“உங்க ஹாஸ்பிட்டல்ல விமல்னு ஒரு பேஷன்ட் அட்மிட் ஆகியிருக்கான்ல டாக்டர். அவன் எதுக்காக இங்க அட்மிட் ஆகியிருக்கான்? அவனுக்கு என்ன ஹெல்த் இஷ்யூஸ்?” என்றான் அகன்.
“நீங்க எந்த விமலை சொல்றிங்க?” என்றான் அகன்.
தன் மொபைலில் இருந்த போட்டோவைக் காட்டினான் விவேக்.
“எஸ், இங்க தான் அட்மிட் ஆகியிருக்காங்க. ஹார்ட் பிராப்ளம். கொஞ்சம் சிவியர் கேஸ் தான்” என்றான் அகன்.
“நீங்க எந்த மாதிரியான டீட்டெயில்ஸ் கேக்குறிங்க மிஸ்டர் தீரன்?” என்றான் அகன்.
“நல்லா இருந்த பையனுக்கு திடீர்னு ஹார்ட் பிராப்ளம் எப்படி? இன்பேக்ட் எங்க கேஸ்ல முக்கியமான விட்னஸ் இவன் தான்” என்றான் தீரன்.
“இந்த பேஷன்ட் ட்ரக்ஸ் அடிக்ட். அது இவரோட இதயத்தை பாதிச்சிருக்கு” என்றான் அகன்.
“எஸ் டாக்டர்..! இந்த ஒரு விஷயத்தை கிளாரிபை பண்ணத்தான் நாங்க இங்க வந்ததே. அது எங்களுக்கு ஏற்கனவே தெரியும்.” என்ற அகன்,
“ஒரு டிரக் யூசர்க்கு இப்படி ஷார்ட் பீரியட்ல ஹார்ட் பிராப்ளம் வருமா?” என்றான்.
“வொய் நாட்” என்ற அகன் அவர்களை ஆழ்ந்து பார்க்க,
“என்னாச்சு டாக்டர்?” என்றான் தீரன்.
“இதை உங்ககிட்ட சொல்லலாமா வேண்டாமான்னு தெரியலை. பட், நீங்க டிப்பார்ட்மென்ட்ல இருக்குறதால சொல்றேன். ஏன் உங்களுக்கே தெரிஞ்சிருக்க கூட வாய்ப்பு இருக்கு. ஹெராயின் மாதிரி செயற்கையா உருவாக்குற டிரக்ஸ் தான் இது. சட்டத்துல இருந்து தப்பிக்கிறதுக்காக இதோட பார்முலாவை மாத்திட்டே இருப்பாங்க. இதை லீகல் ஹஸ் இல்லைன்னா டிசைனர் ட்ரக்ஸ்னு சொல்லுவாங்க. இதுல பல வகை இருக்கு. சுருக்கமா என்பிஎஸ்னு சொல்லுவோம். எடுத்துக்குற அளவைப் பொறுத்து இதோட பாதிப்பு இருக்கும். ஆனா நேரா பாதிக்கப்படுறது இதயம் தான்” என்றான் அகன்.
“ஐ க்னோ டாக்டர். பட் இதை கண்டுபிடிக்க முடியுமா?” என்றான் தீரன் யோசனையுடன்.
“லேப்ல தயாரிக்கிற செயற்கை ட்ரக்ஸ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாது. இவ்வளவு ஏன் அது ட்ரக்னு தெரியாமையே குடுக்க முடியும். எதுல கலந்து கொடுத்தாலும் இதை கண்டு பிடிக்கவே முடியாது. நிறம், மணம்னு எதுவும் கிடையாது. இதுல செயற்கை கேத்தினோன்கள் நரம்பு மண்டலத்தைத் தூண்டி, இதயத்துடிப்பை பாதிக்கும். செயற்கை ஒபியாய்டுகள் இருக்குறதுலையே ரொம்ப ஆபத்தான ரசாயனம். கொஞ்சமா எடுத்துகிட்டாலும் ப்ரீத்திங் இஷ்யூஸ் ஸ்டார்ட் ஆகி உயிர் போறதுக்கு கூட அதிக சான்சஸ் இருக்கு” என்றான் அகன்.
“மை காட்! என்ன டாக்டர் சொல்றிங்க?” என்ற விவேக்,”அதி அப்போ நாம ஷிப்ல ரெக்கவர் பண்ணது டாக்டர் சொன்ன மாதிரியான ட்ரக்ஸா?” என்றான் விவேக்.
