Sunday, May 25, 2025

    பால் வீதிப் புன்னகை

    அவன் உள்ளே நுழையவும், வேறு வழியின்றி, மித்ரா அவனை பின் தொடர்ந்தாள். அங்கு சில நோயாளிகள் காத்திருக்க, திரு அங்கிருந்த வரவேற்பறைப் பெண்ணிடம் சென்று தாழ்ந்த குரலில் பேசி வந்தான்.  இருவரும் அங்கிருந்த நோயாளிகள் காத்திருக்கும் இருக்கையில் அமர்ந்தனர். “அப்பாவுக்கு என்ன ஆச்சு...? ஏன் இங்க வந்து இருக்கோம்.’’ என்றாள் மித்ரா சற்றே ஆத்திரம் ஏறிய...
    “அச்சோ அப்புறம் என்ன ஆச்சு.’’ கார்த்திக் ஆர்வ மிகுதியில் கேட்க, “இருங்க நீங்க கேட்ட கேள்விக்கு விடை வந்துட்டே இருக்கு.’’ என்றவள், “அண்ணா காலேஜ்ல இருந்து உடனே வீட்டுக்கு வந்தாங்க. ரெண்டு பேரும் நோட்ஸ் ஜெராக்ஸ் போட டவுனுக்கு போறோம்னு பொய் சொல்லிட்டு, அண்ணா என்னை ஒரு கயனக்காலஜிஸ்ட்கிட்ட கூட்டிட்டு போனாங்க. அவங்க தான்...
    பால்வெளி – 26 திரு கார்த்திக்கின் தோளில் சாய்ந்து கண் கலங்குவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டான். அவன் கிஞ்சித்தும் எண்ணிப் பார்க்காத சம்பவங்கள் தானே நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு முன் தன் முன் வந்து நின்றவன், ‘இப்போ நான் திருப்பி கொடுக்க வந்திருக்கிறேன்.’ என்று சொன்ன போது தன்னை காயப்படுத்தவே வந்திருக்கிறான்...
    பால் வீதி – 7    குளித்து விட்டு வந்த மித்ரா விடுதி  அறையில் இருந்த அலமாரி கதவுகளை திறந்தாள். அதன் உள்பக்கம் 2021 ஆம் ஆண்டில் ஆட்சியர் பணிக்காய் தேர்வானவர்கள் ஆளுனரோடு இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெட்டப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது.  அந்த புகைப்படத்தின் முன் வரிசையில் திரு பளீர் புன்னைகயோடு நின்றிருந்தான். தமிழ்நாட்டில் இருந்து தேர்வான மூன்று...
    கார்த்திக் சூன்யமான மன நிலையில் அமர்ந்து இருந்தான். சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் அவனை வைத்து செய்து கொண்டிருந்தனர். அவன் குறித்த மீம்களை எல்லாம் கண் கொண்டும் பார்க்க முடியவில்லை. அவனோடு சேர்த்து அவன் குடும்பத்தையே கழுவி ஊற்றிக் கொண்டிருந்தனர். போன வருட டி- டிவண்டி போட்டியில் அவன் ஹாட்ரிக் எடுத்து கோப்பையை வென்ற போது யாரெல்லாம்...
    பால் வீதி – 18  ஒரு வாரம் மருத்துவமனை வாசம் முடிந்து, மித்ரா வீட்டிற்கு திரும்பி இருந்தாள். யாரிடமும் அவள் அதிகம் பேசவில்லை. யாரும் அவளிடமும் பேசுவதற்கு முயலவில்லை. மகள் திரும்ப கிடைத்துவிட்டாள் என்பதே பெற்றவர்களுக்கு பெரிய ஆறுதலை அளித்தது.  விசயத்தை கேள்விப்பட்ட கார்த்திக் பதறி உடனே தன் ஐ.பி.எல் தொடரை விட்டுவிட்டு வருவதாக துள்ள, அண்ணனின்...
