Advertisement

கனவுக்குள் காவல் – கo

மதியை சுற்றி நின்றவாறு அவள் என்ன கூற போகிறாள் என கேட்க அனைவரும் தயாராகினர்.

கௌதமி அவள் அருகே வந்ததுமே, ரகு கட்டிலில் இருந்து எழுந்து மதிக்கு நேராக அங்கு அமைந்திருந்த கண்ணாடியுடன் கூடிய மேஜையில் சாய்ந்தவாறு நின்று கொண்டான்.

மதி ரகு முகத்தை பார்த்துக் கொண்டே சொல்ல ஆரம்பித்தாள்.

“அஞ்சு நாளைக்கு முன்னாடி நான் அவசரமா ஆபீஸ் கிளம்பிட்டு இருந்தபோ, எனக்கு ஜெனி கிட்ட இருந்து கால் வந்துச்சு.  அவ என்ன அவசரமா “ஃஃஃ” ஹாஸ்பிடலுக்கு வர சொன்னா.

நாங்க அங்க போனப்போ ஜெனி ஒரு ஃபேமில கூட நின்னிட்டு இருந்தா. அந்த ஃபேமிலில இருந்து ஒரு பொண்ண தனியா கூட்டிட்டு வந்து அவளை எனக்கு இண்டர்வியூஸ் பண்ணி வச்சா.

அந்த பொண்ணு ஜெனியோட கோயம்புத்தூரில் ஒண்ணா படிச்சவ.  அந்த பொண்ணோட அக்காவ சென்னைல தான் கட்டிக் கொடுத்திருக்காங்க.

அந்த அக்காக்கு அன்னைக்கு காலையில தான் ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கு.  அந்த குழந்தையை யாரோ கடத்திட்டாங்க.   உடனே அவங்க ஹஸ்பண்ட்  போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிட்டாங்க.

இருந்தாலும் ஜெனியோட பிரிண்ட் ஜெனி பிரஸ்ல இருக்கறதுனால அவளுக்கு கால் பண்ணி ஹெல்ப் கேட்டு இருக்கா.

ஜெனி அங்க இருக்க சிச்சுவேஷன் புரிஞ்சுகிட்டு எனக்கு கால் பண்ணா.  யாரோ ஒரு பொண்ணு நர்ஸ் வேஷம்  போட்டுட்டு வந்து தான் அந்த குழந்தைய திருடிட்டு போய் இருக்கா.  போலீஸ் ஒரு பக்கம் அந்த குழந்தையை தேடுனாங்க.   இன்னொரு பக்கம் நாங்களும் தேடலாம்னு முயற்சி செஞ்சோம்.

அந்த குழந்தை கைமாறுற எல்லா இடத்தையும் நாங்களும் ஃபாலோ பண்ணோம்.  இந்த அஞ்சு நாளைக்குள்ள கிட்டத்தட்ட ஆறு  இடத்துக்கு அந்த குழந்தைய கைமாத்தினாங்க.

ஆனா ஒவ்வொரு தடவையும் அந்த குழந்தைய நாங்க மிஸ் பண்ணிட்டோம். ஆனா நேத்து காலையில கடைசியா குழந்தையை யார் வாங்கிட்டு போனாங்கன்னு எங்களால்  கண்டுபிடிக்க முடியாம நாங்க நின்னுட்டோம்.

குழந்தைய கடைசி கைமாத்துனவன் குழந்தைகளை பேரம் பேசுற ஒரு புரோக்கர்னு எங்களுக்கு தெரிஞ்சது.

ஜெனி ரொம்ப எமோஷனல் ஆகிட்டா.  குழந்தைய எப்படியாவது காப்பாத்தணும்ங்கிற வேகத்துல எங்க யார்கிட்டயுமே சொல்லாம,  அந்த புரோக்கர் இருக்க இடத்துக்கு அவனுக்கே தெரியாம உள்ள நுழைய முயற்சி பண்ணி இருக்கா.

அங்க குழந்தையை வாங்க வந்த ஒருத்தர்  கிட்ட மாட்டிகிட்டா.  ஆனா ஜெனியோட நல்ல நேரம்.  அவர் உண்மையாவே குழந்தைகளுக்கு விலை பேச வந்தவர் கிடையாது.

