Advertisement

பெண்ணியம் பேசாதடி – 6
காதல் கொண்டு சாகடிப்பேன்
சகித்தாக வேண்டும் நீ!..
உன் சுவாசம் கொண்டு சுவாசிப்பேன்
பொருத்தாக வேண்டும் நீ!…
கற்பை கலக்கம் செய்வேன்,
காத்தாக வேண்டும் நீ!…
இப்பிறவியில் என் காதல் அடிமை நீயென்று
சாசனம் எழுதி தரவேண்டும் நீ!…..
அனைத்தும் என் கட்டளை அடிபணிவது ஒன்றே உன் வேலை.
உணவை உண்டு கொண்டே தீவிர யோசைனையில் இருந்தான் வளவன்.அவனுக்கு உணவை பரிமாறி கொண்டே ஓரா கண்ணால் பார்த்துக் கொண்டு இருந்தாள் காஞ்சனை.
காஞ்சனைக்கு அவனது அமைதி எங்கோ இடித்தது அதுசரி இவர்கள் வாயும் கையும் வேலை செய்யா விட்டால்,
இந்திய பொருளாதார நிலை என்னாவது.ஒரு ஐந்து நொடிகள் பொறுத்தவள் அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் “ஐயாக்கு அப்படி என்ன யோசனை”.
தனது சிற்றன்னை குரலில் தெளிந்தவன் அவளிடம் பேச மனமில்லாமல் மீண்டும் அமைதியாக உண்ண அதில் சிறு கோபம் வர “டேய் எரும உன்னை தானே கேக்குறேன்”
“ப்ச் ….உன்கூடப் பேச ர நிலையில நான் இல்லை விடேன்”.
“ஓ! ரொம்பத்தான் எனக்கும் மட்டும் என்ன?” என்றவள் அவனை முறைத்துக் கொண்டே சென்றுவிட்டாள்.
மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான் வளவன்.நாளை தந்தைக்குப் பிறந்த நாள் தான் கொடுத்த வாக்கை எவ்வாறு காத்து நிற்பேன் என்ற கலக்கம்.
டாக்டர் தான் ரசிகை என்று எண்ணி நிற்க எதிர்பாராத விதமாகக் கிட்டிய கடிதம் முற்றிலும் வளவனைக் குழப்பி விட்டது.
மீண்டும் யோசனையில் வளவன்………..
*******************
அங்கு விழாவுக்கு உண்டான வேலைகளை எல்லாம் ரமேஷ் பார்த்துக் கொண்டு இருந்தான் இடை இடையே புலம்பல் வேறு
“என்ன பாவம் பண்ணேன்னு தெரியல அப்பாவும், மகனும் வச்சு செய்றானுக இத்தினி வருஷம் போய்க் கஷ்ட பட்டு பெண்ணை தேடி கண்டு  பிடிச்சா அவ இல்லனு வக்கணம் பேசி நிற்கிறானுக போங்கடா நீங்களும் உங்க வேலையும் போயிடலாம்னு பார்த்தா அதுக்கும் வழியில்லை”
தனக்குள் புலம்பிய வாரே திரும்பியவன் அங்கே நின்று கொண்டு இருந்த வாமனனை பார்த்துத் திருத் திருவென விழித்தான்.
அத்தனை நேரமிருந்த இறுக்கம் சற்று தளர அவன் புலம்பியது அனைத்தையும் கேட்டவருக்கு சிரிப்பு வர சற்று விளையாடி பார்க்க எண்ணினார்.
“ரமேஷ் இங்க கொஞ்சம் வாயேன்” என்று அழைக்க அவரது உள் குத்து தெரியாதவன் வசமாக சிக்கினான்.
ஐயோ! நான் பேசியதை மனுஷன் கேட்டு இருப்பாரோ? பயந்தவனாக அவரிடம் சென்றான்.
