அவளுக்கும் அந்த அணைப்புத் தேவைப்பட்டது போல அவன் தோளில் முகத்தைப் புதைத்துச் சாய்ந்து கொண்டாள்.

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஸ்டெல்லா கண் திறப்பதற்குக்காக அனைவரும் வெளியே காத்திருக்க, விஸ்வாவிடமிருந்து போன் அழைப்பு வந்தது.

அதை எடுத்து அவரிடம் பேசி வைத்தவனை மதி, “என்னடா சொன்னாரு?” என்று கேட்டு நிறுத்த, த்ரூவ்

“அது வினோவுக்கு நெஞ்செலும்பு உடைச்சிருச்சா அது இதயத்துல குத்தி கொஞ்சம் டேன்ஞர்ல தான் இருக்கானாம் , சாதிக் கீழ விழுந்த வேகத்துல தலையில அடிபட்டு கோமாவுக்குப் போயிட்டானா?”

“அப்போ அந்த அளு அவனுக்கு என்ன ஆச்சு?”

“அது பாட்டில் பீஸ்லாம் கண்ணுல குத்துனதுல அவன் பார்வை போய்டுச்சு. கை ரெண்டும் எடுத்துட்டாங்களாம், ஆல்ரெடி சுகர் பேஷன்ட் போல காயம் ஆற வாய்ப்பே இல்லன்னு இப்படி பண்ணிட்டாங்கலாம்.”

“இதுனால ஸ்டெல்லாக்கு ஏதாவது பிரச்சனை வருமா டா?” என்றவனுக்குத் தலையை மறுப்பாக அசைத்தவன்.

“செல்ஃப் டிஃபன்ஸில தான் வரும், அப்படிப் பிரச்சனை வந்தாலும் அதை நான் பார்த்துக்க மாட்டேனடா” என்றவனின் கண்ணில் தெரிந்த அனலில் நிம்மதியான மதி.

“ஆனாலும் ஸ்டெல்லா, அவங்க வேற மாதிரி டா. அயன் லேடி” என்று தோளில் தட்டிவிட்டு சென்றான்.

இங்கே ரூத் தயங்கியபடி அங்கு வந்திருந்த மணியம்மாவிடம் அந்தச் சிலுவையைப் பற்றி கேட்டாள்.

அதைக்கண்டு அதிர்ந்தவர், “அது அது… அவன் யாரோ ம்மா” என்று சமாளித்து நிறுத்த, “அப்போ ஜோசப் யாரு பாட்டி? அவங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்று அவர் முகத்தையே பார்க்கவும், அவர்

“உனக்கு எப்படி ம்மா?” என்று அவர் பதறிப்போய் அவளைப் பார்க்க, ஆதிஷ் அவள் தோள் மீது கை போட்டபடி அவள் அருகில் அமர்ந்தவன்,

“நீங்க போங்க பாட்டி, இவன் கிட்ட நான் பேசிக்கிறேன்.” என்றவன் பேச்சில்

“நீ என்னடா பேசுவ?” என்று மேலும் பதறியவரின் முகத்தைத் துடைத்துவிட்டு, “பயப்படாத பாட்டி, எனக்கும் விஷியம் தெரியும்” என்று புன்னகைத்தவன்,

“உனக்கு ஸ்டெல்லா மட்டும் அக்கா இல்ல, ஜோசப்னு இன்னொரு அக்கா இருந்தாங்க. அவங்கள தான் அந்தச் சிலுவை கொன்னுடான் ” என்று மேலோட்டமாக இவள் ஜோசப்பின் பொண்ணு என்ற உண்மையை மட்டும் மறைத்து அவளிடம் சொன்னான்.

“இது ஏன் யாரும் என் கிட்ட சொல்லவே இல்ல?” என்று இவள் அழுதபடி பேச, அவள் கண்களைத் துடைத்தவன், “நீ இப்படி அழுவன்னு தெரிஞ்சு தான்டா”

என்று அவளையும் சமாளித்துக் கொண்டிருக்க, அப்போது அங்கு வந்த நர்ஸ், “அவங்க கண்ணு முழிச்சிட்டாங்க” என்று சொல்லிச் செல்லவும் அனைவரும் ஒன்றாக உள்ளே சென்று விட்டனர்.

இரு மணிக்கெட்டிலும் கட்டு போட்டுக்கொண்டு, கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தும், ஸ்டெல்லாவின் முகம் எந்த ஒரு வலியின் சாயலும் இன்றி, எதிலோ வெற்றி பெற்றது போலப் பிரகாசமாகச் சிரித்துக் கொண்டு இருந்தவளைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து தான் நின்றனர்.

