Advertisement

கனவுக்குள் காவல் – அ

மதி தன் அசைவற்ற தோற்றம் மாறாமல் அப்படியே நிற்க, ரகு, “என்னாச்சு மதி, பால் சொம்பை மறந்துட்டியா? இல்லை பஸ்ட் நைட்ட மறந்துட்டியா?”, என்றான்.

“அப்படிலா எதுவும் இல்லை ” என்ற மதி தன்னை ஒரு நிலைப் படுத்திக் கொண்டு, “கல்யாணம் பண்ணா இது எல்லாம் நடக்கும்னு எனக்கு தெரியாதா? ” என்றாள்.

“அப்ப ஓகே. பால் சொம்பு இல்லாமலே ஆரம்பிக்கலாம்.” என்று கூறியவாறு ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அடி முன்னெடுத்து வைத்தான். மதியும் ஒவ்வொரு அடியாக பின் சென்று கொண்டிருந்தாள்.

ஆனால் ரகு அவளை வெகு நேரம் பின் செல்ல அனுமதிக்கவில்லை. சட்டென்று அவள் கையைப் பிடித்து இழுத்து தனக்கு மிக அருகில் நிறுத்தி கொண்டான்‌.

தன் வலது கையை அவள் முன்னிருந்து பின்னாக இடையைத் தொட்டும் தொடாமல் கொண்டு சென்று அவளை வளைத்து பிடித்து கொண்டான்.

மதி மதியம் ஓய்வுக்கு பின் கீழே இறங்கி வரும் போது, பட்டும் பருத்தியும் கலந்த ஒரு மெல்லிய புடவைக்கு மாறி இருந்தாள். அதனால் அவன் கைப் பாதி அவள் வெற்றிடையிலும் மீதி ஆடையிலுமாக சுற்றி வளைத்திருந்தது.

அவளை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மறு கையால் அவள் முகத்தில் படர்ந்த தலை முடியை காதோடு ஒதுக்கியவாறு பேச ஆரம்பித்தான்.

“என்கிட்ட ஏதாவது சொல்லனுமா மதி”

“அப்படிலாம் எதுவும் இல்லையே”

“இல்ல நீ ஏதோ சொல்ல வர மாதிரி எனக்கு தோணுது அதான் கேட்டேன்”

“அப்படி எதுவும் இல்ல.  ஏதாவது பேசணும்னு பேசிட்டு இருக்காதீங்க”

“பேசி டைம் வேஸ்ட் பண்ணாத வேலைய பாருடான்னு சொல்றியா மதி”

“நான் அப்படி எல்லாம் எதுவும் சொல்லல நீங்களா ஏதாவது பேசாதீங்க ரகு”

“அப்போ இருந்து நீ அப்படி எல்லாம் இல்ல,  அப்படி எல்லாம் இல்லைன்னு சொல்லியே உனக்கு வாய் வலிச்சு இருக்கும் அதுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கலாம்” என்றவாறு அவன் தன் மறு கையையும் அவள் முதுகுக்கு கொடுத்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.

மதி அவனின் அந்த இறுகிய அணைப்பை எதிர்பார்த்திடவில்லை.   இரு பக்கமும் அவன் புஜங்களை பட்டும்படாமல் பிடித்துக் கொண்டவள் அவன் அணைப்புக்குள் கட்டுண்டு நின்றாள்.

முழுதாக இரண்டு நிமிடங்கள் தன் இறுகிய அணைப்புக்குள் வைத்திருந்தவன் அவளை விலகி நிறுத்தி, தன் வலது கையால் அவள் தலை முடியை கோதி விட்டவாறு,

 “நீ மதியமும் சரியா தூங்கல மதி. டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து தூங்கு. ஓகே? குட் நைட்.” என்று கட்டிலை நோக்கி நகர்ந்தான்.

“ரகு ஆர் யூ ஓகே நீ எதுவும் ஹர்ட் ஆகிட்டீங்களா” என்று ரகுவின் செயலைக் கண்டு மதி வினவினாள்.

