கனவுக்குள் காவல்
பாகம்- ௨௰௧
"உன் கூட நான் பேசமாட்டேன் போ பா. உன் கூட நான் டூ"
"நான் உன் கூட ஃபோர். போ நீயும் என்கிட்ட பேசாத. "
தன்மகள் தன்னிடம் பேச மாட்டேன் என்று கூறியும் அலட்சியமாக, நானும் பேசமாட்டேன் என்று கூறிவிட்டு,
தன் கையில் இருந்த அந்த தொலையியக்கியை வைத்து தொலைக்காட்சியில் தனக்கு விருப்பமான பழைய பாடலை...
கனவுக்குள் காவல் -௫
கள்ளிருக்கும் தாமரையே
கையணைக்கும் வான்பிறையே
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிா்தான்
இனிவரும் எந்தப்
பிறவியிலும் உனைச் சேர
காத்திருப்பேன்
விழிமூடும் இமை
போல விலகாமல்
வாழ்ந்திருப்பேன் (மறு மலர்ச்சி - நன்றி சொல்ல)
மதி உடை மாற்றிவிட்டு, தலையில் இருந்த ஜடை அலங்காரங்களையும் கலைத்து விட்டு உள் அறையில் இருந்து வெளியேறி மெத்தையில் வந்து அமர்ந்தாள்.
ரகுவின் உபயத்தில் அறைக்குள் இருந்த இசை அமைப்பு (music system)...
கனவுக்குள் காவல் - ௰௪
மதி கூறியதை கேட்ட ரகுவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்க அவளுக்கு குழப்பமாக இருந்தது. சிறிது நேரம் அவனை கூர்ந்து பார்க்க, மிக மெலிதாக அவன் முகத்தில் கோபம் படர்ந்து இருப்பது அவளுக்கு உரைத்தது.
"இது உனக்கு எப்படி தெரிஞ்சது மதி", ரகு கேட்க
"நேத்து கார்மெண்ட்ஸ் வந்தப்போ, ரெஸ்ட் ரூம்...
தன்னுடைய மகிழுந்தை தவிர்த்துவிட்டு அவர்கள் எப்போதும் குடும்பமாக செல்லும்போது மட்டும், எடுத்துச் செல்லும் மகிழ்ந்தை எடுத்துச் வந்தான்.
உண்மையில், மதியும் அவனும் மட்டும் செல்வதற்காக என்றே ஒரு புது மகிழுந்து வாங்கி வீட்டில் வைத்திருந்தான் ரகு.
இதுவரை அதில் செல்வதற்கான வாய்ப்பு இருவருக்கும் கிடைக்கவில்லை. இப்போது முதல் முறை வெளிய போகிறார்கள், ஆனால் மருத்துவமனைக்கு.
மருத்துவமனை செல்லும் போது...
"கல்யாணத்துக்கு ஓகே சொன்னப்போதும் சரி, எப்ப வேணாலும் பிரிஞ்சிடுவேன்னு சொல்லும் போதும் சரி, என் மனசுல இருந்தது ஒண்ணு தான் இருந்தது. உனக்கு ஏதும் ஆயிடக்கூடாதுன்னு மட்டும் தான்.
நீ கேட்டதும் கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்குள்ளையும் ஒரு ஆசை துளிர் விட்டுச்சு. அதுக்காக உன்ன பாத்த உடனே லவ் வந்துருச்சின்னு எல்லாம் சொல்லல.
நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு...
பாகம்- ௨௰௨
எங்கவேணா போயிகோ
நீ என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே....!
தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரையும் போனதுன்னா
தரை மேல தலசாயுமே......!
மறைஞ்சு போனாலும்
மறந்து............(கூட மேல கூட வச்சு..ரம்மி)
மகிழுந்து முழுக்க இசை மட்டும் மிதந்து கொண்டிருக்க, அதில் பயணித்துக் கொண்டிருந்த நபர்களிடம், அந்த மகிழ்ந்து புறப்பட்ட நேரத்தில் இருந்து மௌனம் மட்டும்.
பத்து வருடங்களாகும் இசையோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு அந்த இசை ...
