Advertisement

பெண்ணியம் பேசாதடி – 1
காகிதமும் எழுது கோலும் கலவி கொண்டால் கவிதை பிறக்குமாம்!
நீயும் நானும் காதல் கொண்டால் ரசனை பிறக்குமாம்!
வா சோதனை செய்வோம்!
கண்ணாடி முன் நின்று தனது தலையை வாரி கொண்டு இருந்தார் வாமணன். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதாலே அவர் அழகன் என்று எண்ணி கொள்வோம். வயது என்று பார்த்தால் நாற்பதை பிடித்து நின்ற முதுமகன் என்று சொல்லலாம்.
மனைவியைப் பறி கொடுத்த விதவை அவர். சில மாதங்களுக்கு  முன்பு புற்று நோயால் சிகிச்சை பலன்றி இறந்து விட்டார் அவர் மனைவி.
ஆசை மனைவியின் பிரிவு நெஞ்சின் ஓரம் சிறு வலி தான் இல்லை என்பதற்கில்லை, இருந்தும் வாழ்க்கையை ஓட்ட வேண்டுமே நிதர்சனம் எடுத்துரைக்க.
தன்னை நம்பி இருபதுகளில் ஓர் மகன் வளவன் இருக்கின்றானே.இனி வரும் நாட்கள் அவனை கொண்டே கடத்த வேண்டும் அல்லவா.
மேலும் அவரைப் பற்றி………
வண்டி உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையின் முதலாளி வாமணன். இது வயிற்று பிழைப்பிற்கு மட்டுமே.இதயம் பிழைக்க வேண்டுமானால் அவருக்குக் கவிதையும்,காதலும் வேண்டும்.
ஆம் அவர் ஓர் எழுத்தாளர், கவிஞர், கவிதை சித்தன், தமிழ் பித்தன் என்று கூடச் சொல்லலாம் சரி இனி நடவுக்கு வருவோம்.
இன்று முக்கியமான தொழில் கூட்டம் உள்ளதால் அதற்கு அவசரமாக அவர் கிளம்பி  வர. அவருக்கு எதிர் அறையிலிருந்து வளவன் வரவும் சரியாக இருந்தது. தந்தையை கண்டு விரிந்த புன்னைகையுடன்.
“குட் மார்னிங்ப்பா”
“காலை வணக்கம் கண்ணா போலாமா”
“போலாம்ப்பா”
இருவரும் காலை உணவை தவிர்த்து அலுவலகத்தை நோக்கி சென்றனர். ‘உண்டு விட்டு செல்’ என்று அக்கறை கொண்டு செல்ல மிரட்டல் வைக்க அங்கு ஆள் இல்லை போலும்.
**********
இருவரும் அலுவலகம் உள்ளே செல்ல அங்கு வளவனின் உரிமை தோழன் ரமேஷ். அவர்களை வரவேற்றுக் கூட்டம் நடைபெரும் அறைக்கு அழைத்துச் சென்றான்.
ரமேஷ் கல்லூரி தோழன் தான் என்றாலும்.நேர்மை குணம் கொண்ட ரமேஷிடம் தனி மரியாதையும், நிரம்ப உரிமையும் உண்டு.அதனால் தொழிலிலும் அவனை இணைத்துக் கொண்டான் தந்தையின் வளவன் சம்மதத்துடன்.
அறைக்குள் சென்றவர்களுக்கு வெளி உலகமே மறந்து போனது.கூட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொண்டு வெளியில் வந்த வர்த்தகர்களை கை குலுக்கி மரியாதை செய்து அனுப்பி வைத்தனர் தந்தையும் மகனும்.
அவர்கள் செல்வதற்காகவே காத்திருந்தவர் போல “டேய் கண்ணா!.. பார்த்துக்கோ நைட் நான் லேட்டா தான் வீட்டுக்கு வருவேன் நேரத்துக்கு சாப்பிட்டு தூங்கிடு கண்ணா” அவசரமாக வாமனன் நடந்து கொண்டே சொல்ல.
