அனல் – 48

“நான் சிரிக்காம முறைச்சிட்டே இருந்தாலும் உனக்கு என்ன பிடிக்குமா த்ரூவ்?”

“ஏ… என்ன அம்மு ஏன் இப்படி பேசுற?” என்று அவன் மீது முகத்தை புதைத்துக்கொண்டு பேசியவளின் முகத்தை நிமிர்த்த முயல, அவள் மேலும் முகத்தை ஆழமாக அவன் மார்பில் அழுத்தி.

“ப்ச்…. பதில் சொல்லுங்க, இப்படி நான் கோபமா எல்லாரையும் முறைச்சிட்டு திட்டிட்டே இருந்தாலும் என்ன விட்டு போக மாட்டீங்க தான?” என்றவளை இரு கை கொண்டு அணைத்தவன்,

“நீ என் கூட இருந்தா மட்டும் போதும், நீ எப்படி இருந்தாலும் பரவால்ல. எனக்கான என் அம்மு…. என் கூட இருந்தா போதும்.

இப்படிலாம் பேசாத டா… நீயா போறன்னு சொன்னா கூட நான் விட மாட்டேன்,” என்று அவள் உச்சம் தலையில் முத்தம் பதிக்க,

“அப்போ என்ன, யாராவது தூக்கிட்டு போயிட்டா அப்போ என்னடா செய்வ?” என்றவளை எழும்பு உடையும் அளவு அழுத்திப் புடித்தவன்; எதுவும் பேசாமல் இருப்பதிலேயே இந்த கேள்வி அவனுக்குப் பிடிக்கவில்லை என்று உணர்ந்தவளாக,

“சரி இப்படி கேள்வி கேட்கல த்ரூவ், என்ன விடுங்க வலிக்குது,” என்று இவள் சொன்ன பிறகே அவன் பிடியைத் தளர்த்தியவன், அப்போதும் அவளைக் கைகளுள்ளேயே வைத்தபடி தான் இரவு முழுக்க இருந்தான்.

இவை அனைத்தும் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்க, முகத்தில் பயத்துடன் சுற்றி கண்களை அழைய விட்ட படி வினோ வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான்.

சரியாக ஒரு நான்கு நாள் முன்பு, ஸ்டெல்லா நள்ளிரவு உடல் தூக்கிப் போட கனவிலிருந்து எழுந்து அமர்ந்தவள் , அருகில் தூங்கிப் போயிருந்த த்ரூவ் மீது ஏறிப் படுத்தபடி அவனை எழுப்பி இத்தனை பேச்சைப் பேசியிருந்தாள்.

அவற்றை மூளை சரியாக இப்போது சுட்டிக்காட்டவும், அவள என்னும் பத்திரமா என் கூடவே வச்சிருக்கணும் தப்பு பண்ணிடன்  என்று கலங்கித்தான் போனான்.

ஒரு பக்கம் மூளை ஸ்டெல்லாவின் நினைவுகளை ஒவ்வொன்றாக நினைவுபடுத்திக்கொண்டே இருக்க, அவை அனைத்தையும் போட்டு குழப்பி ஒரு தெளிவில்லாத நிலையில் தான் சென்று கொண்டிருந்தான்.

அப்போது பட்டென்று தலையில் மின்வெட்டாக அந்த நினைவு வரவும், காரை ஓரமாக நிறுத்தியவன் வேகமாக ஸ்டெல்லாவின் பையை எடுத்தான்.

அவளைக் கடத்திச் சென்ற அந்த கழிவறையில் தான் அவள் பை ஒரு மூலையில் விழுந்து கிடந்தது.

அதிலிருந்து வேகமாக ஸ்டெல்லாவின் தொலைபேசியை எடுத்தவன், அதைத் திறந்து ரூத்தின் வாட்ச் இருக்கும் இடத்தைப் பார்த்தான்.

எப்போதும் அந்த வாட்சைக் கட்டியே வெளியே செல்லும் பழக்கம் கொண்டிருந்த ரூத், இன்றும் அதைத்தான் அணிந்திருந்தாள்.