    மதுரா அதற்குள் அட்சதை தட்டை எடுத்து வந்திருக்க, அதிர்ச்சி விலகாத இருவரும் சிறியவர்களை ஆசிர்வதித்தனர். மதுராவே அவர்கள் கொண்டு வந்திருந்த சீர் பொருட்களை தாம்பாள தட்டில் அடுக்கி இருவரின் கையில் கொடுக்க, அதற்கு மேல் ஒரு ஐநூறு ரூபாய் கற்றையை திருப்பதி வைக்க, தந்தையும், அத்தையும் மேடையில் நிற்பதை கண்ட புகழ் தானும் அங்கே...
    அவள் கவனம் தன் மீது தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவன், தொலை நோக்கியின் வழியே வானை ரசித்தபடி, “நீ ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருந்தப்ப உங்க அப்பா என் பொண்ணை கல்யாணம் செஞ்சிகோ திருன்னு சொன்னார்.’’ என்றான் சலனமற்ற குரலில்.  நொடியில் மித்துவின் முகம் அவமானத்தில் கருத்தது. பெண் பெயர் கெட்டுப் போனால் முதலில் அவளின்...
    திரு அவள் தன்னை கவனிக்கிறாளா என்று நின்று பார்த்தான். ஆனால் அவனின் பின்னோடு கார்த்திக் வந்து இறங்கவும், திரு இருவரையுமே கண்டு கொள்ளாமல் கிளம்பினான். அதே நேரம் வெளியே வந்த மதுரா, “பாப்பா...! திரு அத்தான் வந்து இருக்கார் பாரு. மாமாவுக்கு எப்படி இருக்குன்னு விசாரிக்க மாட்டியா...?’’ என்றார் கடின குரலில்.  அவரை முறைத்து பார்த்து...
    பால் வீதி – 9 நடந்து முடிந்த சம்பவத்தை யாராலும் நம்ப முடியவில்லை. ஏன் சில நிமிடங்களுக்கு முன்னால் ஆத்திரத்தில் பொங்கிக் கொண்டிருந்த பால்கி கூட அப்படியே உறைந்து விட்டார். நண்பனுக்கு உதவியாக அந்த இடத்திற்கு விரைந்திருந்த பிரதாப் நடந்தவற்றை நம்ப முடியாது அதிர்ந்து போய் நின்றிருந்தார்.   ஆனால் அந்த செயலின் ஆதார காரணியான கார்த்திக் முகத்தில்...
    மேலும் இரு தினங்கள் கடக்க, பிருந்தாவை சாதாரண சிகிச்சை பிரிவிற்கு மாற்றினார்கள். அதுவரை படுத்தே இருந்த பிருந்தா, அப்போது எழுந்து நடக்கும் போது தான் தன் கழுத்தில் தடிமனாய் இருந்த சங்கிலியை கவனித்தாள். குழப்பமாய் அதை கையில் எடுத்து பார்த்தவள், அது தாலி என்பதை உணர்ந்ததும், உடனே அருகில் இருந்த மித்ராவிடம் அது குறித்து கேட்டாள்....
    ஆனால் மித்ரா, தாய், தந்தையரின் செல்வ சீமாட்டி. பிறப்பில் இருந்தே ராஜ குமாரி போல வளர்க்கப்பட்டவள். அவள் வளர வளர யாரும் திணிக்காமலேயே மேல்தட்டு வர்கத்தின் கர்வம் அவள் மேல் படர்ந்திருந்தது. அதானல் அவள் இயல்பு போல எப்போதும்அவர்களை கண்டு கொள்வதில்லை.    கார்த்திக் பழைய சிந்தைகளில் உழன்ற படி வர, வீட்டின் மரகத நிற கதவுகள்...
    பால் வீதி – 16  ‘இன்றைக்கு கண்டிப்பாக வெளியே போகத் தான் வேண்டுமா...? வேண்டாமா...?’ என தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள் பிருந்தா. முதல் போட்டி முடிந்த நிலையில், அடுத்த போட்டியும் பெங்களூரில் தான் நடப்பதாக இருந்தது.  அதற்காக சி.எஸ்.கே வீரர்கள் பெங்களூர் பயிற்சி மையத்திலேயே தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இரு நாட்களுக்கு முன்னால், கார்த்திக்கை ஆற்றுப்படுத்துவதற்காய்...