“என்ன இவ அடிப்பட்டு ஹாஸ்பிட்டல்ல தான இருக்கா, ஏதோ சுற்றுலாவுக்கு வந்த மாதிரி பல்லைக் காட்டிட்டு இருக்கா?” என்று வேற யாரும் இல்லை, ஆதிஷ் தான் நினைத்தான்

இத்தனை நாள் சிலுவையை எதுவும் செய்ய முடியவில்லையே என்று அலுத்தத்திலேயே இருந்தவள், இன்று அந்த அனைத்து அழுத்தங்களும் போனது போல மனதார புன்னகைத்தாள்.

அந்த புன்னகை முகத்தைப் பார்த்து அனைவரும் நெகிழ்ந்து போனவர்களாக, அவர்களது முகத்திலும் சிரிப்பும் மகிழ்ச்சியும் துளிர்விட்டிருந்தது.

அந்த மகிழ்ச்சி உடனே அனைத்தும் அதன் பின் நல்லதாகவே தொடர்ந்தது.

அடுத்த ஒரு மாதத்தில், ரூத் – ஆதிஷ் திருமணம் அனைவரின் ஆசிர்வாதத்தோடு நல்லபடியாக முடிந்து, அவன் அவளை அழைத்துக்கொண்டு சிம்லா சென்றிருந்தான்.

ஏழு நாட்கள் அங்கு தங்கி வருவதாகத் திட்டம் போட்டுருந்தான் ஆதிஷ். இந்த ஏழு நாளும் அவள் அவனுக்காக இருக்க வேண்டும் என்று அத்தனை சந்தோஷமாக வந்தவனை, கன்னத்தில் கை வைத்தபடி வேடிக்கை பார்த்து அமர வைத்திருந்தாள் அவன் செல்ல மனைவி.

காலை ஒரு மணி நேரம் மணியம்மாளுக்கு கால் செய்து கதை பேசி, அந்த இடத்தை போனில் சுற்றிப் காட்டுபவள், மதியம் மேல் ஸ்டெல்லாவுக்கு, பின் அமுதாவுக்கு என்று அனைவருக்கும் மாற்றி மாற்றி கால் செய்து பேசும் வழக்கத்தை வைத்திருந்தவளைப் பெருமூச்சு விட்டுத்தான் பார்த்தான்.

அவளை மறுத்து கால் செய்யாதே என்று சொல்லவும், மனமின்றி அவளைத் தான் அருகில் இருந்து பார்த்தபடியே இருப்பான்.

“கல்யாணத்துக்கு முன்னாடி தான் இப்படிப் பார்த்துட்டு மட்டுமே இருந்தேன்னு பார்த்தா, இப்பவும் முக்கால்வாசி நேரம் சும்மா பார்க்கத்தான் வைக்கிறா.” என்று அழுத்துக் கொண்டான்

இப்போதும் ஸ்டெல்லாவிடம் சிரித்து சிரித்து பேசிவிட்டு வைத்தவளைப் பாவமாகப் பார்த்தான் ஆதிஷ் , அதில் அவள்

“என்ன ஆதி ரோம்ம நேரம் நிக்க வச்சிடேனா?” என்று அவனை மேலிருந்து கீழ் வரை சுற்றி அவள் பார்க்கவும், ஆதிஷ்

“என்னடி ஏன் இப்படிப் பார்க்குற? எனக்கு ஒன்னும் இல்ல.”

“அது பாட்டி தான், நம்ம கிளம்புற முன்னாடி என் கிட்ட வந்து, ‘உங்களுக்கு என்ன விட வயசு அதிகம், உங்களுக்கு வயசு ஆகிடுச்சு, அடிக்கடி முட்டி வலிக்கிதுன்னு படுத்துப்பான், நீ தான் ரொம்ப நடக்க விடாம அங்க போய் பார்த்துக்கனும்’ன்னு சொன்னாங்க.

நான் வேற அதை மறந்து ரிசார்ட்ல இருந்து இவ்ளோ தூரம் நடக்க வச்சி கூட்டிட்டு வந்துட்டேன்.”

என்றவளைப் பார்த்து முறைத்தவன், வாய்க்குள் அவன் பாட்டியை நன்றாகப் பிடித்துத் திட்டியவன்

“நான் டென்ஸ் ஆடிட்டு டயர்டா எப்பவோ கால் வலிக்குதுன்னு சொன்னத இந்த பாட்டி எப்படி இவ கிட்ட சொல்லி வச்சிருக்காங்க? இவளும் அப்படித்தான ன்னு என்ன சுத்தி வந்து பார்க்குறா?” என்று பல்லை கடித்தவன்.

அவளை அப்படியே கையில் ஏந்திக்கொள்ள, “பாட்டி தான் சொல்லிச்சினா, நீயும் என்ன சுத்தி வந்து காலைப் பார்ப்பியா டி?