“எஸ்” என்ற தீரன்,
“ஒருத்தர் இந்த வகை ட்ரக்ஸ் எடுத்திருக்காங்களான்னு பிளட் டெஸ்ட்ல கண்டு பிடிக்க முடியுமா டாக்டர்?” என்றான் யோசனையுடன்.
“நோ! பிளட் டெஸ்ட்ல சான்சஸ் கம்மி. பட் யூரின் டெஸ்ட் அண்ட் சலைவா டெஸ்ட் மூலமா கண்டு பிடிக்க முடியும். பிளட் டெஸ்ட்ல கண்டுபிடிக்கணும்னா அட்வான்ஸ் டாக்சிகாலாஜி டெஸ்ட் மூலமா என்ன வகையான ட்ரக்ஸ் எடுத்திருக்கான்னு கண்டுபிடிக்க முடியும். கேஸ் க்ரோமேட்டோகிராப்பி ,மாஸ் ச்பெக்ட்ரோமெட்ரி மாதிரியான அட்வான்ஸ் டெக்னாலஜி மூலமா அக்யூரட்டா கண்டு பிடிக்க முடியும். அதுக்கு டூ ஆர் த்ரீ டேய்ஸ் ஆகும்” என்றான் அகன்.
“எப்படி டாக்டர் உங்களுக்கு இவ்வளவு விஷயம் தெரியுது. ஆறு மாசமா இதே வேலையா இருக்கோம். எங்களுக்கே இன்னும் சில விஷயங்கள் புரிபடலை” என்றான் விவேக்.
“நான் இதுக்கு முன்ன ஆஸ்திரேலியால தான் வொர்க் பண்ணேன் மிஸ்டர் விவேக். இன்பேக்ட் என்னோட ஹையர் ஸ்டடிஸ் எல்லாமே அங்கதான். ட்வென்ட்டி பெர்சன்ட் பீப்புள்ஸ் அங்க ட்ரக்ஸ் யூஸ் பண்றாங்க. குறிப்பா எக்ஸ்டசி,கொக்கெயின் யூசேஜ் அங்க அதிகம். இதைப் பத்தி எனக்கு தெரியாம இருந்தா தான் நீங்க ஆச்சர்யப் படனும். அன்ட் பேசிக்கலி ஐ ஆம் அ டாக்டர்” என்ற அகனுக்கு இதழ்களில் சிறு புன்னகை.
“செவன்ட்டி பெர்சன்ட் சான்ஸ் இல்லை மிஸ்டர் தீரன்” என்றான் அகன்.
“அந்த விமல் கிட்ட வாக்குமூலம் வாங்க முடியுமா டாக்டர்?” என்றான் தீரன்.
“அது உங்க திறமை தான்” என்ற அகன் அவர்களை அந்த விமல் இருந்த அவசர சிகிச்சை பகுதிக்கு அழைத்து சென்றான்.
“மருத்துவ உதவியுடன் சுவாசித்துக் கொண்டிருந்த விமலோ, தீரன் மற்றும் விவேக்கை பார்த்த உடன் அடையாளம் கண்டு கொண்டான். அவன் கண்கள் அதிர்ச்சியில் விரிய,
“என்ன விமல் ? எப்படி இருக்கு உடம்புக்கு?” என்றபடி சாவகாசமாய் தன்னருகில் அமர்ந்த தீரனை பீதியுடன் அவன் பார்க்க,
“என்கிட்ட இருந்து தப்பிச்ச வரைக்கும் சரி. ஆனா நேரா இப்படி ஹாஸ்பிட்டல்ல வந்து படுத்துட்டியே? அதுக்கு ஏன் அவ்வளவு ரிஸ்க் எடுத்து தப்பிக்கணும் மேன்?” என்றான் இயல்பாய்.
“ஆறு மாசத்துக்கு முன்னாடி உன்னோட காலேஜ்ல ட்ரக்ஸ் சப்ளை பண்ணது முழுக்க நீதான். பட் உனக்கு அதைக் குடுத்த அந்த ஆள் யாரு?” என்றான் தீரன்.
“எ..எனக்குத் தெரியாது சா..சார்” என்றான் விமல்.