அவனும் எங்கள மாதிரி ஒரு ஜர்னலிஸ்ட், கதிரவன் சுடர் பத்திரிக்கையில வேலை பார்க்கிறாரு.

அவர் எப்படியோ ஜெனியை காப்பாத்தி  வெளியே கூட்டிட்டு வந்துட்டார். ஜெனி அவர பத்தின விஷயங்களை தெரிஞ்சுகிட்டு எங்க கிட்ட கூட்டிட்டு வந்தா.

முதல்ல நாங்க அவர நம்பல.  ஆனா அவர்  சொன்ன விஷயம் எல்லாமே எங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு.

அந்த கும்பல் இதுக்கு முன்னாடி வேற ஏதோ ஸ்டேட்ல தான்  குழந்தை கடத்தல் தொழில் பண்ணிட்டு வந்திருக்காங்க.  இப்ப ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் இங்க வந்திருக்காங்க.

கதிரவனுக்கு இந்த சைல்ட் ட்ரேட் (child trade) பத்தி ரெண்டு மாசம் முன்னாடி தான் தெரிஞ்சிருக்கு. அப்ப இருந்து இன்வேஸ்டிகேட் பண்ணிட்டு இருந்திருக்காரு.

எப்படியோ கஷ்டப்பட்டு நேத்து தான் அந்த புரோக்கர நேரா சந்திக்க முடிஞ்சு இருக்கு.  அவரோட பிளான் படி  அவங்க கிட்ட குழந்தையை விலை பேசி வாங்குற மாதிரி போயி அவங்க குழந்தைகளை எங்க வச்சிருக்காங்கறத கண்டுபிடிச்சு, அவங்கள பிடிக்கனும்.  ஒரு குழந்தைக்கு பத்து லட்சம் ரூபாய்.  அட்வான்ஸா அவரு மூனு லட்சம் குடுத்திருக்காரு.

எங்ககிட்ட அவர் சொன்ன எல்லா விஷயத்துக்கும் ஆதாரமும் இருந்தது‌.  அது மட்டும் இல்லாம அவருடைய எண்ணம்  குழந்தைகளை காப்பாத்தறது மட்டுமா இருந்துச்சு.

அதனால தான் இன்னொரு பத்திரிகைல வேலை செய்ற எங்க கிட்டயும் எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணிக்கிட்டாரு.

நாங்களும் எப்படி அந்த புரோக்கரை கண்டுபிடிச்சோம் அப்டிங்கிறதையும் அவர்கிட்ட சொன்னோம்.

அந்த புரோக்கர பொருத்த வரைக்கும் கதிரவன் ஒரு குழந்தை இல்லாத நபர்.  அவருக்கு குழந்தை வேணும் அதுக்காக நம்ம கிட்ட வந்து இருக்கான் அப்டின்னு  நெனச்சிட்டு இருந்தான்.

அதனால இன்னைக்கு காலைல அவரை ஒரு இடத்துக்கு வர சொல்லி இருந்தான்.  அவன் கூட்டிட்டு போறேன்னு சொன்ன இடத்தில தான் அவங்க குழந்தைகளை வச்சிருக்கணும்.

அதனால நாங்க எல்லாருமே கதிரவனுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு முடிவு செஞ்சோம்.

 பிளான் படி கதிரவன் உள்ள போய் குழந்தைகளை பார்த்துட்டா.  உடனே எங்களுக்கு சிக்னல் கொடுப்பாரு.  நாங்க  போலீசுக்கு கால் பண்ணி உடனே அங்கு வரவைக்கணும்.

