அலரை அணைக்கும் அனல்
பின் ஸ்டெல்லா அவர் கையைப் பிடித்தபடியே,
“அத்தை, ரூமிற்கு கூட்டிட்டு போங்க அத்தை” என்று சொன்னவளின் கண்களையும் அதில் இருந்த தவிப்பையும் உணர்ந்தவராக அமுதா, அவளை அழைத்துச் செல்ல,
அவள் பின்னாலேயே ரூத் தயங்கியபடி வந்தாள். வெளியே வந்தவள், அமுதா உதவியுடன் மாடி ஏறி அவள் அறைக்குள் செல்லும் முன், நின்று திரும்பிப் பார்த்தவளின் கண்கள் சிவந்து,...
அனல் - 44
தனது ஏழு மாத வயிற்றை வருடிக்கொண்டே, மற்றொரு கையில் ஒரு கதைப் புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள் ஸ்டெல்லா.
கண்கள் அடிக்கடி வாசற்கதவைப் பார்த்துக்கொண்டே இருந்து, முழுமையாக அந்த கதைக்குள் மூழ்கிப் போக விடாமல் அவளை தடுத்து கொண்டு இருந்தது.
“ப்ச் த்ரூவ்…. இன்னைக்குமா…” என்று சலித்துக்கொண்டவள் நேரத்தைப் பார்க்க
அது இரவு ஒன்பது மணி...
அனல்- 43
ஆதிஷ் சொல்லிச் சென்றதைக் கேட்டுத் தொப் என்று சோபாவில் அமர்ந்த வாணியைப் பிடித்த கண்ணப்பன்.
“வாணிம்மா என்னம்மா?” என்று பதற, அவர் “என்னங்க இவன் இப்படிப் பேசிட்டுப் போறான்?”
“எனக்கும் அதான் ஒன்னும் புரியல, இவனும் அந்தப் பொண்ணும் லவ் பண்றாங்க போலன்னு தான் அம்மா சொன்னாங்க. நானும் கூட இப்போதான் லவ் பண்றாங்க போலன்னு...
அனல்- 42
கண்கள் முன்னே பல ஓவியங்கள் அழகாக மாட்டப்பட்டிருக்க, இவள் முன்னே காலி தூரிகையுடன் பல வண்ணங்களும் இருந்தன.
இவற்றை அனைத்தையும் கண்களை விரித்து மகிழ்ந்த முகத்துடன் ஸ்டெல்லா சுற்றிப் பார்த்துவிட்டு,
“இது… இது எல்லாம் நான் வரைந்த ஓவியங்கள் தானா?” என்றவளுக்கு ஆம் என்பது போல தலையசைத்தவன், அவளை விட்டுத் தள்ளி நின்று,
“இந்த ரூம் உனக்கே...
அனல் - 41
அறையின் ஜன்னல் வழியே வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தாள் ரூத்.
ஆதிஷின் அம்மா அப்பா கிளம்புவதைக் கண்டு, அவர்களை ஆர்வமாக எட்டிப் பார்த்தவள், அவர்களுடன் அவனும் தெரிகிறானா என்று எட்டி எட்டிப் பார்த்தாள்.
அவன் இன்றி இவர்கள் மட்டும் தனியாகப் புறப்படுவது தெரிந்தது.
“ப்ச்... இவன் அப்பா அம்மா கூட கிளம்பலையா?” என்று எண்ணியவளின் உள்ளுணர்வு அவளின் தலையில்...
அனல்- 40
அன்று அறைக்குள் ஸ்டெல்லாவை அழைத்துச் சென்ற அமுதா.
“சொல்லு ஸ்டெல்லா , எதுக்கு என் பையனை வேண்டாம்னு சொல்ற ம்மா? நீயும் அவன காதலிச்சத்தானே?” என்று நேராக அவர் விஷயத்திற்கு வந்து விட
அதை கேட்டு விரக்தியான சிரிப்பைச் சிந்தியவள்.
“உங்க பையன் மத்த ஆம்பளைங்க மாதிரி இருக்க மாட்டான்னு நினைச்சு தான் காதலிச்சேன். ஆனா அவர்...
இவர்கள் வந்ததும் இவர்களுக்கு பின்னாலயே என்னவோ ஏதோ என்று அனைவரும் வந்து விட,
“என்ன சார், என்ன ஆச்சு? சாப்பிடாம வந்திடிங்க” என்ற ஆதிஷை அழைத்து ஏதோ சொல்லி அனுப்பியவன், மற்றவர்களையும் ஒன்றும் இல்லை என்று சமாளித்து உண்ண அணுப்பி விட்டு
அவர்கள் சென்றதும், ஆதிஷ் இரண்டு கைகளிலும் தட்டுடன் வந்தவன் அதை த்ரூவிடம் கொடுத்துவிட்டு சென்றான்.