“எனக்கு உன்கூடக் கொஞ்சம் மனசுவிட்டு பேசணும் போல இருக்கு அங்க போலாமா” என்றவரை யோசனையோடு பார்த்தான்.ஏனென்றால் அத்தனை சுலபமாக யாரிடமும் பேசமாட்டார் வாமனன்.
அவனது எண்ணம் சரியென்றது போல அவனது வாய்த்தெறிச்சலை வகைத் தொகையாகக் கொட்டி கொண்டார் வாமனன்.
“டேய் தம்பி உனக்குத் தெரியும் தானே என் ரசிகைய பத்தி… வளவன் சொன்னான் உங்கிட்ட சொன்னதா”
‘ஊருக்கே தெரியும் சாமி எனக்கு தெரியாதா?’ என்று முனகியவனை
“என்னடா….”
“தெரியும் சார்”
“அஹான்……. அவ கூட என் வாழ்க்கைய எப்படி கற்பனை பண்ணி வச்சி இருக்கேன் தெரியுமா?”
‘எனக்குத் தெரியுறது இருக்கட்டும் இது அவளுக்கு தெரியுமா பாஸ்’ அவர் பேசுவதற்கெல்லாம் மனதுக்குள் கமெண்ட் அடித்துக் கொண்டவன் வெளியில்.
“ஹீ!….ஹீ! …….. முப்பது பற்களையும் காட்டி சொல்லுங்களேன் கேட்போம் நமக்கு என்ன வேலையா? வெட்டியா?” என்றவனது நக்கலை கண்டு கொள்ளாமல் தொடர்ந்தார் வாமணன்.
“அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஆசை தீர வாழனும்.இத்தனை வருஷம் முகம் காட்டமா அவ என்ன படா படுத்துனதுக்கு அவளுக்கு மூச்சு முட்ட முத்தம் கொடுத்தே பழி தீர்க்கணும்”.
‘யோவ்! நீயெல்லாம் பெரிய மனுஷனாயா? கன்னி பையன உட்கார வச்சு கச முச பேசிகிட்டு இருக்க. டேய் வளவா எங்கடா  இருக்க உங்கப்பன் தொல்லை தங்களடா வாடா ப்ளீஸ்’ இருகரம் தூக்கி மனத்துக்குளே மன்றாடி கொண்டு இருந்தான்.
தூக்கிய அவனது கைகளைப் பார்த்தவர் “என்ன ரமேஷ்” என்று கேட்க. அப்போது தான் தனது கைகள்  தூக்கி இருப்பதைப் பார்த்து சிறு இளிப்புடன்
“ஹி ஹி ஒன்னுமில்ல நீங்க மேல சொல்லுங்க” என்றதும் அவரும் தொடர்ந்தார்.
“எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும் பாரு. அது கூடச் சேர்ந்து அவளை உண்டு இல்லனு ஆக்கணும் ஏன்னு கேளேன்?” என்றவரை அழுவது போல் பார்த்து வைத்தான்.
‘அட பாவி மனுஷா உன் மகனுக்குக் கல்யாணம் பண்ணா நீ தாத்தாயா.இந்த வயசுல உனக்குக் குழந்தையா? என்ன கொடுமைடா சாமி’ வழமை போல் மனதினுள் எண்ணியவன் வெளியில் ஒரு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு
“ஏன்?” என்றான்.
“ஊடல் கொண்ட கூடல் தான் இனிக்கும்” கண் அடித்துச் சொன்னவரை பார்த்தவன் பொறுமை காற்றில் பார்க்க,
“யோவ் பெரிய மனுஷா என் நண்பனோட அப்பான்னு கூடப் பார்க்க மாட்டேன் பார்த்துக்கோ போயா அந்தாண்ட”
பாவமாக முகத்தை வைத்து கொண்டவர், குறும்பு கண்களில் தவழ “என்ன ரமேஷ் இப்புடி பேசுற”
“வேற எப்படி பேசுறது?…… இல்ல எப்படிப் பேசுறதுனு கேக்குறேன்?…. எங்க அண்ணனுக்கு முப்பது தொட போகுது இன்னும் பொண்ணு தேடுறானுக,
மவராசி எங்க இருக்களோ சிக்க மாட்டேங்கற. வயசு பசங்க கட்டிக்க பொண்ணு தேடி அலையிறோம், ஆனா உங்கள மாதிரி பெருசுங்களுக்கு வந்து வரிசை கட்டுது என்ன நியாயம் இது?