அதுதான் எங்க பிளானா இருந்தது.   ஆனா இன்னைக்கு காலையில அதுல ஒரு  சின்ன பிராப்ளம் ஆயிடுச்சு”

இவ்வளவு நேரம் விடாமல் பேசிக் கொண்டிருந்தவள் ஒரு நொடி பேச்சை நிறுத்திவிட்டு,  ரகுவின் புறம் இருந்த தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

“காலையில அப்படி என்னடா ஆச்சு மதி?”,  என தேவி அவளை  பேச தூண்ட,  அவரை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

“அந்த கும்பல் ஒருத்தருக்கு குழந்தைய விக்கும் போது, அவங்களோட நேம் டீடெய்ல்ஸ் எல்லாத்தையும் செக் பண்ணுவாங்க. அதைபத்தி முன்னாடியே கதிரவனுக்கு தெரிஞ்சதால அவரும் எல்லாத்தையும் ஃபேக்கா ரெடி பண்ணிட்டாரு‌.

ஆனா, காலைல அந்த புரோக்கர் போன் பண்ணி கதிரவன் பத்தி செக் பண்ணும் போது அவர் வொய்ஃப் பத்தி எந்த டீடெய்ல்ஸ்ம் க்ளியரா இல்லை.  அதனால குழந்தை கிடைக்காதுன்னு சொல்லவும் கதிரவன் உடனே என் வொய்ஃப்ம் குழந்தைக்காக என்னோட வந்திருக்காங்க.

உங்களுக்கு சந்தேகம் வேண்டாம் அவங்களும் குழந்தைக்காக ரொம்ப எதிர்பாத்திட்டு இருக்காங்க.  குழந்தை இல்லைன்னு மட்டும் சொல்லாதீங்கன்னு கெஞ்சி கேட்டாரு.

அதுக்கு அப்புறம் தான் அந்த புரோக்கர் ஒத்துக்கிட்டான்.  அதனால….” என பேச்சை இழுத்தாள்.

மீண்டும் தொடர்ந்து, “அதனால நானே கதிரவன் கூட குழந்தைங்க இருக்க இடத்துக்கு போனே.

நாங்க போறதுக்கு கொஞ்சம் முன்னாடி தான், ஏசிபி தேவன் சார்  கிட்ட இன்ஃபாம் பண்ணோம். அவருக்கு கதிரவன்ன முன்னாடியே தெரியும்.  அவரால தான் இதை ஹேன்டில் பண்ண முடியும்னு எங்களுக்கு தோனிச்சு.

 அங்க குழந்தைங்களை பாத்த உடனே எங்க கைல இருக்க வாட்ச் மூலமாக சிக்னல் அனுப்பிடுவோம்.  உடனே போலீஸ் ஃபோர்ஸ் அனுப்பிடுங்கன்னு சொன்னோம்‌.  தேவன் சார் எங்களை அவர் வர வரைக்கும் வெயிட் பண்ண சொன்னாரு.  பட் எங்க கிட்ட அவ்ளோ டைம் இல்லை.

நாங்க அவர் சொல்றத கேட்கலைன்னு புரிஞ்சிக்கிட்ட தேவன் சார்.  எங்களோட சிக்னலை எதிர்பாக்காம உடனே போலீஸ் ஃபோர்ஸ் அனுப்பினாரு.

அவங்க வர இருபது நிமிஷம் ஆகும்னு எங்களுக்கு தெரியும்.   ஆனா நாங்க குழந்தைங்களை வச்சிருந்த இடத்திக்கு அவங்க வரதுக்கு முன்னாடியே போய்டோம்.

நாங்க உள்ள போன பத்து நிமிஷத்தில எங்ககிட்ட குழந்தைகளை காட்டி எங்களுக்கு தேவையான குழந்தைய எடுத்துக்க சொன்னாங்க.  நாங்க எங்க வாட்ச் மூலமா சிக்னல் அனுப்பிட்டு, அந்த கூட்டத்துக்கு சந்தேகம் வராத மாதிரி நடிச்சிட்டு இருந்தோம்.

போலீஸ் கொஞ்ச நேரத்திலேயே அந்த இடத்தை சுத்தி வளச்சாங்க.  அப்போ ஒருத்தன் வேகமா உள்ள வந்து வெளிய போலீஸ் அவங்கள சுத்துப் போட்டிட்டாங்கன்னு சொன்னான்.

