இதழின் மொழியானவனே
அத்தியாயம் 9:
“என்ன தீரன் சொல்றிங்க?” என்ற ராஜ ராஜனுக்கு தீரன் சொல்லும் விஷயத்தில் உடன்பாடில்லை.
“அங்கிள் பிளீஸ்! உங்க பொண்ணோட சேப்டிக்கு நான் பொறுப்பு. என்னை நம்பி அனுப்பி வைங்க. நான் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வந்திடுவேன்” என்று பொறுமையாய் சொல்லிக் கொண்டிருந்தான்.
அவன் பேச்சியில் யோசனைக்கு சென்றவர்,”விஷயம் என்னன்னு சொல்லாம திடீர்னு கோயம்புத்தூர் கூட்டிட்டு போறேன்னு...
“அதி அங்க பாரு, கடல்ல யாரோ குதிச்சுட்டாங்க” என்ற விவேக்கின் பதட்டமான குரலில் வெளியே வந்த அதிதீரன் விவேக் கட்டிய இடத்தைப் பார்த்தான்.
“இந்நேரம் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் போயிருக்கும். அவங்க பார்த்துப்பாங்க. நீ ஏன் பதட்டப்படுற விவேக்” என்றான் சாவகாசமாய்.
“இல்ல அதி, விழுந்தது ஒரு பொண்ணு மாதிரி இருக்கு” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்...
அத்தியாயம் 22 :
கமிஷனர் அலுவலகத்தில் டிஐஜியின் முன் நின்றிருந்தான் அதிதீரன். அவரோ கோபத்தில் இருக்க, தீரனோ அமைதியாய் இருந்தான்.
“கேஸ் கொஞ்சம் கூட மூவ் ஆகாம அதே இடத்துல தான் இருக்கு மிஸ்டர் தீரன்” என்றார் பொறுமை இழந்தவராய்.
“நோ சார், குற்றவாளியை நெருங்கிட்டோம் சார்” என்றான் தீரன்.
“நீங்களும் இந்த ஒரு மாசமா இப்படித்தான் சொல்றிங்க. ஷிப்ல...
அத்தியாயம் 27 :
நள்ளிரவுக்கு மேல் மொழி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவளின் உறக்கம் கலையாதவாறு எழுந்தவனின் கைகளை தூக்கத்திலும் விடாது பிடித்துக் கொண்டாள் வெண்மொழி. அவளின் கையை மெதுவாய் விலக்கி, கேர்டைன்ஸ் அனைத்தையும் முழுதாய் இழுத்து விட்டு கண்ணாடி அறையில் வெளிச்சம் புகாதவாறு செய்தவன், சத்தமின்றி வெளியே வந்தான். காரிருளில் மூழ்கியிருந்தது நகரம்.
“விவேக் வந்தாச்சா?”...
“என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி ரியாக்ட் பண்ற மொழி?” என்றான் புரியாமல்.
“ஒண்ணுமில்லை” என்பதைப் போல் தலையை ஆட்டியவள் மீண்டும் அமைதியாய் சென்று அமர்ந்து கொள்ள, அவனுக்கு ஏதோ புரிவதைப் போல் இருந்தது. அமைதியாய் சென்று குளித்து முடித்து வந்தவன், அவளையும் அழைத்துக் கொண்டு பிரகதியின் அறையை நோக்கி சென்றிருந்தான்.
அங்கு சஞ்சய் எவ்வளவு முயற்சி செய்தும்...
அத்தியாயம் 18:
தீரனை அமைதியாய் பார்த்திருந்த விவேக்..
“ஆனா மொழிகிட்ட மிஸ் பிகேவ் பண்ணதுக்கான ஆதாரம் இல்லையே?” என்றான்.
“ஆளைப் பார்த்துட்டோம்ல. ஆதாரம் எப்படி கிடைக்குதுன்னு பாரு” என்ற தீரன், அந்த ஜூம் செய்த முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க,
“அதி உனக்குப் புரியுதா இல்லையா? அப்படியே எவிடன்ஸ் கிடைச்சாலும் மொழிகிட்ட மிஸ்பிகேவ் பண்ணவனுக்கும் நம்ம ட்ரக்ஸ் கேசுக்கும் என்ன சம்பந்தம்?”...
அத்தியாயம் 10 :
டிரைவர் சடன் பிரேக் அடிக்க,
“என்னாச்சு விவேக்?” என்ற படி நினைவில் இருந்து மீண்டிருந்தான் அதிதீரன்.