அதில்...
அனல்- 39
த்ரூவின் கடுமையான பார்வையில் மேலோட்டமாக நடந்ததை சுருக்கமாகச் சொல்லி முடித்தான் மதி.
அவன் சொன்னதைக் கேட்டு அவனைப் ஓங்கி பலார் என்று அறைந்தான் த்ரூவ்.
“வீட்டில்ல சண்டை போட்டுட்டு , யாரும் தெரியாத ஊர்ல நண்பன் ன்னு உன்னை நம்பி, உன் கூட வந்து தங்கின பொண்ணை இப்படிப் பேசித் தான் கஷ்டப்படுத்துவியா மதி?”
என்று ரூத்ரமூர்த்தியாக...
பின் அவள் கையில் மெஹந்தி களையாத படி வைத்தவள் கண் மூடி உறங்க முயல, ஏனோ தூக்கம் வர மாட்டேன் என்று அடம் பிடித்தது.
சற்று நேரம் முன் இருந்த சந்தோஷமும் வியப்பும் எங்கே போனது என்று தெரியாமல் மனதில் சோகம் வந்து அப்பி கோள்ள,
“சாதாரண பொண்ணுங்க மாதிரி நம்மளால இருக்கவே முடியாதா?” என்று மனம்...
அனல்- 38
தலையணையை இறுக அணைத்தபடி சுகமாக ஆழ்ந்த நித்திரையில் இருந்த ஸ்டெல்லாவை எழுப்ப மனம் இன்றி, அவள் அருகே நேரத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ரூத்.
மணி எட்டு தாண்டிச் சென்றுகொண்டிருக்க, விரல் நகத்தை பதட்டத்தில் பிய்த்துக்கொண்டு இருந்தவள் தலையில் பட் என்று அடி வைத்த மணியம்மாள்.
“உன்ன எதுக்குடி இங்க அணுப்புன?... அவள எழுப்புறத விட்டுட்டு நகத்தை...
அனல் - 37
“ஜோசப், ஸ்டெல்லான்னு ரெண்டு பேரையும் ஒன்றரை வருஷம் ஸ்கூலுக்கு அனுப்பாம, அங்க சென்னையில பாட்டி வீட்டுக்கு போய் படிக்கப் போயிருக்காங்கன்னு, பொய் சொல்லி ஸ்கூல்ல டீசி வாங்கிட்டு, பக்கத்து வீட்டுல இருக்கவங்களுக்கும் அதையே சொல்லி நம்ப வச்சிருக்கான்.
அவங்களும் பெண் பிள்ளை அதான் பார்க்க முடியல போலன்னு நினைச்சு இருக்காங்க.
இவன் அந்த வீட்டுக்குள்ளேயே...
அனல் - 36
ஆதிஷ் அலுவலகத்தையே சுற்றிச் சுற்றி வந்தவன் மூச்சிரைக்க, “இந்த பாட்டி எங்க... நிக்கச் சொன்ன இடத்துல நிக்காம எங்க போனாங்க?” என்று புலம்பினான்.
“ஒருவேளை நான் வர்றதுக்குள்ள உள்ள போயிட்டாங்க போலயே” என்று எண்ணியவன் அலுவலகம் உள்ளே சென்று ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் விசாரிக்க, அந்தப் பெண்
உள்ளே த்ரூவ் அவரை அழைத்துச் சென்றிருப்பதாகச்...
அனல்- 35
அவன் டேபிளில் இருந்த ஃபைலை உற்றுப் பார்த்திருந்தான் த்ரூவ் . அது ஸ்டெல்லாவைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய ஃபைல்.
சற்று தயக்கம் இருப்பினும் அதை கையில் எடுத்துத் திறந்து பார்த்தான் த்ரூவ். அதே நேரம், ஸ்டெல்லா தன் அம்மாவின் சிறுவயதுப் புகைப்படத்தின் முன்னே நின்று அதை வருடிக்கொண்டிருந்தாள்.
இன்று என்னமோ அவளின் நினைவு அதிகமாகவே...
அனல்-34
முகம் பிரகாசிக்க, அனைவருக்கும் புன்னகை முகத்துடன் காலை வணக்கம் சொல்லியபடி அவன் அலுவலக அறைக்குள் சென்றான் த்ரூவ்.