நீங்க கல்யாணம் பண்ணி ஒரு மகன் அதுவும் இருவது வயசுக்கு மேல.இன்னும் நாலு வருஷம் போனா அவனுக்குக் கல்யாணம் பண்ணனும்” என்றவன் மூச்சு வாங்கி முறைக்க.
அவன் கோபத்தில் உல்லாசம் கொண்டவர் குறும்பு கொப்பளிக்க “அதுக்கெல்லாம் முக ராசி வேணும்” என்றவர் மேலும் அவனிடம் நெருங்கி எதோ ஆதாரங்கமாகக் கூறிவிட்டு செல்ல.
வாய் பிளந்து நின்றான் ரமேஷ் “அட பாவி மனுஷா  ………..”
*********
அடுத்த நாள் சற்று வினயமாக விடிந்தது போலும் அனைவருக்கும். இன்று வாமனன் பிறந்த நாள் வேறு   வாமனனை கட்டி கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னான் வளவன்.
அவன் முகத்தில் மலர்ச்சியுமில்லை வாழ்த்தில் நிகழிச்சியுமில்லை அதனைக் கண்டு கொண்டவர் தனக்குள் சிரித்து கொண்டே
“கண்டு புடிச்சுட்ட போல” என்றதும் அதிர்ந்து பார்த்தான் வளவன்.
வேர்த்து வழிந்தது அவனுக்குப் பேச நா எழவில்லை இருந்தும் தந்தையின் மனதை அறிந்து கொண்டு “ப்பா எதுவா இருந்தாலும் பொறுமையா பேசிக்கலாம்.அவங்களை கூப்பிட்டு பேசுவோம் கேட்போம்.அவங்க சைடு நியாயமிருந்தா என்ன செய்யிறது ப்ளீஸ் ப்பா”.
“என்ன பெருசா நியாயம் இருக்கும் நெனைக்குற…., ஏமாத்திருக்கா கண்ணா அதுவும் வருஷ கணக்கா” சொல்லும் போதே அவர் குரலில் வலி தெரிந்தது அதனை கண்டு கொண்ட வளவன்.
“ப்பா!…” மேற் கொண்டு எதுவோ பேச வந்தவனைத் தடுத்தவர்
“பிறந்த நாள் விழா வேண்டாம் நிறுத்திடு காரணம் கேட்டா எனக்கு உடம் சுகமில்லன்னு சொல்லிடு” என்றவர் நிற்காமல் சென்று விட்டார்.
அந்தப் பேரிளம் பெண்ணைப் பற்றி நேற்று இரவு தான் தெரிந்தது வளவனுக்கு. அதற்கு முன்னே வாமனன் கண்டு கொண்டு விட்டார். தெரிந்த பதிலை ஏற்றி கொள்ளவே அவனுக்கு ஒரு யுகம் வேண்டும் போலும்.
தனக்கே இப்படி என்றால் தந்தைக்கு?சரிதான் அவருக்குக் கோபம் இருக்கத் தான் செய்யும். இருந்தும் அந்தப் பெண்ணும்….. இன்னும் என்ன பெண்?என் அம்மாவும் பாவம் தான் கலங்கியவன். ‘இதில் நான் பார்வையாளரே மட்டுமே’ என்று தள்ளி நின்றான்.
இங்கு வெளியில் சென்ற வாமனன் நேராகச் சென்றது அவரது மாமனார் வீட்டுக்கு தான்.வீட்டினுள் நுழைந்தவரை மூர்த்தி ஆச்சிரியமாக பார்த்து ஆசையாக வரவேற்றார்..