“சரிப்பா யூ எஞ்ஜோய்ப்பா!….உங்க ரசிகைய கேட்டதா சொல்லுங்க. இந்த முறையாவது அவங்களை கண்டு  பிடிங்கப்பா ப்ளீஸ்”
“அட போடா கழுவுற மீனுல அவ நழுவுற மீனு.நான் எப்படி முயற்சி பண்ணாலும் என்னை ஜோக்கர் ஆகிடுறா டா கண்ணா பார்ப்போம்” சொல்லிவிட்டு துள்ளல் நடையுடன் புத்தகக் கண் காட்சி மற்றும் கருத்தரங்கத்திற்கு விரைந்தார் வாமனன்.
அவர் செல்வதைப் பார்த்துக் கொண்டே இருந்த ரமேஷ் வளவனின் தோளில் கையைப் போட்டு இறுக்கி கொண்டவன் போகும் வாமணனை சுட்டி காட்டி“அந்தப் பையன் எங்கடா துள்ளிக்கிட்டு போறார்”
ரமேஷ் கேட்ட தோரணையில் சிரிப்பு வர சின்னச் சிரிப்புடன் “அந்த பையன் புத்தகத் திருவிழா போறார்”
“பொறாமையா இருக்குடா எப்படியும் நாற்பது வயசுக்கு மேல இருக்கும். கொஞ்சமாவது மனுசனுக்கு தொந்தி தெரியிதானு பாரு. நானும் காலைல நடக்குறேன், நைட் நடக்குறேன்,ஆனா தொப்பை குறைய மாட்டேங்குது” தனது வயிற்றில் கை வைத்து புலம்பினான் ரமேஷ்.
அவன் சொன்ன தினுசில் மீண்டும் சிரித்தவன் “மனசை தெளிவா வச்சுக்கனும் மாப்பிள அப்போதான் உடம்பு சரியா இருக்கும்”
“என்னமோ போ கொடுத்து வச்ச மகராசன் மனுஷன் இந்த வயசுலையும் பொண்ணுங்க சுத்துறாங்க பார்” ரமேஷ் விட்ட அனல் மூச்சில்.
“அடேய்! கண்ணு வைக்காதடா என்றவன் உன்ன பேச விட்டா அவ்வுளவு தான் வா வேலை தலைக்கு மேல இருக்கு”ரமேஷின் பின் தலையில் கை கொடுத்து அழைத்துச் சென்றான் வளவன்.
*********
அங்கு விழா ஆரம்பமாக வாமனன் கண்கள், அந்த அரங்கத்தையே சுற்றி சுற்றி வந்தது. ஒரு பயனுமில்லை ஆயிரம் மனிதர்கள் குழுமிருக்கும் அரங்கில். எங்குப் போய் அவளைத் தேட.
இன்று அவள் மேல் எல்லையற்ற கோபம் பேரிளம் பெண் முகம் காட்டாமல் வதைக்கிறாளே என்று.
கருத்தரங்கம் முடிந்து வாமனன் பேசுகையில் அந்த அரங்கமே அதிர்ந்தது. சிறு புன்னகையுடன் வலது கை இரு விரல்களால் மீசையை நீவியவாரே பேச தொடங்க.
கூட்டத்தோடு கூட்டமாக ஓர் ஓரத்தில் கண்ணெடுக்காமல் அவரை ரசித்துக் கொண்டு இருந்தாள் பேரிளம் பெண்.
ஊதா வண்ண பருத்தி புடவையில் கண்ணியமான தோற்றத்துடன் கண் இமைக்காமல் வாமனனை பார்த்துக் கொண்டு இருந்தாள் பெண்.
ஒரு வழியாக நிகழ்ச்சி நிறைவுற்று வாமனன் குளிர் கண்ணாடி அணிந்து வேக நடையுடன் கூட்டத்தில் இருந்து தப்பி வந்து காரை எடுக்கும் வேளையில் வழமை அவரது போன் செல்லமாக சீனுகியது.
வெகு அலட்சியமாகப் போனை காதுக்கு கொடுத்து அமைதியாக இருந்தார்.அவருக்குத் தெரியும் விழா முடிந்தவுடன் அவள் தன்னை அழைப்பாள் என்று, ஆனால் எப்படி அழைக்கிறாள் என்பது தான் தெரியாது கள்ளி.
அந்தப் பக்கம் பேரிளம் பெண் சிறு புன்னகையுடன் “என்ன எழுத்தாளரே! அம்சமா இருக்கீங்க கண்ணாடி புதுசா”அவளறியா வண்ணம் மெல்லிய சிரிப்பு அவரிடம் அதுவும் மௌனமாக.
