிற்கு.அவள் வாழ்க்கை இனி வசந்தம் என்பது திண்ணம்.அழகான கூடு அன்பான தேனீகள் மீண்டும் ஒரு சிலிர்ப்பு.

பட்டுச் சேலையில் பாந்தமாக வந்தவளை அள்ளிக் கொண்டது வளவனின் கண்கள்.இது என் சொத்து என்பது போலப் பாரபட்சம் இல்லாத களவு கண்களைக் கொண்டு.

“அழகி என்னம்மா அசத்துகிறாள்” அவன் ஜொள்ளியவரே இருக்க.அவனது ரசனையைக் கலைத்தாள் அன்பு தங்கை. “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” பெரியவர்கள் அனைவரும் தங்களுக்குள் பேசிப் கொண்டு இருந்ததை விடித்து முயலை கவனிக்கக் கேள்வி கணை தொடுத்தது அந்த வீராங்கனை.

“நீங்க என்ன எப்புடி பாத்துப்பிங்க? எனக்கு எங்க அண்ணா ரொம்பப் புதிக்கும் உங்களுக்கு ? என்ன விளையாட்டு தெரியும் ? நல்ல சமைப்பீங்களா?காஞ்சனை சமையல் உவ்வா….” என்று பாவனைச் செய்ய

பொங்கி விட்டால் காஞ்சனை “ஏய்! என் சாப்பாடு உனக்குக் கசக்குதாடி எழுத்தாளரே உங்க பொண்ணப் பார்த்து பேச சொல்லுங்க” என்று அடுத்தச் சண்டைக்கு ஊ……னா போட முழித்துக் கொண்டு இருந்தார் வாமனன்

“ப்பா… தைரியமாச் சொல்லுங்க… ப்பா… அன்னைக்கு அந்த உப்புமா எப்புடி இருந்துச்சு?”.

இப்போது வாமனன் பாவமாகக் காஞ்சனையைப் பார்க்க அனைவருக்கும் சிரிப்பு.இப்படி தாங்க பேசிப் பேசி இதோ இப்போ கல்யாணம் முடுஞ்சு மூணு நாள் ஆயிடுச்சு.

——————————————————————————–

தனது கழுத்தடியில் துயில் கொண்டு இருக்கும் கணவனை எழுப்ப போராடி கொண்டு இருந்தால் மஹா.அத்தனை அன்பையும் தனது செயல் மூலம் காட்டிய கணவனிடம் மயங்கி தான் போனாள் பெண்

“என்னங்க”

“என்னடி”

“போகணும்”

“இப்போ முடியாது”

“ப்ச்… பாவம் அத்தை தனியா வேலப் பார்ப்பாங்க”

“யாரு பாவம் அம்மாவா அடி போடி”

“உண்மையாவே பாவம் தான் உங்க தங்கச்சி ட்ரில் வாங்குறா ப்பா… ப்பா என்ன வாய் ஆனா அழகா தமிழ் உச்சரிக்கிறா”.

“யாரு பொண்ணு வாமனன் பொண்ணாச்சே”

“நீங்களும் தான் வாமணன் மகன் கவிதை சொல்லுங்க”

“கவிதை தானே சொல்லுறேன்” என்றவன் கழுத்து வளவில் இருந்து அவளது காதுக்குச் சென்று சொல்ல.உடல் தூக்கி போட உதடு கடித்து இறுக்கக் கண்கள் மூடிக்கொண்டாள்.சிறுது நேரம் சென்று பேச்சை நிறுத்தியவன் மீண்டும் தனது சிறப்பிடமான கழுத்து வளைவில் தஞ்சம் புக சிலிர்த்துப் போனாள் பெண்.

சிறிது நேரம் தன்னை நிலை படுத்திக் கொண்டவள் வளவனை அடித்துத் துவைக்க “ஏய்! அடிக்காதடி நீ தானே கவிதை கேட்ட”

“என் தப்பு தான் சாமி இனி கேட்கவே மாட்டேன்”

“அப்புடியெல்லாம் சொல்லக் கூடாது “என்றவன் மீண்டும் அவளை வளைத்துக் கொண்டான்.காதலில் கண்ணியம் காத்தவன் கணவனாகப் பெண்ணியம் காப்பான் என்பது உறுதி .வாமனன் மகனுக்குச் சொல்லவா வேண்டும் காதல் சரித்திரம் படிக்கத் துணிந்து விட்டான்.