“நோ விமல்! உனக்கு நல்லா தெரியும்” என்றவன்,
“வெண் மொழி தெரியுமா?” என்றவுடன் விமலின் கண்கள் கலங்கிவிட்டது. அதைப் பார்த்த தீரன் உறுதிப் படுத்திக் கொண்டான்.
“மொழிக்கும் நீதான் டிரக்ஸ் குடுத்திருக்க, அவளுக்குத் தெரியாமையே. பசங்களுக்கு சப்ளை பண்ணிட்டு உன்னோட சப்ளையர் வெண்மொழிதான்ற மாதிரி ஒரு பிம்பத்தை கிரியேட் பண்ணியிருக்க ஐ ஆம் ரைட்” என்ற தீரன் அவனை கூர்மையுடன் பார்க்க,
“இ..இல்லை” என்றான் அவன் கஷ்ட்டப்பட்டு.
“டாக்டர் அகன்! இவன் பிழைக்க சான்ஸ் இருக்குன்னு தானே சொன்னிங்க. ஆனா இவன் பிழைச்சு என்ன பண்ண போறான்? நீங்க என்ன பண்றிங்க இவனுக்கு ட்ரீட்மென்ட்டெல்லாம் பார்க்க வேண்டாம். விட்ருங்க, அவனே செத்துடுவான்” என்றவனை பேயறைந்தவன் போல் பார்த்தான் விமல்.
“நான் சொல்றது சரிதானே விமல். நீ ட்ரக்ஸ் ப்ரோவைட் பண்ண எல்லாருமே பெரிய இடத்து பசங்க. உன்னை அப்படி செய்ய சொல்லி தூண்டினது யாரு? இதுல மத்த பசங்களுக்கும் தொடர்பு இருக்கா? இதை சொல்லிட்டா கண்டிப்பா டாக்டர் உனக்கு ட்ரீட்மென்ட் பார்ப்பார், நீயும் பிழைக்க வாய்ப்பிருக்கு” என்ற தீரனைப் பார்த்தவன் வாயைத் திறக்கவேயில்லை.
“என்ன சார் நீங்க? சின்னப் பையன் இவன்கிட்ட போய் பொறுமையா பேசிட்டு. இருக்குற வயர் எல்லாத்தையும் உருவி விடுங்க. அப்படியே அவன் உசிரும் உருவிகிட்டு போகட்டும். எத்தனை எங்ஸ்டர்சோட லைப் ஸ்பாயில் ஆகியிருக்கு இவன் கேங்கால” என்ற குமரன் அனைத்தையும் உருவப் பார்க்க, அவனோ பயத்தில் பேயறைந்தவன் போல் ஆனான்.
“நானாவது சாப்ட்டா ஹேண்டில் பண்றேன். மிஸ்டர் குமரன் அப்படி எல்லாம் ஹேண்டில் பண்ண மாட்டார். அவர் ஸ்டைலே தனி. இல்லையா குமரன்?” என்ற தீரன் குமரனைப் பார்க்க, அவனோ சிரிப்பை அடக்கியபடி நின்றான்.
அகன் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தவன், விமலையும் பார்த்தான்.
“பேஷன்ட் ஏதோ சொல்ல வரார் தீரன்” என்றான் அகன்.
“மொ..மொழி தான் சார்” என்றான் திக்கித் திணறி. தீரனின் உடல் இறுக, கையை மடக்கிக் கொண்டான்.
“நிஜமாவா” என்றான் தீரன்.
“ஆ..ஆமா சார்” என்றான்.
தீரன் விவேக்கைப் பார்க்க, வெளியே சென்ற விவேக் வரும் போது மொழியை அழைத்துக் கொண்டு வந்தான். எதுவும் புரியாமல் ஒரு யோசனையுடன் வந்தவள், அங்கே விமலைக் கண்டு அதிர்ந்தாள்.
அதுவரை இருந்த நிதானம் அவளை விட்டு செல்ல,
“ஹேய் விமல்? நீ எப்படி இங்க? என்னாச்சு உனக்கு?” என்றாள் அடுக்கடுக்காய்.
விமல் அதிர்வுடன் அவளைப் பார்க்க,
“என்னாச்சு சார் விமலுக்கு? அவன் ஏன் இங்க இருக்கான். நீங்க ஏன் அவனைச் சுத்தி நிக்கிறிங்க?” என்றாள் புரியாமல்.
“விமலைத் தெரியுமா உங்களுக்கு?” என்றான் தீரன்.