“வாங்க மாப்பிள்ளை!..காஞ்சனை யாரு வந்து இருக்கா பாரு” என்று அழைக்க வெளியில் வந்தவள் வாமனனை பார்த்து ஆச்சிரியம் கொண்டு
“வாங்க” என்றழைத்தாள்
வழமை போல் அவளுக்கு “வரேன்ம்மா” என்று பதிலளித்த வாமனன்.
பிறகு தனது மாமனும் மரியாதைக்குரிய மாமனாருமான மூர்த்தியிடம் ஆசி பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார்.இத்தனை ஆண்டுகளில் இது போல் சம்பவம் நிகழ்ந்ததே இல்லை  என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்
“சாப்பிட்டு போலாமே தம்பி”
“இல்ல மாமா முக்கியமான வேலை இருக்கு”
“சரிப்பா” காஞ்சனை அதற்குள் தண்ணீர் எடுத்துவர அதனை மறுக்காமல் வாங்கிக் குடித்தவர் புன்னகை முகமாக விடை பெற்றார்.
எதிர்ச்சியாக அவர் சென்றவுடன் வாயிலுக்குச் சென்று காஞ்சனை எட்டி பார்க்க அவரும் அந்த நேரம் கார் கதவை திறந்த வாரே மேல பார்த்தார்.
அழகாகச் சிரித்து வாமனன் விடை பெற குழம்பிய காஞ்சனை அப்போதுதான் தனக்குப் பின் இருக்கும் மலர் கொடியை பார்த்தார் கோபம் உச்சம் தொட்டது.
“இந்தப் பெருசுக்கு லந்த பாத்தியா காலம் போன கடைசியில காதலு கேட்குது காதல் திருந்த அப்பனும் மகனும் மாட்டானுக” என்றவள் சில மணி நேரம் வாமனனை திட்டிவிட்டு சமையல் வேலையைத் தொடர்ந்தாள் சமைப்பதற்காகவே பிறவி எடுத்தவள் போல்.
*********
இங்கு நேரம் செல்ல செல்ல வளவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.அவன் மனம் அமைதி அற்றுச் சுற்றியது.
இன்னும் ரமேஷுக்கு விடயம் தெரியாது தெரிந்தால்?….. இனியும் தனித்திருந்தால் மண்டை காய்ந்துவிடும் என்று எண்ணியவன் ரமேஷை நோக்கி சென்றான்.
அலுவலகத்தில் வேலையில் இருந்தவனைக் கை பற்றி இழுத்துக் கொண்டு பெரிய நட்சத்திர விடுதிக்கு இழுத்து சென்று விட்டான்.
என்ன? ஏது? என்று சொல்லாமல் தன்னைக் கடத்தி கொண்டு போகும் நண்பனை பார்த்து பயந்து போனான் ரமேஷ்.அதுவும் அவன் விடுதியில் அறை எடுக்க அவன் எண்ணம் எங்கெங்கோ போனது.
“அடேய்! நீ நெனைக்குற மாதிரி பையன் நானில்லை டா… என்ன விட்டுரு டா” என்று அலறியவனை வளவன் கண்டு கொண்டால் தானே.
அறைக்குள் இருக்கும் கட்டிலில் தள்ளி கதவை சாத்த பயந்து போய்க் கட்டிலில் ஓரம் சென்றவன் “என்ன ஒன்னும் பண்ணிடாதீங்க” என்று போலியாக அலற.
அவன் செய்யும் அலம்பல் பார்த்து அப்போது தான் அவன் எண்ணம் பிடிபட பக்கத்தில் இருக்கும் தலையணை எடுத்து அவனை மொத்தி எடுத்தான் வளவன்.