———————————————————————

“டேய் எரும எங்கடா இருக்க”

“என் பேரு எரும இல்ல ரமேஷ்”

“அந்தப் பேரு எனக்குப் புடிக்கல எரும தான் புடுச்சு இருக்கு”

பல்லைக் கடித்தவன் “என்ன வேணும் எதுக்குப் போன் பண்ணீங்க”

“என் பொண்ணு தேடுறா”அது என்னவோ முயலுக்கு ரமேஷை ரொம்பப் பிடிக்கும் காஞ்சனை ரமேஷை நெருங்கி விட்டால் அவனைக் காக்க வந்துவிடுவாள் குட்டி அதனாலே அவனுக்கு நிரம்பப் பிடிக்கும்.

காஞ்சனை சொன்னதும் முகம் கொள்ளாப் புன்னகையுடன் “செல்ல குட்டிய பார்க்க நாளைக்கி வரேன்னு சொல்லுங்க.இப்போ முக்கியமான விஷயமா குடும்பத்தோட போய்க் கிட்டு இருக்கேன்”

“ஓ…… . சரிடா உன் மாமா பொண்ணு ஹரினிய கேட்டதாகச் சொல்லு” காஞ்சனை சொல்ல அதிர்ந்து காரை நிறுத்தி விட்டான். “சித்தி……” என்ற கூவலுடன்.

“என்னடா வெங்காயம் பொண்ணு யாருனு கேட்டாச் சொல்ல மாட்டேன், உங்கிட்ட பேச விட மாட்டேன்னு சொன்ன.இப்ப நானும் ஹரிணியும் நெருங்கிய தோழி தெரியுமா”

“உங்களுக்கு எப்புடி தெரியும்”

“தெரியும்”

“சித்தி உன் காலுல விழுறேன் என் வாழ்க்கையில விளையாண்டுறாத”

“பொழச்சுப் போ” என்று போனை அணைக்க அடுத்த நொடி ஹரிணி அழைத்தாள். மாமன் மகளை யாருக்கும் தெரியாமல் பத்து வருடமாகக் காதலித்து வருகிறான்.வளவனிடம் கூடச் சொன்னதில்லை.மோப்பம் பிடித்துக் கண்டு கொண்டது காஞ்சனை தான் ஆனால் பெண் யாரென்று திருமணத்தன்று சொல்வேன் என்றே கூறி இருந்தான்.

விடுவாளா காஞ்சனை பேசிப் பேசியே கண்டு கொண்டாள் பெண்ணை.இனி ரமேஷின் திருமண வாழ்க்கை காஞ்சனை துணையுடன் ஹாஹா ……………. சிறப்பு.

———————————————————————

சின்ன முயல் தகப்பன் நெஞ்சில் படுத்துக் கொண்டு அவர் சொல்லும் பாரதியார் கவிதை மற்றும் அதன் விளக்கத்தைக் கூற புரிந்து கொள்ள முயற்சித்த வாறே தலையை ஆட்டி ஆட்டி கேட்டுக் கொண்டு இருந்தது.

வழமை போல் காஞ்சனை அவர்களை முறைத்துக் கொண்டு சுற்றினாள்.முயல் எதார்த்தமாகக் காஞ்சனையை பார்க்க அவளது முறைப்பு அதனை உசுப்பிவிட இன்னும் தந்தையின் நெஞ்சில் முத்தம் வைத்து இறுக்கக் கட்டி கொண்டது.பொறுக்குமா பேரிளம் பெண்ணுக்கு

“ஏய்! என்ன வம்பு பண்ணுறியா”

“நான் எங்க அப்பாக்கு முத்தா கொடுத்தேன். உனக்கு என்ன எப்போப்பாரு எங்களை முழுச்சு முழுச்சுப் பாக்குற” கண்ணை அடித்து அடித்துக் காட்ட மகளின் செயலில் சிரிப்பை அடக்கினார் வாமனன்.