“ஏய் லூசு மதி.  அதெல்லாம் இல்லை,  நீ ஹர்ட் ஆயிட கூடாதுன்னு நினைக்கிறேன்.  அவ்வளவுதான்.”

மதி அதற்கு ஏதோ பதில் சொல்ல வரும் முன் ரகு தொடர்ந்து, ” அது மட்டும் இல்லாம, இந்தக் கல்யாணம் ரொம்ப அவசரமா நடந்துடுச்சு மதி.   நம்ம வாழ்க்கையும் இவ்வளவு அவசரமா ஆரம்பிக்க வேண்டாம்னு தோணுது.  அவ்வளவுதான் வேற எந்த காரணமும் இல்லை.” என்றான்.

மதிக்கும் இதற்கு மேல் பேச எதுவும் இருப்பதாக தோன்றவில்லை. அதனால் அவளும் உடை மாற்ற உள்ளே சென்றாள்.

உடைமாற்றி வந்த மதி எந்த தயக்கமும் இன்றி ரகுவின் அருகிலேயே மெத்தையில் படுத்து கொண்டாள்.

உடனே ரகு மதிப்பக்கமாக திரும்பி,  “மதி, உனக்கு இந்த கல்யாணம் பிடிச்சிருந்தா? என வினவினான்.

“கல்யாணம் பிடிச்சிருந்துச்சா வா? நீங்க கேட்கிறதே எனக்கு புரியல தெளிவா கேளுங்க”

“மதி அதுதான் நம்ம கல்யாணம் நடந்த முறை, அங்க நடந்த சடங்கு சம்பிரதாயம் இதெல்லாம் உனக்கு பிடிச்சுதா?அப்படின்னு கேட்கிறேன்.

நான் ஏன் கேக்றேன்னா.  இப்ப எல்லாருமே கிராண்ட் வெட்டிங் தான் பண்றாங்க.  ஆனா நம்ம அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.  அது மட்டும் இல்லாம கொஞ்ச நாளைக்கு இந்த கல்யாணம் ரகசியமா இருக்கணும்னு வேற முடிவு பண்ணி இருக்கோம்.   அதனால நம்ம ஃபேமிலி மெம்பர்ஸ் முன்னாடி சிம்பிளா தான் பண்ண முடிஞ்சது. அதான் கேட்கிறன் மதி சொல்லேன்?”

“ரகு நான் இந்த வீட்டுக்கு கல்யாணத்த பத்தி பேச வந்து மூணாவது நாள்ல அந்த கல்யாணமே முடிஞ்சிருச்சு.   இந்த ஷார்ட் பீரியட்ல இந்த கல்யாணத்தல எவ்வளவு ஞாபகங்களை சேர்க்க முடியுமோ அத்தனையும் பண்ணிட்டு இப்ப என்கிட்ட வந்து பிடிச்சிருக்கான்னு  கேட்கிறீர்களே ரகு.

நான் இந்த கல்யாணத்துல எவ்ளோ சந்தோஷமா இருந்தேன்.  நீங்களே பாத்தீங்கதான? உங்களுக்கே தெரிஞ்ச கேள்விக்கான பதில என்கிட்ட ஏன் கேக்குறீங்க?”

“அது எனக்கு தெரியும் தான்.   பட் நீ சொல்லு உனக்கு இந்த கல்யாணம் பிடிச்சிருந்தா?”

“சரி ஓகே.  சொல்ற எனக்கு இந்த கல்யாணம் ரொம்ப பிடிச்சிருந்திது இருந்தது. ஓகேவா?”

“டபுள் ஓகே”

இப்போது இருவருக்கும் இடையே ஒரு அமைதி நிலவியது.  அது அவர் மனங்கள் அந்த திருமண நிகழ்வுகளில் ஊசலாடியதன் விளைவு.