கனவுக்குள் காவல் - ௰௩
காலையில் எழுந்ததிலிருந்து ரகுவின் முகம் யோசனையை சுமந்தபடியே இருந்தது. அடிக்கடி மதியின் முகத்தை திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் மதி இவனை கண்டு கொண்டதாக கூட தெரியவில்லை. முதல் நாள் இரவு மதியின் மடியில் படுத்தி உறங்கிக் கொண்டிருந்தவன்.
காலையில் எழுந்து பார்க்கும் போது தலையணையில் படுத்து இருப்பது தெரிந்தது. உடனே எழுந்து...
அப்பவே நீங்க எல்லாம் எங்களை சுத்தி பாதுகாப்பு வளையம் போடுறதுலயும் எங்களுக்கு சிதம்பரத்தால் ஏதாவது பிரச்சனை வந்திரும்மோன்னு ஒரு குழப்பத்திலேயும் இருந்திருக்கீங்க உங்கள மேலும் குழப்ப வேண்டாம்னு தான் அக்கா அப்படி சொல்லாம இருந்திருக்கா.
இப்பதான் எனக்கே அந்த விஷயம் புரியுது. நீயும் புரிஞ்சுக்கோ இப்ப அக்காக்கு ஒரு பெரிய ப்ராப்ளம் அதை நீங்கதான் சால்வ்...
கனவுக்குள் காவல் - அ
மதி தன் அசைவற்ற தோற்றம் மாறாமல் அப்படியே நிற்க, ரகு, "என்னாச்சு மதி, பால் சொம்பை மறந்துட்டியா? இல்லை பஸ்ட் நைட்ட மறந்துட்டியா?", என்றான்.
"அப்படிலா எதுவும் இல்லை " என்ற மதி தன்னை ஒரு நிலைப் படுத்திக் கொண்டு, "கல்யாணம் பண்ணா இது எல்லாம் நடக்கும்னு எனக்கு தெரியாதா? "...
"மதி மா. இந்த 10 வருஷத்தில அவன் முழுமனசா சந்தோஷமா சிரிச்சு நான் பார்த்ததே இல்லை. நாங்க வெளிய தங்கி இருக்கும்போது நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. அப்ப எல்லாம் அவன் முகத்தில சிரிப்பு இருக்கும்.
ஆனால் அதில உண்மை தன்மை இருக்காது. உண்மையாவே சந்தோஷமா அவன் சிரிச்சதுனா, அது உன்ன கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தான். ...
பாகம் - 23(௨௰௩)
நிமிடங்கள் கரைந்து கொண்டிருக்க, கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கி கட்டிக் கொண்டு நின்றிருந்தனர்.
இருவருமே அந்த மோன நிலையில் இருந்து மீள முயற்சிக்கவில்லை. மனைவியின் முதுகில் படர்ந்து இருந்த தன் கையை மெல்ல தலைக்கு நகர்த்தியவன், தலையை தன் தோளோடு நன்றாக அழுத்திக் கொள்ள,
அடுத்த சில நொடிகளில் தன் தோளில்...
கனவுக்குள் காவல் - கo
மதியை சுற்றி நின்றவாறு அவள் என்ன கூற போகிறாள் என கேட்க அனைவரும் தயாராகினர்.
கௌதமி அவள் அருகே வந்ததுமே, ரகு கட்டிலில் இருந்து எழுந்து மதிக்கு நேராக அங்கு அமைந்திருந்த கண்ணாடியுடன் கூடிய மேஜையில் சாய்ந்தவாறு நின்று கொண்டான்.
மதி ரகு முகத்தை பார்த்துக் கொண்டே சொல்ல ஆரம்பித்தாள்.
"அஞ்சு நாளைக்கு முன்னாடி...
அனைத்தையும் கேட்ட இருவரின் முகமும் கோபத்தையே பிரதிபலித்தது. "அவரை இப்பயே இங்க வர சொல்ல அக்கா நாங்க அவர் கிட்ட பேசணும்", இதைத் தவிர வேறு ஒரு வார்த்தை கூட மதி இடம் அவர்கள் பேசவில்லை.
சரி என உரைத்த மதி ரகுவை அழைக்க அலைபேசியை கையில் எடுக்கும் நேரம் அழைப்பு மணியின் ஓசை கேட்டது.