அங்க இருந்த தலைவனுக்கு புரிஞ்சிடிச்சு நாங்க தான் கூட்டிட்டு வந்திருக்கோம்னு.  அந்த சமயம் அவன் பக்கத்தில நான் தான் நின்னிட்டு இருந்தேன்.  வந்த கோபத்தில அவன் என்னை அரைஞ்சிட்டான்.  அப்போ அவன் கையில் ஏதோ கீ வச்சிருந்தான்.  அது என் கன்னத்தில குத்தி வீங்கிருச்சு.

மறுபடியும் அவன் எங்களை அடிக்க வரதுக்குள்ள போலீஸ் உள்ள வந்திட்டாங்க.  யாராலையும் தப்பிக்க முடியாம எல்லாரும் சிக்கிட்டாங்க.  மொத்தம் 27 குழந்தைங்க.  எல்லாரையும் போலீஸ் பாதுகாப்பான இடத்திக்கு மாத்திட்டாங்க.

இந்த விஷயத்தில எங்களை பத்தி வெளிய எதுவும் வர வேணாம்னு நாங்க தேவன் சார் கிட்ட கேட்டுக்கிட்டோம்.  அவரும் எங்களோட பாதுக்காப்புக்காக எதையும் வெளிய சொல்லல.

இது தான் அத்தை நடந்திச்சு.  இதை உங்ககிட்ட சொன்னா நீங்க பயந்திடுவீங்கன்னு தான் நான் பொய் சொன்னே.  பட் டாக்டர் என்னை மாட்டி விட்டுட்டாரு”.

அது வரை முகத்தில் எந்த பாவமும் இல்லாமல் பேசிக்கொண்டு இருந்தவள்.  கடைசி வாக்கியத்தை மட்டும் பாவம் போல் வைத்துக் கொண்டு கூறினாள்.

தேவி அவளை போலியாக முறைத்தவர், “இப்ப நாங்க உன்னை, ஐயோ குழந்தை பாவம்னு சொல்லனுமா?” என்று வினவினார்.

இப்போதும் தன் அப்பாவி பார்வையை மாற்றாமல் தன் இரண்டு அத்தைகளையும் மாறி மாறி பார்த்து கொண்டு இருந்தாள் மதி.  தவறியும் தன் பார்வையை ரகு பக்கம் திருப்பவில்லை.

“நீ பண்ண விசயம் ரொம்ப பெரிசு.  அது நினைச்சு கண்டிப்பா எனக்கு பெருமை தான்.  இருந்தாலும் என் மறுமக எவ்ளோ பெரிய ஆபத்தில சிக்க இருந்தான்னு நினைக்கும்போது பதறதான் செய்யிது.

இனிமே உனக்கு ஆபத்து வரும்னு நினைக்கிற எந்த விசயத்தையும் வீட்ல மறைக்காத புரியுதா?  சரி நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு.  டின்னர் நான் உனக்கு மேல் அனுப்பி வைக்கிறேன்.” என்ற கௌதமி வெளியேற,

அவரை தொடர்ந்து தேவி, ரவி, ஜெய் என அனைவரும் அவர்கள் பங்குக்கு ஆளுக்கு ஒரு வார்த்தை பேசிவிட்டு சென்றனர்.

அனைவரும் அறைவிட்டு வெளியேறும் வரை அமைதியாக அதே பார்வையில் நின்றிருந்த ரகு, அனைவரும் சென்ற பின் மெதுவாக மதியின் அருகில் வந்து, அவள் முகத்தில் படர்ந்து இருந்த தலைமுடிகளை காதோரம் ஒதுக்கியவாறு பேசினான்.

“ரொம்ப அதிகமா பேசிட்ட மதி உனக்கு கண்டிப்பா காயம் வலிக்கும்.  அதனால காயம் ஆறுரவரை கொஞ்சம் அமைதியா இரு.  ரெண்டு நாளைக்கு நீ வேலைக்கு போக வேண்டாம். ரெஸ்ட் எடு.

இந்த கலவரத்தில் நீ என்ன சாப்பிட்டன்னு எனக்கு தெரியல.  அதனால உனக்கு நான் ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வரேன்.  ஃபஸ்ட் நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா.”