உன்னை….. இப்போ ரூம்க்கு போய் நான் யாருன்னு காட்டுறேன்!” என்று அவள் கத்த கத்த, அவளை தூக்கிய படி அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட்டை நோக்கிச் சென்றான்.

இங்கு ரூத்திடம் போனில் பேசி வைத்தவள், உள்ளே நுழைந்த த்ரூவின் காரைப் பார்த்துவிட்டு, நேரத்தைப் பார்த்து சிரித்து,

“ரொம்ப பன்ச்சுவல் தான்” என்று முணுமுணுத்தபடி சிரித்த முகமாக உள்ளே நுழையும் த்ரூவை பார்க்கவும் அவன்

“அம்மு…” என்றபடி உள்ளே நுழைந்தவன் களைப்பில் அப்படியே அவள் மடியில் தலை வைத்துப் படுத்துவிடவும், தன்னைப்போல அவளும் அவன் தலையைத் தடவி விடத் தொடங்கினாள்.

அவனின் களைத்த முகத்தைப் பார்த்தவள், “என்ன த்ரூவ் ஹெவி வொர்க்கா?” என்று அதே சிரிப்புடன் வினவ, அவளின் முகத்தைப் பார்த்து உதட்டைப் பிதுக்கியவன்

“வொர்க் தான், ஆனா தருண் புலம்புற அளவு இல்ல.” என்றவன் பேச்சில் சிரித்த படியே

“ தருண் புலம்புற அளவுனா  புரியல, அவர் நியாய படி சந்தோஷம் தான படணும் அவருக்கு கிடைச்ச ப்ரோமோஷனுக்கு!”

என்றதும் வாய்விட்டுச் சிரித்த த்ரூவ்.

“அவன் இந்த ப்ரோமோஷன் கூட வேனான்னு உன்ன கம்பெனிக்கு கூப்பிட்டுட்டு இருக்கான் டெய்லி என் கிட்ட, ஓரே புலம்பல் தான் ‘எப்படி மேம், இத்தனை நாள் எல்லா வொர்க்கும் பாத்தாங்க என்னால சுத்தமா பாக்க முடியல’ன்னு” என்றதை கேட்டு ஸ்டெல்லாவும் புன்னகைத்தாள்.

மகிழினி பிறந்த பிறகு வீட்டில் இருந்து வேலை பார்ப்பதையும் விட்டுவிட்டாள் ஸ்டெல்லா. குழந்தை மகிழினியைப் பார்க்கவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது.

அதை பார்த்த த்ரூவ் அவள் பொறுப்பிற்கு தருணை ப்ரோமோஷன் கொடுத்து முழுநேரம் வேலைக்கு அமர்த்தி விட, அதில் முதலில் மகிழ்ந்தவன், இப்போது எல்லாம் வேலைப்பளு தாங்காது புலம்பத் தொடங்கி இருந்தான்.

அதை நினைத்துச் சிரித்த த்ரூவ், ஸ்டெல்லாவை நிமிர்த்திப் பார்த்து,

“உனக்குத் திருப்பி வொர்க் பார்க்க உண்மையாவே விருப்பம் இல்லையா ஸ்டெல்லா?” என்று கடந்த மூன்று நாட்களாகக் கேட்கும் அதே கேள்வியையே இன்றும் கேட்டான் த்ரூவ்.

அதற்கு எப்போதும் இல்லை என்று மட்டும் சொல்லிச் செல்பவள், இன்று முறைத்தபடி

“திரிப்பித் திரிப்பி எத்தனை தடவை இந்த கேள்விய என் கிட்ட கேப்பீங்க த்ரூவ்?” என்று கோபமானவளின் கன்னம் கிள்ளிச் சிரித்தவன்.

“கோபப்படாத டி… ஒரு டவுட்ல தான் திருப்பித் திருப்பி கேட்டேன்.”

“அப்படி என்ன டவுட்?”

“என்ன விட நல்லா கம்பெனி பாக்குற டேலன்ட் கொட்டி கிடக்கு. நானே உன்ன சேர் பெர்சனா போடலாம்னு  இருந்தேன் டி.

அதுவும் இல்லாம வேலைக்கு லீவ் கூட போட மாட்ட அப்படி இருந்த நீ இப்போ திடீர்னு எதுவும் வேணாம்னு வீட்ல தான் பேபி கூட இருக்க போறேன்னு சொன்னா ஏத்துக்க முடியலடி” என்றவனின் மூக்கை பிடித்து ஆட்டியவள்.

“எனக்கு எப்பவும் பிசினஸ்ல இன்ட்ரஸ்ட் இருந்தது இல்ல, இருந்தும் அதை நான் நல்லா பண்ண காரணம் அப்போ என் குடும்ப பொருளாதார நிலை அது நால தான்

அதுக்காக தான் எல்லாத்தையும் கத்துகிட்டு ஓடிட்டே இருந்தேன். அப்போ எனக்கு அதுக்கான தேவை இருந்துச்சு, ஆனா இப்போ எனக்கு வேணாம்னு தோணல.”