———————————————————————-

சகோதரிகளின் சம்மதம் கிடைத்த சில மணி நேரங்களில் தரண் மாளிகையில் ரகு மதியின் மொத்த குடும்பத்தினரும் கூடியிருந்தனர்.

அன்றிலிருந்து இரண்டாவது நாள் திருமணம் என முடிவு செய்து அதற்கு தேவையான அத்தனை வேலைகளையும் திட்டமிட்டு எந்தெந்த வேலைகளை யார் யார் செய்யப் போகின்றனர் என்பது வரை முடிவு செய்திருந்தனர்.

ரகுவிற்கு தன் படப்பிடிப்பு வேலைகளை தள்ளி வைக்க முடியாத சூழலினால் இரண்டு நாட்களுமே ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் அந்த வேலையாகவே சுற்றிக் கொண்டிருந்தான்.

திருமணநாள் அன்று மட்டும்தான் அவன் முழுதாக வீட்டில் இருந்தான்.  அத்தனை வேலையிலும் அவன் அந்த திருமணத்தை நிகழ்த்த எடுத்துக் கொண்ட சிரத்தை ஏறாலம்

இரண்டே நாட்களில் திருமணத்தில் நடக்கும் அத்தனை சடங்குகளையும் நிகழ்த்தி விட்டிருந்தனர் குடும்பத்தினர்.  ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒவ்வொரு அன்பளிப்பு தவறாமல் மதியை சென்று அடைந்தது ரகுவிடமிருந்து.

மதியின் தாய் தகப்பனார் புகைப்படம் மேலும் ரகுவின் தந்தையின் புகைப்படம் என மூன்றையும் மாளிகையின் உயரமான இடத்தில் மாட்டி வைத்திருந்தான்.

 அது, நலங்கு நிச்சயம் என சடங்குகளில் ஆரம்பித்து கடைசியாக முடிந்த தாலி கட்டிய தருணம் வரை அத்தனையும் அம்மூவரின் ஆசிர்வாதத்துடன் நடைபெற்றதாக எண்ணி குடும்பத்தினர் அனைவரையும் நெகிழிவடையச் செய்தது.

ஒரு நிகழ்வையும் விட்டு வைக்காமல் அத்தனையும் காட்சி படங்களாக மாற்றினர்.  அவை காலம் முழுக்க அவர்களுடன் பயணிக்க போகும் ஞாபகங்கள் ஆகிற்றே.

திருமணத்திற்கு பணியாற்றிய பணியாளர்கள் அனைவரையும் கூட பார்த்து தேர்ந்தெடுத்தான் ரகு.  ஒவ்வொருவரையும் நல்ல பழக்கமானவர்கள் நம்பிக்கையானவர்கள் என பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த பின்னே அவர்களை தரண் மாளிகைக்குள் அனுமதித்தான்.

ஏனெனில் இந்த திருமண விஷயம் சிறிதளவு கூட கொஞ்ச நாட்களுக்கு வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதில் அத்தனை கவனம் காத்தான் ரகு.

திருமண நாள் அன்று காலை 6:00 மணிக்கு எல்லாம் முகூர்த்தம் என்பதால் நாலரை மணி பொழுதிலேயே அனைவரும் எழுந்து தயாராக ஆரம்பித்து விட்டனர்.

மதியின் சகோதரிகளான ஜீவா சக்தி பின் அவள் உடன் பணிபுரிபவர்களான ஜெனிபர் ஜெய் இவர்கள் மட்டும் மதிப் பக்கம் இருந்து வந்திருந்தனர்.  மேலும் ரகு பக்கம் இருந்து தாய் கௌதமி சித்தி தேவி அவன் நண்பன் ரவி அண்ணன் பரத் மனைவி தீப்தி அவளுடைய தாய் தந்தை இவர்கள் உடன் அவர்கள் குடும்ப வக்கீல்.

அந்த திருமண நிகழ்வில் பங்கு கொண்டவர்கள் இவர்கள் மட்டும்தான்.