“எஸ்! ஒரே காலேஜ் தான். ஸ்காலர்ஷிப்ல படிச்சான். ரொம்ப நல்லா படிப்பான். சிக்ஸ் மன்த் முன்னாடி தான் கோர்ஸ் கம்ப்ளீட் பண்ணோம். என்னோட பிரண்ட் தான்” என்றாள் மொழி.
“ரொம்ப நல்ல பையன் சார். மிடில் கிளாஸ் பேமிலி. அதுக்காகவே நல்லா படிச்சு ஒரு பொசிஷக்கு போகணும்னு சொல்லுவான்” என்றாள் மொழி. அவள் அப்படி சொன்னவுடன் விமலின் கண்கள் கலங்கியது.
“டாக்டர், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. விமலை எப்படியாவது பிழைக்க வச்சிடுங்க. அவனை நம்பித்தான் அவன் பேமிலியே இருக்கு” என்றாள் மொழி.
“எவ்வளவு செலவானாலும், அதை குடுக்குற அளவுக்கு அவங்க பேமிலிகிட்ட இருக்கா மொழி?” என்றான் தீரன் மீண்டும்.
“மொத்த பணத்தையும் நான் கட்டிடுறேன் சார்” என்றவள் “நீங்க ட்ரீட் மென்ட் ஸ்டார்ட் பண்ணுங்க டாக்டர்” என்றாள். அவளை குற்ற உணர்வுடன் விமல் பார்த்திருக்க, தீரன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீங்க டாக்டர் தாரா மேம் ரூம்ல வெயிட் பண்ணுங்க மொழி” என்று தீரன் சொல்லவும் ஒரு வித அமைதியின்மையுடன் சென்றாள் மொழி.
“இப்போ சொல்லுங்க விமல், வந்துட்ட போன மொழி தான் உங்களுக்கு ஹெட் இல்லையா? ஐ மீன் ட்ரக்ஸ் சப்ளையர்” என்றான் நக்கலான குரலில். விமல் அப்போதும் அமைதியாய் இருக்க,பொறுமையிழந்த குமரன் வேகமாய் அவனை சுற்றியிருந்த வயர் அனைத்தையும் கழற்றி எடுத்துக் கொண்டிருந்தான்.
“குமரன் என்ன பண்றிங்க?” என்ற அகனின் குரல் எல்லாம் அவனின் காதில் விழுந்ததைப் போலவே தெரியவில்லை.
விமலோ மூச்சிற்கு ஏங்க,
“சார் நைட் டியூட்டி பார்த்து செம்ம டயர்ட். நான் கொஞ்ச நேரம் தூங்குறேன் சார். இவன் உயிர் போனதுக்கு அப்பறம் என்னை எழுப்பி விடுங்க. போற உயிர் எப்ப போனா என்ன?” என்றவன் சாவகாசமாய் சேரில் அமர்ந்து கண்களை மூடிக் கொள்ள, விவேக் ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.
“என்ன பண்ணிட்டு இருக்கீங்க குமரன்? இவர் என்னோட பேஷன்ட்” என்றான் அகன்.
“சாரி டாக்டர், இவன் எங்களோட விட்னஸ் பிளஸ் அக்யூஸ்ட்” என்ற குமரன் கண்களை மூடிக் கொள்ள, தீரன் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
மூச்சிற்கு ஏங்கிய விமலோ, வேறு வழியின்றி குமரனின் கைகளை பற்றியிருந்தான்.
“அட என்னாப்பா நீ, உண்மையை சொல்லவும் மாட்டேங்குற? என்னையத் தூங்க விடவும் மாட்டேங்குற?” என்றான் சலிப்பாய்.
“டாக்டர் உங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? ஒரு பேஷன்ட் உயிருக்கு போராடிகிட்டு இருக்கும் போது வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க? ட்ரீட்மென்ட் பண்ணுங்க” என்றான் குமரன்.
அவனை ஏற இறங்க பார்த்த அகன், மீண்டும் அனைத்தையும் அவனுக்கு பொருத்திவிட, அவனின் மூச்சு கொஞ்சம் கொஞ்சமாய் சீரானது.
“இப்போ சொல்லு விமல்” என்று அவனுக்கு அருகில் அமர்ந்த குமரனை பயப் பார்வை பார்த்தவன், தீரனின் பக்கம் திரும்பிக் கொண்டான்.