அந்த பழைய வாட்ச்சை காட்டி த்ரூவ் காலை கேட்டதற்கு ஸ்டெல்லாவிடம் கேட்ட பொழுது அவள் அதன் வடிவமைப்பு அதன் பயனை பத்தி இவனுக்கு விளக்கியது இப்போது அவனுக்கு நினைவுக்கு வரவும்

வேகமாக போனில் அந்த வாட்சின் லோகேஷனைப் பார்த்தவன், அது எந்த இடம் என்று தெரிந்து அந்த இடத்தை விஸ்வாவிற்கு அனுப்பி வைத்துவிட்டு,

சாதிக்கின் வீட்டிற்குச் சென்றிருந்த மதி மற்றும் ஆதிஷ் க்கும் விஷியத்தை கூறி அந்த லோகேஷனை அனுப்பி வைத்தவன்; மின்னல் வேகத்தில் தான் அங்கு சென்றான்.

இங்கு ரூத், அவள் கைகளில் கட்டப்பட்டிருந்த கயிறை தளர்த்தி எப்படியாவது எமர்ஜென்சி பட்டனை அமுக்கிவிடக் கஷ்டப்பட்டு முயன்று கொண்டிருந்தாள்.

அத்தனை இறுக்கமாக ஏதோ கயிற்றால் மூவரையும் கட்டி வைக்கப் பட்டிருந்தனர். அதை மீறி எவ்வளவு முயன்றும் இவளால் பட்டனை அமுக்க முடியாமல் போனதால், அவளுக்கு அழுகை வரும் போல இருக்க

அப்போது திடீரென்று கேட்ட அந்த பெரியவரின் குரலில் திடுக்கிட்டு, குரல் கேட்ட திசையை நோக்கித் திரும்பினாள் ரூத்.

தலையில் முடி இன்றி, முகம் எல்லாம் சுருங்கிப் போய், ஒற்றைக் காலை இழுத்து இழுத்து நடந்து வந்தவரைப் பார்த்து இவள் பயந்து போனாள்.

அந்த வயதான நபர் அவளைத் தலை முதல் பாதம் வரை கேவலமாகப் பார்த்த அந்தப் பார்வையில், உடல் அருவருப்பால் கூசிக் போக, அவள் உடலை குறுக்கி கொண்டு பயந்து தலை குனிந்தாள்.

“யார் இந்த பெரியவர்? ஏன் என்ன இப்படிப் பார்க்கிறாரு…” என்று பயந்தவளாக, அந்த கயிற்றை அவிழ்க்க என்னும் வேகமாக முயன்றாள்.

இங்கு அவளைப் பார்த்தபடியே அவன் நிற்க, சாதிக், “என்னடா கிழவா, ஏதோ இந்த பொண்ணுங்களக் கடத்திட்ட பிறகு நான் நிக்கவே மாட்டேன்னு, என்கிட்டாவது போய் நின்மதியா வாழப் போறேன்னு சொன்ன. இப்போ என்ன ன்னா அந்தப் பொண்ண அப்படிப் பார்க்குற?” என்று கேலியாக கேட்டதற்கு

கேவலமாகத் தன் காதைத் தடவிச் சிரித்தவன்,

“அது வந்து சார், அது இந்த பொண்ணு பார்க்குறதுக்கு முன்னாடி…”

“என்னடா கிழவா, இப்படி வெட்கப்பட்டுச் சிரிக்கிற? ஏதோ பெருசா மேட்டர் இருக்கும் போலயே, என்னன்னு சொல்லு. ஏன் இந்த பொண்ணு தான் வேணும்னு வேற அடம்பிடிச்ச?”

என்று இவர்கள் பேசியதை கேட்டு ரூத்தின் உடல் எங்கும் நடுங்கியது. “இயேசப்பா! எங்கள எப்படியாவது இந்த சாத்தானுங்க கிட்ட இருந்து காப்பாத்து!”

என்று மனதார வேண்டிக்கொண்டபடி, அவள் கை சிவந்து அதில் ரத்தம் கசிந்தும், பயத்தில் வேகமாக அந்த நாற்களியோடு கயிற்றை உராய்ந்து அவிழ்க்கப் பார்த்தாள்.