எனக்கூறி விட்டு கதவை நோக்கி நடந்தவன்,  திரும்பிப் பார்க்க மதி அதே இடத்தில் அசையாமல் அமர்ந்து இருப்பது தெரிய, மீண்டும் அவள் அருகில் சென்று அவளை தன் இரு கைகளால் ஏந்தி கொண்டான்.

மதி என்னவென்று யோசிக்கும் முன்பே அவளை குளியலறையின் கதவுக்கு அருகில் நிறுத்திவிட்டு, “போய் பிரஷ் ஆயிட்டு சீக்கிரம் வா மதி”, என்று விட்டு வெளியேறினான்.

தன் அறையில் இருந்து கீழே இறங்கியவன்,  வரவேற்பறையில் இருந்து யாரையும் கண்டு கொள்ளாமல் நேராக சமையலறைக்கு புகுந்து கொண்டான்.

குளிர்சாதன பெட்டிக்குள் இருந்து ஆப்பிள்களை எடுத்தவன், அவற்றை நறுக்கி தன் கையாலையே ஒரு பழச்சாறை தயார் செய்தான்.

சமையல் கட்டில் இருந்து வேலைக்காரர்களில் இருந்து வெளியே வரவேற்பறையில் அமர்ந்திருந்த தன்  இரு தாயார் தாய்மார்கள், தன் நண்பன் என அனைவரும் தன்னை விநோதமாக பார்ப்பதை கண்டு கொள்ளாமல் தன் வேலையை முடித்தவன்.

வேலை ஆட்களிடம் திரும்பி, “இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு ஒரு மிக்ஸட் ஃப்ரூட் ஜூஸ் எடுத்துட்டு வாங்க”,  என்று கூறி விட்டு விறுவிறு என மீண்டும் படிக்கட்டில் ஏறினான்.

அவன் மேலே ஏறியதும் தேவி கௌதமிடம், “அக்கா நமக்கு கூட இது தோணாம போயிடுச்சு பாரு.  அவ கன்னம் வீங்கி இருக்கு எப்படி அவளால மென்னு  சாப்பிட முடியும்.

நான் கூட அவளுக்கு பிடித்ததை டின்னருக்கு சமைக்கணும்னு சொல்லி பூரி செய்ய சொல்லிட்டு வந்தேன். ஆனா இவன் அவளுக்கு சாப்பிட முடியாதுன்னு புரிஞ்சுகிட்டு ஜூஸ் கொண்டு வாங்கன்னு சொல்லிட்டு போறான்.  “

என்றதும், கௌதமி எதுவும் பேசாமல் ம் கொட்டிவாவாறு இருக்க தேவி மீண்டும் தொடர்ந்து, “நா அவளுக்கு மட்டும் தனியா வேற ஏதாவது சமைக்க சொல்லிட்டு வரேன்”, என்று எழ போனவரை தடுத்து நிறுத்திய கௌதமி,

“ஜூஸ் கொண்டு போய் கொடுக்க தெரிஞ்ச அவ புருஷனுக்கு தெரியும்,  நைட் சாப்பிட என்ன கொடுக்கனும்னு. அவனே பார்த்துப்பான். நீ விடு” என்றார்.

உடனே, “அவன் பார்த்துப்பான் இப்ப சொல்ற நீ. அப்ப ஏன்கா அவ்வளவு கோபப்பட்ட?” என தேவி கேள்வி எழுப்ப,

அவரை திரும்பி ஒரு  ஒரு நொடி பார்த்து கௌதமி, “முதல் தடவை அவன் பார்த்துப்பான்னு தான் நினைச்சேன்.  அப்ப அவன் என்னை ஏமாத்திட்டான்.  பத்து வருஷத்துக்கு அப்புறம் மறுபடியும் அவன் பார்த்துப்பான்னு நம்புறேன் இந்த தடவை ஏமாத்துனா ?…”

மேலும் ஏதும் பேசாமல் தன் அறைக்கு நோக்கி சென்றார்.

போகும் அவரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தனர் ரவியும் தேவியும்.

காவல் புரிவா (ள்)ன்….

மகா ஆனந்த் ✨

Advertisement