அவனின் நாற்காலியில் அமர்ந்தவன், விசில் அடித்தபடி தருணை அழைத்து
“தருண், மூனு வாரத்துக்குள்ள ஒரு நல்ல மண்டபத்தைப் புக் பண்ணு. மேரேஜ்கு டெக்ரேஷன் ரீஸப்சன் ன்னு மேரேஜ்க்குத் தேவையா என்ன வேணும் எல்லாம் ரெடி பண்ணிடு. ஏதாவது டவுட்னா...
அனல்- 33
சோர்ந்து போய் வெகு நாள் கழித்து வீட்டிற்கு வந்த த்ரூவை மகிழ்ச்சியுடன் பார்த்த அமுதா, அவன் முகத்தில் இருந்த கவலையைப் பார்த்துவிட்டு,
“த்ரூவ்….. என்னடா…. என்ன ஆச்சு இப்படி வந்திருக்க? எல்லாம் ஓகே தான?”
என்று சோபாவில் அமர்ந்து கேள்வி கேட்ட அம்மாவைப் பார்த்ததும், கண்கள் கலங்கி, ரத்தெமென சிவந்த கண்களுடன் அவன் அம்மாவை ஏறிட்டவன்.
“அம்மா….”...
அனல் - 32
அன்று இரவு சிங்கப்பூரில் த்ரூவை தள்ளிவிட்டு கதவு நோக்கி சென்றவள், த்ரூவின் அழைப்பில் கதவைத் திறவாமல் அப்படியே உறைந்து போய் நின்று விட்டாள்.
“அம்மூ….. என்ன விட்டுப் போறியா டி….” என்றவனின் கரகரப்பான குரலில் தான் எத்தனை அன்பு.
இவள் பிறந்ததிலிருந்து இன்று வரை இத்தனை பாசமாக இவளை அழைத்தவன் இவன் ஒருவருனே.
ஒருவனின் அழைப்பில்...
அனல் - 31
புருவத்தைச் சுளித்துக்கொண்டு சோர்ந்து போய் உறங்கிக் கொண்டிருந்த ஸ்டெல்லாவை, கண் இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் த்ரூவ்.
த்ரூவ் ஸ்டெல்லாவை காதலாகப் பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்த மணியம்மாள்.
“யாரு வீட்டுப் புள்ளையோ, இந்த பிடிவாதக் காரிகிட்ட மாட்டிக்கிட்டு தவிக்கப் போறாரு” என்று யோசித்தபடியே அமர்ந்திருந்தார்.
ஸ்டெல்லாவின் ஒருபுறம் த்ரூவ் அமர்ந்திருக்க, மறுபுறமோ பாட்டி அமர்ந்திருந்தார்.
அவரால் இப்போதும் இவள் கருவுற்று...
அனல் - 30
ரூத், ஸ்டெல்லா இருவரும் சென்னையில் இப்போது இருக்கும் வீட்டிற்கு வந்த போது, ஸ்டெல்லாவிற்கு வயது பத்து என்றாள் ரூத் பிறந்து மூன்றே நாள் ஆன கைக்குழந்தை.
முதல் முறை ஆதிஷை அவன் பாட்டி தான் ரூத்தை காண அழைத்துக்கொண்டு சென்றார்.
அப்போது கை கால்களை உதைத்துக் கொண்டு தனியே கிடத்தப்பட்டிருந்த குழந்தையைப் பார்த்தவனுக்கு, அவளை...
அனல் - 29
விமானத்தை விட்டு இறங்கிய த்ரூவ் உடன் மதியும் வருவதைக் கண்டு ஷாக் ஆன தருண்
“ஐய்யோ இவரா….? இவரு இங்க என்ன பண்றாரு? சார்ர கடத்த ப்ளான் பண்ணி மிரட்டி கூட்டிட்டு வராரோ?”
என்று இருவரையும் உற்று பார்க்க, த்ரூவ் தோளில் கை போட்டபடி மதி அவனைச் சீண்டிக்கொண்டு இருப்பதை பார்த்த தருண், மதி...
அனல்- 28
நடனம் முடிந்து ரூத்தின் இடையைப் பிடித்துக் கொண்டு நின்றவன், அந்த நிமிடம் என்ன மனதில் தோன்றியதோ, அவனது கண்களையே காதலாக பார்த்து நடனம் ஆடியவளை விட மனமின்றி அவள் இடையில் அழுத்தம் கொடுத்து அவளை சுயநினைவுக்கு வர வைத்தவன்.
“ரூத்.... ஐ லவ் யூ...” என்று அவன் காதலை கணநேரத்தில் சொல்லி, அவளை சிலையாக்கி...