“அதான் ஏன் அம்மு, மகிழினி விட்டு பிரிய மனசு வரலயா?”

“அதுவும் ஒரு காரணம் தான் த்ரூவ், ஆனா அது மட்டும் இல்ல” என்று சற்று இடைவெளி விட்டவள்.

“எனக்கு ஒரு குடும்பமா இருக்க ஆசை. சின்ன வயசுல ஒன்லி அக்கா கூட தான் இருந்தேன், அப்புறம் தனிமை. நானே யார் கூடயும் சேர மாட்டேன்

அப்படி இருந்த எனக்கு, நான் வெளிய போகும் போது குடும்பமா சிரிச்சி பேசிட்டு போற குழந்தைகள பாக்க ஒரு ஏஜ் அப்பறம் ஏக்கமா இருக்கும் டா”

என்று த்ரூவ் முகம் பார்க்க அவனும் கலங்கி தான் அவளை பார்த்திருந்தான்.

அவனுக்கும் தெரியுமே அந்த வலி, முழுமையாக அப்பா அம்மா பாசம் இன்றி தானே அவனும் வளர்ந்தான்.

அதை நினைத்து அவளை பார்க்க, அவன் பார்வையில் அவன் மீது சாய்ந்தவள்

“அதான் அந்த மாதிரி ஒரு குடும்பமா இருக்க  வேணும், அதை ரசிச்சி வாழணும்னு ஆசை. ஓடாமா எப்போ என்னன்னு பயப்படாம என் குடும்பம் ன்னு அமைதியா காலைல இருந்து அவங்க கூடவே சந்தோஷமா இருக்கணும்னு ஆசை டா அதான் நோ சொன்ன ” என்று புன்னகை செய்தவளை இறுக அணைத்தவன்.

“எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் இத்தனை கம்பெனி வாங்கியிருக்க மாட்டேனே

உன் கூடவே இருந்து நம்ம மகி கூட ஜாலியா இருந்திருக்கலாம் ” என்று புலம்பியவனை சிரித்தபடி பார்த்தவள்.

“இப்பவும் என்ன த்ரூவ், அதான் சார்ப்பா சிக்ஸ்க்கு வந்திருக்கீங்களே!”

“ஆனா சிக்ஸ் ரொம்ப தூரமா இருக்கு, நான் வேணாம்னா நாலு மணிக்கு அதை மாத்திக்கவா?” என்றவனை முறைத்தவள்.

“ம்ம்ம்…. ஏன் நாளோட நிறுத்தறீங்க? பத்து மணிக்கு போயிட்டு, பன்னிரண்டு மணிக்கு வாங்களேன்.” என்றவளின் நக்கல் புரியாது த்ரூவ்

“ஹான்…. எனக்கு ஓகே தான். வீக் எண்ட் டூ டேஸ் லீவ், வீக்லி ஒரு டூ டேஸ் லீவ் போட்டுக்கலாம். மாசத்துல ஒரு மூணு நாள் லீவு போதும் லடா அம்மு” என்று அவன் சீரியஸாக பேசுவதை பார்த்த ஸ்டெல்லா.

“த்ரூவ் நீங்க பேசுறத கேட்டா தருண் இங்க அழுக ஆரம்பிச்சி போர் கொடி தூங்கிட்டு நின்றவாறு,”

“என், பார்வைய மீறி போர் கொடி துக்கிடுவானா அவன்?” என்றவனை தலையை அசைத்து பார்த்தவள்

“போதும் போதும், இப்படிலாம் யோசிக்க கூடாது. ஒரு நல்ல கம்பெனி ஓனரா வர்க்கு போகணும். எனக்கு நீங்க இப்போ கொடுக்குற நேரமே போதும்ங்க” என்றவளின் சிரிப்பை ஆசையாக பார்த்தவன்.

“அம்மு சிரிக்கிறப்போ ரொம்ப அழகா இருக்கடா” என்றவனின் பேச்சில் அவள் புன்னகை மேலும் விரிய, அவனை தான் காதலாக பார்த்திருந்தாள்.

இரு வேறு கஷ்டத்தில் சந்தோஷமான குழந்தை பருவத்தை இழந்து, நெருப்பில் தகித்து கொண்டிருந்தவர்களை விதியின் விளையாட்டில் காதலால் கட்டி போட்டு, அவர்களின் அனலை அனலால் அணைத்து, இப்போது காதல் மட்டுமே இவர்கள் வாழ்க்கையில் நிறைந்து இருந்தது.

அந்த காதல் பல காலம் கடந்தும் நீடித்து நிற்கும் அவர்களின் வலிமையான நெஞ்சம் போல.

முற்றும்….