“ஒண்ணுமில்லை அதி, ஒருத்தன் ராங் ரூட்ல ஏறிட்டான்” என்ற விவேக்,
“எதுக்கும் கொஞ்சம் மெதுவாவே போங்க” என்றான் டிரைவரிடம்.
அதி தனக்கு வலது புறத்தில் அமர்ந்திருந்தவளை திரும்பிப் பார்க்க, அவளோ நன்றாய் தலை சாய்த்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு...
அத்தியாயம் 19 :
“கிளம்பியாச்சா?” என்றவனின் குரலில் திடுக்கிட்டு திரும்பினாள். குளித்து வேறு உடை உடுத்தியிருந்தாள் அவ்வளவே. வேறு எதுவும் பண்ணத் தோன்றாமல் கண்ணாடியில் தன் முகத்தை வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு அவனின் வருகை பதட்டத்தை தான் அதிகரித்திருந்தது.
அவளை ஒரு முறை ஆராய்ந்தவன்,
“போகலாமா?” என்றவனிடன்,
“எனக்கு வெளிய போக பிடிக்கலை” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.
“வெளிய வர பிடிக்கலையா?...
அத்தியாயம் 2 :
தன்னையே பார்த்துக் கொண்டிருந்த நண்பனைக் கண்டும் காணாதவன் போல், உன் பார்வையெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது என்ற பாவனையில் வேடிக்கை பார்த்திருந்தான் அதிதீரன்.
“நீ பண்றது உனக்கே சரின்னு தோணுதா அதி? உன்கிட்ட இப்படியொரு பிகேவியரை நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றான் விவேக் கோபமாய்.
நண்பனின் குற்றச்சாட்டில் திரும்பி அவனைப் பார்த்தவன், எதுவும் சொல்லாமல்...
நேரம் போவதே தெரியாமல் வெண்மொழி அதில் ஆழ்ந்துவிட, அந்த மங்கிய ஒளியில் வேறு எதுவும் தெரியவில்லை அவளுக்கு. திடீரென்று ஏதோ அசௌகரியமாக உணர்ந்தாள். இடுப்பில் ஏதோ ஊர்வதைப் போல் இருந்தது. அந்த உணர்வு சட்டென்று அவளுக்கு எதையோ உணர்த்த, அதற்குள் அவளின் இடுப்பில் ஊர்ந்த கை அவள் எதிர்பார்க்காத நொடி அவள் முன்னழகை பற்றியிருந்தது.
உடல்...
அத்தியாயம் 17 :
“சொல்லுமா என்னையும் பிடிக்கலையா?” என்ற தீரன் அவளை அழுத்தமாய் பார்க்க..மொழி பதில் எதுவும் சொல்லாமல் அதே திகைத்த பார்வையுடன் இருந்தாள். அவளின் அமைதி கண்டு தாரிக்குக்கு தான் பதட்டம் அதிகரித்தது.
“மொழி ஏன் சைலண்ட்டா இருக்க? இந்த ஏசிபி சரியில்லை. இவரை நம்பாத. இவர் நம்மளைப் பிரிக்கப் பார்க்குறார்” என்ற தாரிக் வேகமாய்...
அத்தியாயம் 21 :
தன் அலைபேசி சத்தத்தில் கண் விழித்தான் அதிதீரன். ஒருமணி நேரம் என்று கூறியவன் கிட்டத் தட்ட மூன்று மணி நேரங்களுக்கு மேலாக உறங்கியிருந்தான்.
தூக்கக் கலக்கத்தில் இருந்தவன்,
“ஹலோ, சொல்லு மச்சான்” என்க, அவன் குரலில் இருந்தே அவன் இருக்கும் நிலைமையை புரிந்து கொண்ட விவேக்,
“நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டடா! நல்லா தூங்கிட்டு...
அத்தியாயம்28 :
வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் புரியாமல் திகைத்திருக்க, தனக்கு எதிரே இருந்த ஆனந்த ராஜனை விலக்கியவன்,
“உங்களைத்தான் சகலை ரெடியா?” என்றான் தீரன். அவனின் கைகள் காக்கி பேண்ட் பாக்கெட்டினுள் இருக்க, கால்களை சற்று அகற்றி நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தவனின் தோற்றம் கண்டு அங்கிருந்தவர்களின் முகத்தில் ஒரு பயம் கலந்த மரியாதை உணர்வைக் கொடுத்திருக்க, அவனுக்கு...