இங்கு அந்த வயதான நபர் ரூத்தை மீண்டும் கண் எடுக்காமல் பார்த்தபடி, “அவளப் பார்க்க என் பொண்டாட்டி மாதிரியே இருக்கா. அதான் கடைசியா ஒரு முறை ஒரு சின்ன தப்பு மட்டும் பண்ணிடலாம்னு முடிவு பண்ணிருக்கேன்”

“ஓ…. உனக்கு உன் பொண்டாட்டிய அவ்வளவு பிடிக்குமா? இப்பவும் அவள மாதிரியே பொண்ண பாக்குற ” என்று வினோ அவளைப் பார்க்க

“ம்ம்ம், அதான் அவள மாதிரி அப்படியே இருக்க, இவள விட மனசு வரல சார்” என்று அவன் அவள் அருகே நெருங்கிச் செல்லச் செல்ல, ரூத்தின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.

அழுதுகொண்டே அவள், “ப்ளீஸ், எங்களை விட்டுடுங்க, நான் உங்களுக்குப் பொண்ணு மாதிரி இல்லையா!”

என்று கண்ணீர் வழியக் கெஞ்சியவளைப் பார்த்து, பற்கள் தெரிய அரக்கன் போல சிரித்தவன்,

“என்ன பத்தி உனக்குத் சரியா தெரியல பொண்ணு… நான்லாம் என் பெண்ணையே பொண்டாட்டியா…” என்று பேச வந்தவனின் வாக்கியம் நிறைவு பெறுவதற்குள், அவன் கழுத்தை எலும்பு உடையும் அளவு நெரித்து பிடித்திருந்தாள் ஸ்டெல்லா.

அவளின் மணிக்கட்டு ஒரு பக்கம் கிழிந்து அதில் இருந்து குருதி கொட்டிக்கொண்டிருந்தும், அது எதுவும் அவளின் கவனத்திற்குக்கூட வராதது போல, அவன் கழுத்தை இரு கைகளால் நெரித்து பிடித்திருந்தாள்.

“என் ஜோசப்ப என்னடா பண்ணின? என் ஜோசப்ப என்னடா பண்ண?” என்று வெறிபிடித்தவள் போல கத்திக்கொண்டே அவனை நெரிக்க, இவளின் பிடியில் அவன் கண்கள் மேலே சொறுக மயங்கி கொண்டிருந்தான்.

இவளைப் பார்த்து வினோவும் சாதிக்கும் அதிர்ந்து போய்,

“ஏ…. அவன விடுடி!” என்று ஓடி வந்து, சாதிக் அவளது முடியைப் பிடித்து இழுக்கவும், அவனை விட்டுவிட்டு இவன் பக்கம் திரும்பியவள், அவன் அடிவயிற்றில் ஓங்கி உதைத்து அவனை கீழே தள்ளிவிட்டாள்

ஏற்கனவே போதை எடுத்திருந்தவன், இவள் அடித்ததில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சுருண்டு கீழே விழுந்தவன் தலையில் கல் வேறு குத்திவிட தலையில் ரத்தம் வர மயங்கியிருந்தான்.

சாதிக் கீழே விழுந்ததைப் பார்த்து, ஏற்கனவே சைக்கோவாக இருந்தவன், மேலும் சைக்கோவின் உச்சத்திற்குச் செல்வது போலத்

“எ……. பொம்பள, நீ அவன அடிப்பியா டி…?” என்று கத்தியபடி அவளை அடிக்க வர, அவன் அடியிலிருந்து சுலபமாக நகர்ந்து தப்பியிருந்தாள்.

இத்தனை வருடங்களாக அவள் கற்று வைத்திருந்த தற்காப்பு கலை அவளுக்குக் கைகொடுத்ததில் சரி சமமாகச் அவனுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் சண்டை போடும் வேகத்தில் எங்கு தோற்று விடுவோமோ என்று பயந்த அவனது மூளை, கேவலமாக ஒரு திட்டத்தை போட்டு கொடுக்க

தீவிரமாகச் சண்டை போட்டுக் கொண்டிருந்தவன், ஸ்டெல்லா இவனை அடிக்கும் சமயமாகப் பார்த்து, அவள் போட்டிருந்த குர்த்தா உடையின் தோள் பக்கம் கை வைத்தவன், அதை இழுத்து கிழித்துவிட்டான். அதில்

“ஸ்டெல்லா….” என்று இரு பெண்களும் பதறி கத்த, ஸ்டெல்லா ஒரு நிமிடம் அசையாமல் தலைகுனிந்து நின்றவள், பின் தன் கிழிந்த உடையை குனிந்து பார்த்தாள்.