யாகம் வளர்த்து ஐயர் வந்து மந்திரம் ஓதி அம்மி வைத்து அருந்ததி பார்த்து நடந்த திருமணம அல்ல அது.

மாளிகைக்குள் குடும்பத்தினர் மட்டும் அனுமதிக்கப்படும் அந்த தோட்டத்தில் தான் மணப்பந்தல் தயாராகி இருந்தது

மணமேடையில் யாக குண்டம் வளர்க்கப்படவில்லை மாறாக அங்கே 101 தட்டுக்கள் வைக்கப்பட்டது.  அத்தனையும் கௌதமி, தேவியின் கைவண்ணத்தில் தயார் செய்யப்பட்டவை.

அதற்குப் பின் நாற்காலிகளோடு ஒரு மேஜை அமைந்திருந்தது.  அந்த மேஜையிலும்  சில தாம்பள தட்டுகள் அடுக்கப்பட்டு இருந்தது. அதில்  பூக்கள்,  பழங்கள், மாலை இப்படி அத்தனையும் அங்கே நிறைந்திருக்க,

அதற்கு இடையில் நடுநாயகமாக அர்ச்சனை அரிசிகள் நிறைந்த தட்டில் மஞ்சள் பூசப்பட்ட தேங்காயின் மேல் தான்தான் இங்கு ராஜா என்பது போல் பொன் ஒளி வீசி வீற்றிருந்தது அந்தப் பொன் தாலி.

சரியாக முகூர்த்த நேரம் நெருங்கும் வேளையில் ரகுவை மணமேடைக்கு அழைத்து  வந்தனர் ரவியும் பரத்தும்.  அங்கு அமைந்திருந்த இரு நாற்காலிகளில் ஒன்றில் ரகு அமர்ந்து கொள்ள சில நொடிகளிலேயே மணப்பெண்ணான மதி அவ்விடம் வந்தாள்.

இவர்கள் இருவரும் மேடையில் அமர்ந்ததும் மற்ற உறவுகள் அவர்களை சுற்றி கூடி நின்றனர்.  அதன் பின் வக்கீல் முன் வந்து நின்றார்.  அவர் கையில் இருந்த ஒப்புகை பத்திரிக்கையை படித்துக் காட்டி மணமக்கள் இருவருக்கும் இந்த திருமணத்தில் சம்மதமா என்பதை கேட்டு உறுதி செய்து கொண்டார்.

இருவரிடத்திலும் பரஸ்பர சம்மதம் கிடைத்ததும், மாங்கல்யம் வீற்றிருந்த தட்டை தீப்தி கையில் எடுத்துக் கொண்டு அனைவரிடத்திலும் சென்று ஆசி பெற்று வந்தாள்.

கடைசியாக வக்கீலின் முன் நீட்ட அவர் அதைத் தொட்டு வணங்கி விட்டு மாங்கல்யத்தை கையில் எடுத்து ரகுவின் கையில் கொடுத்தார்.

ஆனால் ரகு மாங்கல்யத்தை கையில் வாங்கிய உடனே கட்டி விடவில்லை.  என்னதான் மதி ஒப்புகை பத்திரம் வாசிக்கும் போதே சம்மதம் தெரிவித்து இருந்தாலும் அவளிடத்தில் தனிப்பட்ட முறையில் இவனுக்கும் சம்மதம் பெற வேண்டி இருந்தது.

ரகு மாங்கல்யத்தை கையில் வாங்கிய நொடியில் இருந்து ரவி “கெட்டிமேளம் கெட்டி மேளம்” என கத்திக் கொண்டிருக்க, இங்கு ரகு மதியிடம் கண்களால் சம்மதம் வேண்டி நின்றிருந்தான்.

மதி  குறுஞ்சிரிப்புடன் கண்களை மூடி திறந்து சம்மதம் என்று கூறிய பின்னே ரகு கையில் இருந்த மாங்கல்யம் மதியின் கழுத்துக்கு கொண்டு சென்று மூன்று முடிச்சிட்டான்.