“பையன் என்கிட்ட சொல்ல பிரியப்படுறான் போல? இல்லையா விமல்?” என்று தீரன் கேட்க, மெதுவாக தலையை ஆட்டியிருந்தான் விமல்.
“சொல்லு, உன்கிட்ட ட்ரக்ஸ குடுத்து உன்னை சப்ளை பண்ண சொன்னது யாரு? இதுல வெண்மொழி எப்படி வந்தாங்க? அவங்களுக்கும் இந்த கேசுக்கும் என்ன சம்பந்தம்?” என்றான் தீரன்.
“நான் பொய் சொல்லலை சார். காலேஜ் கேண்டீன்ல இருந்து தான் முதல்ல இந்த பழக்கம் ஸ்டார்ட் ஆச்சு. நாங்க அங்க தான் டெய்லி டின் ஜூஸ் குடிப்போம். ஆனா, ஏன்னே தெரியாம அந்த டேஸ்ட்டுக்கு நாங்க அடிமையாகிட்டோம். இன்பேக்ட் டெய்லி அங்க போய் டின் ஜூஸ் குடிக்காம இருக்க முடியாதுன்ற அளவுக்கு. அது எங்களுக்கு ட்ரக்ஸ்னே தெரியாது. பெருசா எந்த இம்பேக்ட்டையும் அது எங்களுக்கு கிரியேட் பண்ணலை. டெய்லி அதை குடிக்கனும்னு நினைக்கிறதைத் தவிர்த்து” என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் கண்களை மூடிக் கொள்ள,
“ட்ரிங்க் ஸ்பைக்கிங்” என்று குமரனைப் பார்த்து கூறிய தீரன்,
“அ..அது..! திடீர்னு அந்த டின் ஜூஸ் டிமான்ட் ஆகிடுச்சு. எங்களால அதை குடிக்காம இருக்க முடியலை. அந்த டேஸ்ட் எங்களுக்கு பிடிச்சிருக்குன்னு நினைச்சோம். எவ்வளோ ட்ரை பண்ணியும் அது எங்களுக்கு திரும்பவும் கிடைக்கலை. எல்லாரும் பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆகிட்டோம். அப்போ தான் ஒரு நாள் கையில ஒரு பாக்ஸ் புல்லா அந்த டின் ஜூஸோட மொழி வந்தா..” என்றான் விமல்.
“வாட்” என்றான் தீரன்.
“ஆமா சார். மொழி தான் கொண்டு வந்தா. நான் அதை வாங்கி எல்லாருக்கும் குடுத்தேன். ரொம்ப நாள் கிடைக்காம இருந்து கிடைக்கவும் எங்க செட்ல ஒருத்தன் அதை அளவுக்கு அதிகமா குடிச்சான். அடுத்த ரெண்டு நாள்ல அவன் உயிரோடவே இல்ல” என்றான் விமல்.
“அது ட்ரக் டரிங்க்னு உங்களுக்கு எப்போ தெரிய வந்தது? இது மொழிக்கு தெரியுமா?” என்றான் கூர்மையுடன்.
“ஆரம்பத்துல எங்களுக்கு தெரியாது சார். அந்த பையன் இறந்ததும் இதனால் தான்னும் எங்களுக்குத் தெரியாது. அதுக்கடுத்து ரெகுலரா மொழி தான் ஒரு பாக்ஸ் புல்லா கொண்டு வந்து கொடுப்பா. நான் எல்லாருக்கும் கொடுப்பேன். அதைக் குடிக்கும் போது ஜஸ்ட் ஒரு ஹெவன் பீல். பெருசா எந்த இம்ப்பேக்ட்டும் இருக்காது. ட்ரக்ஸ் எடுத்துக்குறவங்க பிகேவியர் எதுவுமே இருக்காது. எப்பவும் போல நார்மலா இருப்போம்” என்றான்.
“அது எப்போ உங்களுக்குத் தெரிய வந்தது? மொழி தான் உங்களுக்குக் குடுத்தான்னா, நீ எப்படி அந்த கேங்கடோ ஷிப்ல இருந்த? நீ அவங்களோட வரலைன்னு மொழி சொல்றாங்க. ஆனா அந்த கேங்கை பிடிக்க வரும் போது, அவங்களோட நீ எப்படி இருந்த?” என்றான் தீரன். அவன் பேச்சில் தீவிரம் கூடியிருந்தது.
“அ..அது..ஜித்..ஜித்” என்றவன் அதற்குமேல் முடியாமல் மயங்கியிருந்தான்.