“சும்மா!..சும்மா!..மீசையைத் தடவாதீங்க எழுத்தாளரே!..அப்படியே அள்ளிக்கணும் போல இருக்கு….”பெண் பேசி கொண்டே போக மௌனம் மட்டுமே பதிலாக கொடுத்தார் எழுத்தாளர்.
“என்ன பேச்சே காணோம் சரி விடுங்க பேச வேணாம் ஒரு கவிதை சொல்லுங்க பார்ப்போம்”
“கவிதை தானே சொல்லிட்டா போச்சு”இதற்கு மட்டும் பேசியவர் படித்தாரே ஓர் கவிதை. கவிதை கேட்ட பெணின் பல் பலமாக கடிபட்டது.
அந்தரங்க தோழியே!
ஆசை காதலியே!
என் கட்டிலின் வேசியே!…
அவர் அர்த்தமில்லாமல் கவி படிக்க பேரிளம் பெண்ணுக்குக் கோபம் வந்துவிட்டது ‘வாமனன்’ பெண்மிரட்ட.
“என்னடி”கர்ஜனையாக வந்தது பதில்
“எதுக்கு கோபம்? சரி இப்போ பேசுறது சரி வராது நான் வைக்கிறேன்”
“ஏய்! ராட்சசி என்ன கண்ணாமூச்சி விளையாட்டு இது? போன் நம்பர் கொடு இல்ல நேர்ல வந்து பேசு” சற்று இறுக்கம் தளர்ந்த பேரிளம் பெண்.
“எழுத்தாளரே!…மகனுக்குக் கல்யாணம் பண்ணா அடுத்தப் பத்து மாசத்துல தாத்தா ஆகிடுவீங்க உங்களுக்கு எதுக்கு போன் நம்பர்?”படு நக்கலாக பெண்.
அதற்கெல்லாம் அலட்டிக் கொள்வாரா நம் எழுத்தாளர் “அதான் பாட்டி தேடுறேன் ஒத்தையா பேரனை வளர்க்க முடியாது பாரு ”பேரிளம் பெண்ணுக்கு மேல் முதுமகன் படு நக்கலாகப் பதில் அளித்தார்.
இந்தப் பேச்சும் சீண்டலும் இன்று நேற்று வந்தது அல்ல இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடரும் கதை இது. இனி பேச்சு எல்லை கோட்டை மீறும் என்பதை அறிந்த பேரிளம் பெண்.
“ஹா!…ஹா!…..ஹா!….சரி தான் உடம்பைப் பார்த்துக் கோங்க வாமனன் ”அவரது பதிலை எதிர்பார்க்காமல் போனை அணைத்து தனது பக்கத்தில் இருக்கும் பெண்மணியிடம் கொடுத்தாள்.
“தேங்க்ஸ்” என்றவளை பார்த்த அந்த மங்கை. “ஏன்ம்மா பார்க்க பணக்கார பொண்ணு மாதிரி இருக்க ஒரு போன் இல்லையா? அதுவும் இந்த காலத்துல..” சற்று ஆச்சிரியமாக அவர் கேட்க பதிலுக்கு அழகாகப் புன்னைகைத்து சென்று விட்டாள் பேரிளம் பெண் அவளும் கொஞ்சமே கொஞ்சம் அழகி தான் போலும்.
************
“டேய்! எரும ஒழுங்கா போய்ச் சாப்பிடுற டேபிள்ல உட்காரு, அப்போ தான் உனக்குத் தோசை தருவேன்”அடுக்கலைக்குள் அமர்ந்து அலம்பல் பண்ணி கொண்டு இருக்கும் வளவனை முறைத்தாள் காஞ்சனை வளவனின் தாயின் தங்கை ‘சிற்றன்னை’.
“சித்தி ரொம்பப் பண்ணாத பசிக்குது அப்பாக்கும் சேர்த்து சுடு நான் எடுத்துட்டு போறேன் சித்தி”
“உங்க அப்பனுக்கெல்லாம் சுட முடியாது போடா”
“மிஸ்டர்.மீசை ஒரு தோசை சுட உங்க பொண்ணு என்ன பேச்சு பேசுது பாருங்க.நான் எங்க உட்காந்து சாப்பிட்ட என்ன?”என்று வளவனும் மல்லுக்கு நின்றான் இருவரையும் பாவமாகப் பார்த்தார் வளவனின் அம்மாவை பெற்றவர்.