“கொழுப்ப பாரேன் சின்னக் கழுத என் கண்ணு எங்க வேணாலும் பார்ப்பேன்”

“அதே மாதிரி எங்க அப்பா நான் முத்தா கொடுப்பேன்”

“திமிரு இப்புடி தான் பெரியவங்க கிட்ட பேசுவாங்களா இரு உங்க மிஸ்ஸு கிட்ட மாட்டி விடுறேன்”

“யாரும்மா பெரியவங்க” சிரியாமல் கேட்க வாமனனுக்கு அப்படி ஒரு சிரிப்பு அடக்க முடியாமல் வெடித்துச் சிரித்தார்.அவரது சிரிப்பு மேலும் கோபம் தர

“என்ன உங்களுக்கு அப்புடி ஒரு சிரிப்புனுக் கேக்குறேன்”

“என்கிட்ட ஏன்டி கோவப் படுற உன் பொண்ணு உன்னை மாதிரி இருக்கா.என்ன பாடு படுத்துன எல்லாரையும் அதான்”

அவரது கூற்று உண்மை என்றாலும் ஒத்துக் கொண்டால் அவள் காஞ்சனை இல்லையே பக்கத்தில் இருக்கும் தலையணை எடுத்து இருவர் மீதும் எரிந்து விட்டு புத்தக அறைக்குச் சென்றாள்.வாமணன் மற்றும் முயலின் சிரிப்பொலி கேட்க காஞ்சனை முகத்திலும் சிரிப்பின் சாயல்.

‘வரம் கொடுத்தவன் சிரிப்பில் வரம் பெற்றவள் களிப்பில்’.

மகளைத் தூங்க வைத்து விட்டு வாமனனும் புத்தக அறைக்கு வர அங்கே காஞ்சனை வழமை போல் மயக்கத்தில்.

தெளியாத மயக்கம் தந்த எழுத்தாளரோ போதை கொள்ளும் காதலில் அவளை நெருங்கி அணைத்துக் கொண்டார்.இன்று முழுப் பௌர்ணமி வாமனனின் பெண்ணியம் பேசாதடி கவிதை அங்கத்தில் இறுதி கவிதை அதில் தான் பெண் மயங்கி நிற்கிறாள்

பெண்ணியம் பேசாதடி பேரிளம் பெண்ணே!

காலங்கள் கடந்தாலும் காதல் கசக்காதடி பெண்ணே!

உயிர் உள்ளவரை காதல் சுவாசம் தந்து பற்றிக்கொள்ளடி பெண்ணே!

நானே நீயாக என்றும்.

இப்பிறவி முடிந்தாலும் காற்றில் கலந்து சுவாசம் நுழைந்து கூடல், செய்வேன் காதல் தீவிரவாதி நான்.

இன்னும் சில வரிகளை மனதுக்குள் பூட்டி வைத்து அதில் பேரிளம் பெண் லயித்து இருக்க.அந்த வரிகளுக்கு உயிர் கொடுக்கும் முன் கண்களில் நீர் துளிர்க்க “நன்றி எழுத்தாளரே”

“எதுக்குடி நீ என் தேவதை”

“நீங்க தான் என் தேவதை”

“ப்ச் நன்றி எதுக்கு எழுத்தாளனுக்கு ரசிகை தான் வேணும்”

“எழுத்தாளரே” என்று மீண்டும் பெண் பேசவர.

“பெண்ணியம் பேசாதடி பெண்ணே” என்றவர் தனது இதழ் என்னும் தூரிகை கொண்டு கவி படைக்கத் துடங்கி விட்டார்.இனி நமக்கு என்ன வேலை.

காலங்கள் கடந்து, கசப்புகள் மறந்து, துக்கங்கள் துறந்து இருவரும் சேர்ந்தாலும் எழுத்தாளரின் காதல் பேரிளம் பெண் மறந்த ஆசைகளைத் தோண்டி எடுத்து உயிர் கொடுக்க.உயிர் கொடுத்தவனுக்கு உயிர்ப்புக் கொடுத்தாள் பெண்.

ஓர் பெண்ணுடன் வாழ்ந்தவர் என்றாலும் நிறைவு பேரிளம் பெண்ணிடம் மட்டுமே.மதுவின் உறுத்தல் வாமனனுக்குக் காலம் முழுமையும் ஓர் ஓரத்தில் இருக்கத்தான் செய்யும் அதே போல் பேரிளம் பெண்ணின் காதலும் இருக்கும் முழுமையாக.

இனி வரும் காலமும் புத்தக ஏடு கொண்டு, கவிதை கலவி எழுதி ,முத்த இலக்கியங்கள் சேர்த்து இல்லற சுவைக் கொண்டு ஓர் காதல் வரலாறு எழுத்தாளர் படைக்க அதனை ரசிகையாய் பேரிளம் பெண் ரசிக்கக் காதல் பெண்ணியத்தைப் போற்றியது அங்கே.

Advertisement