அவள் உடை தோளிலிருந்து பாதியாக கிழிந்து தொங்கி கொண்டிருந்ததை பார்த்துவிட்டு, நிமிர்த்தி வினோவை பார்த்தவள். அவனின் கேவலமான சிரிப்பில்

“பொண்ணுங்கள நேர் வழியில ஜெயிக்க முடியலனா இப்படித்தான் அவளோட டிரஸ் மேல கை வச்சு அவள கேவலப்படுத்துவீங்களா?

இதையே கால காலமா எத்தனை வருஷத்துக்குடா பண்ணி, எங்களை கேவலமா அடக்கி வைக்கப் போறீங்க?” என்று நிமிர்ந்து அவன் கையில் இருந்த கிழிந்த உடையைப் பார்த்தவள்

அவன் நெஞ்சிலயே தன் ஹீல்ஸ் காலை வைத்து ஓங்கி மிதித்து விட, அதில் அவன் கீழே விழுந்து

நெஞ்சில் கை வைத்து வலியில் இரும்பிய படி ரத்தமாக வாந்தி எடுத்தவன் அப்படியே மயங்கிப் போனான்.

மயங்கி இருந்த வினோவை வெறித்துப் பார்த்தபடி இவள் இருக்க, பின்னே ஏதோ சத்தம் கேட்கவும் திரும்பிப் பார்த்தவள்; மீண்டும் காளி ரூபம் தான் எடுத்திருந்தால்.

இத்தனை ஆண்டுகளாக எவனுக்காக சண்டை, உடற்பயிற்சி என்று அவளை அவளே வலிமையாக மாற்றி அவளை வலுவேற்றி, உள்ளே நெருப்பாகத் தகித்துக் கொண்டு இருந்தாளோ, அவன் தான் அது, சிலுவை.

ஸ்டெல்லாவின் அம்மாவின் கணவன், இவளின் ஜோசப்பை கொண்றவன்.

இவளின் சண்டையைப் பார்த்து பயந்து போய், தொண்டையைப் பிடித்தபடி அங்கிருந்து எழுந்து செல்லப் போனவன், அவன் வாங்கி வந்த சரக்கு மீதே கால் வைத்து கீழே விழுந்திருந்தான்.

அந்த சத்தம் கேட்டு திரும்பியவள், அவனை கண்கள் சிவக்கப் பார்த்து, வன்ம மாகச் சிரித்தபடி அவன் அருகே சென்றாள்.

“ஸ்டெல்லா வேணாம் விடு, போலீஸ் பார்த்துக்கட்டும், நீ வா,” என்று ரூத் அவளை அழைக்க; அதற்கு அன்விதாவும்,

 “ஆமா வாங்க ஸ்டெல்லா, முதல்ல இங்கிருந்து போயிடலாம், இவனுங்க எழுந்திருக்கிறதுக்குள்ள,” என்று இருவர் பேசியதும் காதில் விழுந்தும் விலாத நிலையில்

அவனை நோக்கிச் சென்றவள், “என் ஜோசப்ப என்னடா பண்ணின? அவள என்கிட்ட இருந்து ஏன்டா பிரிச்ச?” என்றவளின் கேள்வியில் கண்கள் விரிய அவளை பார்த்தவன்.

“ஸ்டெல்லா!

ஸ்டெல்லா….. இது நீயா…..?” என்று பயந்தபடி பின்னே கைகளால் நகர்ந்தவன், “ம…ம…மன்னிச்சிடு ம்மா, அது….அது அப்போ நான் தெரியாம பண்ணிடன் ம்மா, ப்ளீஸ் என்ன விட்டுடு ம்மா,” என்று பயந்து கெஞ்சியவனை கேவலமாக பார்த்தவள்

“என்னத விட சொல்ற? இத்தனை வருஷமும் உன்னைப் பார்த்தா உன்ன என் கையால கொல்லணும்னு இருந்த என்னோட இத்தனை வருஷ காத்திருப்பையா விட சொல்ற?”