தீரன் சொன்னதைப் போல் கிட்டத் தட்ட அவன் நன்றாக உறங்கி விட்டான் என்று தெரிந்த பின்னர் அவளுக்கு அழைப்பு வந்தது. அவளும் தூக்கக் கலக்கத்தில் போனை எடுப்பவளைப் போலவே எடுத்தாள்.
“என்ன புருஷன் கூட ஒரே குஜாலா இருக்க போல” என்றவனின் குரலில் அவளையும் அறியாமல் சட்டென்று எழுந்து அமர்ந்திருந்தாள்.
‘இவளை பயப்படுற மாதிரி நடிக்க சொன்னா,...
போனை வைத்துவிட்டு அந்த அறையை தீரன் சுற்றிப் பார்க்க, ஏற்கனவே அகன் கூறியதைப் போல் தான் இருந்தது. அதிகப்படியாய் இருந்தது லைட் வெளிச்சம் மட்டுமே.
அப்போது தான் அவனுக்கு புத்தியில் உரைத்தது. அவன் அந்த அறைக்குள் வரும் போது அகன் சொன்ன மாதிரியே தான் அறை இருந்தது என்று. ஆக, இதை பயன்படுத்தினால் எந்த நிலையில்...
அத்தியாயம் 14 :
எல்லாம் முடிந்தது என்று அவன் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் வெண்மொழி. சட்டென்று வருவாள் என்று எதிர்பார்க்காதவன்,அவளின் தள்ளாட்டத்தை அவர்கள் கண்டு கொள்ளும் முன்,வேகமாய் அவளை இழுத்து தன் முதுகிற்கு பின்னால் மறைத்துக் கொண்டான். அவளோ நெளிந்தபடி அவனிடமிருந்து தன்னை விடுவிக்கப் பார்க்க, தீரனின்...
“பிளீஸ் ஆன் பண்ணாதிங்க. அப்பறம் நான் எங்க இருக்கேன்னு தெரிஞ்சுடும்” என்று உளறியவள் சட்டென்று வாயை மூடிக் கொள்ள,
“வாட்? என்ன சொன்ன? திரும்ப சொல்லு” என்றான் தீரன்.
“இல்ல..அது..வந்து” என்று திணறியவளுக்கு, அவன் மேல் தான் கோபம் வந்தது.
“மொபைலைக் குடுக்க முடியுமா முடியாதா?” என்றாள் சற்று கோபமாய்.
“தர்றேன் தர்றேன்” என்றவன், அங்க சின்ன ஷெட் மாதிரி...
மூன்று நாட்களுக்குப் பிறகு,
சென்னையில் தன் வீட்டில் தன்னுடைய அறையில் அமர்ந்திருந்தவளின் முகம் முழுவதும் வேதனை படிந்திருந்தது. கப்பலில் நடந்த விஷயங்கள் ஒரு பக்கம்,வீட்டில் நடந்து கொண்டிருந்த நிச்சயதார்த்த ஏற்பாடுகள் ஒரு பக்கம் என அவளைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்தது.
அவள் தந்தை அமைச்சர் ராஜராஜனை பார்க்க வரும் கூட்டத்திற்கு அளவில்லாமல், வீடு முழுவதும் ஆட்களும், வீட்டின்...
அத்தியாயம் 25 :
ராஜ ராஜன் வீட்டு கேட்டின் முன் நின்று தீரனும் விவேக்கும் தீவிரமாய் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜனுக்கு ஏதோ புரியாத மொழி படம் பார்ப்பதை போன்று இருந்தது.
“இப்படி எல்லாத்தையும் அவசரமா பண்ணதுல எனக்கு விருப்பமே இல்லை ராஜா. அதனால ரிஷப்ஷன் கிராண்டா பண்ணிடனும். பிரகதி கல்யாணத்தை எப்படி பண்ணமோ...
“ஏசிபி இது சுகந்தன்” என்றாள் குரல் நடுங்க.
“எஸ் எஸ்..! டாக்டர் சுகந்தன். அது நான் தான். இப்போ அதுக்கு என்ன?” என்று பூட்டியிருந்த அறைக்கதவை திறந்து கொண்டு வந்த சுகந்தனைப் பார்த்தவர்கள் அதிர்ந்து நின்றனர்.
“டேய் நீ எப்படி இங்க? உன்னை யாரு வீட்டுக்குள்ள விட்டது?” என்றார் ராஜன்.
“வேற யாரு? எல்லாம் உங்க தம்பி தான்...