மீண்டும் வளவனிடம் வம்பு செய்யும் பொருட்டு……….
“ஏன்டா அந்த ஆளுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? அக்காக்கு இரண்டு நாளுல திவசம், ஒன்னுமே கண்டுக்காம இருக்காரு.
இவர நம்பி உன்னைய விட்டுட்டுப் போயிட்டா பாரு அவள………” இறந்து போன தனது அக்காவை கடிந்து கொண்டாள் காஞ்சனை.
தோசையை உண்டவரே வெகு அலட்சியமாக “அதுக்குத் தான் சித்தி சொல்றேன் நீ எங்க அப்பாவ கல்யாணம் பண்ணிக்க”என்க அதிர்ந்த காஞ்சனை.
“அடப்பாவி உங்க அப்பனுக்குப் பொண்ணு பார்க்கிறியாடா நீ!… அந்த ஆள கட்டிக்கிட்டு கவிதை, காதல்னு உருப்படாத வேலை பார்க்கவா? வேலைய பாருடா ராசா இந்த விளையாட்டுக்கு நான் வரல” போலியாக அலறினாள்.
“உனக்கும் எங்க அம்மாக்கும் டேஸ்டே இல்ல போ.அப்பா ரசனைக்கும் அம்மா ரசனைக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. சின்ன விஷியத்தைக் கூட ரசிச்சு வாழ்ர மனுசனுக்குத் தலையெழுத்தை பார்த்தியா” சொல்லிவிட்டு அவள் முகம் பார்க்க அங்குக் கோபமாக நின்று இருந்தாள் காஞ்சனை.
அவள் கோபத்தை அலட்சியம் செய்தவன் அவளது திருமண பேச்சுக்கு  தாவி “உண்மையாவே நீ அந்தத் தொப்பைய தான் கல்யாணம் பண்ணிக்கப் போறியா சித்தி”என்றதும்.
அவளும் கோபத்தை தள்ளி வைத்து “டேய் அவர் எப்படி இருந்தாலும் தேவலை. அவர் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிட்டு ஆறு மாசம் பொறுத்து இந்தியா வரேன் கல்யாணம் பண்ணிக்கலாம் சொல்லிட்டாரு, உங்க அப்பா பார்த்த வரன் தானடா அப்புறம் என்ன”
“என்னமோ போ எனக்குப் பிடிக்கல”தந்தையின் நண்பன் என்று காஞ்சனை ஓர் வரனை கொண்டு வந்தார் வாமனன். இரண்டாம் தரம் என்றாலும் பேசி முடித்துக் கொண்டனர்.அன்றில் இருந்து வளவன் இத்திருமணத்தை எதிர்த்துக் கொண்டு இருக்கிறான்.
இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே எதிர் வீட்டு வாண்டு வந்தது “ஹாய்! காஞ்சனை உங்க வீத்துல ஒரே சத்தமா இருந்துச்சு அதான் பார்க்க வந்தேன்”பெரிய மனுசி போல் அது கேட்க.
“ஹாய்! டாலி வா!.. வா!.. வேற யாரு எங்க வீட்டுல சத்தம் போடுவா வளவன் தான்”என்றார் காஞ்சனை.
பச்சை கலர் நாட் வைத்த ப்ராக் அணிந்து கொண்டு பிங்க் பொம்மையாக இருந்தது அந்த நான்கு வயது சிறுமி காஞ்சனையின் உயிர் தோழி “அப்பவே நெனச்சேன் காஞ்சனை” பெரிய பெண்ணாக அது பாவத்தோடு பேச.
“ஏய்! அப்படி தாண்டி கத்துவேன் என்ன பண்ணுவ” அதனிடம் எகிறினான் வளவன்.
“காஞ்சனை ஒழுங்கா பேச சொல்லு. எனக்கு ரவுதி மாதிரி பேசுனா பிதிக்காது” என்று முகத்தை திருப்பிக் கொண்டது வாண்டு.
அதன் பேச்சிலும் செய்கையிலும் காஞ்சனைக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.வளவனும் அந்தக் குட்டி வாண்டும் போடும் சண்டை வழமை தான் என்றாலும் சலிக்காத ரசனைகளில் அதுவும் ஒன்று.
“அடியேய்! முதல ரா, க, தா இதெல்லாம் ஒழுங்கா சொல்லு அப்புறம் நீ பேசுடி. பேச்சு முளைக்காத குட்டி பிசாசு பேச வந்துட்டா”வளவன் கேலி பேச.