“ஷிட்” என்று பல்லைக் கடித்தவன்,
“இது சாத்தியமா டாக்டர் அகன். டிரக்ஸ் எடுத்தும் அந்த பீல் இல்லைன்னு சொல்றாங்க? ஆனா டிரக்ஸ் எடுக்குறவங்க எப்படி பிகேவ் பண்ணுவாங்கன்னு நமக்குத் தான் நல்லா தெரியுமே?” என்றான் தீரன்.
“அதான் பேஷன்ட்டே சொன்னாங்களே தீரன். பர்ஸ்ட் அந்த டேஸ்ட்க்கு அடிக்ட் ஆக்கியிருக்காங்க. அப்பறம் லைட்டா ஒரு ஹெவன் பீல் குடுத்திருக்காங்க. அவங்க பிளானை கொஞ்சம் கொஞ்சமா எக்ஸ்கியூட் பண்ணியிருக்கலாம்” என்றான் அகன்.
“பாசிபிளா டாக்டர்?”
“இங்க எல்லாமே டோசெஜ் தான் தீரன். தென் அவங்க பாலோ பண்ற பார்முலா. அவங்களுக்கு எப்படி தேவையோ அந்த அளவுக்கு ரசாயன சேர்க்கை இருக்கும். பர்ஸ்ட் லைட் டோசெஜ்ல இவங்களை வலையில விழ வச்சிருக்காங்க. இதுல பெருசா எதுவும் தெரியாது. ஆனா இதுவே தொடர்ந்திருந்தா ரொம்ப தனிமையை தேடியிருப்பாங்க. ஒரு விரக்தி நிலைக்கு கொண்டு போயிருப்பாங்க. தனக்கு யாருமில்லை. தன்னை யாருக்கும் பிடிக்கிறதில்லை. இது மட்டும் தான் நமக்கு அப்படின்ற நிலையை உருவாக்கியிருப்பாங்க. குடும்பத்துல இருந்து விலகுறது, மனச்சோர்வு எல்லாத்தையும் கடந்து அவங்க போறது தான் லாஸ்ட் ஸ்டேஜ். அந்த லாஸ்ட் ஸ்டேஜ் போயிட்டா மீண்டு வர்றது கஷ்ட்டம். இல்லைன்னா இப்படி ஹெல்த் இஷ்யூஸ்ல வந்து நிக்கும்” என்றான் அகன் தெளிவாக.
“ஆனா இதுல மிஸ். வெண்மொழி எப்படி சார் இன்வால்வ் ஆனாங்க?” என்றான் குமரன் புரியாமல்.
“இந்த கேஸ் நாங்க நினைச்ச அளவுக்கு இல்லை குமரன். இதுல இன்னும் கொஞ்சம் டெப்தா போகணும்னு நினைக்கிறன்” என்றவன் விவேக்கைப் பார்த்தான்.
“உள்ள ரெண்டு பேர் வெளிய ரெண்டு பேர் போட்றலாம் சார்” என்ற குமரனை மெச்சிக் கொண்டான் தீரன்.
“சாரி டாக்டர்..! இதுல உங்களுக்கு எந்த இஷ்யூவும் வராம நாங்க பார்த்துக்கிறோம். அன்ட் முடிஞ்ச அளவுக்கு விமல் எங்களுக்கு உயிரோட வேணும். இன்னும் கொஞ்சம் அவன்கிட்ட விஷயம் கேதர் பண்ணனும். மயக்கம் எப்போ தெளியும்?” என்றான் தீரன்.
“பேஷண்ட்டோட ஹெல்த் கண்டிஷன் ரொம்ப கிரிட்டிகல் மிஸ்டர் தீரன். எல்லா பேஷ்ண்ட்டையும் முடிஞ்ச அளவு காப்பாத்த தான் பார்ப்போம். பேஷன்ட் பேசுற கண்டிஷனுக்கு வந்த உடனே கண்டிப்பா உங்களுக்கு இன்பார்ம் பண்றேன்” என்றான் அகன்.
“தேங்க் யு டாக்டர்” என்ற தீரன்..
“கிளம்பலாமா?” என்றான்.
“அதி அதுக்குள்ளவா?” என்றான் விவேக் புரியாமல். தீரன் ஒரு அர்த்தப் பார்வை பார்க்க அதற்கு மேல் விவேக் எந்த கேள்வியும் கேட்கவில்லை.