இல்ல என் கூடவே இருந்த என் அக்காவ என்கிட்ட இருந்து துடிக்கத் துடிக்கப் பிரிச்சு, அவளக் கொன்ன உன்ன விடச் சொல்றியா?”

என்று பேசியபடி அவன் அருகே சென்றவள், சிலுவை வாங்கி வந்த பாட்டிலை கையில் எடுத்து,

“சரக்கு! இதை போட்டுட்டுத்தான என் அக்காவ, என் ஜோசப்ப கொடுமைப்படுத்துன?” என்றவள், அவன் முகத்தில் அதை எடுத்து ஓங்கி அடித்து உடைத்து விட; அதில் “ஆ….” என்ற அலறலோடு அவன் துடித்துக் கீழே விழுந்து கதறவும்

“அ…. இந்தச் சத்தத்தைக் கேட்க எத்தனை நாள் காத்திருந்தேன் தெரியுமா? என் ஜோசப் அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல எப்படி கத்துனா தெரியுமா?” என்று அடுத்த பாட்டிலை அவன் மண்டையில் உடைத்தவள்.

அந்த உடைந்த பாட்டிலை வைத்து அவன் கையில் குத்தி, “இந்தக் கையை வச்சுத்தான என்ன அடிச்சு என் ஜோசப்ப மிரட்டுன…” என்று அடுத்த கையிலும் அவள் குத்த, அவன் வலி தாங்காது அப்படியே மயங்கி விழுந்துவிட்டான்.

“கத்துடா…. கத்துடா…. வலிக்குதுன்னு சொல்லு…. வலிக்குதுன்னு சொல்லு!” என்று அவனைத் தட்டி கையால் அடித்து எழுப்ப, அவன் மயக்கத்திற்கு சென்றிருந்தான்.

அது எதுவும் உணரும் நிலையில் ஸ்டெல்லா இல்லவே இல்லை. “அவள ஏன்டா கொன்ன? அவள ஏன்டா கொன்ன?” என்று அவனை அடித்த படி இருந்தவளை, பின்னிருந்து இரு கரம் வந்து அணைத்துப்பிடிக்கவும்.

உடல் தூக்கிப் போட அந்தப் பிடியிலிருந்து விலக முயன்றவளை,

“அம்மு…. அம்மு…. நான் தான்டா உன் த்ரூவ்…” என்று அவன் குரல் கேட்ட பிறகே, இறுகிய அவள் உடல் தளர்ந்து, நெருப்பாகத் தகித்துக் கொண்டிருந்தவள் அவனுள் தஞ்சமடைந்தாள்.

“த்ரூவ் த்ரூவ்…. இவன்…. இவன்….என் ஜோசப்” என்று தேம்பி தேம்பி அழுதவளை முதுகை வருடிச் சமாதானம் செய்தவன், “ஒன்னும் இல்லடா ஒன்னும் இல்ல”

என்று அவளை கலங்கியவனாக அமைதிப்படுத்தியவன், அவன் போட்டிருந்த சட்டையை அவிழ்த்து அவள் மீது போர்த்த

அப்போதுதான் அவளின் கையில் இருந்த காயத்தைப் பார்த்தான்; இரண்டு மணிக்கட்டுகளும் பிய்ந்து ரத்தம் வடிந்து காய்ந்து போயிருந்தன.

அதைப்பார்த்து பயந்த த்ரூவ், “அம்மு…. என்னடா இது ரத்தம்?” என்று அவள் கையைப் பார்க்க, அப்போதுதான் அவளும் அந்தக் கையைப் பார்த்து அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

த்ரூவ் பின்னாலேயே மதி மற்றும் ஆதிஷ் போலீஸைக் கூட்டிக்கொண்டு வந்திருக்க, ரூத் மற்றும் அன்வீதா கட்டை அவிழ்த்து ஸ்டெல்லாவை தூக்கி கொண்டு உடனே ஹாஸ்பிட்டல் சென்றனர்.

செல்லும் வழியெல்லாம் ரூத் எதையோ யோசித்து கலங்கியபடியே வர, அவளைக் கவனித்த ஆதிஷ்,

“அங்கு நடந்ததை நினைத்து பயந்திருக்கிறாள் போல” என்று எண்ணியவனாக அவளை அணைத்துத் தன் தோளோடு சாய்த்துக் கொண்டான்.