இந்த சம்பாஷணியை கண்ட இளவட்டங்கள் சும்மா இருப்பார்களா?   அவர்கள் ஆர்ப்பாட்டம் அங்கே தூள் பறந்தது.

கண்ணே

கனியே உன்னை

கை விடமாட்டேன்

சத்தியம் சத்தியம்

இது சத்தியமே

மாலை சூடிய

காலை கதிரின் மேலே

சத்தியம் சத்தியம் இது

சத்தியமே

ஒரு குழந்தை

போலே ஒரு வைரம்

போலே தூய்மையான

என் சத்தியம் புனிதமானது

 இப்பிறவியில்

இன்னொரு பெண்ணை

சிந்தையிலும் தொடேன்

பிறிதோர் பக்கம் மனம்

சாயா பிரியம் காப்பேன்…..(manamaganin sathiyam- Kochadaiyaan)

ஒருபுறம் கெட்டிமேளம் காதை நிறைத்தாலும், மறுபுறம் ரகு ஏற்பாடு செய்திருந்த டிஜே இசைத்த அந்த பாடல் அங்கு இன்னும் இன்பலைகளை கூட்டியது.

ரகுவிற்கு சகோதரிகள் யாரும் இல்லாததால் மூன்று முடிச்சையும் அவனே இட்டான்.  உண்மையில் அது அவனுக்கு பேருவுவகை தந்தது.

கௌதமி, வக்கீல் தான் தாலியை எடுத்துக் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி அழைத்திருந்தார்.  இதைப் பற்றி முன்பே ரகு மற்றும் மதியிடமும் பேசி இருந்தார்.

ஏனெனில் அவர் ரகுவின் தந்தைக்கு உற்ற நண்பராக இருந்தவர்.  மேலும் ரகுவை தன் சொந்த பிள்ளை போல அன்பு வைத்து பார்த்துக் கொண்டவர்.  அதனால் தான் கௌதமி ரகுவின் திருமணத்தை வக்கீல் முன்னின்று நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

பின் மதியின் தலையை சுற்றி அவள் நெற்றியில் போட்டு வைத்து,  தன் தொடையில் அவள் பாதங்களை வைத்து மெட்டி இட்டு இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் அனுபவித்து ரசித்து செய்து கொண்டு இருந்தான் ரகு.

அவனை மட்டுமல்ல இப்படி ஒவ்வொரு நிகழ்வும் அனைவரையும் பெரும் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியது.

இத்தனை காட்சிகளுக்கு பின்னே ஓடிக் கொண்டிருந்த இசையும் மெலிதாய் ஒலித்துக் கொண்டிருந்த மேள சத்தமும், இளையவர்களின் இன்ப கூச்சலும் என ஒரு சின்ன திருவிழாவே அங்கே நிகழ்ந்திருந்தது.

———————————————————————-

இவையெல்லாம் மதிக்கு  தன்னுடையது மிகச்சிறந்த திருமணம் என எண்ண வைத்திருந்தது.

இப்படி ஒரு திருமணத்தை நிகழ்த்தி விட்டு இவன் கேட்கும் கேள்வியை பார் என மனதோடு அவனை திட்டிக் கொண்டாள்.

தன் திருமணத்தை பற்றி எண்ணிக்கொண்டிருந்த மதி திரும்பி ரகுவை பார்க்க அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

அவனைப் பார்த்து புன்னகைத்தவாறு ஏதோ யோசனைக்குள் சென்றவள், “உங்க கூட நான் ரொம்ப நாள் ட்ராவல் பண்ணனும்னு என்னை ரொம்ப ஆசை பட வைக்கிறீங்க ரகு” என்றவள்,

“குட் நைட் ” என கிசு கிசுப்பாக கூறி விட்டு கண்களை மூடிக் கொண்டாள்.

காவல் புரிவா (ள்)ன்

மகா ஆனந்த் ✨

Advertisement