வந்திருப்பது...
பாகம் - ௩
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே
மழையில் நீ நனைகையில்…
எனக்குக் காய்ச்சல் வரும்…
வெயிலில் நீ நடக்கையில்…
எனக்கு வேர்வை வரும்…
உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று…(ரோஜா… ரோஜா… ரோஜா)
அந்த அறையில் மெல்லிய ஒலியில் இப்பாடல் இசைத்துக் கொண்டிருந்தது. கூடவே ஒரு குரல் மட்டும் விடாமல் ஒலித்துக் கொண்டு இருந்தது.
"WILL YOU MARRY ME?"
"....."
"எதாது...
கனவுக்குள் காவல் - ௰௨
"என்னாச்சு மதி?" என தன் அருகே அமைதியாக அமர்ந்திருந்த தன் மனைவியிடம் கேள்வி எழுப்பினான் ரகு. "ஒன்னும் இல்ல", என்று கூறிய போதும், அவள் ஏதோ யோசனை இருக்க, ரகு மீண்டும் "என்னாச்சு?", என்றான்.
ஒரு நொடி அவனை உற்றுப் பார்த்தவள், மற்றவர்கள் என்ன செய்கின்றனர் என அந்த அறையை ஒரு...
கனவுக்குள் காவல் - ௯
"இதோட போய் நின்னா என்ன ஆகுமோ?" என வாய்விட்டு புலம்பியவாறு, தன் ஈருருளியில் (scooty) இருக்கும் வலப்பக்க கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள், மதி.
ஒரு முறை கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க, பின் அருகில் நின்றிருந்த அந்த மகிழுந்தை பார்க்க என மாறி மாறிப் பார்த்துக் கொண்டு...
"டேய் ரகு, நானும் உன்னை ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன். நீ காது கேட்காம உக்காந்துட்டு இருக்க என்ன பண்ணிட்டு இருக்க?" என்ன தேவி சற்று சத்தமாக கூப்பிட, ரகு அப்போது தான் தன் கவனத்தை தன் சித்தியின் புறம் திருப்பினான்.
"என்ன சித்தி?" என ரகு கேட்க, "என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு தான்...
போகும் வழியிலேயே வாசு கனகவேலிடம், "ஏன் கனகவேலு. முதல் தடவை இப்படி ஒரு விஷயம் பண்றீங்க. எப்படி தைரியமா இதை பண்ணீங்க. அதுவும் அவங்க கொலை குற்றவாளி உங்களையோ உங்க ஆட்களையோ எது வேணாலும் செய்யலாம். சிதம்பரத்துக்கு தெரிஞ்சதுன்னா சும்மா விடமாட்டாரே",
"நீங்கள் சொல்றது சரிதான். ஆனால் நமக்கு பிடிச்சமான ஒருத்தவங்களுக்காக ஒரு விஷயத்தை இறங்கி...
"மதி...மா... போலாம் வா", என சற்று குரலை உயர்த்தி அழுத்தமாக கூறிவிட்டு மதியுடன் விறுவிறுவென படிக்கட்டில் ஏறி விட்டான்.
மூவரும் அவனை ஆச்சரியமாக பார்திருந்தனர். கோவத்தின் உச்சியில் இருந்த கௌதமி கூட அவன் குரலையும் அந்த பாவனையும் கண்டு அமைதியாகிவிட்டார்.
ஏனெனில் ரகு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது தான் இத்தனை அழுத்தமாகவும் கோவமாகவும் பேசிவிட்டு செல்கிறான்.
ரகுவின்...
இப்போது அவள் அதிர்ச்சியில் விழிவிரித்து பார்த்து நின்றாள். இருந்தும் தன்னை திடப்படுத்திக் கொண்டு, "சார் என்ன சொல்றீங்க?" என்று கேட்க,
"ஆமா மூணு லட்சத்தை 30 லட்சமா என்னால மாத்த முடியும்னு சொல்றேன். அதுவும் ஒரே மாசத்துக்குள்ள நீ தரேன்னு சொல்லி ஒன்றரை மாசம் ஆகியும் நீ தராம இருக்கன்னு சொல்றேன்.
இல்லனா அந்த கடன் பத்திரத்தை...