    “இன்னைக்கு எங்க மேரேஜ்க்கு ட்ரெஸ் எடுக்க போறாங்க. அதனால ஐயா வீட்ல இருக்கேன்.’’ என்றார் காலரை தூக்கிவிட்டபடி. “மம்மி என்கிட்ட சொல்லவே இல்ல. என்னோட ட்ரெஸ் நான் ஊருக்கு வரும் போது தான் எடுக்கணும்.’’ என்றாள் மித்ரா வேகமாய்.  “அதெல்லாம் பத்து முறை அலைய முடியாது. உனக்கு வாட்ஸ் அப் கால் பண்றேன். நீ சூஸ்...
    பால் வீதி – 19  அதிகாலையில் தன்னை காண வந்திருக்கும் நபர் யார் என்ற குழப்பத்தோடு திரு தன் அறையில் இருந்து வெளியே வர, தன் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அரவிந்தன் குடும்பத்தை கண்டவனின் ரத்த அழுத்தம் தாறு மாறாய் எகிற தொடங்கி இருந்தது.  முயன்று தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவன், “என்ன விஷயம்..?’’ என்றான் நேரடியாக. அரவிந்தனின்...
    அவர்கள் எதிர்பார்த்ததை விட மிசன் டூ மூன் திட்டம் வேக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.  எதிர்பார்த்த நான்கு ஆண்டுகளை விட, அதில் பாதியான இரண்டே ஆண்டுகளில் அவர்களின் அணி இலக்கை நோக்கி மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தது.  அவர்களின் தேவைப் பட்டியல்கள் உடனுக்குடன் இந்திய அரசால் நிறைவேற்றப்பட துடிப்பான இளம் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை கொண்ட அணி...
    பால்வெளி – 25     மூன்று வருடங்களுக்கு பிறகு.  தன் கையில் இருந்த புத்தகத்தை அன்றுடன் பதினாறாவது முறையாக படித்துக் கொண்டிருந்தான் திரு. எத்தனை முறை படித்தாலும், அந்த புத்தகம் அவனுக்கு சலிப்பை ஏற்படுத்துவதில்லை. அதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு.  ஒன்று அந்த கதையின் களம். இரண்டு அந்த கதையை எழுதிய எழுத்தாளர். இரண்டுமே அவன் மனதுக்கு மிகவும்...
    பின் ஒரு முடிவிற்கு வந்தவன் போல, குமிழ் கைப்பிடியை திருகி உள் நுழைந்தவன், தனக்கு பின் கதவை பூட்டி விட்டு, வீட்டின் முக்கிய வாயிலை அடைந்தான். சற்றே தயக்கம் இருப்பினும் உறுதியாய் வாயில் மணியை அழுத்தினான். உள்ளே குயில் ஒன்று கீதம் இசைக்க, பால்கியின், “யாரு?’’ என்ற குரலை தொடர்ந்து, அவரின் காலடித்தடங்கள் மெல்ல நெருங்கி...
    பால் வீதி – 3  கார்த்திக் தன் நிஞ்சாவை வீட்டை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான். அடுக்கடுக்காய் அவன் மனதில் பழைய நினைவுகள். தகப்பனின் வழியில் அவனால் யாரையுமே சொந்தம் என்று முழு மனதாக ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை.  “இவரு எங்க அப்பா. உன்னோட அப்பா சாமிக்கிட்ட போயிட்டாராம்.’’  புகழும், இனியனும் சிறு வயதில் அவர்களோடு விளையாட முனைந்த...
    இம்முறை கார்த்திக் நேரடியாக திருவிற்கு அழைத்திருந்தான். அவன் மறுமொழிக்கு காத்திருக்காமல், “பிருந்தாவோட மென்டார் நீங்க தான். இந்த டைம் கண்டிப்பா நீங்க பெங்களூர் வரணும். அவளை நேரடியா வாழ்த்தணும். வெளிய சொல்லாட்டியும் அவங்க மனசுக்குள்ள அந்த ஏக்கம் இருக்கும். தயவு செஞ்சி வந்துட்டு போங்க.’’ என ஏறக் குறைய இறைஞ்சி இருந்தான்.  ஆனாலும் திரு அந்த...
    error: Content is protected !!