“நாயே! கருமம் கருமம் புத்தி போகுது பாரு.நான் என்ன டென்ஷன்ல இருக்கேன் பக்கி” என்றவன் கை ஓயும் வரை மொத்தி எடுத்தான்.அடிதாங்காதவன் “டேய் விடுடா!….. சும்மாடா! ….வலிக்குது….” என்று அலற தலையணையை தூக்கி தூர வீசினான் வளவன்.
கட்டிலில் ஓய்ந்து அமர்ந்தவன் தலையைத் தாங்க. அதுவரை விளையாடி கொண்டிருந்த ரமேஷ் விளையாட்டைக் கை விட்டவனாக அவனிடம் நெருங்கி,
“என்னடா மாப்பிள்ள” என்றது தான் தாமதம்.
அனைத்தையும் கொட்டிவிட்டான் கேட்ட ரமேஷ் இவ்வுலகத்தில் இல்லை என்பது குறிப்பிட தக்கது.
அதன் பின் முடிந்தளவு தனது துக்கத்தைக் கொண்டாடிய நண்பர்கள் விடுதியில் இருந்து கிளம்பி அவரவர் வீட்டுக்குச் சென்றனர்.
விடை பெறுவதற்குக் கூட இருவரும் பேசி கொள்ளவில்லை உண்மையை அறிந்து அத்தனை தாக்கம்.
ரமேஷை அவனது வீட்டில் இறக்கி விட்டு வீடு வந்த வளவன் தனது தந்தையைத் தேட அவர் இருப்பதற்கு ஒரு சதவீதம் கூட அறிகுறி இல்லை.
சார் ஓட்டும் மணியை அழைத்தவன் “அண்ணே அப்பா எங்க?”
“காலைல போனது தான் தம்பி” என்றதும் பயம் கொண்டு தந்தையை அழைத்து விட்டான்.
ரிங் போனதே தவிரப் போன் எடுக்கப்படவில்லை. எதுவோ சரியில்லை என்பது மட்டும் திண்ணம். அவனுக்கு அடுத்து என்ன செய்ய என்பது கூடப் புலப்படவில்லை.
*************
இங்கு மகன் தவிப்பதை அறியாத தகப்பன் அங்கு தத்தளித்தான்….
சராசரி நடுத்தரக் குடும்பத்தார் வசிக்கும் தெருவில் இருந்தது அந்த வீடு.வீட்டின் அமைப்பில் பழமை பறை சாற்றியது.
நல்லிரவு தாண்டி இருள் கவ்வி நிற்க.அந்த வீட்டின் உள் அறையில் வாமனன் வெற்று உடலில் வேர்வை துளிர்க்க ஒரு கையில் புகையும் மறு கையில் பேரிளம் பெண்ணுமாக கட்டிலில் அமர்ந்திருந்தார்.
பெண் கண் விழிக்கத் திராணியற்று வாமனன் நெஞ்சில் மயங்கி இருந்தாள்.தனது கண்களைப் பிரிக்க முடியாமல் பிரித்தவள் மூச்சு காற்றுக்கு ஏங்கி.
“எழுத்தாளரே!… மூச்சு விட முடியல செத்துருவேன்…….முதல அந்தச் சிகரட்டை …. தூக்கி போடுங்க….” திக்கி திக்கி சொன்னவளை பேச விடாது தாடையை இறுக்கி பிடித்து “பேசாதடி” என்றவர் பெண்ணை  வன்மையாகக் கையாண்டார்.
அந்த வாமனன் முவ்வுலகை ஆள இந்த வாமனன் பேரிளம் பெண்ணை சற்று வன்மையாக ஆட்கொண்டார் முப்பிறவியிலும் தன்னை மறக்க முடியாத அளவிற்கு.
பெண்ணியம் பேசிய பேரிளம் பெண்ணே! பழி தீர்த்தும் அடங்கவில்லை என் வெறி தப்பித்துக் கொள்ள வழி இருந்தாள் தப்பித்து விடு ஒரு நொடி வாய்ப்புத் தருகிறேன் உன் எழுத்தாளன்.
 

Advertisement