கோபம் பொங்க “காஞ்சனை நீ இவன் போன உட ….னே என்ன கூப்புது வரேன்”
“ஓகேடி தங்கம் இந்தப் பேட் பாய் கிட்ட நீ பேச வேணாம் இவன் போகட்டும் நம்பப் பேசலாம்” என்று அதன் கன்னம் கிள்ளி கொஞ்ச.
இவர்கள் பேசுவதில் எரிச்சல் ஆனவன் “அவள கேடுக்குறதே நீதான் நல்ல தோழி உனக்கு. தெரியாமதான் கேக்குறேன் வயசுக்கு தகுந்த மாதிரி பழகமாட்டியா நீ”
“ஏன்? என் பழக்கத்துக்கு என்ன குறைச்சல் என் தோழியைப் பத்தி பேசாத சொல்லிட்டேன்”
கோபமாக முறைத்தவன் காஞ்சனையை நோக்கி ஆள் காட்டி விரல் நீட்டி “ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்ன கதற விடல நான் வாமனன் மகன் இல்லை”
“அடப்போடா” நீட்டிய அலட்சியமாக தட்டி விட்டாள் காஞ்சனை .
“மிஸ்டர்.மீசை உங்க பொண்ணு என்ன ரொம்ப அவமானம் படுத்துறாங்க இனி நான் இங்க வரமாட்டேன்”என்ற பேரனை பார்த்து பதறியவர்.
“அம்மாடி!….”பேரனுக்குப் பரிந்து கொண்டு வந்தவரை தடுத்தவள்.
“அப்பா!…கொழுப்பெடுத்த கழுதை சும்மா இருங்க.அவங்க அப்பாக்கு பொண்ணு பார்க்க போறானாம்….சரியான அப்பா கொன்டு, வாமனன் மகனாமே அப்போ எங்க அக்கா யாரு?”
“விடும்மா உனக்கும் எனக்கும் ஆறுதலே அவன் தான் சும்மா புள்ளைய திட்டாத நீ வாடா கண்ணா”மூர்த்தி அழைக்க.
சிறு பிள்ளை போல் “ஒன்னும் வேணாம் தாத்தா நான் போறேன்”கோபமாக விடை பெற்றான் வளவன். போகும் அவனைக் கோபம் போல் முறைத்து பார்த்தாள் காஞ்சனை.
வாமனன் காஞ்சனைக்குச் சொந்த அத்தை மகன்.தனது அக்காளை மணமுடித்த நாளிலிருந்து அவருடன் சற்று தள்ளி நின்று தான் பழகுவாள்.அதற்கு முன்பு அத்தை மகன் என்றளவில் நன்றாகத் தான் பேசி வந்தாள்.
என்று தனது அக்கா சென்றாலோ அன்றிலிருந்து அந்த பேச்சும் நின்றது.
காஞ்சனைக்கு ஏனோ திருமணத்தில் நாட்டமில்லை. ராகு கேது என்று பருவத்தில் தட்டி போன திருமணம் இன்று வரை தேடலாக உள்ளது.
வளவனின் தாத்தா மூர்த்திக்கு காஞ்சனையை வாமனனுக்குக் கொடுக்கலாம் என்ற எண்ணம் அதை வாமனனிடம் சொன்ன பொது மறுத்து விட்டார்.
‘வளவன் ஒன்றும் கை குழந்தையில்லை அவருக்குத் திருமணம் செய்ய ’என்று காஞ்சனை சண்டைக்கு நிற்க அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டார் மூர்த்திச் சின்னப் பெண்ணிடம் அவருக்குப் பயம் உண்டே.
நடந்ததை எண்ணியவர் ஒரு பெருமூச்சுடன் “சாப்பாடு எடுத்து வைம்மா சாப்பிடலாம், உன் மகன் நாளைக்கி வந்துடுவான்”அவனது கோபத்தை அறிந்த காஞ்சனை சிரித்துக் கொண்டே சென்றார். அடுத்த வேலையை பார்க்க சென்றார்
அவருக்கும் தெரியும் வளவனைப் பற்றி அவன் கோபம் பற்றி.
எழுது கோல் மிரட்ட இங்கு காகிதம் அடி பணிந்தது!…………..
 

Advertisement